Experiences of Sai Baba's Daya-Sai devotee Ram.
அன்பானவர்களே
பாபாவின் அருள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டில் கிடைக்கட்டும். கடந்த இருபது நாட்களாக நான் பல இடங்களுக்கும் பயணம் செய்து கொண்டே இருந்ததினால் புத்தாண்டு மற்றும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி. ( யாஹூ மெயில் , பேஸ் புக் ,ஆர்குட் போன்றவை ) அனைவருக்கும் நானும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று சாயியின் பக்தரான ராம் என்பவரின் அனுபவத்தைப் படித்து சாயியின் அருளைப் புரிந்து கொள்ளுங்கள். ஜெய் சாயி ராம்
மனிஷா
----------------------------
பாபாவின் அருள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டில் கிடைக்கட்டும். கடந்த இருபது நாட்களாக நான் பல இடங்களுக்கும் பயணம் செய்து கொண்டே இருந்ததினால் புத்தாண்டு மற்றும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி. ( யாஹூ மெயில் , பேஸ் புக் ,ஆர்குட் போன்றவை ) அனைவருக்கும் நானும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று சாயியின் பக்தரான ராம் என்பவரின் அனுபவத்தைப் படித்து சாயியின் அருளைப் புரிந்து கொள்ளுங்கள். ஜெய் சாயி ராம்
மனிஷா
----------------------------
என்னுடைய பெயர் ராம் என்பது. நான் பாபாவின் மகிமைகளைப் பற்றி உங்களுடைய இணையதளத்தில் படித்து வருகின்றேன்.
எங்களுடைய குடும்பத்திற்கு பாபாவின் அருள் கிடைத்த அனைத்தையும் நான் எழுதி வைத்து உள்ளேன். பாபாவின் தயாவை அனைவரும் படித்து மகிழ அவற்றை எழுதி அனுப்பி உள்ளேன். இதை நீங்கள் உங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ராம்
என்னுடய அனுபவம்
செப்டம்பர் 2009.2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னுடைய வலது கையில் கருப்பு திட்டுக்கள் வரத் துவங்கின. குஸ்தி சண்டையில் அடிபட்டு ரத்தம் காய்ந்தது போல திட்டு திட்டாக அது வெளி வரத் துவங்க நானும் என்னுடைய மனைவியும் பயந்து போய் பாபாவை வேண்டினோம். அது குணமாகி விட்டால் மிச்சிகனில் லிவோனியா என்ற இடத்தில் இருந்த பாபாவின் ஆலயத்துக்கு எலுமிச்சை பழச் சாதம் செய்து பிரசாதமாகத் தருவதாக என்னுடைய மனைவி வேண்டிக் கொண்டாள். என்ன ஆச்சர்யம் சில நாட்களிலேயே அவை தானாகவே மறையத் துவங்கின.
அதற்க்கு அடுத்தவாரம் என்னுடைய மனைவி இந்தியாவுக்கு போக வேண்டி இருந்தது. செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் இந்தியாவுக்குச் செல்ல அவளுக்கு டிக்கட் கிடைத்தது.
ஆகவே அவள் இந்தியாவுக்கு செல்லும் முன் அந்த வேண்டுகோளை நிறைவேட்ட்ற வேண்டும் என்பதினால் மிச்சிகனில் இருந்த பாபாவின் ஆலயத்துக்கு சென்றோம். அந்த ஆலயத்துக்கு உள்ளேதான் அங்கு தரப்படும் எந்த பிரசாதத்தையும் செய்ய வேண்டும் என்பது அங்கிருந்த விதி முறை. ஆனால் அங்கு சென்றால் அக்டோபர் மாதம் வரை அனைத்து நாட்களிலும் பிரசாதம் கொடுப்பவர்களின் பெயர்கள் முதலிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தது. நாங்கள் கவலையில் ஆழ்ந்தோம். என்னுடைய மனைவியோ தான் போகும் முன் அதை செய்ய விரும்பினாள்.
அப்போது நாங்கள் கவலையோடு நின்று கொண்டு இருந்ததைக் கண்ட ஆலய கமிட்டி உறுப்பினர் ஒருவர் எங்களிடம் வந்து எங்களுடைய வேண்டுகோளை பற்றிக் கேட்டறிந்தார் . அவருக்கு என்ன தோன்றியதோ, சாதாரணமாக எவரையும் அவரவர்கள் வீட்டில் இருந்து பிரசாதம் செய்து கொண்டு வர அனுமதிப்பது இல்லை என்றும் ஆனால் அதை சுத்தமாக வீட்டில் செய்து கொண்டு வரச் சம்மதித்தால் அந்தப் பிரசாதத்தை வீட்டில் செய்து கொண்டு வர எங்களுக்கு அனுமதி தருவதாகக் கூறினார். எங்களுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் மனைவியின் வேண்டுகோள் நிறைவேற பாபா எங்களுக்கு அருள் புரிந்து விட்டார். ஆகவே அந்த வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டு என் மனைவி ஊருக்குச் சென்றாள்.
ஆகஸ்ட், 2010.
திடீரென என்னுடைய மனைவியின் பின்புற கழுத்துப் பகுதியில் கட்டி போல வந்தது. அவள் அதை கவனிக்கவில்லை. ஆனால் அது இரண்டே வாரத்தில் பெரியதாகிக் கொண்டே போய் முதலில் இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகம் ஆகியது. ஆகவே நாங்கள் மருத்துவரிடம் சென்றோம். ஸ்கான், எக்ஸ்ரே என ஒருவர் மாற்றி ஒருவர் என ஆறு மருத்துவர்களிடம் சென்று அதை சோதனை செய்ய வேண்டியதாயிற்று . என்ன செய்து அது குணமாகவில்லை.
அந்த மருத்துவர்களோ அந்தக் கட்டி பற்றி எந்த சரியான கருத்தையும் ஒன்று போலக் கூறாமல் மாற்றி மாற்றி கூறி குழப்பினார்கள். அடுத்த மூன்று நாட்கள் நாங்கள் மன நிம்மதி இழந்து இருந்தோம். வேறு வழி இன்றி கடைசியாக புற்றுநோய் நிபுணரிடம் எங்களை அனுப்பினார்கள். அவரோ வந்துள்ளது கான்சர் போன்ற கட்டி எனவும் உடனே அறுவை சிகிச்சை செய்து அதை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மற்ற மருத்துவர்களோ அதை ஏற்கவில்லை என்றாலும் அவர் கூறியதை தட்ட முடியாமல் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். என் மனைவியோ பாபாவிடம் அது கான்சராக இருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டாள்.
அடுத்த இரண்டு நாட்களில் அறுவை சிகிச்சை முடிந்து அந்த கட்டியை சோதனைக்கு அனுப்பினார்கள். சோதனையின் முடிவு வரும்வரை நாங்கள் நிம்மதி என்றி இருந்தோம். பாபா எங்களை கைவிடவில்லை. அவர்தான் எங்களை புற்றுநோய் நிபுணரிடம் செல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி என் மனைவிக்கு வந்து இருந்தக் கட்டி சாதாரணமானதுதான் என்பதை எங்களைக் குழப்பிய மற்ற மருத்துவர்களுக்கு புரிய வைத்து உள்ளார்.
அக்டோபர் , 2010.
என்னுடைய சிறு மகள் பள்ளியில் விளையாடிக்கொண்டு இருந்தபோது கீழே விழுந்து விட்டாள். அவள் மீது இன்னொருவள் விழுந்துவிட என் மகளுடைய மணிக்கட்டு அடிபட்டு விட்டது . வழியால் துடித்த அவளை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று மருத்துவரிடம் காட்டினோம் . அவர் என் மகளுடைய மணிக்கட்டு உடைந்து உள்ளது எனவும் உடனே அறுவை சிகிச்சி செய்து உள்ளே ஸ்டீல் பட்டை வைத்து ஸ்ரூவால் எலும்புடன் முடுக்க வேண்டும் என்றார். ஆகவே நாங்கள் இரண்டாவது மருத்துவ ஆலோசனை வேண்டும் எனக் கேட்க அவர்கள் அதற்க்கு ஏற்பாடு செய்தார்கள். பாபாதான் எங்களை அங்கு ம காப்பாற்றினார். அவரோ மீண்டும் எக்ஸ்ரே ஒன்றவற்றை இரண்டாம் முறை எடுத்துவிட்டு அறுவை சிகிச்சைக் கூட வேண்டாம் என்றும் இரண்டு அல்லது மூன்று மாதம் கட்டுப் போட்டால் போதும் எனவும் கூறி சிகிச்சை தந்து அனுப்பினார்.
டிசம்பர், 2010.
என்னுடைய சிறு குழந்தை வயிற்று வழியால் துடித்தது. நான் பாபாவின் உதயை எடுத்து தண்ணீரில் கலந்து பாபாவை வேண்டிக் கொண்டு அதை குழந்தைக்கு தந்தே. அடுத்த சில நிமிடங்களில் அதனுடைய வலி நின்றது. பாபாவின் மகிமையே மகிமை.
பாபாவிடம் நான் வேண்டுவது:-
நான் சீரடிக்கு சென்றதே இல்லை. இந்தியாவுக்கு சென்று இருந்தபோதும் நாசிக்கிற்கு சென்றபோதும் அவுரன்காபாதுக்கு மட்டுமே சென்று இருந்தேன். ஆகவே பாபாவிடம் விரைவாக நாங்கள் சீரடிக்கு வர அவர்தான் அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறேன்.
---------பாபாவின் படம் உதவி: சகோதரர் விஷ்ணு --------
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment