Friday, May 20, 2011

Stolen Gold And Cash Returned Back In 72 Hours By BABA's Grace-Experience By A.R Kumar.


பாபாவின் அருள் பெற்ற A.R. குமாரின் அனுபவம் 


அன்பானவர்களே
நண்பர் ரந்தீர் தான் தொகுத்து வைத்துள்ள பாபாவின் அருள் பெற்றவர்களின் கதைகளில் இருந்து  A.R. குமார்  என்பவர் பெற்றுள்ள அனுபவத்தை  அனுப்பி உள்ளார். அதைப் படியுங்கள்.
மனிஷா
-------------------------------------------------------------


A.R. குமாரின் அனுபவம்
 
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி. என்னுடைய மூத்த மகள் ஜுரத்தினால் அவதிப்பட்டாள்.  பெற்றோர்களிடம்  மிகவும்  மரியாதையாக  நடப்பவள் அவள்.  ஆனால் என்ன காரணத்தினாலோ அன்றைக்கு  என்னுடைய சகோதரன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அவள் அடம் பிடித்தாள்.  அவள் உடல் நலமின்றி இருந்ததினால் அவள் மகிழ்ச்சிக்காக  அன்று என்னுடைய சகோதரர் வீட்டிற்குச் சென்று இருந்துவிட்டு மறுநாள் வந்து விடலாம் என முடிவு செய்தோம்.  என்னுடைய மனைவியை மதியம் சகோதரர் வீட்டிற்குச் செல்லுமாறும், நான் மாலையில் அலுவலகத்தில் இருந்து நேரடியாக வந்து விடுவதாகவும் கூறி என் மனைவியுடன் என் மகளையும் அனுப்பி வைத்தேன்.
காலை பத்து மணிக்கு அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றேன்.  என்றும் இல்லாமல் அன்று வழி  முழுவதும் சாயிபாபாவின் பல படங்களை - கார்களில் ஒட்டப்பட்டு இருந்த  ஸ்டிக்கர் போன்றவற்றில் இருந்த  பாபாவின் படங்களை பார்த்தேன். பாபா எனக்கு  அருள் புரிகிறார் என நினைத்தேன்.  மதியம் என் மனைவியும் என்னுடைய மகள் அந்த வீட்டில் சகோதரர் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு உள்ளாள் என்று செய்தி கூறினாள். நானும் மனம் மகிழ்ந்தேன்.
மாலை அலுவலகத்தில் இருந்து சகோதரர்  வீட்டிற்குச் சென்றேன். அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் சென்றவன் மீண்டும் காலைப் போலவே வழி  முழுவதும் என்றும் இல்லாமல் அன்று  கார்களில் ஒட்டப்பட்டு இருந்த  ஸ்டிக்கர்களில்  இருந்த  பாபாவின் படங்களை பார்த்தேன். அதைப் பார்த்த எனக்கு மனதில் தோன்றியது ' பாபா என்று எனக்கு ஏதோ செய்தியைத் தருகிறார். ஆனால் அது என்ன எனப் புரியவில்லையே!'.  அன்று இரவு அனைவரும் மகிழ்ச்சியாக பேசி பொழுதைக் கழித்தோம்.
மறுநாள் காலை  நாங்கள்  வீட்டிற்கு செல்லக் கிளம்பினோம். ஆனால் என் சகோதரரோ இரவு சாப்பிட்டப் பின் செல்லுமாறு கூறினார். அன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுமுறை என்பதினால் நாங்களும் சரி எனக் கூறிவிட்டு அங்கு தங்கி இரவு உணவு அருந்தியதும் வீட்டிற்கு கிளம்பினோம். நான் என் மனைவியிடம் நீ முதலில் போ, நான் என்னும் பத்து நிமிடத்தில் வருகிறேன் எனக் கூறிவிட்டு அவளை அனுப்பினேன். பத்து நிமிடத்திற்குப் பிறகு வீடு சென்றவன் என் மனைவியும் மகளும்  பயந்து  நிற்பதைக்  கண்டேன். வீட்டில் அனைத்துப் பொருட்களும் களவு போய் இருந்தன. நாங்கள் திகைத்தோம்.  உடனே என் சகோதரனுக்கு போன் செய்து அவரை வரவழித்தேன். போலீசில் புகார் செய்துவிட்டு வரும்போது இரவு பதினோரு மணி ஆகிவிட்டது.
மறுநாள் முதல் அனைவரும் காவல் நிலையம்   சென்று ஏதாவது தகவல் உண்டா எனக் கேட்டுக் கொண்டே இருக்க நான் மட்டும் பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவரிடம் என் பொருட்களை மீட்டுத் தருமாறு பிரார்த்தனை செய்தேன். ஒரு நாள் காலை எனக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அன்று காலைவரை அவர்கள் பல இடங்களுக்கும் சென்று தேடிப் பார்த்தும் எந்தவிதமான செய்தியும் கிடைக்க வில்லை.  ஆகவே அன்று  நான் மிரகிள் (பாபாவின் அதிசயம்) என்ற புத்தகத்தை என்னுடன் எடுத்துக் கொண்டு  காவல் நிலையம் சென்றேன். போலிஸ் என்னை  எங்கோ ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த இடத்தில் அந்த திருடன் கையும் களவுமாக பிடிபட்டு  இருந்துள்ளான். அவனிடம் இருந்த பொருட்கள் மீட்கப்பட்டன.  90 சதவிகித அளவில்எங்களுடைய  தங்க நகைகள் மற்றும் பணம் பிடிபட்டது. அனைத்து நடவடிக்கைகளும் முடிய இரவு இரண்டு மணி ஆகிவிட்டது.  இரவு வீடு திரும்பிய நான் பாபாவின் பூஜை அறைக்குச் சென்று கண்ணீர் விட்டு அழுதேன்.
நான் அனைத்தையும் நன்கு யோசனை செய்து பார்த்தேன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவளுக்கு ஐந்து  வயது , மற்றவளுக்கோ  இரண்டு வயது ஆகியது. அன்று மட்டும் நாங்கள் வீட்டில் இருந்து இருந்தால் எங்களுக்கு திருடர்கள்  மூலம்  ஏதாவது  ஆபத்து ஏற்பட்டு இருக்கும்  என்பதினால்தான் என் மூத்த மகள் மூலம் எங்களை  அன்று அந்த வீட்டில்  எங்களை தங்க விடாமல் எங்களை  பாபா வெளியில் அனுப்பி விட்டார். திருட்டுப் போன பொருட்களின் மதிப்பு 15 லட்சம் இருக்கும். நான்கே நாட்களில் அப்படிப்பட்ட திருட்டில் தாங்கள் அத்தனையும் மீட்டதாக சம்பவமே இருந்தது இல்லை என அந்த காவல் நிலைய அதிகாரி என்னிடம் கூறினார். பாபாவே எங்களை காப்பற்றி உள்ளார். பாபா தன்னுடைய பக்தர்களுக்கு என்றுமே துணையாக நிற்கின்றார். அவருக்கு என் நன்றி மற்றும் வணக்கங்கள்.
(Translated into tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.