Wednesday, July 7, 2010

Behind our Masjid a big star has collapsed.

மசூதியின் பின்னால் பெரிய நட்சத்திரம் விழுந்து விட்டது

அன்பானவர்களே,
பாபா தத்யா சாஹேப்பிடம் வைத்து இருந்த அன்பின் அளவை படித்தபோது என்னுடைய கண்களில் நீர் வழிந்தது. தத்யா சாஹேப் உண்மையில் நல்ல ஆத்மா. அதனால்தான் அவர் மரணம் அடைந்ததும் பாபாவுடன் கலந்து விட்டார். அதை பாபாவும் மறைமுகமாகத் தெரிவித்து இருந்தார். தத்யா சாஹிப்பின் வாழ்வின் ஒரு பகுதிக் கதையை கீழே படியுங்கள்.
மனிஷா.

தத்யா சாஹிப்பின் இறுதி யாத்திரை

ஒருநாள் இரவு இரண்டரை மணி ஆயிற்று. தத்யா சாஹேப் தன்னுடன் இருந்த பாபா சாஹேப்பை எழுப்பினார். தனக்கு அவசரமாக மூத்திரம் வருகின்றது எனவும் ஆனால் அவரைப் போய் மூத்திரம் பிடிக்கும் பாத்திரத்தை எப்படி எடுத்துக் கொண்டு வா எனக் கூறுவது என்று கூறி கண்ணீர் விட்டார். பாபா சாஹேப் அவரை இப்படியெல்லாம் பேசக் கூடாது என கடிந்து கொண்டார். அவர் மூத்திரம் போக பாத்திரத்தை கொண்டு வந்து மூத்திரம் போனதும் அதை கொண்டு போய் கொட்டினார். அதைக் கண்ட தத்யா சாஹேப் மீண்டும் அழுது விட்டு கூறினார் 'நீ சீரடிக்கு வந்த போது எதற்காக வந்து உள்ளாய் என்பது எனக்கே தெரியாது. உன்னை சாயிபாபா வற்புறுத்தி எனக்காக இங்கு தங்க வைத்து உள்ளார் என்பதே எனக்கு பின்னால்தான் தெரியும். நீ இல்லாவிடில் என்ன ஆயிருக்குமோ தெரியாது'.

அதன்பின் மூன்று மணிக்கு அவர் உடல் நலம் மீண்டும் அதிகம் மோசமாகியது. தன்னுடைய மகன் விஸ்வநாதனை அருகில் இருக்கச் சொன்னார். சாயி நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார். எவரும் இரவு முழுவதும் தூங்கவில்லை. அவர்களை சாயி பஜனைகளை பாடச் சொன்னார் . அவர்களும் அதை உரத்த குரலில் பாடத் துவங்கினார்கள். விடியற்காலை ஐந்து மணி ஆயிற்று. தன் கைகளைத் தூக்கி பஜனைகளை நிறுத்துமாறு கூறினார். எதோ முணுமுணுத்தார். அவர் மகன்கள் அவர் அருகில் சென்றனர். அவர் முணுமுணுத்தது கேட்டது.' கடவுளே என் எதிரில் நீ வந்து நிற்க வேண்டும் அதை நான் இப்போது பார்க்க வேண்டும்' . அவருடைய அனைத்து உறவினர்களும் வந்து விட்டனர். அவருடைய மகன் விஸ்வநாத்தும் ராதாகிருஷ்ண ஆயியிடம் ஓடிச் சென்று பாபாவின் உடியையும் பாத தீர்த்ததையும் பெற்றுக் கொண்டு வந்தார். அதில் மூன்று ஸ்பூன் தீர்த்தத்தை தத்யா சாஹெப் வாயில் விட்டார். அதை குடித்ததும் அவர் உயிர் பிரிந்தது.

அவர் உயிர் பிரிவதற்கு சில நிமிடங்கள் முன்னர்தான் பாபா கூடி இருந்தவர்கள் முன்னால் தன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கூறினாராம் 'மசூதியின் பின்புறம் இருந்த ஒரு நட்சத்திரம் விழுந்து விட்டது'.
உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது லேண்டி பாகை சுத்தப் படுத்திக் கொண்டு இருந்த ராதாகிருஷ்ண தாயி ஓடி வந்து சடலத்தின் முன்னால் நின்றபடிக் கூறினார் ' என்னுடைய தாயின் செல்லப் பிள்ளை மறைந்து விட்டாரே' . குனிந்து அவர் முகத்தை முத்தமிட்டப் பின் சென்று விட்டார்.
பாபாவும் கூறினாராம் ' என்னுடைய தத்தா மறைந்து விட்டான். நானும் போக வேண்டியவன்தான். இந்த சீரடியும் மசூதியும் இருந்து என்ன பயன்? நான் கூறியதைக் கேட்டுக் கொண்டே வாழ்கையை ஓட்டினான். அவன் மீண்டும் பிறக்க மாட்டான். '

மூன்றாம் நாள் பாபா சீரடிக்கு அருகில் இருந்த நிம்காவ்ன் என்ற இடத்துக்கு எவரிடமும் சொல்லாமல் போய் விட்டார். வருத்தம் அடைந்த கிராமத்தினர் அவரை தேடிக் கண்டு பிடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். வழியில் தத்யாவின் அஸ்தியை கோபெர்கோனில் கரைக்க எடுத்துக் கொண்டு சென்று கொண்டு இருந்தனர். அந்த ஊர்வலத்தினரின் அருகில் சென்ற பாபா தன் கைகளை உயர்த்தி எதையோ கூறினார். பின்னர் யாரிடமும் பேசாமல் நடந்து செல்லத் துவங்கினார்................
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.