Wednesday, July 28, 2010

Devotee In Contact With Baba -Rege- Part- 4

பாபாவைப் பற்றியோ அவரது லீலைகளைப் பற்றியோ நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அவரிடம் பக்தி கொண்டு விட்டால் உலகில் உள்ள அனைத்து சாயி பக்தர்களுக்கும் என்ன நடக்குமோ அதுவே நமக்கும் நடக்கும்.
1914 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். பீ. ஆர். அவஸ்தி என்பவர் ரிகேயுடன் சீரடிக்கு சென்று இருந்தார். அதற்கு முன்னர் அவர் ஒரு பெண்மணியிடம் மந்திர உபதேசம் பெற்று இருந்தார். ஆனால் அவள் எங்கு சென்று விட்டாள் என்பது அவருக்குத் தெரியாது. ஆகவே அவரை திக்ஷிட் பாபாவின் தரிசனத்துக்கு அழைத்த போது அங்கு செல்ல மறுத்து தான் குரு துரோகம் செய்ய விரும்பவில்லை என்றார்.
அவஸ்தி இந்தூரில் நீதிபதியாக இருந்தார், ரிகே அவருக்கு கீழ் பதவியில் இருந்தார். ரிகேயிர்க்கு பாபாவிடம் இருந்த ஈடுபாட்டைக் கேள்விப்பட்டு இருந்ததினால் அவர் அழைத்துச் சென்றால் தான் வருவதாகக் கூறினார். ரிகே அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றபோது பாபா கேட்டார் ' இந்த கிறுக்கன் யார்?' . அவஸ்தி துணுக்குற்றார். மறுநாள் ராதாகிருஷ்ண ஆயி ரிகேயிடம் நான்கு மலர்களைக் கட்டிய பூ கொத்தைக் கொடுத்துவிட்டு அதை குருவிடம் தந்து அவரை அதைத் திறந்து பார்க்குமாறு தாம் கூறியதாக கூறுமாறு கூறினார். பாபா அதை கேட்டு சிரித்தபடி அதை முகர்ந்து பார்த்துவிட்டு அவளையே அதை செய்யச் சொல் என கூறி அதை தந்துவிடாராம்.
அதற்கு இடையே அவஸ்தி தன் கையில் அரிசி சாதத்தினால் ஆன பிண்டம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை பாபா வாங்கி கொண்டால் தன்னுடைய முந்தய குரு உயிரோடு இல்லை என்று அர்த்தம் எனவும் அதன் பின் பாபாவை குருவாக ஏற்க சம்மத்தார். மசூதிக்கு பாபாவைப் பார்க்கச் சென்றதும் பாபா அதை பெற்றுக்கொண்டு அதை முகர்ந்து பார்த்துவிட்டு எங்கு செல்ல வேண்டுமோ, அந்த இடத்தை இது அடைந்து விட்டது எனக் கூறி அதை திருப்பித் தந்து விட்டார். அங்கிருந்து அன்னையிடம் சென்றதும் ( ராதாகிருஷ்ண ஆயி) அப்படியே அவள் காலில் விழுந்து வணங்கிய அவஸ்தி தன்னை மறந்து அரை மணி நேரம் பஜனைப் பாடல்களைப் பாடினார். தன்னுடைய முந்தய குருவை அவள் உருவில் கண்டதாக பின்னர் ரிகேயிடம் கூறினார்.
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.