B.V Narsimha Swami ji-From 1932-March 1934.
அவர் சென்ற இடங்கள் அனைத்துக்கும் நடந்தே சென்றார் . வழியில் தான் கண்டவற்றை மனதில் இருந்து அழியாமல் பார்த்துக் கொண்டார் . அப்படிப்பட்ட நேரத்தில் யோகா கலையும் கற்றார் . அப்படி சென்று கொண்டு இருந்த் பொழுது அவர் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது . வழியில் அவர் கட்டறிந்து இருந்த ஆயுர்வேத மருத்துவத்தினால் பலரை குணப்படுத்தினார் . சமையல் வேலையையும் நன்கு அறிந்தேருந்தார் .
அந்த கால கட்டத்தில் அவர் பல இன்னல்களையும் அனுபவித்தார் . ரயில் பாதையை ஒட்டி நடந்து சென்றார் . பாலங்களின் அடியில் படுத்து உறங்கினார் . பல நாட்கள் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி அவதிப்பட்டார் . ஆனாலும் அவர் எவரிடமும் சென்று பிச்சை கேட்டது இல்லை. எவரேனும் வந்து ஏதாவது தந்தாள் உண்டுவிட்டு நடப்பார் . ஒரு முறை உணவு கிடைக்காமல் போய் பசியினால் களி மண்ணை நீரில் கரைத்து வடிகட்டி அதைத் தின்றார் .
கடும் குளிரிலும் ஒரே துணியுடன் படுத்துக் கிடக்க வேண்டி இருந்தது . சில நேரங்களில் அருகில் இருந்த சுடுகாட்டிற்கு சென்று அங்கு பிணங்களின் மீது போடப்பட்டு இருந்த துணியை எடுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் . காலை எழுந்து அவற்றை மீண்டும் அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடுவார் . மழை , வெய்யில் என அனைத்து காலங்களிலும் வெற்றிடத்தில் தங்கி அவதிப்பட்டார் . அங்கங்கே ஓடிக்கொண்டு இருந்த நதிகள் , குளங்கள் என கிடைத்த இடத்தில் இருந்த தண்ணீரை பருகினார் . அதனால் ஒரு முறை பயங்கர வயிற்றுப் போக்கும் , மலாரியா ஜுரமும் வந்து அவதிப்பட்டார் .
அவர் சென்ற வழி எங்கும் சாதுக்கள் , சன்யாசிகளையும் , அயோகியர்களையும் சந்திக்க வேண்டி இருந்தது . ஆனாலும் ஒவோருவரிடம் இருந்தும் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார் .
அத்தனையையும் தாங்கிக் கொண்டு மராத்திய மாநிலத்தையே சுற்றி சுற்றி வந்தார் . ஒருநாள் அவருக்கு மூன்று நாட்கள் உணவே கிடைக்கவில்லை . அப்போது அவர் அருகில் ஒரு சாடு வந்து அமர்ந்து கொண்டு சிறிதளவு பூரி பாஜியை தந்து அதை உண்ணச் சொன்னார் . உண்டபின் களைப்பு ஏற்பட உறங்கி விட்டார் .அவர் நினைத்தார் , கடவுள் தக்க சமயத்தில் வந்து பசியைத் தீர்த்தாலும் எண்ணமும் கொஞ்சம் தந்து இருக்கலாமே . முழித்துப் பார்த்தபொழுது அந்த சாது அங்கிருந்து செல்லாததை கவனித்தார் . ஆனால் அவர் எதுவும் கேட்கும் முன் அந்த சாதுவே அவரிடம் மீதி இருந்த பூரியை தந்தபின் , மூன்று நாளாக உணவு அருந்தாமல் இருந்தவர் ஒரேடியாக அனைத்து பூரியையும் சாபிட்டால் உடம்புக்கு ஆகாது என்பதினால்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்ததாகக் கூறினார் . அவருக்கு எப்படி தான் மூன்று நாட்களாக உணவு அருந்தவில்லை என்பது தெரியும் என வியந்தபடி அவரைத் தேடினார் . அந்த சாது தென்படவே இல்லை .
அதுபோலவே ஜல்கான் என்ற இடத்தில் இருந்த ஜிப்ருவானா என்பவரை நரசிம்ஹஸ்வாமி சந்தித்த நிகழ்ச்சி அற்புதமானது . அந்த அவதூதர் குப்பை , கூளங்களில் படுத்துக் கிடந்தாலும் அவர் உடம்பில் இருந்து எந்த கெட்ட வாடையும் வரவில்லை . அவர் படுத்திருக்கும் இடத்துக்கு சென்றாலே இனிய வாசனை மிததந்து வந்தது. அவரிடம் சென்று அவரை வணங்க முயற்சிட்ட நரசிம்ஹஸ்வாமியிடம் அவர் கூறினார் , 'நான் உன் குரு அல்ல. அந்த காலங்களில் நரசிம்ஹஸ்வாமிக்கு தொடர்ந்து தலைவலி இருந்து கொண்டே இருந்தது . அது குறித்து அவரிடம் கூறியபோது , அவர் நரசிம்ஹஸ்வாமி தலையில் கை வைத்து ஆசி கூறி , ;நீ உலகப் புகழ் பெற்று விளங்குவாய் ' என்றாராம் . அது முதல் நரசிம்ஹஸ்வாமிக்கு தலைவலியே போய்விட்டது .
வஜ்ரேச்வரி ஆலயத்தின் அருகில் இருந்த கட்டில் சென்று சில நாட்கள் தங்கினார் . அவரை சுற்றி சுற்றி பல கொடிய விலங்குகள் வந்தாலும் அவர் கவலைப் படவில்லை . அவையும் அவரை ஒன்றும் செய்யவில்லை . மலை உச்சியில் சென்று அமர்ந்தபடி தபம் செய்தவாறு தமது குருநாதர் எங்கு இருப்பார் எனத் தேடினார் . அப்போது யயோலா என்ற இடத்தில் ராமதாசி சாது என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது . அவரிடம் இருந்து துளசி ராமாயணம் மற்றும் ராம சரித காதாவை கற்று அறிந்தார் . அவருடைய பசுக்களை பாதுகாத்து வந்தார் .
......தொடரும்
To be continued.
Posted so Far :
B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Loading
0 comments:
Post a Comment