Monday, October 26, 2009

B.V Narsimha Swami ji-From 1932-March 1934 Continued

1933 ஆம் ஆண்டில் பூனா அஹமத் நகர் நெடுஞ்சாலையில் இருந்த கட்டேகோன் என்ற பகுதியை நரசிம்ஹச்வாமி அடைந்தார். அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த சத்குரு நாராயண மகாராஜ் என்பவர் தமக்கு ஏழு அல்லது எட்டு வயதாகயிலேயே தத்தாத்ரேயருடைய அருளினால் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். ஒரு வேலை அவரிடம் இருந்து தமக்கு தீட்சை கிடைக்கலாம் என எண்ணியவர் அவரிடம் சென்றார்.
சத்குரு நாராயண மகாராஜ் என்பவர் நிறுவி இருந்த தத்தாத்ரேயருடையஆலயம் பெரும் புகழ் பெற்று இருந்தது. அங்கு சென்றால் தத்தாத்ரேயருடைய மற்றும் சத்குரு நாராயண மகாராஜ் சக்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணி அந்த ஆலயத்திற்கு சென்றார்.ஆலயத்திற்குள் கூரையில் பல பறவைகள் பறந்து கொண்டு இருந்தன. நரசிம்ஹஸ்வாமி எண்ணினார், ' தாத்தருடைய உபாசகரான சத்குரு மகாராஜ் உண்மையிலேயே அவருடைய ஆசி பெற்றவர் எனில் தலைக்கு மேல் பறக்கும் பறவைகளில் ஒன்று என் தலையில் வந்து அமரும்'
என்ன அதிசயம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தவர் தலையில் எவரோ தட்டிவிட்டுச் செல்வதை உணர்ந்தவர் கண் விழித்துப் பார்த்த பொது ஒரு சிறு பறவை தன் தலையில் இருந்து பறந்து சென்றதைக் கண்டார். அதக்கு முன் அப்படி ஒரு நிகழ்ச்சி அவருக்கு நடந்தது இல்லை. அதை கண்டவர் அந்த ஆலயத்தில் இருந்த ஸ்வாமிகள் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே அவர் முன் சென்று தனது விருப்பத்தை கூற முயன்றவர் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு தயங்கி நின்றார். ஆனாலும் ஜாடையாக தம் வேண்டுகோளை அவரிடம் தூரத்தில் இருந்தே தெரிவித்தார்.
சத்குருவிடம் தாம் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ள தரகர் எனவும், அது வரை தாம் பார்த்த எந்த வைரமுமே குறை இன்றி இல்லை எனவும் ஆகவே அவை தனக்கு மனதில் திருப்தி தரவில்லை எனவும் கூறி, தனக்கு ஒரு நல்ல வைரம் கிடைக்க அவர் ஆசிகள் தந்து உதவ முடியுமா எனக் கேட்டார்.எந்த நிகழ்ச்சி 1933 ஆம் ஆண்டில் நடந்தது. அதைக்கேட்ட சத்குரு மகராஜும் அவர் தேடி வரும் வைரம் விரைவில் கிடைக்கும் என்றார்.
ஆகவே நரசிம்ஹஸ்வாமி தனக்கு மன அமைதி தந்த அந்த இடத்தில் சில காலம் தங்கி இருந்தார். 1945 ஆம் ஆண்டு ஹோமம் ஒன்றை செய்ய சத்குரு மகராஜ் பெங்களூருக்கு சென்றார். ஆனால் ஹோமம் முடிந்த மறு நாளே அவர் மஹா சமாதி ஆகிவிட அவருக்கு கவி கங்காதேஸ்வரர் என்ற இடத்தில் சமாதி எழுப்பினர்.
நரசிம்மஸ்வாமி கட்டேகோன் என்ற இடத்தில் இருந்த பொழுத் அஹமத் நகரின் அருகில் ஐந்து கல் தொலைவில் இருந்த இடத்தில் மெஹிர் பாபா என்ற சத்குரு உள்ளதாக கேள்விப் பட்டு இருந்தார். 1894 ஆம் ஆண்டு பூனாவில் பிறந்தவர் மெஹிர் பாபா. அவர் ஒரு அவதார குரு. அவர் ஹஸ்ரத் பாபா ஜான் என்பவர் மூலம் தீட்சை பெற்று ஆன்மீகவாதியாக இருந்தபடி அன்பே உலகம் என்ற தத்துவத்தைப் பரப்பி வந்தவர். ஆகவே 1933 ஆம் ஆண்டிலேயே நரசிம்மஸ்வாமி சத்குரு மகாராஜிடம் விடைப் பெற்றுக் கொண்டு சத்குரு மெஹிர் பாபாவிடம் சென்றார்.

நரசிம்மஸ்வாமி இருபது நாட்களில் அவர் இருப்பிடத்துக்கு சென்ற பொழுது விதி விளையாடியது. அவர் அங்கு சென்ற பொழுது சத்குரு மெஹிர் பாபா மௌன விரதத்தில் இருந்தார். ஆனாலும் அவரிடம் ஒரு பெயர் பலகையில் தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். அவரிடம் தனக்கு ஆத்மா ஞானம் கிடைக்க வழி காட்டுமாறு வேண்ட அவர் பலகையில் எழுதிக் காட்டினார், 'நான் உனக்கு குரு அல்ல. உனக்காக ஒரு குரு வட நாட்டில் காத்துக் கொண்டு உள்ளார்.'

அதைக் கேட்ட நரசிம்மஸ்வாமி முதலில் வருத்தம் அடைந்தாலும் அங்கு சில மாதம் தங்கி இருந்தபடி அந்த சத்குருவின் வாழ்கையைப் பற்றி தெரிந்து கொண்டார். அப்போதுதான் அங்கிருந்த பலரும் சகரியில் இருந்த உபாசினி மகராஜ் என்பவரே தம்மை மெஹிர் பாபாவிடம் அனுப்பி இருந்ததாகக் கூற அந்த அவதாரப் புருழரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரசிம்மஸ்வாமி அவரித் தேடி சகோரிக்கு பயணம் செய்தார்.
....தொடரும்o
To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.