Devotee In Contact With Baba - Rege- Part- 3
1910 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிகேயின் கனவில் அவருடைய குல தெய்வமான சாந்தா துர்கா, விஷ்ணு மற்றும் சாயி போன்ற மூவரும் ஒன்றாக வந்தனர். அப்போது கனவில் விஷ்ணு அவரிடம் சாயிபாபாவும் மற்றவர்களும் ஒருவரே என்றும் சாயி பாபாவே அவருடைய பாதுகாவலராக இருப்பார் என்றும் கூறினார். அந்த நேரத்தில் ரிகே சாயி பாபாவிடம் சென்றபோது அவர் முதலில் தமது தாயாரானவரும், அவருக்கு தாயாரானவளுமான ராதாகிருஷ்ண ஆயியைப் போய் பார்க்குமாறு அவரிடம் கூறினாராம்.
அதன் பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு எப்படி ராமகிருஷ்ணி யோகா மாயியாகக் கிடைத்தாளோ அது போல ராதாகிருஷ்ண ஆயி அவருக்கு யோகா மாயியானார். அவளிடம் இருந்தது ஒரே ஒரு வேட்டி, போர்த்தி கொள்ள ஒரு ஜமக்காளம்,ஏக்நாத் மகராஜாவின் பாகவதம், ஒரு லோட்டா, கிருஷ்ணரின் பொம்மை போன்றது மட்டுமே. கிருஷ்ணரின் பொம்மையை வைத்துகொண்டு பஜனை செய்யும்போது தன்னை மறந்து ஏகாந்த நிலைக்குச் சென்று விடுவாள்.
அவளுடனான தன் உறவு பற்றி ரிகே எழுதினர் ' அவள் இறந்து போன இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் சீரடிக்கு சென்று இருந்தேன். எங்கு தங்குவது எனப் புரியவில்லை. என்னிடம் திக்ஷித்வாடாவுக்கு போகுமாறு பாபா கூறினார். பலரும் அங்கு வந்து என்னிடம் அவர்களது அனுதாபத்தைத் தெரிவித்தனர் ( அன்னையின் மறைவுக்கு). சீரடியில் இது நடந்து இருக்ககூடாது என்றனர். ஆனால் நான் அது குறித்துப் பேச விரும்பவில்லை. பாகவதத்தில் கூறியுள்ளது என் நினைவில் வந்தது
அப்படி அனைவரும் பேசிக்கொண்டு இருக்கையில் வாடாவில் என்னுடன் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு உடனே கிளம்பி மசூதிக்கு வருமாறு மசூதியில் இருந்து செய்தி வந்தது. அங்கு சென்றதும் பாபா நாங்கள் என்ன பேசினோம் என்பதைக் கேட்டு அறிந்து கொண்ட பின் கூறினார் ' இங்குள்ள முட்டாள்களுக்கு என்ன தெரியும்? அவள் எனக்கும் உனக்கும் தாயார். என்னிடம் வந்தது முதலே இந்த கர்மாவில் இருந்து விடுதலை வேண்டும் என்றாள். நான் அதை அவளுக்குத் தருவதாக உறுதி தந்தேன். ஒரு நாள் இரவு இனியும் என்னால் தாமதிக்க முடியாது என்று கூறிவிட்டு, என்னுடைய காபினியைத் தூக்கிவிட்டு, இதோ பார், இந்த இடத்தில் நுழைந்து விட்டாள், அவளை இனி நீ எப்போது வேண்டுமானாலும் இந்த இடத்தில் பார்க்கலாம் என்று தன்னுடைய நெஞ்சைக் காட்டினார். ஆமாம் குருவுடன் அவள் கலந்து விட்டாள்.
(Translated into Tamil by Santhipriya )
அதன் பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு எப்படி ராமகிருஷ்ணி யோகா மாயியாகக் கிடைத்தாளோ அது போல ராதாகிருஷ்ண ஆயி அவருக்கு யோகா மாயியானார். அவளிடம் இருந்தது ஒரே ஒரு வேட்டி, போர்த்தி கொள்ள ஒரு ஜமக்காளம்,ஏக்நாத் மகராஜாவின் பாகவதம், ஒரு லோட்டா, கிருஷ்ணரின் பொம்மை போன்றது மட்டுமே. கிருஷ்ணரின் பொம்மையை வைத்துகொண்டு பஜனை செய்யும்போது தன்னை மறந்து ஏகாந்த நிலைக்குச் சென்று விடுவாள்.
அவளுடனான தன் உறவு பற்றி ரிகே எழுதினர் ' அவள் இறந்து போன இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் சீரடிக்கு சென்று இருந்தேன். எங்கு தங்குவது எனப் புரியவில்லை. என்னிடம் திக்ஷித்வாடாவுக்கு போகுமாறு பாபா கூறினார். பலரும் அங்கு வந்து என்னிடம் அவர்களது அனுதாபத்தைத் தெரிவித்தனர் ( அன்னையின் மறைவுக்கு). சீரடியில் இது நடந்து இருக்ககூடாது என்றனர். ஆனால் நான் அது குறித்துப் பேச விரும்பவில்லை. பாகவதத்தில் கூறியுள்ளது என் நினைவில் வந்தது
' அபி செட் சுடுராச்சரோ பாஜதே மாம் அனானி பாக்
சாது ரேவா சா மன்டவ்யாஹ் சம்யக் வ்யவச்சிடோ ஹி சஹ . (பாகம் 9-30)'
அதாவது எத்தனைதான் மோசமானவராக இருந்தாலும் என் மீது பக்தி கொண்டு என்னிடம் வந்தால் அவனே சாது, அவன் நல்லவன் என்பது அர்த்தம்.அப்படி அனைவரும் பேசிக்கொண்டு இருக்கையில் வாடாவில் என்னுடன் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு உடனே கிளம்பி மசூதிக்கு வருமாறு மசூதியில் இருந்து செய்தி வந்தது. அங்கு சென்றதும் பாபா நாங்கள் என்ன பேசினோம் என்பதைக் கேட்டு அறிந்து கொண்ட பின் கூறினார் ' இங்குள்ள முட்டாள்களுக்கு என்ன தெரியும்? அவள் எனக்கும் உனக்கும் தாயார். என்னிடம் வந்தது முதலே இந்த கர்மாவில் இருந்து விடுதலை வேண்டும் என்றாள். நான் அதை அவளுக்குத் தருவதாக உறுதி தந்தேன். ஒரு நாள் இரவு இனியும் என்னால் தாமதிக்க முடியாது என்று கூறிவிட்டு, என்னுடைய காபினியைத் தூக்கிவிட்டு, இதோ பார், இந்த இடத்தில் நுழைந்து விட்டாள், அவளை இனி நீ எப்போது வேண்டுமானாலும் இந்த இடத்தில் பார்க்கலாம் என்று தன்னுடைய நெஞ்சைக் காட்டினார். ஆமாம் குருவுடன் அவள் கலந்து விட்டாள்.
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment