Sai Baba,Sai Satcharitra and Udi's Healing Power -Experience Of Sai Revant Bisht.
அன்பானவர்களே
ரத்தம் வருவதைக் கண்டதும் பயந்து போய் மகன் இன்னும் அதிகம் அழத் துவங்கினான். நான் தைரியத்தை இழக்கவில்லை. அழுவதை விட்டுவிட்டு சாயியின் நாமத்தைக் கூறு , சரியாகிவிடும் என அவனிடம் கூறியபடி இருந்தேன். ' நீ பாபாவின் நாமத்தை கூறிக் கொண்டே இருந்தால்தான் ரத்தம் வருவது நிற்கும், இல்லை என்றால் நிற்காது' என அவனிடம் கூறினேன். அவனும் உடனே அழுதுகொண்டே ஓம் சாயி, ஓம் சாயி, ஜெய ஜெய சாயி, ஜெய் ஜெய் சாயி என ஜெபிக்கத் துவங்கினான். நாங்கள் வைத்து இருந்த அரை பாக்கேட் கைகுட்டைகளும் ரத்தத்தினால் நனைந்து விட்டன.
ரத்தம் வருவது நின்றதும் என்னுடைய மகனின் முகத்தை அலம்பிவிட்டு, ரத்தத்தினால் நனைந்து இருந்த துணிகளை மாற்றினோம். எனக்கு அப்போது இன்னொரு சம்பவம் நினைவில் வந்தது. போன வருடம்தான் என்னுடைய மூத்த மகன் தண்ணீரில் ஒரு விஷப் பூச்சியினால் கடிக்கப்பட்டு அவதிப்பட்டபோது தாஸ் கணு மகராஜ் இயற்றிய சாயிநாத் ச்தாவன் மஞ்சரியை படிக்க அவன் குணமானான். ஆகவே உடனே அந்த சீடியை நாங்கள் போட்டு என்னுடைய இளய மகன் ரேவத்தையும் கேட்க வைத்தோம். அந்த சீடியைப் போட்டு அதை அவன் கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே அவனை சுத்தம் செய்தேன். அவன் அமைதியாக இருந்தான். அது சுமார் ஒரு மணி நேரம் ஓடிற்று. அதன் பின் அவன் தலையாணி அடியில் சாயி சரித்திரத்தை வைத்து, மீண்டும் உடியை தந்தேன். அவன் உறங்க ஆரம்பித்தான். நாங்களும் அமைதி அடைந்து உறங்கப் போனாலும் என்னால் அமைதியாக உறங்க முடியவில்லை. பாபாவின் உடி அவனை குணப்படுத்தவில்லை என்றால் என்னுடைய மகனுக்கு என்ன ஆகி இருக்கும் என எண்ணியபோது உடல் பதறியது. உள்ளம் நடுங்கியது .மறுநாள் முதல் காரியமாக பாபாவின் ஆலயத்துக்குச் சென்று அவரை வணங்கித் துதித்தோம்.
வாசகர்களே, இந்த சம்பவம் மிகவும் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். ஆனால் எங்களுடைய குடும்பத்தினர் பாபாவின் பல லீலைகளை பார்த்து உள்ளோம். இந்த சம்பவத்தினால் எங்களுடைய மகன்களுக்கும் ஒரு உண்மை புரிந்தது. ஒரு அளவைத் தவிர பெற்றோர்களால் ஒன்றும் செய்ய இயலாது, தெய்வத் துணைதான் வேண்டும். அந்த சம்பவத்தினால் அவர்களுக்கும் பாபாவின் மீது இருந்த நம்பிக்கை இன்னமும் பெருகியது. நம்மை மீறி எதுவும் நடக்கும்போது பாபாவே நமக்கு துணையாக வருகின்றார். மேலும் அந்த சம்பவம் சாயி சரித்திரத்தின் மகிமையையும் , உடியின் மகிமையையும் நன்கு உணர்த்தியது. (Translated into Tamil by Santhipriya)
© Shirdi Sai Baba Stories In Tamil.
நாம் பூர்வ ஜென்மத்தில் செய்து உள்ள புண்ணியங்களே இந்த ஜென்மத்தில் நம்மை மகான்களிடம் அழைத்துச் சென்று அவர்கள் மூலம் நமக்கு நன்மைகளை கிடைக்கச் செய்கின்றன. அதை சில அதிருஷ்டசாலிகள் மட்டுமே பெறுவார் (From SSC -Chapter 21.). அதனால்தான் நமது பூர்வ ஜென்ம தொடர்பினால் பாபாவின் குழந்தைகளான நாம் பாபாவை நெருங்கி உள்ளோம். கடந்த வாரம் இரவு ஒன்றரை மணிக்கு எனக்கு இந்த மயிர்க்கூச்சல் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபா எனக்கு துணையாக உள்ளது தெரிந்தது. இத்தனை வருடங்களும் நானும் என்னுடைய குடும்பத்தினரும் பாபாவின் கருணையை பல விதத்திலும் பெற்று உள்ளோம். ஆனால் அவற்றை மீறி நடந்துள்ளது இந்த சம்பவம்.
நள்ளிரவு. என்னுடைய இளைய மகன் ' ரேவன்த் ' திடீரென கத்தி அழத் துவன்கினான். நாங்கள் ஓடிச் சென்று என்ன ஆயிற்று எனப் பார்த்தோம். அவன் முகம் முழுவதும் ஒரே ரத்தம். தனது மூக்கை பிடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தான். நாங்கள் அதிர்ந்து போனோம். அவன் சட்டையும் வெளியே வந்து கொண்டே இருந்த ரத்தத்தினால் முழுவதும் நனைந்து விட்டது. என்ன செய்வது எனத் தெரியாமல் ஓடிச் சென்று அவன் முகத்தில் வழிந்து கொண்டு இருந்த ரத்தத்தை துடைக்கத் தொடங்கினேன். சாதாரணமாக அளவுக்கு மீறி வெய்யிலில் அலைந்தால் மட்டுமே மூக்கில் இருந்து ரத்தம் வரும். ஆனால் அன்று அப்படி இல்லை. எத்தனை கைக்குட்டையை வைத்துத் துடைத்தும் ரத்தம் நிற்கவில்லை. தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. கைகுட்டைகளும் ரத்தத்தினால் முழுதாக நனைந்து மேலும் உபயோகிக்க முடியாமல் ஆயிற்று. அத்தனை ரத்தம். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. நானும் என் கணவரும் மனதில் அழுது கொண்டே சாயிராம்......சாயிராம் என விடாமல் ஜபித்துக் கொண்டு கொண்டு இருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

நான் உடனே பாபாவிடம் அவனை மறுநாள் அருகில் இருந்த சாயி ஆலயத்துக்கு அழைத்து வருவதாக வாக்குறுதி தந்தேன். என் மகனையும் அந்த சத்தியத்தை செய்யுமாறு கூற அவனும் அதை செய்தான். என்னுடைய கணவர் உடனேயே சாயி பாபாவுக்கு சிறிது தட்ஷணயையும் எடுத்து அவர் காலடியில் வைத்தார் .
ரத்தம் வருவதோ நின்றபாடில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தவள் பாபாவின் படத்தைப் பார்த்தேன். உடனே எனக்கு தோன்றியது. சாயி சரித்திர புத்தகத்தையும் சிறிது உடியையும் எடுத்து வருமாறு கணவரிடம் கூறினேன்.
சொன்னால் நம்பமாடீர்கள். சாயி சரித்திரத்தை அவன் தலையாணிக்கு அடியில் வைத்தேன், உடியை அவன் நெற்றியில் தடவி வாயில் சிறிது போட்டேன். அடுத்த இருப்பது வினாடிகளில், நிமிடத்தில் அல்ல, வினாடியில் அவன் முகத்தில் இருந்து வழிந்து கொண்டு இருந்த ரத்தம் அப்படியே நின்றுவிட்டது.
பாபாவின் உடி மற்றும் சாயி சரித்திரத்துக்கு இருந்த மகிமையைக் கண்டு எங்களால் பேச முடியவில்லை. என்னுடைய மகனும் அதைக் கண்டு வியந்து போனான். பாபா எங்களுடன் இருந்து எங்களுக்கு கருணை புரிந்ததை கண்கூடாகக் கண்டோம். அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.


அன்பானவர்களே, நான் உங்களிடம் கூற விரும்புவதெல்லாம் இதுதான். எப்போதும் பாபாவை சோதிக்க எண்ணாதீர்கள். அவரிடம் முழுமையாக சரணாகதி அடையுங்கள். அவர் உங்களை நேசிக்கின்றாரா இல்லையா என ஆராய்ச்சி செய்யாதீர்கள்.அவர் அருளை அவர் மீது செலுத்தும் பக்தியால் பெறுங்கள். நான் என்னுடைய வாழ்கையில் பெற்ற பாடம் இது.
இது குறித்து உங்களுக்கு தோன்றும் எண்ணத்தையும் உங்கள் கருத்துகளையும் என்னுடைய ஈ மெயில் மூலம் எனக்கு எழுதுங்கள்.
மனிஷா

Loading
0 comments:
Post a Comment