Baba's Presence-Experience by Rama Rao Ji.
பாபா எங்களுக்குத் துணையாக இருந்தார்
அன்பானவர்களே
இன்று ராமோஜி ராவ் என்பவருக்கு அவருடைய பயணத்தின்போது எப்படி பாபா துணை நின்றார் என்பதைப் பற்றி படியுங்கள்.
மனிஷா
ராமாராவ்ஜியின் அனுபவம்
சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய மனைவிக்கு பாபாவின் உடி பெரிய மகிமை செய்தது. நாங்கள் கேதார்நாத்- பத்ரிநாத் யாத்திரைக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டோம். அதன்படி நாங்கள் பிப்ரவரி பத்தொன்போதாம் தேதியன்று கிளம்ப வேண்டும். என் மனைவி திடீர் என பதினேழாம் தேதியன்று உடல் நலமின்றிப் போக நாங்கள் மருத்துவரிடம் சென்றோம். அவர் கொடுத்த எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. அவள் மிகவும் சோர்ந்து போய் விட்டாள். பத்தொன்பதாம் தேதி விடியற்காலை மூன்று மணிக்கும் அதே நிலைதான். அவளுக்கு வந்த குளிரைப் பார்த்தால் மலாரிய காய்ச்சல் வந்து விட்டது என்றும் அவளால் அந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது என நினைத்து எங்களுடைய பயணத்தை தள்ளிப் போட முடிவு செய்தோம். என் மகனை அருகில் இருந்த மருத்துவ மனையில் சென்று மலாரியாவுக்கான மருந்தை வாங்கி வருமாறு அனுப்பினேன். அதற்கு இடையில் நான் என் மனைவிக்கு பாபாவின் உடியை தண்ணீருடன் கலந்து கொடுத்தேன். அவள் நெற்றியிலும் அதை இட்டு விட்டேன். மருந்து வந்தது. அதை அவள் சாப்பிட்டப் பின் உறங்கி விட்டாள். காலை நாங்கள் எட்டு மணிக்கு கிளம்ப வேண்டும். ஆனால் விடியற்காலை ஆறு மணிக்கே என் மனைவி எழுந்து விட்டாள். அவள் தன்னை பயணத்துக்கு தயார் செய்து கொண்டு விட்டாள். எந்தவிதமான சோர்வும் இல்லை.
நாங்கள் குறிப்பிட்டபடி யாத்திரைக்கு கிளம்பிச் சென்றோம். அது பாபாவின் உடியின் மகிமையே. நாங்கள் இருபதுபேர் கவுரிகந்த் என்ற இடத்திற்கு சென்றதும் வழியில் சாலை அடைப்பினால் நிறைய நேரம் காத்து இருக்க வேண்டியதாகி விட்டது. இரவு முழுவதும் கார்களை நிறுத்தும் இடத்தில் பஸ்ஸில் காத்துக் கிடந்தோம். மறுநாள் காலை நான்கு மணிக்கே எழுந்து இப்படி மாட்டிக்கொண்டு விட்டோமே என வருந்திய வண்ணம் பாபாவை வேண்டிக் கொண்டேன். நாங்களோ ராம்பூர் என்ற இடத்துக்குப் போய் அங்கிருந்து மற்றவர்களுடன் கேதார்நாத்துக்கு செல்ல வேண்டும். பஸ் போக முடியாத அளவு சாலை நெரிச்சல். ஒரே கவலையாகி விட்டது. நாங்கள் காலை கடனை முடித்துவிட்டு வெளியில் வந்தோம். நல்ல வேளையாக இரண்டு ஜீப்புகள் கிடைத்தன. அதில் ஏறி அனைவரும் சென்றோம். நாங்கள் டெல்லி- ஹரித்துவார்- ரிஷிகேஷ் மற்றும் கேதார்நாத் சென்றவரை எங்குமே பாபாவின் ஒரு படம் கூட காணப்படவில்லை. ஆனால் சில கிலோ மீடர் தூரம் போனதும் எங்களுக்கு முன்னால் சென்ற காரில் பாபா என எழுதப்பட்டு இருந்ததைக் கண்டோம். பாபா எங்களுக்கு துணையாக வந்துள்ளார் என எண்ணினேன். நல்லபடியாக பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். அது பாபாவின் மகிமையே.
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment