Wednesday, June 1, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 10


அன்பானவர்களே
நாம் நமக்கு தினமும் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு பாபாவிடம் இன்னமும் நெருக்கம் ஆகிக் கொண்டு இருக்கின்றோம். சில நேரங்களில் நாம் விரும்பும் சிறு ஆசைகள் கூட நிறைவேறும்போது நம் பக்தி பாபாவிடம் அதிகம் ஆகிக் கொண்டே போகின்றது.  இதோ பலரது அனுபவங்களைப் படியுங்கள்
மனிஷா

ஒரு உண்மை சம்பவம்
சாயிபாபாவின் மகிமைகளைப் படிக்கும் போது எனக்கு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தைக் கூற விரும்புகின்றேன்.  நான் சிறுமியாக இருந்தபோது எனக்கு ஏற்பட்ட ஒரு நோயினால் பின் நாளில் எனக்கு இயற்கையாக கரு தரிக்க வாய்ப்பே இல்லை என மருத்துவர் கூறி இருந்தார்.
அதைக் கேட்ட எனது பெற்றோர்கள் கவலை அடைந்தார்கள். நானும் சுமார் பதிமூன்று வருடகாலம் அந்த பயத்திலேயே வாழ்ந்து வந்து கொண்டு இருந்தேன். எனக்கு திருமணம் ஆகியது. உடனேயே நான் வியாழர் கிழமை சாயி விரதம் இருக்கத் துவங்கினேன். எனக்கு பாபாவிடம் மிகுந்த நம்பிக்கை உண்டு. சீரடிக்குச் சென்று அங்கு பாபாவிடம் அழுதேன். எனக்கு ஒரு விடி மோட்ஷம் கிடைக்காதா என ஏங்கி அழுதேன். அதே வேளையில் நான் வேறு எந்த மருந்துகளையும் சாப்பிடவில்லை, எந்த மருத்துவரிடமும் மருத்துவ ஆலோசனைப் பெறவில்லை. அனைத்தையும் பாபாவிடம் விட்டு விட்டேன். 
காலப்போக்கில் நான் கரு தரித்தேன். எனக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தைப் பிறந்தது. அது நன்றாக வளர்ந்து வருகின்றது. எனக்கு அந்தக் குழந்தையை சீரடி சாயிபாபாவே தந்து இருக்கின்றார் என்றே எண்ணுகிறேன்.  இந்த உண்மையை நான் சாயி லீலா பத்திரிகை மூலம் வெளியிட எண்ணினேன். பக்தர்களே பாபாவை நம்புங்கள்... ''சாயியிடம் சிறிது நம்பிக்கை வைத்தாலும் அவர் உங்களிடம் ஓடோடி வருவார். உங்கள் மனதை அவரிடம் செலுத்தினால் அவர் உங்களுக்கு நிச்சயமாக காட்சி தருவார்''. 
ஒரு சாயி பக்தை

இன்னொரு பக்தரின் அனுபவம்  . 
நான் சிறு வயது முதலே சாயிபாபாவின் பக்தை. அதற்குக் காரணம் என்னுடைய சகோதரனே. அவன் சாயிபாபா மீது மிகவும் அதிகமாக நம்பிக்கைக் கொண்டவன். அதனாலோ என்னவோ நானும் பாபாவின் பக்தையாக இருந்தேன். எனக்கு பாபாவின் அனுபவம் நிறையவே உள்ளது.
நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். சிறிய பெண். ஒரு முறை நானக்ல் அனைவரும் சீரடிக்கு சென்று இருந்தோம். ஆண்களுக்கு தனி பாதை, பெண்களுக்கு தனி என்பதினால் நானும் என் சகோதரனும் வெவ்வேறு வரிசையில் நின்று இருந்தோம். தரிசனம் முடிந்து வெளியே வந்து பார்த்தால் கூட வந்த என் சகோதரர்களைக் காணவில்லை. சிறு பெண் நான் என்ன செய்வது? அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன்  ஹிந்தி கூட சரியாகத் தெரியாது. எப்படியோ கஷ்டப்பட்டு நாங்கள் தங்கி இருந்த இடத்தை அடைந்தேன். அது பாபாவின் அருளினால்தான் நடந்தது. அனைவரும் கவலைப்பட்டு என்னை தேடிக்கொண்டு இருந்தார்கள்.
இன்னொரு முறை நாங்கள் அவர் ஆலயத்திற்கு சென்று இருந்தபோது அங்கு பிரசாதமாக பாலைக் கொடுத்தார்கள். எனக்கு பால் சாப்பிடப் பிடிக்காது என்பதினால் அந்த பிரசாதப் பாலை கீழே கொட்டிவிட்டு கையை அலம்பிக் கொண்டேன். வீடு திரும்பிய எனக்கு கடுமையான வயிற்று  வலி. காரணம் தெரியவில்லை. மறுநாளும் அந்த வலி தொடர்ந்தது. ஒரு வேளை  நான் பாபாவின் பிரசாதமான பாலை குடிக்காமல் கீழே கொட்டி விட்டதுதான் காரணமோ என நினைத்தோம். ஆகவே என்னுடைய பெற்றோர்கள் மீண்டும் என்னை பாபாவின் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அன்றும் கொடுத்த பால் பிரசாதத்தை நான் குடித்தேன். அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய வாயிற்று வலி மாயமாக மறைந்தது.  அது பாபாவின் மகிமைதானே!
பாபாவின் அருளினால் எனக்கு திருமணம் ஆகியது. நல்ல கணவர் கிடைத்தார்.  எனக்கு திருமணம் ஆகியதும் நான் இந்தியாவுக்கு சென்றேன்.  என்னுடைய பெற்றோர்கள் இருந்த வீட்டின் அருகில் பல சாயி பக்தர்கள் இருந்தார்கள். அங்கு அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை நான் நேரிலே பார்க்க நேரிட்டது.  பாபாவின் படத்தில் இருந்து கொட்டிய வீபுதி, பாபாவின்  சிலையில் இருந்து கொட்டிய கங்கை-யமுனை தண்ணீர், போன்ற அற்புதங்களை நேரிலேயே கண்டு  களிக்க  முடிந்தது.  அவை பாபா இன்னமும் உயிருடன்தான் இருக்கின்றார் என்ற நம்பிக்கையை அதிகம் ஆக்கியது.
நான் கர்ப்பம் ஆனேன். பிரசவ வலி எடுத்தது. என்னை மருத்துவ மனைக்கு அனுப்பியபோது என் மாமியார் ஒரு சிறிய விநாயகரின் சிலையுடன் சாயிபாபாவின் சிலையும்  என்னிடம் தந்து அனுப்பினார். வலி  அதிகமாகத் துவங்கியதும் நான் 'பாபா என்னைக் காப்பாற்று' என அலறினேன்.  வலை மறைந்தது. நல்ல குழந்தை பிறந்தது.   பிரசவம் முடிந்ததும் என்னுடைய கணவர் ஒரு தகவலை எனக்கு கூறினார். பிரசவம் நடந்தபோது பாபா என் அருகில் அமர்ந்து இருந்ததை அவர் பார்த்தாராம். அதுவரை அவர் பிறர் கூறிய அனுபவங்களை அதிகம் நம்பியது இல்லை. ஆனால் தானே பாபாவின் அனுபவத்தை நேரடியாகப் பார்த்தார். பாபாவின் மீதான நம்பிக்கை மேலும் அதிகமாகியது. இப்போது அவர் பாபாவை கண் மூடித்தனமாக நம்புவதைப் பார்த்து வியக்கின்றேன். 
அனுஷா ரமிணினி 


பாபா அனைத்து இடங்களிலும் உள்ளார்
நான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பாபாவின் பக்தையாக உள்ளேன். எனக்கு அவருடன் பல அற்புதமான அனுபவங்கள் நேர்ந்து உள்ளன. அவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றேன். 
நன் தற்போது UAE என்ற நாட்டில் உள்ளேன். எனக்கு நேற்று ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது . அது சிறியது என்றாலும் என் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  துபாயில் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்று கிருஷ்ணருக்கும் மற்றது சிவனுக்கும் உள்ளது. சிவன் ஆலயத்தில் பிற கடவுட்களும் வைக்கப்பட்டு உள்ளார்கள். அதில் ஒரு பகுதியை தடுத்து பெரிய அளவிலான சாயிபாபாவின் சிலையை வைத்து வணங்கி வருகிறார்கள். அங்கு ஆரத்தி,  மங்கள்  ஸ்னான் போன்றவையும் நடைபெறுகின்றன. 
நேற்று நானும் என் கணவரும் எப்போதும் போல கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு சிவன் ஆலயத்திற்கும் சென்றோம். நான் பாபாவின் சன்னதிக்கு சென்றபோது என் கணவர் சிவன் சன்னதிக்கு சென்றார். நான் பாபாவின் பாதத்தில் ஒரு மஞ்சள் நிற ரோஜாவை வைத்தேன். பாபாவின் தலையில் இளம் சிவப்பு (பிங்க் ) நிற ரோஜா இருந்தது. 7-8 ஆண்டுகளாக எங்களுக்குப் பல பிரச்சனைகள். ஆனால் பாபாவின் காலடியில் வந்து அடைக்கலம் ஆகியதும் பல பிரச்சனைகள் எங்களை விட்டு தாமாகவே அகன்றன. நான் பலரது அனுபவங்களை படித்து இருந்ததினால் பாபாவிடம் எனக்கு ஒரு இளம் சிவப்பு ரோஜாவை அன்று   தந்தால் என் குறிப்பிட்ட ஒரு பிரச்சனை  தீர அவர் அருள் புரிந்து விட்டார் என கருதுவேன்  என நினைத்து அவரை வணங்கினேன். ஆனால் பூசாரி வந்து பூஜை செய்தும் அவர் எனக்கு அந்த பிங்க் ரோஜாவை தரவில்லை. இன்று நமக்கு விடிவு காலம் இல்லை என நினைத்தேன். ஒரு வேளை என்னுடைய பக்தி உண்மையானது இல்லையோ என நினைத்தேன். அலுவலகத்தில் இருந்து மாலை வீடு வந்து  சேர்ந்தேன்.வீட்டிலும் வேலைகளை முடித்துவிட்டு  கூடத்துக்கு சென்றபோது அங்கு என்னுடைய கணவரின் லாப்டாப் (கம்பியூட்டர் ) இருந்தது. அதன் மீது சில பூக்கள். அதில் ஒரு பிங்க் நிற ரோஜா! என் கணவரிடம் அந்த பூக்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் எனக் ஆச்சர்யத்துடன் கேட்டேன். அவரோ தான் கலையில் சிவன் ஆலயம் சென்று இருந்தபோது அங்கிருந்த சுவாமிகளுக்கு பூஜைகளை செய்தப் பின் பாபாவின் சன்னதிக்கு சென்றபோது அங்கிருந்த பூசாரி பாபாவின் காலில் கிடந்த அந்த  பிங்க் நிற  ரோஜாவை தன்னிடம் தந்ததாகக் கூறினார்.  அவற்றையே தான் தனது லாப்டாப் மீது வைத்துள்ளதாக கூறினார்.
நான் வாயடைத்து நின்றேன். பாபா எத்தனை கருணை மிக்கவர். எனக்கு இருந்த பிரச்சனை விடுபட எனக்கு பிங்க் நிற ரோஜாவை அவருடைய அருளின் சாட்சியாக கொடுக்குமாறு கேட்டாலும், அதை என்னிடம் தராமல் என் கணவர் மூலம் எனக்கு அதை அனுப்பி உள்ளாரே அதை என்ன என்று கூறுவது....பாபா நன்றி பாபா....உனக்கு நன்றி. நீதான் எங்களுடன் என்றைக்கும் இருந்து கொண்டு எங்களைக் காத்து அருள வேண்டும்.
வித்யா

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.