Tuesday, March 9, 2010

Test and Symptoms reveal something but Baba's Grace something else-Experience By Reena.

சோதனைகளும் அறிகுறிகளும் ஒரு மாதிரியாக இருக்க, பாபாவின் கருணையோ வேறு மாதிரியாக இருந்தது.

அன்பானவர்களே,
நம் கையில் எதுவும் இல்லை. அனைத்தும் பாபாவின் கைகளிலேயே உள்ளது என நம்பும் ரீனா ராஜ் சிங்கின் அனுபவத்தைப் படியுங்கள்
மனிஷா

அடைந்து கிடந்த குழாய்கள் மீண்டும் திறந்தன

எனக்கு பாபா பலமுறை பல விதத்திலும் அருள் புரிந்து உள்ளார் என்றாலும் நான் மூடத்தனத்தில் இருந்து கொண்டு அவரை முழுமையாக புரிந்து கொள்லாமல் இருந்தேன். இத்தனைக்கும் அவர் எனக்கு பல லீலைகளை புரிந்து உள்ளார். அவற்றையும் மறந்து அவர் நமக்கு எதையும் செய்வார் என்ற இறுமாப்பினால் நான் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளைக் கூடச் செய்யாமல் இருந்தேன். ஆனால் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரை முழுமையாக புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்கு அவருக்கு நான் நன்றி கூறவேண்டும். அவரிடம் என் தவறுக்காக மன்னிப்பும் கேட்கின்றேன். நான் அவரை இன்றும் எந்த நிலையிலும் மறக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

வெகு காலம் குழந்தை பிறக்காமல் இருந்த எங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக நாங்கள் மருத்துவரை அணுக அவர் ஒரு சோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார். அந்த சோதனை ஹைச்டேரோசல்பிங்கோக்ரம் (Hysterosalpingogram ) என்பது. ஒரு குறிப்பிட்ட நிற விசேஷ கலவையை கருப்பையில் செலுத்துவார்கள். அது மெல்ல மெல்ல அனைத்து குழாய் வழியே சென்று குடலில் சென்றுவிடும். அப்போது அந்த விசேஷ கலவை செல்ல முடியாத அடைபட்ட குழாயின் இடம் தெரிந்துவிடும். அதை வைத்து கரு தரிக்க வாய்ப்பு உள்ளதா எனத் தெரிந்துவிடும். தேவை எனில் அதை அறுவை சிகச்சை மூலம் நிவர்த்தித்துக் கொள்ளாலாம். நான் பயந்து கொண்டே இருந்தேன். என் கணவரை அந்த சோதனைப் பார்க்க அனுமதிக்கவில்லை. எனக்கு முன்னால் இருந்த டிவி திரையில் அந்த கலவை செல்லும் பாதை தெரிந்தது. வலியை பொறுத்துக் கொண்டு இருந்தேன். வலது பக்கத்தில் ஒரு குழாயில் அந்த கலவை செல்லாமல் இருந்தது. அதுதான் நான் கருதரிக்காமல் இருந்ததின் காரணம் என எண்ணினேன். நான் மனம் தளர்ந்தாலும் அந்த சோதனையை செய்தவர் என்னை தேற்றினார். மருத்துவரிடம்தான் உண்மையில் என்ன என்பது பற்றிக் கேட்க வேண்டும் என்றார். சோதனை முடிந்து வீடு திரும்பிய நாங்கள் அளவில்லா மன வேதனையில் இருந்தோம். விதியை நொந்து கொண்டோம்.

நான்கு நாட்கள் பொறுத்து மருத்துவரை சந்தித்தோம். அதற்கு முன்னர் நான் மனதில் பாபாவை வேண்டிக் கொண்டே அவர் படத்தின் முன் தினமும் நின்று இருந்தேன். நான் எந்த நிலையிலும் உன்னை நம்பிக்கொண்டு அல்லவா வாழ்ந்து வந்துள்ளேன். நீதான் எனக்கு இதில் ஒரு வழி காட்ட வேண்டும்.

மருத்துவரிடம் சென்றோம். அவர் அனைத்து சோதனை முடிவுகளின் காகிதங்களையும் படித்துப் பார்த்தப் பின் எனக்கு ஒன்றும் இல்லை எனவும் அனைத்து குழிகளிலும் மருந்து சென்று உள்ளது என்றும் மீண்டும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி விட்டார். எங்களுக்கு ஒரே ஆச்சர்யம். முடிவுகள் எப்படி இப்படி மாறி இருந்தன? அந்த முடிவுகள் உண்மையிலேயே என்னுடைய உடல் சோதனையின் முடிவுகளா என்று கூட சந்தேகித்தோம். . பாபாவின் கருணையே கருணை. அடுத்த மாதமே நான் மீண்டும் கர்பமுற்றேன்!

என்னுடைய மருமகனின் அனுபவம்

என்னுடைய மருமகனுக்கு மூன்று வயது. அவனுக்கு வயிற்றில் ஒரு உபாதை. சாப்பிட்டால் அவை ஜீரணம் ஆகாமல் அவதி மற்றும் மூச்சு விடக் கஷ்டப்பட்டான் .அந்த வியாதி அவன் வாழ்கைக்கும் இருக்கும் வகையிலானது. அது நிரந்தரமாக குணம் அடைய மருந்து கிடையாது. அடிக்கடி அவன் உடல் நலமின்றி படுத்து விடுவான். சாப்பிட முடியாது. மூச்சு விட முடியாமல் அவதிப்படுவான். போதாக்குறைக்கு மலக் குடல் வேறு பெரியதாகி இருந்தது. மருத்துவர் அவனுக்கு வந்துள்ளது சிஸ்டிக் பைப்ரோசிஸ் என்ற கொடுமையான வியாதி எனவும் அது வம்சாவழியில் வருவது என்றும் கூறினார். அது மெல்ல மெல்ல ஒருவருடைய உடலை செயல் இழக்கச் செய்து விடும். ஆகவே வந்துள்ளது அதுதானா என சோதனை செய்தே கண்டறிய வேண்டும் என்றார். அதைக் கேட்ட நாங்கள் அதிர்ந்து போனோம்.
நான் அமெரிக்காவில் இருந்தேன். அவன் உடல் நிலையைக் கேட்டு அழுதேன். பாபாவை வேண்டினேன். அவனை நீதான் காப்பாற்ற வேண்டும் என பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவரிடம் வேண்டினேன். அவன் என்னை பெரியம்மா என்றுதான் அழைப்பான். அவன் படும் வேதனைகளைக் கேட்டு பதறுவேன். அவனை சோதனைக்கு அனுப்பினார்கள் . நான் அவனுக்கு அந்த வியாதி வந்திருக்கக் கூடாது , நீதான் ஏதாவது மாயம் புரிந்து அவன் உடல் நலமடைய உதவ வேண்டும் என பாபாவிடம் மீண்டும் மீண்டும் வேண்டினேன். பத்து நாட்கள் சென்றன. அனைத்து சோதனை முடிவுகளும் வந்தன. அவனுக்கு வந்திருந்தது அந்த வியாதி இல்லை. அது மட்டும் அல்ல அவன் விரைவிலேயே அனைத்து வியாதிகளில் இருந்தும் குணமாகி விட்டான். இன்று வரை சாதாரணமான வாழ்க்கை நடத்தி வருகின்றான். பழைய தொந்தரவு எதுவும் இல்லை. அதை பாபாவின் அற்புதம் என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் கூறும் மன நிலையில் நாங்கள் இல்லை.
(Translated into Tamil by Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.