Thursday, October 15, 2009

B.V Narsimha Swami ji.-Life In Ramana Maharshi Ashram.

Chapter -6
Experience in Ramana Maharshi Ashram

ரமண ஆஸ்ரம அனுபவம்

நீதிபதி சுந்தரம் ரமண மகரிஷி பற்றி நரஸிம்ஹஸ்வாமி எழுதி இருந்தவற்றைப் படித்தார் . அற்புதமாக இருந்த அவற்றை மற்றவர்களும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக அதை சென்னையில் இருந்த ஹகின்பாதம் கம்பனியை அணுகி பிரசுரிக்க முயன்றார் .
ஹகின்பாதம் கம்பனியின் புத்தகக் கிளைகள் பஸ் ஸ்டாண்டுகள் , ரயில்வே நிலையம் , வணிக நிலையம் என பல இடத்திலும் இருந்தன . நரஸிம்ஹஸ்வாமி எழுதிய ஆத்ம ஞானம் என்ற புத்தகம் அதுவரை மிகக் குறுகிய வட்டத்திலேயே சுழன்று கொண்டு இருந்த ரமண மகரிஷி பற்றி பலரும் அறிய வாய்ப்பை ஏற்படுத்தியது.
அந்த புத்தகம் வெளி வந்த பின்னர்தான் உலகின் பல பாகங்களிலும் இருந்து ரமண மகாரிஷியைத் தேடி பலரும் வரத் துவங்கினார் என்பதே உண்மை . அது மட்டும் அல்ல குறுகிய காலத்திலேயே நரஸிம்ஹஸ்வாமி எந்த அளவு ஆத்ம ஞானம் பெற்று இருந்தார் என்பதை விளக்கியது . ரமண மகரிஷியைப் பற்றி பல புத்தகங்கள் வெளியானாலும் முதலில் அவர் பற்றி உலகத்து அனைத்து மூலைக்கும் தெரிய வாய்ப்பு கிடைத்தது நரஸிம்ஹஸ்வாமி எழுதிய புத்தகமே . 1931 ஆம் ஆண்டு வெளியான அந்த புத்தகத்திற்கு நீதிபதி சுந்தரம் அவர்களே முன்னுரை எழுதி இருந்தார் . அந்த புத்தகம் இது வரை பதினைந்து முறை மறு பதிப்பாக வந்துள்ளது . அதை பல மொழிகளிலும் மொழி பெயர்த்து உள்ளனர் .
ரமண மகாரிஷியுடன் பழகியது அவருக்கு மனதுக்கு இதமாக இருந்தது . சேலத்தில் இருந்து வந்த பின் முதல் முறையாக தாம் எந்த அளவு ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு சென்று விட்டோம் என நினைத்தார் . மனம் அமைதி அடைந்தது . ரமணரை பற்றி பாடல்களையும் இயற்றினார் . 1929 ஆம் ஆண்டில் ரமண மகாரிஷியிடம் சென்று தமக்கு பூரண மன அமைதி எப்போது கிடைக்கும் என வினவியபோது , அவருடைய கண்களை உற்று நோக்கிய ரமணர் அவரிடம் கூறினாராம் ' நான் உன் குரு அல்ல. உன்னுடைய குரு உனக்காக வட நாட்டில் காத்துக் கொண்டு இருக்கின்றார் . அவரிடம் இருந்தே உனக்கு ஆத்ம ஞானம் கிடைக்க உள்ளது. அதைக் கேட்ட நரஸிம்ஹஸ்வாமி உடனேயே அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வட நாடு நோக்கிப் பயணத்தைத் துவக்கினார் .


சிருத்தாஷ்ரமத்தில்
நரஸிம்ஹஸ்வாமியிடம் சல்லி காசு கூட இல்லை. தாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி நடந்தே செல்ல வேண்டி இருந்தது . வழியில் எவரேனும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றால் அவர்களுடம் சென்றார் . எவராவது உணவு தந்தாள் அதை உண்பார் . இல்லை எனில் பட்டினி கிடப்பார் . ஆனாலும் அது குறித்து கவலைப் படவில்லை . தம்முடைய இலக்கு தன்னுடைய குருவைக் காண வேண்டும் என்பதே இருந்தது . அவரிடம் இருந்து தீட்சை பெற வேண்டும், மற்றதை கடவுள் பார்த்துக் கொள்வார் .
ஒரு நாள் நடந்து கொண்டு சென்று கொண்டு இருந்த நரஸிம்ஹஸ்வாமியை ஒரு லாரி டிரைவர் வண்டியில் ஏற்றிக் கொண்டு டீயும் பிஸ்கட்டும் வாங்கித்தந்து சாப்பிடச் சொன்னார். வழியில் பேசிக்கொண்டு போனபோது , தாம் ஹுப்ளி நகருக்கு செல்வதாகவும் , அந்த ஊரில் சித்தாச்ரமம் என்ற ஆசிரமத்தில் பெரிய மகான் உள்ளதாகவும் அவருடைய பேச்சை புலி , சிங்கம் முதல் அனைத்தும் புரிந்து கொள்வதாகவும் பேசிக்கொள்கின்றனர் எனக் கூறி, அவர் விரும்பினால் அவரை அவரிடம் அழைத்துச் செல்வதாக கூறினார் . விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் அனுகூல சதாவார்த்த என்ற வரிகள் நரஸிம்ஹஸ்வாமிக்கு நினைவில் வந்தது. தன்னுடைய தேவைக்கேற்ப விஷ்ணுவே வந்து தம் பக்தர்களை வழி நடத்துவதாக ஐதீகம் . அதனால் அந்த லாரி டிரைவர் கடவுளின் பிரதிநிதியாகவே தன்னிடம் வந்து உள்ளார் என எண்ணி அதற்க்கு சம்மதித்தார் . 1929 ஆம் ஆண்டு அவர் சித்தாஷ்ரமத்தை அடைந்தார் .
ஸித்தாஸ்ரமஸ்வாமி மிகவும் பிரபலமானவராக இருந்தார் , மாபெரும் யோகி . ஆனாலும் அவர் நரஸிம்ஹஸ்வாமியை அன்புடன் வரவேற்றார் . தம்முடைய ஆசிரமத்தில் தங்க அவருக்கு அனுமதி அளித்தார் . அப்போது அவர் அவருக்கு விசாரசாரா , பஞ்சாட்சி , யோக வஷிஷ்த மற்றும் பஞ்சகாரண போன்றவற்றை சமஸ்கிருத மொழியில் கற்றுத்தந்தார் . அந்த ஆசிரமத்தில் இருந்தபோது சைவ பாடங்களையும் கற்று அறிந்தார் . அவற்றை கற்றறிந்தவர் பேரானந்த நிலை என்பது என்ன எனவும் அதற்கு மேல் வேறு எதுவும் கிடையாது என்பதையும் புரிந்து கொண்டார் .
நரஸிம்ஹஸ்வாமியின் புத்தி கூர்மை மற்றும் ஞானம் என்பவை சிட்டருத்ரா ஸ்வாமிக்கு பிடித்து இருந்ததினால் அவருடன் மிகவும் நெருக்கமானார் . அந்த ஆசிரமத்தில் கிருஷ்ணா என்பவர் இருந்தார் . அவர் பின்னர் முகுந்தபுரி என்ற பெயரில் கணேஷ்புரி எனும் இடத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவியவர் . அவருக்கு நரஸிம்ஹஸ்வாமி மீது பொறாமை ஏற்பட்டது . எங்கே அவருடைய நெருக்கம் சிட்டருத்ரா ஸ்வாமியின் மறைவுக்குப் பின் மடத்தின் அதிபதியாக உரு எடுக்க வழி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் இல்லாததையும் பொல்லாததையும் சுவாமிகளிடம் கூறி நரஸிம்ஹஸ்வாமியின் பெயரைக் கெடுக்க முயன்றார் . அவருடைய பேச்சை சிட்டருத்ரா சுவாமி உதாசீனப்படுத்தியது மட்டும் இல்லாமல் நரஸிம்ஹஸ்வாமியிடம் தனது நெருக்கத்தை மேலும் அதிகம் ஆக்கிக்கொண்டார் .
ஆனால் விதி விளையாடியது . 1930 ஆம் ஆண்டு சிட்டருத்ரா ஸ்வாமி மறைந்து போனார். இனி அந்த ஆசிரமத்தில் தம்மை இருக்க விடமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட நரஸிம்ஹஸ்வாமிகள் மற்றவர் தம்மை விரட்டும் முன்னே தாமாகப் போய் விடுவது சிறந்தது என எண்ணி அந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறினார் .
..........தொடரும்
To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chaoter 5.B.V Narsimha Swami ji-In Search of God.


Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.