Friday, October 16, 2009

B.V Narsimha Swami ji-Towards Pandharpur.


ஹுப்ளியில் இருந்த சித்தாஷ்ரமத்தை விட்டு வெளியேறிய நரஸிம்ஹஸ்வாமி தமது சத்குருவைத் தேடி கிழக்கு நோக்கி நடந்தார் . 1930 ஆம் ஆண்டு பண்டாரபுரா என்ற இடத்தை அடைந்தார். கடவுளின் பெயரால் அமைந்து இருந்த அந்த ஊரில் மீராபாய் , கௌரங்க மற்றும் துக்காராம் போன்றவர்கள் தமது இலக்கியங்களினால் புகழ் பெற்று இருந்தனர் . பக்த விஜயம் என்ற நூலின்படி அந்த ஊரில் இருந்த வணிகர்கள் தம்முடைய பொருட்களை விற்கும் பொழுது , ஆசிரியர்கள் பாடத்தை சொல்லிக் கொடுக்க துவங்கும் முன் , தம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை , வேலையாட்கள் எஜமானர்களைக் கண்டதும் முதலில் கூறும் வார்த்தை ஹரி , ஹரி என்பதே. புரந்தரதாசரும் வாழ்ந்த இடம் அது. அங்குள்ள பண்டரிநாதர் ஆலயத்தில் உள்ள பகவான் அனைவராலும் மிக உயர்வுடன் பூஜிக்கப்படுகின்றார் . பக்த துகாராம் ஜெயா ஜெயா விட்டால , ஹரி ஜெய் விட்டலா பாண்டுரங்கா என மனம் உருகி பாடி உள்ளார்.
பண்டாரபுரதுக்கு வந்த ஸ்வாமிகள் குங்காடி கள்ளி என்ற இடத்தில் இருந்த தர்மசாலாவில் தங்கி இருந்தார். 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மதம் முதல் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் வரை அங்கு இருபது மாதங்கள் மன மகிழ்ச்சியுடன் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் மராத்திய மொழியை கற்று அறிந்தார். பஜனைப் பாடல்களைப் பாடிய வண்ணம் மன மகிழ்ச்சியுடன் இருந்த்தார் . அப்போது அந்த ஊரில் அவர் தமது சத்குருவைத் தேடி வந்துள்ளார் என்பதை கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் அவரை பாபுமாயி என்ற சாத்வினியை சந்திக்குமாறு கூறினார்.
பாபுமாய் மிகவும் விசித்ரமானவர். பல நாட்கள் அழுக்கடைந்த துணியை மாற்றாமல் உடுத்தி இருப்பார் . தலை முடி நீண்டு வளர்ந்து சீக்கு பிடித்து இருந்தது. ஒரு அழுக்கு துணியில் மூன்று கட்டைகளை முடித்து வைத்திருப்பார் . அது குறித்துக் கேட்டால் தாம் ராஜச , தமஸ் மற்றும் சத்வ குணங்களை அடக்கி வைத்துள்ளதாகவும் தாம் அதற்கெல்லாம் அப்பால்பட்டவர் எனவும் கூறுவர் .
தான் பார்க்கும் அனைவரிடமும் சென்று பிச்சை எடுத்தாலும் ஒரே ஒரு பைசா மட்டுமே கேட்பாள் . அதை பெற்றுக் கொண்டு விட்டலா ஆலயத்தை சுற்றி வருவாள் . அதன் பின் மாலையில் அத்தனை நாணயத்தையும் எடுத்துக் கொண்டு போய் சந்திரபாக நதியில் அவற்றைப் போட்டுவிட்டு , அம்மா சந்திரபாகா என் பணத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள் எனக் கூறிவிட்டு சென்று விடுவாள் . அவளுடைய பாங்கே அந்த நதி .

ஒருநாள் நரஸிம்ஹஸ்வாமி அவளை பின் தொடர்ந்து போனார். அவர் தன்னை பின் தொடர்ந்து வருவதைக் கவனித்தவள் அவரை யார் எனக் கேட்க, தாம் ஒரு பயணி என்றார் . பின் ஏன் தன்னைத் தொடர்ந்து வருகிறாய் எனக் கேட்டபோது , தமக்கு போக்கிடம் இல்லை என்பதினால் வருவதாகக் கூற அவள் தாம் சுடுகாட்டிற்கு செல்வதாகக் கூறினாள் . அவரா சளைத்தவர் , தாமும் சுடுகாட்டிற்கு செல்வதாகவும் , அங்கு தங்க தமக்கு ஆட்சேபணை இல்லை என்றும் கூறினார்.
பாபுபாய் என்றும் போல் அன்றும் நதிக்கு சென்று தன்னிடம் இருந்த நாணயங்களை நதியில் போட்டுவிட்டு , அம்மா இதை பத்திரமாகப் பார்த்துக்கொள் எனக் கூறிய பின் சுடுகாட்டை அடைந்தார். அங்கு சென்றதும் பசிக்கிறதா எனக் கேட்டாள் . அவர் ஆமாம் என்றதும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பரிமாருவரைப் போல ஒருவன் சப்பாத்தி , அரிசி சாதம் , வேகவைத்த பருப்பு எனப் பல பண்டங்களை வந்து தந்தபின் அவற்றை சாப்பிடுமாறு பாபுபாய் கூறினாள் . அவரும் இயந்திரம் போல அனைத்தையும் சாப்பிட்டார் . அவற்றை கொண்டு வந்தவன் போய்விட்டான் . வந்தது யார், எங்கிருந்து உணவைக் கொண்டு வந்தான் என கேட்கும் முன் அவள் கேட்டாள் 'உனக்கு இப்போது திருப்திதானே ? இன்னும் என்ன வேண்டும்' என்று கேட்க , அவர் தனக்கு கடவுளைக் காண வேண்டும் என்றார். அந்த சாட்வினியோ 'என்ன அப்பா இப்போதுதானே உனக்கு விட்டோபாவே வந்து உணவு தந்துவிட்டுப் போனார் , சரியான மூடானாக இருக்கிறாயே . அவர் கொண்டு வந்ததை நீ சாப்பிட்டாய், ஆனாலும் அவரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையே . இந்த இடத்தில் பகவான் விட்டோபவைத் தவிர வேறு யாரப்பா வந்து உணவு தர முடியும் ' என்றாள்
அதைகேட்ட நரஸிம்ஹஸ்வாமி வருந்தினார் . பாபுபாய் அவரைத் தேற்றினாள் . கவலைப்படாதே . இந்த பரந்த உலகில் அனைத்து இடத்திலும் வியாபித்துள்ள கடவுளைக் காண உனக்கு இன்னமும் நேரம் வரவில்லை . உன்னுடைய குரு வட நாட்டில் காத்துக் கொண்டு இருக்கின்றார். அங்கு போ. அவரே உனக்கு வழி காட்டுவார் என்றாள் .

மேலும் கூறினாள் , எந்த உலகில் பகவான் வித்தலை விட பெரியவர் எவரும் இல்லை. அனைத்து இடத்திலும், மேலே, கீழே என வியாபித்துள்ளார் . நான் மேலும் எதுவும் கூற விரும்பவில்லை . போ, வடநாடு சென்று உன்னுடைய குருவை சந்திக்கச் செல் என்றாள்.அதைக் கேட்டவர் 1932 ஆம் ஆண்டு பண்டாரபுராவை விட்டு வெளியேறி தம் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார் .
.........தொடரும்
To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.