Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 22 /Conti...
பாபா எனக்கு மன அமைதியைத் தந்தார்
'ஸாயியின் மகள்' என்னும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பக்தர் சொல்கிறார்.--
மனதுக்கும், ஆத்மாவுக்கும் அமைதியைத் தர, நமது அன்புக்குரிய பாபா பல வழிகள் வைத்திருக்கிறார்.பாபா எப்போதும் நம்முடனேயே இருக்கிறர், நம்மைப் பாதுகாக்கிறார், நாம் அழுவதை அவர் சகிக்க மாட்டார் என்பதை விளக்கும் ஒரு அப்படியோர் அனுபவத்தை இன்று நான் அனுபவித்தேன்.
----------------------------------------
ஓம் ஸாயிராம் மனிஷாஜி,
இந்த வலைப்பூவைத் திறம்பட நடத்திவரும் உங்களது செவைக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபா உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
'ஸாயியின் மகள்' என்றே என்னைக் குறிப்பிடுங்கள்; எனது முகவரியை வெளியிட வேண்டாம்.மற்ற வலைப்பூக்களில் நான் இணைந்திருந்தாலும்கூட, மற்ற உறுப்பினர்களின் பல்வேறு அனுபவங்களை இந்த வலைப்பூவில் படித்ததும், பாபாவின் அழகிய படங்களை இங்கே பார்த்ததும், இங்கேயே எனது அனுபவத்தைச் சொல்ல வேண்டும் என பாபா விரும்புவதாக நான் நினைக்கிறேன். அவரே என்னை இப்படிக் கேட்பதாக நான் உணர்கிறேன்.
மனிஷாஜி, எனது பொறுமையை பாபா மிகவுமே சோதிப்பதாக எண்ணி, நான் மிக மனவருத்தம் அடைந்தேன்.எல்லாமுமே எனக்கு அவர்தான்; தாய், தந்தை சகோதரி, சகோதரன், நண்பர் என எல்லாமுமே. இன்று நான் மிகவுமே மன அழுத்தம் அடைந்து, அவரது திருவுருவப் படத்தின் முன்னே அழுது, என் கண்ணீரல் அவரது பாதங்களைக் கழுவினேன். 'நீங்கள் என்னை ஆசீர்வதிக்கிறீர்கள்; அதைத் திரும்ப எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதை நான் மிகவும் நன்குணர்ந்தாலும் எனது பொறுமையை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள்' எனக் கதறினேன்.
அந்தப் படத்தை விட்டு அகன்றேன், பாபாவின் முகமும் நகர்ந்து என்னைப் பார்ப்பதாக உணர்ந்தேன். மீண்டும் பாபாவின் படத்தருகே வந்து அவருடன் பேசத் தொடங்கினேன். கண்களை மூடிக்கொண்டு, அவரது பாதங்களைத் தொட்டபடி, கண்களில் நீர் நிறைத்தபடி, 'நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்; தயவு செய்து என்னருகில் வரவேண்டும் பாபா' என வேண்டினேன். திடீரென பாபாவின் திருவுருவப் படம் அசையத் தொடங்கியது! அனேகமாக அது என் கைகளில் விழும் அளவுக்கு இருந்தது. பாபா என்னைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்தேன்.
படத்தை நான் தொட்டுக் கொண்டிருந்ததால்தான், படம் இப்படி அசைந்தது எனச் சிலர் சொல்லக்கூடும்.ஆனால், என்னை ஆசீர்வதிக்கவே பாபா இப்படிச் செய்தார் என்பதை நான் அறிவேன். இன்றே இந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வேன் எனவும் பாபாவுக்கு வாக்களித்தேன்.
பாபா எனது பொறுமையை மேலும் சோதிக்க மாட்டார் என்பதையும் அறிவேன். பாபாவை நான் மிகவுமே நேசிக்கிறேன். அவரில்லாமல் என் வாழ்வே இல்லை. நமது ஆசைகள் நிறைவேறச் சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால், சரியான தருணத்தில் பாபா அவற்றை நிறைவேற்றுவார். அப்படிப்பட்ட சரியான தருணத்துக்காக நான் காத்திருக்கிறேன்.
ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி.
Translated into Tamil by : Sankarkumar
Posted by : Santhipriya
Loading
0 comments:
Post a Comment