B.V Narsimha Swami ji-Turning Point.
1921 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதக் கடைசி வாரம். நரஸிம்ஹ ஐயர் தம்முடைய தாயாரின் வருடாந்திரக் காரியங்களை செய்து முடித்திருந்தார் . காரியங்கள் முடிந்ததும் வைதீகர்களுக்கு உணவு போட வேண்டியதே கடைசி . இலைகளைப் போட்டு பரிமாறத் துவங்கினார் .அப்போது இன்னும் ஒரு சோகம் நிகழ்ந்தது . பதினைந்தே வயதான அவருடைய மகனான ஜெயராமன் மற்றும் பதிமூன்று வயதான மகள் சாவித்ரி இருவரும் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டு இருந்த பொழுது , கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து முழுகி இறந்து விட்டனர் . அந்த செய்தியை வீட்டு வேலைக்காரன் வந்து அவருடைய காதில் ரகசியமாகக் கூறியும் மனம் கலங்காத நரஸிம்ஹ ஐயர் தம் மனதை கட்டுப் படுத்தி வைத்துக் கொண்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு நின்றார் . தம்முடைய தாயாரின் காரியங்கள் நிறைவு பெற வேண்டும் எனில் வைதீகர்கள் உணவு அருந்தி முடிக்க வேண்டும் எனக் காத்திருந்து, அதன் பின்னரே வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த தம்முடைய குழந்தைகளைக் காணச் சென்றார் .
ஒரே நாழிகையில் தமது இரண்டு செல்வங்களையும் பறி கொடுத்த எந்த மனிதனும் அதுவரை தான் செய்தது வந்த நல்ல காரியங்களுக்கு கடவுள் தந்த பரிசா அது எனப் புலம்பி இருப்பார்கள் . ஆனால் அந்த சோகத்தை எதிர் பார்க்கவில்லை என்றாலும் நரஸிம்ஹ ஐயர் அமைதி காத்தார் .
அது என் நடந்தது ? அதுதான் வாழ்வின் தத்துவமா ? புரியவில்லை அவருக்கு। அவருக்கு ஆறுதல் கூற வந்த எவராலுமே அவருடைய அந்த கேள்விக்கு பதில் தர இயலவில்லை . அவருடைய சோகம் மறைய வெகு காலம் பிடித்தது . ஏற்கனவே தன்னுடைய இன்னொரு மகனை நன்கு படிக்க வைத்து திருமணமும் செய்து கொடுத்து விட்டார் . மற்ற இரு மகள்களும் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்று விட்டனர் . அவருடன் அவருடைய சோகத்தை பரிமாறிக்கொள்ள அவருடைய மனைவி மட்டுமே பாக்கி இருந்தாள்.
பொதுஜன நலனுக்காகவும் அவர்களுக்கு சேவை செய்யவும் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் ஒரு மார்கமே . அதை மேற்கொள்ள பெரும் இளைஞ்சர் படை பல இடங்களிலும் காத்துக் கிடக்கின்றது . அனால் அதே உத்வேகத்துடன் செயல்பட்டு அனைவருக்கும் ஆன்மீக வழி காட்ட ஏன் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கிடைக்கவில்லை என மனம் எண்ணியது .
அவருடைய இறந்து போன குழந்தைகளுடைய உடலை வெளியில் எடுத்த பொழுது கூட தங்க முடியாத சோகத்தை தன்னுள் அடக்கிக்கொண்ட மனிதர் மனதில் இனி தான் உலக பந்தங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் எனில் தாம் வாழ்ந்து கொண்டிக்கும் வாழ்கையையும் , வக்கீல் தொழிலையும் விட்டு விட வேண்டும் என்றும் தம்முடைய தற்கால வாழ்வுக்கு நேர் மாறான திசையில் செல்ல வேண்டும் எனவும் புரிந்தது . 1922 ஆம் ஆண்டில் அவருடைய துணைவியாரும் மரணம் அடைந்த பின் அதனை பெரிய பங்களாவில் அவர் தனி மரமாக நிற்க வேண்டி இருந்தது .
தீர்மானமாக நரஸிம்ஹ ஐயர் முடிவு செய்தார் . இனி அனைத்தையும் துறந்து விட்டு பற்றில்லாத தனி வாழ்வைத் துவக்க வேண்டும். ஏற்கனவே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு தன்னுடைய மக்கள் பிரதிநிதி என்ற பதவியைத் துறந்தவர்தானே அவர். அப்படிப்பட்ட அவர் 1925 ஆம் ஆண்டில் தமது வக்கீல் தொழிலையும் விட்டு விட்டார் . படிப்படியாக தனது அனைத்து ஈடுபாடுகளையும் ஒருவருக்கும் தொந்தரவு இன்றி தொலைத்துக் கொண்டே வந்தவர் லஷ்மி நாராயணன் ஆலய பணியையும் முடித்து விட்டு தம்முடைய குரு ஆசாரிகள் தந்திருந்த அறிவுரைப்படி தமது சற்குருவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறினார் .
அது போல ராமாயணம் , மகாபாரதம் , ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றையும் புருஷ சுக்தம் , ஸ்ரீ சுக்தம், துர்கா சுக்தம் , சாந்தி பஞ்சாகம் போன்றவையும் அத்துபடியாக தெரிந்து கொண்டு இருந்தார் . பைபிள் , ஷேக்ஸ்பியரின் இலக்கியம் , டென்னிசன் , வோர்ட்ஸ்வொர்த் போன்றவர்களின் படைப்புகளையும் நன்கு படித்து இருந்தார் . இத்தனையும் ஒருங்கே கொண்டு இருந்தவர் 1925 ஆம் ஆண்டில் தன் வீட்டை விட்டு வெளியேறினார் .
ஒரு பறவை கூட்டை விட்டு வெளியேறியது போல அந்த நிகழ்ச்சி அமைந்து இருந்தது . குடும்ப பரிமாணங்கள் இனி அவரை துரத்த முடியாது. கையில் பணமின்றி அனைத்தையும் துறந்து விட்டு தமது வாழ்கை பயணத்தை துவக்கினார். கடவுளைத் தேடி பயணிக்கையில் பயணிக்கும் தன்னுடைய பக்தனைக் காப்பாற்றுவது அந்த கடவுளின் கடமை அல்லவா . அந்த உண்மையை அவர் சேலத்தில் இருந்து கிளம்பியதுமே தெரிந்து கொண்டு விட்டார் .
..........தொடரும்
To be continued.
Posted so Far :
B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.

Loading
0 comments:
Post a Comment