Experience Of Shirdi Sai Baba By Our Maid -Experience By Manisha Bisht.
அன்பானவர்களே,
எங்களுடைய வீட்டு வேலைக்காரிக்கு பாபா காட்சி தந்ததும் அதன் பின் நடந்ததும் பற்றிய கதை இதோ.
மனிஷா
பாபா- எங்கள் வீட்டு வேலைக்காரியின் அனுபவம்
எங்கள் வீட்டின் பெயர் சாயி கிருபா என்பது. அதற்கு அடித்தளம் போடும்போதே பாபாவின் உடியை தூவித்தான் கட்டிடம் கட்டுவதை ஆரம்பித்தோம் என்பதை முன்னமே கூறி உள்ளேன்.ஒரு முறை எங்கள் வீட்டில் ஒரு ஏழைப் பெண்மணி வேலைக்குச் சேர்ந்தாள். அவளுக்கு மூண்டு குழந்தைகள், குடிகாரக் கணவன் அவர்கள் குடும்ப சுகத்தைக் கெடுத்து விட்டான். அவளுக்கு யாரும் இல்லை என்பதினால் என் தாயார் இரக்கப்பட்டு அவளை வேலைக்கு அமர்த்திக் கொண்டாள். அவள் வேலைக்கு சேர்ந்த நாள் வியாழர் கிழமை.
அவளுடைய நிலையைக் கண்ட என்னுடைய தாயார் ஒருவியாழர் கிழமை அவளுக்கு பாபா அருளட்டும் எனக் கருதி பாபாவின் காலண்டர் மற்றும் சிறிது உணவை கொடுத்து அனுப்பினாள். போகும்போது அந்த வேலைகாரி பாபாவின் படத்தை எடுத்துச் செல்லவில்லை.
மறுநாள் வேலைக்கு வந்தவளிடம் அதை என் எடுத்துச் செல்லவில்லை என்று என்னுடைய தாயார் கேட்க அவள் அதை தான் மறந்து விட்டதாகவும் அடுத்த வியாழர் கிழமை எடுத்துச் செல்வதாகவும் கூறினாள். என்னுடைய தாயாரும் அடுத்த வியாழர் கிழமை நவராத்தரி பண்டிகை வருவதால் அந்த நல்ல நாளில் பாபாவின் படத்தை எடுத்துச் செல்லட்டும் என விட்டு விட்டாள்.
அன்று அந்த வேலைகாரி பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருந்த போது சாக்கடையில் இருந்து எதோ ஒரு உருவம் வெளி வந்தது. சிறிது சிறிதாக பெரியதாகிக்கொண்டே போன அது பாபாவே. கண்களில் கோபத்துடன் வேலைக்காரியை நோக்கினார்.
அவரைக் கண்டு பயந்த வேலைகாரி பல கடவுளின் பெயரையும் கூவி அழைக்க முயன்றாள்.என்னுடைய தாயாரையும் அழைக்க முயன்றாள். முடியவில்லை. பாபா கூறினார் 'என் பெயரைக் கூறாதவரை நான் இங்கிருந்து போக மாட்டேன்'
'என்னை மன்னித்து விடுங்கள், இனி அந்த தவறை செய்ய மாட்டேன்' என அவள் கைகூப்பி கூறிய பின்னரே அவர் மறைந்தார். வெளியில் ஓடி வந்தவள் என்னுடைய தாயாரிடம் உங்கள் வீட்டில் எதோ பேயோ பிசாசோ உள்ளது என நடந்ததைக் கூறினாள். அவளிடம் என்னுடைய தாயார் நீ ஏன் பாபாவின் படத்தை எடுத்துப் போகவில்லை என பல முறைக் கேட்டும் அவள் அதை மறந்து விட்டதாகவே கூறினாள். மறுநாள் மறுநாள் காலை வந்து பாபாவின் படத்தை எடுத்துப் போவதாகக் கூறினாள்.
மறுநாள் வேலைக்கு வந்தாள். வந்தவள் தனக்கு முதல் நாள் இரவு வந்த கனவைப் பற்றி என்னுடைய தாயாரிடம் கூறினாள். அந்த கனவில் பாபாவின் முன்னால் தன்னுடைய மகள் பூசைப் பொருட்களை வைத்துக் கொண்டு நிற்பது போலவும், பாபா அவளுக்கு நெற்றியில் உடியைத் தடவி விட்ட பின் இனி கடவுள் உங்களுக்கு நன்மையே செய்வார் என்று கூறி விட்டுச் சென்றார். அந்த நிமிடம் முதல் அவளுக்கு மனதில் தன்னை அறியாமல் அமைதி தோன்றியது. வேலைக்கு வந்தவள் படத்தையும் எடுத்துச்சென்றாள்.
வெகு நாட்களுக்குப் பின்னரே அவள் தான் பாபாவை முதலில் நம்பவில்லை என்றும், அவர் இந்துவா, முஸ்லிமா எனத் தெரியாத நிலையில் பாபாவின் படத்தை வேண்டும் என்றேதான் எடுத்துப் போகவில்லை என்றும், பாபா தன்னை பயமுறுத்திய பின் இனி வேலைக்கே செல்ல வேண்டாம் என முடிவு செய்து இருந்ததாகவும், ஆனால் மீண்டும் அவர் கனவில் வந்து ஆறுதலாக ஆசிர்வதித்ததினால் தான் வேலைக்கு மீண்டும் வந்தாதாக ஒப்புக் கொண்டாள்.
(Translated into Tamil by Santhipriya )
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading
0 comments:
Post a Comment