Devotee In Contact With Baba - Rege- Part-1
ரிகே அவர்கள் ராதாகிருஷ்ண ஆயி இந்த உலக சுகங்களில் இருந்து எப்படி தன்னுடைய மனதை கட்டுப்படுத்தி வைத்து இருந்தார் என்பதற்கு உதாரணமாக கீழ் கண்ட சம்பவத்தை கூறியுள்ளார்.
1941 ஆம் ஆண்டு ரிகே குரு பூர்ணிமா நடக்கும் தினத்தன்று தம்மால் விழாவில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி இருந்தார். எப்போதுமே குரு பூர்ணிமாவுக்கு அன்னையின் வீட்டில்தான் (ராதாக்ருஷ்ண ஆயி ) சமையல் செய்வார்கள். ஆனால் அந்த தினத்தன்று ரிகே வராமல் போனதினால் வேறு இடத்தில் சமையல் செய்யலாம் என ஆயி கூறி விட்டாள். மேலும் பாபாவிடம் இருந்து என்றையும் விட அதிக அளவு பிச்சை உணவு தனக்கு அன்று கிடைத்து விட்டதினால் சமைக்க வேண்டாம் என முடிவு செய்த போது கடைசி நேரத்தில் ரிகே வருவதாக செய்தி கிடைக்க சமையலை தன் வீட்டிலேயே செய்ய முடிவு செய்தார்.
காலை ஒன்பது மணிக்கு ரிகே வர மசாலா பொடியை அரைக்க கல் ஒன்று தேவையாக இருந்தது. வீட்டு வாசலில் இருந்த கல் ஒன்றை எடுத்து உள்ளே கொண்டு வர முயற்சித்தனர். அது கனமாக இருந்ததால் மற்றொரு பக்தரான புரந்தரே என்பவரும் உதவிக்கு வந்தார். கல் கனமாக இருந்ததினால் உள்ளே கொண்டு போகும் நேரத்தில் அன்னையின் ஆள்காட்டி விரல் நசுங்கி பாதியாக அறுந்தது. ஆனால் வழியைப் பொறுத்துக் கொண்ட அன்னை ஒரு எண்ணெயில் நனைத்த துணி ஒன்றால் காயத்துக்கு கட்டுப் போட்டுவிட்டு சமையலைத் தொடர்ந்தார். அனைத்து வேலையும் முடிந்த பின் தனக்கு கை வலிக்கிறது எனக் கூறிவிட்டு, அருகில் இருந்த காடு ஒன்றுக்குச் சென்று அங்கு வலியை மறக்க அரை மணிநேரம் அழுதுவிட்டு திரும்ப வந்து தன் வேலையைத் தொடர்ந்தார்.
தன்னுடைய குருவிடம் ராதாகிருஷ்ண ஆயிக்கு எத்தனை பக்தி, பொறுக்க முடியாத தன் வலியையும் மறந்து அவருக்கு சேவை செய்ததை என்னவென்று கூறுவது?
(Translated into Tamil by Santhipriya )

Loading
0 comments:
Post a Comment