Live Experiences of the Tarkhad Family With Sai Baba-Resurrection Of A Dead.
பாபாவின் பெருமை அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. நான் திருமதி பாகுனி என்பவரை சந்தித்தேன். புது டெல்லியில் உள்ள சதர்பூரில் உள்ள ஆலயத்தில் பணி புரிந்தவாறு அவள் சாயி பாபா பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு உள்ளாள் . அவள் சாயி பாபா பற்றி நிறைய ஆராச்சிகளை செய்து உள்ளாள். பாபா உயிருடன் இருந்தபோது அவரைப் பற்றி மும்பை மற்றும் பிற இடங்களில் அவர் பெருமையை பரப்பியதில் தாஸ் குண மகராஜ் என்பவர் பெரும் பங்கு வகுத்துள்ளார். இடமிடமாகச் சென்று கீர்த்தனைகளைப் பாடி பாபாவின் லீலைகளை அனைவரும் அறிந்திடச் செய்தார்.
சீரடியில் இருந்த பொழுது அவர் ஒரு முறை சீரடிக்கு பக்கத்தில் இருந்த கிராமத்தில் கீர்த்தனை நிகழ்சியை நடத்தச் சென்றார். பாபாவின் போடோ ஒன்றை ஒரு ஸ்டூல் மீது வைத்து அதற்கு மாலை அணிவித்தப் பின் கீர்த்தனைகளை செய்வார். சீரடியில் இருந்து கிளம்பும் முன் பாபாவிடம் சென்று ஆசிகள் பெற்றுச் செல்வார்.
ஒருநாள் மதியம் அவர் பாபாவிடம் சென்று அன்று மாலை சீரடிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கீர்த்தனை செய்யக் கிளம்புவதாகக் கூறி, ஆசி கேட்டார். அதற்கு அனுமதி தந்த பாபா, அந்த இடத்துக்கு என்னுடைய தந்தையையும் அழைத்துச் செல்லுமாறு ஆணை இட்டார்.
தாஸ் குண மகராஜ் தன்னுடன் அவரை அழைத்துச் செல்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை எனவும், ஆனால் மாலையில் துவாரகாமாயியில் விளக்கு ஏற்றி வைக்க அவர் அவசியம் ஆயிற்றே எனக் கூற, பாபா அந்த வேலையை எவர் வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் ஆனால் கண்டிப்பாக என் தந்தையை அழைத்துப் போக வேண்டும் எனவும் கூறி விட்டார். அந்த காலங்களில் வாகன வசதி கிடையாது. நிறைய இடங்களுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். அங்கிருந்து கிளம்பியவர்கள் மாலை அந்த கிராமத்துக்கு சென்றதும், இருட்டத் துவங்கியதினால் கீர்த்தனை நடக்க இருந்த இடத்தின் நான்குபுறமும் என் தந்தை பெட்ரோமாஸ் விளக்குகளை ஏற்றி வைத்தார். ஸ்டூல் மீது பாபாவின் படத்தை வைத்து மாலை போட்டபின் கீர்த்தனைகள் துவங்கின. சுமார் ஒரு மணி நேரம் ஆனது.
அப்போதுதான் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. பில் மலைச்சாதியினர் என்ற பிரிவை சேர்ந்தவர்கள் தம் தோல் மீது ஒரு பிணத்தை வைத்துகொண்டு அங்கு வந்தனர். அவர்கள் அந்த பிணத்தை தகனம் செய்ய சுடுகாடுக்கு போய் கொண்டு இருந்த வழியில்தான் இருந்தது கீர்த்தனை நடந்த இடம். அவர்களின் தலைவன் தாஸ் குண மகராஜிடம் வந்து அந்த ஸ்டூலில் உள்ளவர் யார் என விசாரித்தான். அவரும் அந்த மகன் சீரடியில் உள்ளவர் என்றும் அனைவரும் அவரை வணங்குவதாகவும் கூறி அவர் பெருமையையும் கூறினார். அதைக் கேட்டவன் தன்னுடன் வந்து உள்ளவர்களை அந்த பிணத்தை அங்கேயே இறக்கி வைக்குமாறு கூறி விட்டு, தாஸ் குண மகராஜிடம் உங்கள் மகான் அத்தனை சக்தி வாய்ந்தவர் என்றால் அந்த பிணத்திற்கு உயிர் கொடுக்கச் வேண்டும் எனவும் இல்லை எனில் அவர்களை தான் கொன்று விடுவேன் எனவும் மிரட்டினான்.
பயந்து போன தாஸ் குண மகராஜ் , என் தந்தையிடம் ஆலோசனைக் கேட்க அவருக்குத் தோன்றியது அதை பாபாதான் செய்து உள்ளார். ஆகவே தாஸ் குண மகராஜிடம் சாயி ரஹீம் நஜர் கர்னா பச்சன் கா பாலன் கர்னா என்ற கீர்த்தனையை பாடுமாறும் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், அதை பாபாவிடம் விட்டு விடுவோம் என்றுக் கூற கீர்த்தனை துவங்கியது. தாஸ் குண மகராஜ் தன்னை மறந்து ஆடியபடி அதைப் பாட கிராமத்தினாரும் சேர்ந்துகொண்டு அதை பாட ஒரு மணி நேரம் பக்திபூர்வமாக அது தொடர்ந்தது. என் தந்தை இறந்துபோனவனுடைய உடலை பார்த்துக் கொண்டு இருந்தார். என்ன அதிசயம். ஒரு மணி நேரம் சென்றது. இறந்து கிடந்தவன் தன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு எழுந்தான். தன் கைகளைத் தட்டிக்கொண்டு கீர்த்தனைகளை பாடத் துவங்கினான். திகைத்துப் போன என் தந்தை தாஸ் குண மகராஜை தட்டி பாடலை நிறுத்தி அதைக் காட்ட அனைவரும் சேர்ந்து அவன் கட்டுகளை அவிழ்த்தனர். இறந்து கிடந்தவன் எழுந்து நின்றான். அதைக் கண்ட அவர்கள் அனைவரும் தாஸ் குண மகராஜின் கால்களில் விழுந்து வணங்கி மனிப்புக்கேட்டு விரைவில் தாம் சீரடிக்கு வந்து பாபாவை தரிசிப்போம் என்றனர்.
மறுநாள் சீரடிக்கு திரும்பியவர்கள் பாபாவிடம் சென்று நடந்ததைக் கூற அவர் ' என்னுடைய பஹு இல்லாமல் இருந்திருந்தால் அந்த மலைச்சாதியினர் உன்னை என செய்து இருப்பார்கள் தெரியுமா என்றாராம். அவர்களோ நடந்தது அனைத்துமே அவருடைய செயல்தானே, அவர் இருக்கையில் தங்களுக்கு கவலை இல்லை , அவர் தொடர்ந்து தமக்கு அருள் புரிய வேண்டும் எனவும் எனக் கூறி அவரை வணங்கினர்.
அன்பானவர்களே. இந்த கதை உண்மையானது. இறக்காமல் ஒருவேளை அந்த மனிதன் கோமாவிலும் இருந்து இருக்கலாம். என்றாலும் சாயிதானே அவனை பிழைக்க வைத்து உள்ளார். இல்லை எனில் அவனை தகனம் செய்து இருக்க மாட்டார்களா?
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .
Click On Link Below To Read.
1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.
2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.
3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.
4.Live Experience Of Tarkhad Family Chapter 4.
5. Live Experience Of Tarkhad Family Chapter 5.
6. Live Experience Of Tarkhad Family Chapter 6
7.Live Experience Of Tarkhad Family Chapter 7
8.Live Experience Of Tarkhad Family Chapter 8.
( Translated into Tamil by Santhipriya )
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading
0 comments:
Post a Comment