Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Baba Stopped Rain.
பேய் மழையை பாபா நிறுத்தினார்
சாயி சரித்திரத்தில் கூறப்பட்டு உள்ளது இது. அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் என் தந்தை. அப்போது அவர் சீரடியில் இருந்தார். அவர் கூறுவார் 'பாபாவுக்கு அஷ்ட சித்திகள் உண்டு. அதை எப்போதாவதுதான் உபயோகிப்பார்'.
ஒரு முறை என்னுடைய தந்தை சீரடியில் இருந்தார்। அது மழைக் காலம். ஒரு நாள் ஆகாயத்தில் கரு மேகங்கள் சூழ்ந்தன. பெரும் காற்றுடன் கூடிய பெரும் மழை பெய்யத் துவங்கியது . இடி, மின்னல் என அனைவரும் பயந்து போகும் அளவுக்கு நிலைமை ஆயிற்று. மேலும் மேலும் மழை பெய்த வண்ணம் இருக்க சீரடி முழுகி விடும் போல இருந்தது. அப்படிப்பட்ட மழையை சீரடி மக்கள் அதுவரைப் பார்த்ததே இல்லை. கிராமத்தினர் பயந்து போய் துவாரகாமாயிக்கு வந்து விட்டனர்.
என்னுடைய தந்தையும் அங்கு வந்து விட்டார். அவருக்கு பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் கையில் தூக்கிப் பிடித்து மக்களை இயற்கையின் துயரத்தில் இருந்து காப்பாற்றிய காட்சி நினைவுக்கு வந்தது. அங்கு வந்த அனைவரும் பாபா கருணைப் புரிய மாட்டாரா, தம்மைக் காக்க மாட்டாரா என ஏங்கி நின்றிருந்தனர். நேரம் ஓடியது. இடி, மின்னல் மழை எதுவும் நிற்கவில்லை. பாபா பொறுமை இழந்தார்.
கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று கொட்டும் மழையில் நின்றபடி வானத்தை பார்த்து பயங்கரமாகக் கூவினார் ' இங்கிருந்து போ , போய் விடு' . இடி மற்றும் மின்னல் அதிகமாயிற்று, பாபா மீண்டும் மீண்டும் மூன்றுமுறை தடியால் கீழே அடித்து வானத்தைப் பார்த்து அது போலவே கத்தினார். என்ன அதிசயம், பயங்கரமாக இடி மின்னலுடன் பெய்து கொண்டு இருந்த பேய் மழை சற்று நேரத்தில் மெல்ல நின்றது. வானம் முழுவதும் வெளிச்சம் ஆயிற்று. பாபா அனைவரையும் தத்தம் வீடுகளுக்கு செல்லுமாறுக் கூறினார். அன்று மாலை என்னுடைய தந்தை பெட்ரோமாஸ் விளக்கு ஏற்றி வைக்கப் போகும் சமயத்தில் பாபாவிடம் அது குறித்துக் கேட்டார்.
அதற்கு பாபா கூறினாராம் தன்னுடைய' பக்தர்கள் துயரப் படும்போது தான் தன்னுடைய கடவுளிடம் அவர்களின் துயரை நீக்க வேண்டும் என வேண்டுவது உண்டு ,அவர் அதை நிறைவேற்றுகின்றார் எனவும் கூறினாராம். ஆனால் பாபா கொட்டும் மழையில் நின்றவாறு வானத்தைப் பார்த்து கத்தியதைக் கண்டவர்கள், பாபாவே வானத்தின் எஜமானரைப் போல காட்சி தந்தார் எனக் கூறினார்.
Click On Link Below To Read.
1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.
2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.
3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.
4.Live Experience Of Tarkhad Family Chapter 4.
5. Live Experience Of Tarkhad Family Chapter 5.
6. Live Experience Of Tarkhad Family Chapter 6
7.Live Experience Of Tarkhad Family Chapter 7
8.Live Experience Of Tarkhad Family Chapter 8.
9.Live Experience Of Tarkhad Family Chapter 9.
10.Live Experience Of Tarkhad Family Chapter 10.
11. Live Experience Of Tarkhad Family Chapter 11.

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .
Click On Link Below To Read.
1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.
2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.
3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.
4.Live Experience Of Tarkhad Family Chapter 4.
5. Live Experience Of Tarkhad Family Chapter 5.
6. Live Experience Of Tarkhad Family Chapter 6
7.Live Experience Of Tarkhad Family Chapter 7
8.Live Experience Of Tarkhad Family Chapter 8.
9.Live Experience Of Tarkhad Family Chapter 9.
10.Live Experience Of Tarkhad Family Chapter 10.
11. Live Experience Of Tarkhad Family Chapter 11.
Loading
0 comments:
Post a Comment