Sai cured cancer.
உதயன் - பெங்களுரு , 2008
என் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்களை இதனை நாளும் என்னுடைய மனதிலேயே வைத்திருந்தேன் . அதை நானே அனைவரிடமும் கூற ஆசைபட்டேன் . அதை நானே எழுத வேண்டும் என்ற தலைகனம் இருந்தது . ஆனால் அது முடியவில்ல .சாயீ சரிதை எழுதிய ஹெமன்த்பட் என்பவருக்கு நேர்ந்த கதி நினைவில் வந்தது . தான்தான் பாபா பற்றி எழுத வேண்டும் என எத்தனையோமுறை முயற்சித்தும் அவரால் அதை எழுத முடியவில்லை . கடைசியாக அவர் சாம என்பவரை பாபாவிடம் அனுப்பி தன சார்பில் வேண்டிக் கொள்ளுமாறு கூற பாபா சமவிடம் கூறினாராம் ‘முதலில் அவனுடைய தலை கனத்தை என் காலடியில் இறக்கி வைக்கச்சொல் , அதன் பிறகு அவனால் என்னைப்பற்றி எழுத முடியும்.
ஆகவே நானும் பாபாவிடம் வேண்டிக்கொண்டேன் , எப்போது தன்னைப்பற்றி என்னை எழுத அனுமதிக்கிறாரோ அப்போதுதான் நான் அதை மற்றவர்களிடம் கூறுவேன் . என்ன ஆச்சர்யம் . ஒருமுறை நான் சாயிநாதர் ஆலயத்திற்கு சென்று இருந்தபோது , அங்கு வந்த ஒரு நண்பர் என்னிடம் சாயிநாதரிடம் மற்றவர்கள் பெற்ற புது அனுபவங்களை தாம் சேகரிப்பதாகவும் , அதை புத்தகமாக வெளியிட திட்டம் உள்ளதாகவும் கூற , அதையே சாயிநாதருடைய ஆணையாக ஏற்று என் அனுபவங்களை அவரிடம் எழுதித் தர சம்மதித்தேன் . ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன் . இதில் நான் டைரக்டரோ இல்லை எழுத்தாளரோ இல்லை , பாபா இட்ட கட்டளையை நிறைவேற்றுபவன் , அவ்வளவே .
என் வாழ்கையில் நடந்த முக்கியமான இரு சம்பவங்கள் இவை . என்னுடைய தந்தை பொது நிர்வாகத்துறையில் இருந்து ஒய்வு பெற்ற ஒரு பெரிய அதிகாரி . ஒய்வு பெற்ற அவர் ஒய்வு பெற்ற மற்றொரு பெரிய சர்ஜனுடன் சேர்ந்து ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை நிறுவும் பணியில் வேலையில் சேர்ந்தார் . அந்த ஆஸ்பத்ரியில் பல ஏழைகளுக்காக இலவச மருத்துவ வசதி செய்யப்பட இருந்தது . ஆகவே அது சிறந்த பொதுத் தொண்டு எனக் கருதிய என்னுடிய தந்தை அதில் ஆர்வமாக சேர்ந்தார் .
இப்படி இருக்கையில் ஒருநாள் எனக்கு என் வீட்டில் இருந்து என்னுடைய தந்தைக்கு கோலன் என்ற பகுதியில் கான்சர் நோய் வந்து உள்ளதாக தகவல் வர நான் விழுந்து அடித்துக் கொண்டு பெங்களுருக்கு சென்றேன் . என் தாந்தையை பரிசோதித்த டாக்டர் அவருக்கு உடனேயே ஆபரேஷன் செய்தால் மட்டுமே அதை அகற்ற முடியும் என்று கூறினர் . என்ன செய்வது என்று தோன்றாமல் நான் பாபாவின் கோவிலுக்கு சென்று அவர் முன் நின்றேன் . பாபா என்னை பார்த்து புன்முறுவல் செய்வது போகவும் , கவலைபடாதே நான் இருக்கிறேன் என்று கூறுவது போலும் இருப்பதை உணர்ந்தேன் . நான் உடனேயே என்னுடைய வீட்டிற்கு போன் செய்து என் தாயாரிடம் , நீ ஒன்றும் கவலைப்படதே , அவருக்கு ஆபரேஷன் தேவையாக இருக்காது என்றேன் . அதன் பிறகு பலமுறை நான் ஷிர்டி செல்ல வேண்டி இருந்தது . சென்றேன் , ஒவ்வொரு முறையும் பாபா எனக்கு ஆறுதல் அளிப்பதை உணர்ந்தேன் .
ஒருநாள் அப்படி அங்கு சென்று இருந்த சமயத்தில் மதியம் மணி 3.45 இருக்கும். ஆலயத்தில் இருந்த நான் என்னை அறியாமல் அழுதுகொண்டு இருந்தேன் . என் அப்பாவை நீதான் காப்பாற்ற வேண்டும் என பாபாவிடம் மனம் கதறி அழுதேன். என்னிடம் எவரோ குருசதனை 108 முறை சுற்றினால் வேண்டியது நடக்கும் என்று கூறி இருந்ததினால் , நான் குருசதனை 108 முறை சுற்றத் துவங்கினேன் . மாலை மணி 4.15 இருக்கும் , சுமார் 30 முறை பிரதர்சனம் வந்திருப்பேன் , பாபாவின் நெருங்கிய பக்தரான ப்ரகாஸ்வாமி என்பவர் எங்கிருந்தோ வந்து என்னை த்வாரகாமாயிக்கு அழைத்துச் சென்றார் . அங்கு சென்ற பின் நவதானியாத்தை உடியில் போட்டு குடும்பத்தில் எவருக்காவது பிரச்னை இருந்தால் அவருக்காக வேண்டிக் கொள்ளுமாறு கூறினர். அவருக்கு எப்படித் தெரியும் என்னுடைய தந்தைக்கு உடல் நிலை சரி இல்லே என்று ? பாபாதான் அவரை என்னிடம் அனுப்பி இருக்க வேண்டும் . மனம் நிம்மதி அடைந்தது .
அதற்குப்பிறகு காகட ஆர்த்தியை முடித்துக்கொண்டு பிரசாதத்தை பெற கியூவில் நின்றேன் . சாதாரணமாக பிரசாதம் குறைந்த அளவிலேயே கிடைக்கும் , ஆனால் என்ன அதிசயம் என் கை நிறைய, வழியும் அளவு பிரசாதம் கிடைத்தது . அதுவே பாபா என் தந்தை பற்றி கவலைப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என்று கூறுவது போல இருந்தது . அப்போது சிலர் அபிஷேக தண்ணியை எடுத்துக்கொண்டு சென்றனர் . நான் நினைத்தேன் , எனக்கும் அபிஷேக நீர் கிடைத்தால் பாபா என் வேண்டுகோளை ஏற்றுவிட்டதாக மனம் அமைதி படுமே என்று நினைதேன். நம்ப மாட்டீர்கள், முன்பின் தெரியாத ஒரு கணவன் மனைவி என்னிடம் வந்து அபிஷேக நீர் வேண்டுமா எனக் கேட்டு எனக்கு கொடுத்து விட்டுச் சென்றனர் . பாபா எனக்கு கருணை புரிந்து உள்ளார் என நிச்சயம் நம்பினேன் .
இதற்கு இடையில் என் தந்தை பல டாக்டரிடமும் சென்று டெஸ்ட் செய்து கொண்டதில் அனிவரும் ஆபரேஷன் உடனே செய்ய வேண்டும் எனக் கூறி பாதிக்கப்பட்ட பகுதி சிறிதை கான்செர் டெஸ்ட்க்கு அனுப்ப , மும்பாயியில் இருந்து அது கன்சரே எனவும் , உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் தீர்மானித்தனர் . நானோ என் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரிடம் பாபா அப்பாவிற்கு ஒன்றும் ஆகாமல் காப்பாற்றுவார் எனவும் கவலைப்பட ஒன்றும் இல்லை என கூறினாலும் எவரும் அதை நம்பத் தயாராக இல்லை . நான் ஷிரடியில் இருந்து கொண்டு சென்ற உடியை அம்மாவிடம் தந்து அதை அவர் தலைமாட்டுக்கு அடியில் வைத்துவிட்டு , தினமும் சிறுது தண்ணீரில் போட்டுக் குடிக்குமாறு கூற அவரும் தீவிர பாபா பக்தர் என்பதினால் அதை செய்தார் . சனிக்கிழமை அன்று ஆபரேஷன் என முடிவாக , முதல் நாள் அன்று தந்தை ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆனார் .
Save my father
பாபா என் தந்தையை காப்பாற்று
பாபா என் தந்தையை காப்பாற்று
நான் காலை ஆஸ்பத்ரி கிளம்பிப் போன பொழுது எங்கள் பின்னாலேயே பெரிய சாயீ படம் போட்ட வண்டி தொடர்ந்து வந்தது . சரி சாயீ நமக்கு துணையாக வருகின்றார் என நம்பினேன் . ஆஸ்பத்ரிக்கு சென்று வார்டு இருந்த முதல் மாடிக்கு சென்ற பொழுது பாபாவின் படமே முதலில் கண்ணில் பட்டது . என் நம்பிக்கை இன்னும் அதிகம் ஆயிற்று . ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் முன் டாக்டர் எங்களிடம் வந்து அவரை காலை 10.30 க்கு அழைத்துச் சென்றபின் மதியம் 1.30 க்கு வெளியில் கொண்டு வருவோம் என்று கூறினார் . உள்ளை அழைத்துச் சென்றவரைப் பற்றி 2.30 மணி வரை எந்த தகவலும் இல்லை . எங்கள் அனைவருக்கும் ஒரே குழப்பம் , பீதி .
மணி மூன்று ஆனது . வெளியில் வந்த டாக்டர் முகத்தில் ஆச்சரியக் குறி . ''உங்கள் அப்பாவுக்கு ஆபரேஷன் தேவை இல்லை, என்ன மாயம் என்று தெரியவில்லை , உள்ளே அழைத்துச் சென்று அனீச்தீசியா தந்தபின் , எந்த இடத்தில் சிகச்சை செய்யவேண்டும் என்பதை திர்மானிக்க , ஸ்கேன் எடுத்தோம் . எந்த குறையும் தெரியவில்லை . ஒருவேளை எங்க கருவியில்தான் கோளாறோ என்று எண்ணி , மீண்டும் மீண்டும் சோதனை செய்தும் ஒன்றும் இல்லை என்றே தெரிய வந்தது . கான்சரும் இல்லை எனத் தெரிந்தது . என்ன மாயம் எது என்று எங்களுக்கே விளங்கவில்லை . அவருக்கு முழிப்பு வந்ததும் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்'' என்று கூறிவிட்டு சென்றார் .
டாக்டர் கூறியபடி அடுத்த ஆறு மாதங்கள் என் தந்தை உடல் செக்கப்பிற்கு சென்றார் . அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவே டெஸ்ட் ரிஸல்டில் தெரிந்தது . அதை பாபாவின் அருள் என்று கூறுவதா இல்லை வேறு என்ன என்று கூற முடயும்? பாபாவை நம்புபவர்களை அவர் கைவிடுவது இல்லை என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும் ? ஜெய் சாயிநாத் நமஹ .
(Translated into tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment