Wednesday, March 24, 2010

B.V Narsimha Swami ji-After Mahasamadhi Part 2.

நரசிம்மஸ்வாமியின் மகாசமாதிக்குப் பின்

இதுவரை நாம் அகில இந்திய சாயி சமாஜம் வளர்ந்த கதையையும் , நரசிம்மஸ்வாமிஜி எப்படி அகில இந்தியாவிலும் புகழ் பெற்றார் என்பதையும் படித்தோம் . அவற்றில் ஒரு சம்பவம் . ஆந்திராவில் வால்டேர் நகரில் ரயில்வேயில் பணியாற்றி வந்த தீ . துர்கையா நாயிடு என்பவர் வயிற்று உபாதையினால் நீண்ட காலமாக அவதிப்பட்டுகொண்டு இருந்தார் . நரசிம்மஸ்வாமிஜியின் புத்தகங்களைப் படித்தபின் சாயிபாபாவிடம் ஈடுபாடு கொண்டு சாயி பாபாவைத் துதித்துவர அவர் அந்த உபாதையில் இருந்து விடுபட்டார் . ஆகவே அவர் பலரிடமும் சந்தா வசூலித்து சீரடியில் தென் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்கிக் கொள்ளட்டும் என தங்கும் இடமான ஒரு குடிலைக் கட்டினார் . அதை தற்போது சாயி சமஸ்தானம் ஒரு மருத்துவமனையாக மாற்றி பக்தர்களுடைய வசதிக்காக உபயோகிக்கின்றது . நரசிம்மஸ்வாமிஜியினால் ஈர்க்கப்பட்ட துர்கையா நாயிடு கட்டிய அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு கல்லும் நரசிம்மஸ்வாமியின் பெருமையை என்றும் கூறிக்கொண்டு இருக்கின்றது.
1993 ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள தியாகராஜா நகர் சாயி ஆலயத்தின் கருவறையில் சலவை கல்லில் செய்த நரசிம்மஸ்வாமிஜியின் சிலை திறந்து வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றது . அது போலவே 2004 ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள வசந்தபுரா சாயி ஆலயத்திலும் அவர் சிலை நிறுவப்பட்டு பூஜிக்கப்படுகின்றது . பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள சாயி ஆலயத்தில் அவருடைய முழு உருவப்படம் வைக்கப்பட்டு வனங்கப்படுகின்றது . மும்பை நவமித்ரா மண்டலியில் ஒவ்வொரு வருடமும் நரசிம்மஸ்வாமிஜியின் ஜெயந்தியும் , ஆராதனையும் நடைபெறுகின்றது . சாயி சமாஜத்துடன் இணைந்து உள்ள அனைத்து உபசமாஜங்களிலும் நரசிம்மஸ்வாமிஜி வணகப்படுகின்றார் .
அவர் மறைந்து போய் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் நம்முடன் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார் . நமது வேண்டுகோள் என்ன எனில் சத்குரு சாயினாதர் , சத்குரு நரசிம்மஸ்வாமிஜி மற்றும் சத்குரு ராதாகிருஷ்ண சுவாமிஜி போன்றோர் நம்மை காத்து அருள வேண்டும் என்பதே . அவர்கள் காட்டிய வழியில் சாயி பக்தர்கள் சென்று அவர்களை தம் வாழ்வின் கலங்கரை விளக்குகளாகக் கருதி ஆன்மீக வளர்ச்சி பெற்றிடவேண்டும் .



நரசிம்மஸ்வாமிஜிக்கு உறுதுணையாக நின்றவர்களும் தோழர்களும்

நரசிம்மஸ்வாமிஜி நிறுவிய அகில இந்திய சாயி சமாஜத்தை அவர் மறைந்தபின் அவரை பின்பற்றி வேறு பலரும் சாயி இயக்கத்தை வளர்த்து உள்ளனர் । எப்படி நரசிம்மசுவாமி இல்லாமல் சாயிநாதரை நினைக்க முடியாதோ அப்படித்தான் நரசிம்மஸ்வாமிஜியின் வழி வந்தோர் தன்னலமற்று இந்த இயக்கத்தை வளர்த்து உள்ளனர் என்பதையும் மறக்க முடியாது . சாயிபாபாவின் கருணையும் நரசிம்மஸ்வாமியின் அயராத உழைப்பும் பல பக்தர்களை இந்த இயக்கத்தில் இணைத்துள்ளது. சுதா என்ற பத்திரிகை மூலம் தமிழ் , தெலுங்கு போன்ற மொழிகளில் சாயிநாதரின் அற்புதங்களை கட்டுரைகளாக , கதைகளாக , பாடல்களாக வெளியிட்டு பக்தர்களை ஈர்த்து உள்ளார் . இன்றைக்கும் எஸ் . ராஜம் , லலிதா , சுத்தானந்த சுவாமி போன்றோர் சாயி பாபா பற்றி எழுதி உள்ள பாடல்கள் சாயி பஜனைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன . துவாரகாமாயி பஜனை கோஷ்டி எனப்படும் அமைப்பு அதில் பெரும் பங்கினை ஆற்றி உள்ளது . நரசிம்மஸ்வாமிஜியின் சமாஜத்தை திறமையுடன் வழி நடத்திச் சென்றதில் பின்னி ராவ் , வரதப்பா செட்டியார் , கோபாலசுவாமி , அப்துல் கரீம் சாஹிப் , சீ .வீ ராஜன் , டபிள்யு . ராஜன், சிவராமன் போன்றோர் ஆற்றிய பணி மகத்தானது .
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
Chapter 19.B .V Narsimha Swami ji-Meeting The Disciple.
Chapter 20. B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 1.
Chapter 21.B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 2.
Chapter 22.B.V Narsimha Swami Ji -Swami Ji's Mahasamadhi Part-1.
Chapter 23.BV Narsimha Swami Ji-SwamiJi's Mahasamadhi Part 2.
Chapter 24.Narsimha Swami Ji-After Mahasamadhi .

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.