Jamner in Omen.
அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள். துவாரகாமாயியில் அமர்ந்து கொண்டு பாபா 'அவரை கவலைப் படவேண்டாம் என்றும், அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வேன் என்றும், மாதவ் அதிகார் இயற்றிய ஆரத்தியை எழுதுமாறும் அதனுடன் உடியையும் சேர்த்து நானா சாஹேபிற்கு ராம்கிர்புவா என்பவர் மூலம் அனுப்புமாறும் கூறினார். ..........." ஒருநாள் பாபா என்னை அழைத்தார். நான் அன்று கண்டேஸ் என்ற இடத்துக்கு செல்ல வேண்டும். அவரோ என்னிடம் சிறிது உடியையும் பாபாவின் ஆரத்தி புத்தகத்தையும் தந்து ஜம்நேர் என்ற இடத்துக்குச் சென்று அதை நானா சந்டோர்கரிடம் தந்துவிட்டு வருமாறு கூறினார். நானோ பாபாவிடம் என்னிடம் உள்ளது இரண்டு ரூபாய் மட்டுமே. அதை வைத்துக் கொண்டு நான் எப்படி கோபர்கோவின் இருந்து ஜல்கானுக்கும், அங்கிருந்து ஜம்னேருக்கும் குதிரை வண்டியில் செல்ல முடியும் என்றேன். பாபாவோ 'அதை கடவுள் பார்த்துக் கொள்வார் எனக் கூறிவிட்டார்'. அது வெள்ளிக் கிழமை. நான் அங்கிருந்து கிளம்பி, மன்மாட் சென்று மன்மாடில் இருந்து ஜல்கோனுக்கு 2.45 மணிக்கு சென்று விட்டேன்.
அங்கிருந்து ஜம்நேருக்கு செல்ல வேண்டும். அப்போது மூன்று மணி இருக்கும். ஒரு குதிரை வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு ஆள் வந்தான். என்னை அழைத்துக் கொண்டு சென்றான். நான் பயந்தேன். வழியில் ஒரு இடத்தில் ஆகாரம் தருவித்துத் தந்தான். மறுநாள் விடியற்காலை ஜம்நேர் சென்றோம். காலைக் கடன் கழித்து விட்டு வருவதாகச் சென்றவன் திரும்பி வரவே இல்லை-..........சாயி சத் சரித்திர பாகம் 33 .
இதில் இருந்து நமக்கு என்ன தெரிகின்றது? நாம் சாயியை நம்பினால் அவர் கைவிடுவது இல்லை. அவரை நாம் முழு மனதுடன் அழைத்தால் நிச்சயம் அவர் வருவார். பாபா கூறுவார் ' என்னை நேசிப்பவன் என்னைப் பார்க்கின்றான். நான் பக்தர்களின் அடிமை. உலக பந்தங்களில் இருந்து எவன் ஒருவன் தன்னை விலக்கிக்கொண்டு கடலில் கலந்திடும் நதி போல என்னை சரண் அடைகின்றானோ அவனை நான் முழுமையாக நேசிப்பேன்.
சாயிபக்தை உஷா கிரணின் அனுபவத்தை எப்போது இதனுடன் சேர்த்துப் படிக்கவும்.
மனிஷா உஷா கிரணின் கடிதம்
எனக்கு நீங்கள் அனுப்பிய உடி கிடைத்தது. மகிழ்ச்சி. அது என்னுடைய வேண்டுகோட்களை சாயி பாபா ஏற்றுக் கொண்டு விட்டத்தின் அடையாளம். எனக்கு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதியே கிடைக்கவேண்டிய உடி ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதியன்றுதான் கிடைத்தது. நான் கவலையுடன் இருந்தேன். ஓமனில் தவறான விலாசத்தில் கடிதம் போய் சேர்ந்து விட்டால் அதை போஸ்ட் ஆபீசில் திருப்பித் தந்து விடுவார்கள். அங்கிருந்து அதை அவர்கள் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவார்கள். ஆகவே எனக்கு கிடைக்க வேண்டிய உடி வேறு எங்கும் போய் சேர்ந்து மீண்டும் திரும்பிப் போய் விட்டதா? பாபாவின் ஆசிர்வாதம் எனக்குக் கிடைக்கவில்லையா என்றெல்லாம் யோசித்தேன்.
ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று பாபாவின் படத்தின் மீது நான் வைத்து இருந்த பூ கீழே விழுந்து விட்டது. ஆகவே உடி வந்து விட்டத்தின் அடையாளம் அது என நினைத்து போஸ்ட் ஆபீசுக்குச் சென்று என் கடித பெட்டியை திறந்து பார்த்தேன். ஒன்றும் இல்லை. மீண்டும் மீண்டும் பதிமூன்றாம் தேதி வரை தேடினேன். பதிமூன்றாம் தேதியன்று தவறுதலாக 992 என்ற பெட்டியில் போட்டிருந்துள்ள அதை அவர்கள் 942 லில் பார்க்கவும் என என் பெட்டியில் பொட்டு இருந்தனர். அமாம் அது என்னுடைய பெட்டிதான். நான் யோசித்தேன். எதற்காக அவர்கள் 942 லில் பார்க்கவும் என எழுத வேண்டும் ? 492 அல்லது 442 லில் பார்க்கவும்என எழுதி இருக்கலாமே. என்னால் நம்பவே முடியவில்லை. அது பாபாவின் மகிமைதான். கீழே காணப்படுவது அந்தக் கடிதம்தான் .
.
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment