Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 24.....continued
பக்தரின் அனுபவம்
அன்புள்ள சகோதரி மனிஷா
கடந்த இரண்டு வாரங்களாக என்னுடைய தாயார் தலை சுற்றல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர் அவருக்கு ECG பரிசோதனை செய்யுமாறு கூறினார். அதில் அவருக்கு இருதய நோய் உள்ளதாக காட்டியது. ஆகவே நாங்கள் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி இருதய சிகிச்சை மருத்துவரிடம் சென்றோம்.
ஒரு வாரமாக நான் என்னுடைய தாயாருக்கு இரவில் உடியை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தேன். நாங்கள் மருத்துவ மனைக்கு சென்றபோது ஓம் சாயிராம் ஜெபம் செய்யுமாறு தாயாரிடம் கூறினேன்.
அவர்கள் மீண்டும் ECG எடுத்தார்கள். என்ன அதிசயம். அதில் எந்தக் குறையுமே காட்டவில்லை. மேலும் மற்ற டெஸ்ட்டுகளில் சக்கரை, கொலஸ்டிரால் , யூரியா போன்ற அனைத்துமே சரியாக இருந்தன. மருத்துவர் என் தாயாருக்கு அனைத்தும் சரியாக உள்ளது எனக் கூறிவிட்டு இதய வலிக்கு மருந்துகள் தந்தார். சாயியின் அருளினால் அவள் நலமாக உள்ளால். சாயிபாபாவே நீதான் தன்வந்தரி.
N ப்ரியா
---------------------------

என் வாழ்வில் கிடைத்த அற்புதமான தரிசனம்
அனைவருக்கும் நன்றி. அனைவரது அனுபவங்களையும் படிக்கும்போது ஒரு குடும்பத்தில் உள்ளது போல இருக்கின்றது.
ஒரு சத்குரு கூறினார் '' சத்குருவை நீ தேடி அலையை வேண்டாம். பக்திக்கு மதிப்புக் கொடுக்கும் அவர் தன்னிடம் உன்னை தானாகவே இழுத்துக் கொள்வார்'' . இது நாம் அனைவருக்கும் நடக்கின்றது.
டிசம்பர் 9 ஆம் தேதி நான் சீரடிக்கு சென்று இருந்தேன். அப்போது எனக்கு பல பிரச்சனைகள் இருந்தன. அவை சரியாகி விடுமா என்பதற்கு பதிலை நீ ஏதாவது வழியில் காட்ட வேண்டும் என சாயியிடம் வேண்டிக் கொண்டேன்.
நான் சமாதிக்கு அருகில் சென்றபோது அங்கு இருந்த பூசாரி எனக்கு மலர்களை தருவார் என நினைத்தேன். ஆனால் எனக்கு முன்னால் நின்று இருந்தவர்களை, நகருங்கள் ...நகருங்கள் என அங்கிருந்த காவலாளி அவசரப்படுத்திக் கொண்டே இருந்தான். எனக்கு முன்னால் இருந்தவர் வரை அது தொடர்ந்தது. இது சாதாரணமாக அங்கு நடப்பதுதான். நானும் சமாதியில் வணங்கினேன். அந்த காவலாளி திடீரென சாயிராம் என என்னிடம் கூறிக் கொண்டே பாபாவின் படம் போட்ட கைக்குட்டையை தந்தான். என் கண்களில் நீர் வழிந்தது. உடம்பெல்லாம் புல்லரித்தது.
ஓம் சாயிராம்

(Into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment