B.V Narsimha Swami ji-In Search of God.
நரஸிம்ஹ ஐயருக்கு முன்னால் இரண்டே வழிகள்தான் தெரிந்தன। காலஹஸ்திக்கு சென்று சுரைக்காய் ஸ்வாமியிடம் தீட்சை பெற்றுக் கொள்வது. இல்லை எனில் தம் குல குருவான சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யாரிடம் தீட்சைப் பெற்றுக் கொள்வது . ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. சுரைக்காய் ஸ்வாமிகள் ஏற்கனவே மறைந்து விட்டிருந்தார் . அது போலவே தான் பள்ளியில் படிக்கும்போது தமக்கு ஆசிகள் கூறிய சிருங்கேரி ஸ்ரீ சங்கரச்சார்யாரும் 1912 ஆம் ஆண்டே மறைந்து விட்டிருந்தார். அப்போது அந்த பீடத்தை ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள் அலங்கரித்துக் கொண்டு இருந்தார்.
அந்த காலங்களில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணம் செய்வது சுலபம் அல்ல.முன்னர் நரஸிம்ஹஸ்வாமி சிருங்கேரிக்கு பயணம் செய்த போதெல்லாம் தன்னுடைய காரில்தான் பயணம் செய்து இருந்தார். ஆனால் 1925 ஆம் ஆண்டில், இன்றோ அனைத்தையும் துறந்து விட்டு கையில் தம்படி காசும் இல்லாமல் சுமார் 400 கிலோ மீடர் தூரத்தையும் நடந்தே கடந்து வந்திருந்தார் . அவர் அப்படி வந்ததைக் கண்ட சிருங்கேரி மடத்தினர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் . அங்கு வந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருந்தவர் எவரிடமும் வாய் திறந்து பேசவில்லை . பின்னர் ஒருநாள் தன் மனதை ஸ்வாமிகளிடம் கொட்டினார் . தனக்கு சன்யாச தீட்சை தந்து மடத்திலேயே இருக்க அனுமதி தருமாறு கோரினார் .
ஸ்ரீ சந்திரசேகர மகாஸ்வாமிகள் தொலைதூர நோக்கு பார்வை கொண்டவர் . அவருக்கு தெரியும் நரஸிம்ஹஸ்வாமி உலகில் பெரும் ஆன்மீக புரட்சி ஏற்படக் காரணமாக இருக்க உள்ளார் என்பதினால் அவருக்கு தீட்சை தந்து அங்கு கட்டிப் போட்டு விட்டால் மக்களுடைய தேவைக்கு அவர் பயன்படாமல் போய் விடுவார் . அதற்காக அவர் இந்த பூமியில் பிறக்கவில்லை . ஆகவே அவருக்கு பஞ்சக்ஷரி மந்திரத்தையும் , ஓம் நமச்சிவாய மந்தியார்த்தையும் ஓதியபின் அதை ஜெபித்து வருமாறு இருந்தபடி திருவண்ணாமலை ஆசிரமத்தில் போய் சேருமாறு கூறினார். எப்போது நரஸிம்ஹஸ்வாமி பஞ்சக்ஷரி மந்திரத்தைப் பெற்றாரோ அது முதல் அவரை நரஸிம்ஹஸ்வாமி என அழைப்பதே சரியாக இருக்கும் .
அந்த காலத்தில் ரமண மகரிஷி மக்களிடையே அத்தனை பிரபலமாக இருக்கவில்லை . தன்னுடன் சிறிய அளவிலேயே சீடர்களை வைத்துக் கொண்டு திருவண்ணாமலையில் ஸ்கந்தாஸ்ரமம் என அழைக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்து வந்தார் . பொதுவாக அவரை பிராமணர்களின் ஸ்வாமிகள் எனக் கருதிய காலம் அது.
திருவண்ணாமலை மிகவும் புனிதமான பூமி . அங்கு சிவபெருமானே மலை உருவில் இருந்தவாறு பக்தர்களுக்கு ஆசி கூறுவதாக ஐதீகம் . அந்த இடத்துக்கு பல இடங்களில் இருந்தும் சாதுக்களும் சன்யாசிகளும் வந்து ஆன்மீக மோட்சம் அடைகின்றனர் . திருவண்ணாமலை என்ற பெயரை உச்சரித்தாலே பாபங்கள் விலகுமாம். அங்கு நரஸிம்ஹஸ்வாமி 1926 ஆம் அண்டு வந்தார் . அங்கு வந்தவர் அருணாசலேஸ்வரரை சென்று வணங்கியபின் பிராமண ஸ்வாமிகள் என முத்திரை குத்தப்பட்டு இருந்த ரமண மகாரிஷியை தேடிப்போய் ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள் தம்மைஅங்கு அனுப்பிய விவரத்தைக் கூறி தனக்கு தீட்சை தருமாறு வேண்டினார் . ஆனால் ரமண மகாரிஷியோ அருகில் இருந்த ஒரு குதையைக் காட்டி அதில் அமர்ந்தவாறு 'நான் யார்' எனக் கேட்டபடி தவம் இருக்குமாறு அவரை அனுப்பினார் .
ரமண மகரிஷி என்றுமே தன்னிடம் வருபவர்களை முதலில் தான் யார் எனவும் , இந்த உலகில் பாதிக்கப்பட்டு உள்ளவர் யார் எனவும் கேட்டபடி தவம் இருந்து ஆத்மா ஞானம் பெறுமாறு அனுப்புவார் . எந்த ஒருவருக்கும் ஆத்மா ஞானம் இதயத்தில் இருந்து வர வேண்டுமே தவிர வெளியில் இருந்து அல்ல என நினைப்பவர் . ஆகவே நரஸிம்ஹஸ்வாமிக்கு அவருடைய மன நிலை ஒத்து வந்தது. ரமண மகரிஷி அருணாசலேஸ்வரா,அஷ்டர மணிமாலா , அருனாசல ஸ்துதி பஞ்சகம், அருனாசல அஷ்டகம் போன்றவற்றை இயற்றி உள்ளார் . உபதேச சாரம் என்பதில் அவை அனைத்தும் உள்ளன .
நரஸிம்ஹஸ்வாமி ரமணாஷ்ரமத்தில் நடைபெற்ற அனைத்து நித்ய கடமைகளிலும் கலந்து கொண்டு நான் யார் என்ற அட்சரத்தை துதித்தபடி மலையை சுற்றி வந்தார் . அப்போது ரமண மகாரிஷியை அடிக்கடி வந்து சந்தித்துக்கொண்டு இருந்த சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றியும் அவர் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவரைக் குறித்து ஆசிரமத்தில் இருந்த காவ்யா கணபதி சாஸ்த்ரிகள் என்பவரிடம் இருந்தும் மற்றும் பலரிடம் இருந்தும் குறிப்புகள் எடுத்துக் கொண்டார் .
ஒரு முறை குழுமணி சாஸ்த்ரிகள் என்பவர் தாம் சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றி புத்தகம் எழுத உள்ளதாகக் கூறிய பொழுது, அவர் எழுதும் புத்தகத்தில் எதுவும் விட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த குறிப்புகள் அனைத்தையும் தயங்காமல் நரஸிம்ஹஸ்வாமி தந்தார். அதை அந்த புத்தகத்தின் முன்னுரையில் நாராயண சாஸ்த்ரிகள் குறிப்பிட்டு உள்ளார் .
நரஸிம்ஹஸ்வாமி ரமணாஷ்ரமத்தில் மூன்று ஆண்டுகள் தங்கி இருந்தார் . ஆனாலும் அவர் மனதில் நிம்மதி கிடைகவில்லை. சேலத்தில் இருந்து எந்த மன நிலையில் 1925 ஆம் அண்டு அங்கு கிளம்பி வந்தாரோ அதே மன நிலைமையில்தான் அப்போதும் இருந்தார் . ஆனால் என்றாவது ஒரு நாள் தான் தேடிவரும் சத்குரு தமக்கு கிடைப்பார் என்ற நம்பிகையை இழக்கவில்லை .
1929 ஆம் அண்டு . சேஷாத்ரி ஸ்வாமிகள் தம் பூத உடலைத் துறந்து விட்டார் . அந்த நேரத்தில் நரஸிம்ஹஸ்வாமியின் நண்பரான நீதிபதி சுந்தரம் என்பவர் ரமணாஷ்ரமம் வந்திருந்தார். அங்கிருந்த நரஸிம்ஹஸ்வாமியைக் கண்டு வியப்பு அடைந்தார் . இருவரும் பல மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர் . அப்போது திரு சுந்தரத்திடம் தாம் ரமண மகரிஷி குறித்து எழுதி வைத்து இருந்த குறிப்புகளை எல்லாம் நரஸிம்ஹஸ்வாமி தந்தார் .

ரமண மகாரிஷியுடன் சந்திப்பு .........ராமனாஸ்ரம அனுபவங்கள்

..........தொடரும்
To be continued.
Posted so Far :
B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .

Loading
0 comments:
Post a Comment