Wednesday, August 4, 2010

Devotee In Contact With Baba -Vishnu Pant.பாபா ஒருமுறை காக்காவிடம் பதினைந்து ரூபாயைக் கடனாகக் கேட்டார். அவரும் அதை சந்தோஷமாகக் கொடுக்க பாபா கூறினார் ' நான் எவரிடமாவது ஒரு ரூபாயை வாங்கிக் கொண்டால் பத்து ரூபாயாக திருப்பித் தரவேண்டும். நான் எதையும் நன்கொடையாக பெற்றுக் கொள்வதில்லை. நான் அனைவரிடமும் கேட்பதும் இல்லை. என்னுடைய பகீர் ( குரு) எவரைக் கை காடுகின்றாரோ அவரிடம் மட்டுமே பணத்தைப் பெற்றுக் கொள்வதுண்டு. ' கொடுப்பவர் அதற்க்கு ஏற்ப திரும்பப் பெறுவார். அதாவது எப்படி விதைகிறாயா அப்படித்தானே விளையும்? பொருள் இருந்தால் அதை தர்ம வழியில் உபயோகிக்க வேண்டும். தன்னுடைய சுய நலனுக்கு அதை உபயோகித்தால் அதனால் என்ன பலன்? நீ தர்மம் செய்திராவிடில் உனக்கும் ஒன்றும் கிடைக்காது. ஆகவே உனுக்கு ஒன்று கிடைக்க வேண்டும் எனில் நீயும் தர வேண்டும். தட்சிணை தருவது பக்தியையும், ஞானத்தையும் வைராகியத்தையும் வளர்க்கும். ஒன்று கொடு, பத்தாகப் பெற்றுக்கொள் .

அதற்கு உதாரணம் இந்த சம்பவம். சாயி சரித்திரம் பகுதி 26 ல் கூறப்பட்டு உள்ளது எது. ஹரிஷ் சந்திர பிதாலே என்பவரிடம் இருந்து பாபா இரண்டு ரூபாயை பெற்றுக் கொண்டு பின்னர் மூன்று ரூபாயைத் தந்து அதை பத்திரமாக வைத்துக் கொண்டு பூஜைகளை தவறாமல் செய்து வா, உனக்கு நல்லதே நடக்கும் என்றார். பாபாவின் அருளினால் நடக்க முடியாமல் இருந்த அவருடைய வலிப்பு வரும் மகன் பூரணமாக குணம் அடைந்து விட்டான்.

அவர் ஒருமுறை தனக்கு நிகழ்ந்த அற்புதங்களை கூறியபோது அதைக் கேட்ட அவருடைய சகோதரர் விஷ்ணு பல்வந்த் என்பவருக்கும் சீரடிக்கு செல்ல ஆசை வந்தது. அவர் வில்ல பார்லே என்ற இடத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை செய்து கொண்டு இருந்தார். சீரடிக்கு செல்லும் முன் பழங்கள் வாங்க கடைக்குச் சென்று பழுத்த மாம்பழத்தை வாங்கிச் சென்றால் சீரடிக்கு போகு முன் பழுத்து அழுகி விடும் என்று எண்ணி, பழுக்காத மாம்பழங்களை வாங்கிக் கொண்டார்.

பாபா அப்போது துவாரகாமாயியில் இருந்தார். கோபர்கொனை அடைந்தவர் அங்கிருந்து சீரடிக்கு கிளம்பினார். அந்த நேரத்தில் துவாரகாமாயியில்ஒரே மாம்பழ வாசனை மூக்கைத் துளைத்தது. விஷ்ணு சீரடிக்கு சென்று தான் தங்கிய இடத்தில் மாங்காய்களை வைத்து விட்டு பாபாவைக் காணச் சென்றார். பாபா அவரை சிரித்தபடி வரவேற்றார். ' எங்கே எனக்கு கொண்டு வந்துள்ள மாம்பழங்கள்' என்று வந்தவரிடம் பாபா கேட்க, தான் கொண்டு வந்தது அவருக்கு எப்படித் தெரியும் என வியப்படைந்து ' அவர் மாங்காயை அல்லவா கொண்டு வந்துள்ளேன் என்றார்' . 'போ , போய் உன் அறையில் பார்த்துவிட்டு வா' என்றார் பாபா. அறைக்கு திரும்பி கூடையை திறந்து பார்த்தவர் திடுக்கிட்டார். அனைத்தும் உடனே சாப்பிடும் வகையில் பழுத்து இருந்தன. சீரடியில் மூன்று நாட்கள் தங்கியவர் தன்னிடம் திரும்பிப் போக பத்திரமாக பதினைந்து ரூபாயை மிச்சம் வைத்துக் கொண்டு இருந்தார்.

மறுநாள் கிளம்பும் முன் பாபாவின் போட்டோ ஒன்றை கடையில் வாங்கி வைத்துக் கொண்டார். அதை பாபா தொட்டு விட்டுத் தந்தாள் நன்றாக இருக்குமே என நினைத்து கத்திருந்தவரிடம் வந்த பாபா அவரிடம் இருந்து தட்சணையாக பதினைந்து ரூபாயை வாங்கிக் கொண்டு விட்டார். தன்னிடம் இருந்த அனைத்தையும் விஷ்ணு கொடுக்கவேண்டி வந்தது. பாபா போட்டோவை தன் மார்பில் வைத்துக் கொண்டு அதை அவருக்குத்தந்தார்.

மறுநாள் எப்படி கோபோர்கோனுக்கு போவது? கையில் பணம் இல்லை. நடக்கலானார். அரை மைல் தூரம் நடந்திருப்பார். ஒரு வண்டிக்காரன் அவர் பக்கத்தில் வந்து நீ ஊருக்குப் புதியவன் போலத் தெரிகின்றதே. இந்த வெய்யிலில் ஏன் நடக்கிறாய்?, எனக் கேட்க தான் பக்கத்து ஊருக்குப் போவதாக விஷ்ணு கூறினார். வண்டிக்காரன் சிரித்தபடி, வா, வந்து வண்டியில் ஏறிக்கொள். நான் உன்னை கோபோர்கோனில் எறக்கி விடுகிறேன் எனக் கூறி அவரை அங்கு சென்று இறக்கி விட்டார். விஷ்ணு அவருக்கு நன்றி கூற திரும்பிய போது அவரையும் வண்டியையும் காணவில்லை.

அடுத்து ரயில் டிக்கட்டுக்கு என்ன செய்வது. ரயிலும் வந்து விட்டது. வருவது வரட்டும், டிக்கட் இல்லாமல் பயணம் செய்து பார்க்கலாம் என ரயிலில் ஏறினார். டிக்கட் கலெக்டர் வந்தார், 'நமஸ்கார் பிதாலே சாப்' என அவருக்கு வந்தனம் செய்துவிட்டு டிக்கட் பற்றி எதுவுமே கேட்காமல் போய் விட்டார். என்ன அதிசயம்!
அடுத்த நாள் வீட்டிற்கு சென்றவர் வீட்டு முன் ஒரு வண்டி வந்து நின்றது. அதில் இருந்து இறங்கி வந்தவர் 'நீதானே பிதாலே, மொழி பெயர்பாளர் 'எனக் கேட்டப் பின் தன்னை ஜெ.ஆர். தீ. டாடா என அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் எப்போது உள்ள விமானதளத்தின் அருகில் உள்ள சாகரில் பெரிய நிலம் வாங்க உள்ளதாகவும், தன்னிடம் நிறைய உதவியாளர் இருந்ததும் அவர்களால் அதக்குத் தேவையான பத்திரங்களை மொழி பெயர்க்க முடியாது என்பதினால் அவரிடம் வந்ததாகவும் தன்னிடமே வேலைக்கு சேர்ந்தால் மாதம் நூற்றி ஐம்பது ரூபாய் தருவதாகவும் கூறினார்.

விஷ்னுவிற்ற்கு சங்கடமாகிவிட்டது. தற்போது உள்ள அரசாங்க உத்தியோகத்தில் சம்பளம் முப்பத்தி ஐந்தே கிடைகேன்றது. ஆனால் பென்ஷன் போன்றது உண்டே. என்ன செயலாம் என யோசித்து அடுத்த நாள் முடிவு செய்துவிட்டுக் கூறுவதாக கூறினார். இரவில் தூக்கம் வரவில்லை. தன்னிடம் இருந்து பதினைந்து ரூபாயை பெற்றுக் கொண்ட பாபா தனக்கு பத்துமடங்கு அதிக வருமானத்தை தந்துள்ளாரோ என எண்ணினார்.
அடுத்த இரண்டாம் நாள் டாடா அலுவலகத்தில் இருந்து வந்தவர் கொண்டு வந்திருந்த படிவத்தில் பாபாவின் போட்டோவை பார்த்து வணங்கிய பின் பேசாமல் கையெழுத்து போட்டு வேலையே ஏற்றுக் கொண்டார்.

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.