Thursday, January 6, 2011

Sai Baba personally escorted and guided me to Shirdi-Experience by T.K Madhumoorti.






அன்பானவர்களே
சாயியின் பக்தர் மதுமூர்த்தி சாயிபாபா தனக்கு எப்படியெல்லாம் உதவினார் என்ற தனது அனுபவத்தைக் கூறுகிறார். படியுங்கள்.
மனிஷா
------------------------------------
மதுமூர்தியின் அனுபவம்
2003 ஆம் ஆண்டு. எனக்கு சீரடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் பல காரணங்களினால் என்னுடைய ஆசை நிறைவேற முடியாமல் இருந்தது. அப்போது ஒரு நாள் நான் கடைக்குச் சென்று இருந்தபோது ஏதேற்சையாக ரயில் நிலையத்தின் அருகில் இருந்த பயண முன் பதிவு அலுவலகத்தின் பக்கம் சென்றேன். என்ன தோன்றியது எனத் தெரியவில்லை. சீரடிக்கு செல்ல ஒரு டிக்கட் புக் செய்தேன்.
ரயிலில் ஏறி பூனாவுக்கு சென்றேன். நான் சென்ற சமயம் நள் இரவு. பூனா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சீரடிக்குச் செல்ல பஸ் நிலையம் சென்றேன். அப்போது அங்கு மூன்று நபர்களே இருந்தனர். அவர்களிடம் சீரடிக்கு செல்ல வழி கேட்டபோது அவர்கள் இந்தோர் செல்லும் கடைசி பஸ் சற்று நேரத்தில் வரும் எனவும் அதில் ஏறிக்கொண்டு நாகர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து வேறு பஸ் பிடித்து சீரடிக்கு செல்லுமாறும் கூறினார்கள் .
பஸ்சும் வந்தது. நாங்கள் அதில் ஏறிக்கொண்டோம். என்ன காரணத்தினாலோ நான் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தேன். என் அருகில் தலைபாகை அணிந்த ஒரு மௌலி ( முஸ்லிம் மதகுரு) போன்ற மனிதர் அமர்ந்து இருந்தார். நான் நல்லபடியாக சீரடிக்கு செல்ல வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டேன். அடுத்த இருபது நிமிடத்தில் அந்த பஸ் ஒரு இடத்தில் நின்றது. பஸ் டிரைவர் என்னை அங்கு இறங்குமாறுக் கூற என் பக்கத்தில் இருந்த மௌலி அவரிடம் இங்கு ஏன் இவர் இறங்க வேண்டும், இவர் சீரடிக்குச் செல்கிறார், இன்னும் போ நான் எங்கு இவர் இறங்க வேண்டும் எனக் கூறுகிறேன் எனக் கூற பஸ் கிளம்பியது . பஸ் கிளம்பியது. அடுத்த இருபது நிமிடத்தில் மீண்டும் அது வேறு ஒரு இடத்தில் நிற்க என்னை அங்கு இறங்கச் சொன்ன மௌலி, தானும் அங்கு இறங்கினார் . நான் எதுவும் கூறும் முன்னரே அவர் சற்று தொலைவில் இருந்த ஆட்டோ ஒன்றைக் காட்டி அதி ஏறிக்கொண்டு சீரடிக்கு செல்லும் பஸ் ஸ்டாண்டிற்கு போகுமாறுக் கூறினார்.
நானும் அவர் கூறியபடி அந்த ஆட்டோவை நெருங்கியதும் அந்த டிரைவர் என்னை ஆடோவில் அமருமாறுக் கூறி அதில் ஏற்றிக் கொண்டு பஸ் நிலையத்தில் விட்டுச் சென்றார். நானும் பஸ்ஸை பிடித்து சீரடிக்குச் சென்றேன். அதுவரை என்னுடைய மூளையே ஓடவில்லை. சீரடிக்குச் சென்றதும்தான் நான் நினைத்துப் பார்த்தேன் . யார் அந்த மௌலி? அவருக்கு நான் சீரடி போவது எப்படித் தெரியும்? தானே வந்து ஏன் எனக்கு உதவினார்? விடை கிடைக்கவில்லை. சீரடியில் தரிசனம் முடித்துவிட்டு சென்னைக்கு வந்தேன். மனம் அமைதி அடைந்தது. நடந்தது சாயியின் லீலையே. அவர்தான் நேரில் வந்து எனக்கு உதவி உள்ளார் என்பதே உண்மை. ஓம் சாயி ராம்.

தன்னுடைய பக்தர்களை சாயி கைவிடமாட்டார்.
நான் சித்தலபாக்கத்தில் இருந்த சாயியின் ஆலயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தேன். ஒரு நாள் அங்கு செல்ல தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம்வரை சென்றேன். அங்கிருந்து ஆடோவில் செல்ல முடிவு செய்தேன். ஆடோ வண்டிக்காரனோ அங்கு கொண்டுவிட மிக அதிக கட்டணம் கேட்டான். என்னால் அத்தனை பணம் தர இயலாது. அது மே மாதம். கடுமையான வெயில் வேறு. காலை பத்து மணி இருக்கும். ஆகவே வேறு வழி தெரியாமல் நடக்கத் துவங்கினேன். அப்போது ஒருவர் ஸ்கூட்டரில் வந்தார். என் அருகில் வண்டியை நிறுத்தி அதில் ஏறிக் கொள்ளுமாறு கூறிவிட்டு சித்தலபாக்காம் சாயி ஆலயத்தில் விட்டு விட்டுச் சென்றார். அதன் பின்னர்தான் நான் உணர்ந்தேன். வந்தவர் யார்? என்னை எதற்காக ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு வந்தார்? அவருக்கு எப்படி நான் போகும் இடம் தெரியும்? மெல்ல எனக்குப் புரிந்தது, சாயி பாபாதான் நேரில் வந்து எனக்கு வழிகாட்டி உதவி உள்ளார் என்பது. ஓம் சாயி ராம் .

சாயி மகராஜ் எப்போதுமே என் வாழ்கையில் இருக்கின்றார்.
2003 ஆம் ஆண்டு நான் வேலை செய்து வந்த நிறுவனம் நல்ல நிறுவனம் அல்ல என்பதை உணர்ந்தவன் வேலையில் இருந்து ராஜினமா செய்துவிட்டேன். அதன் பின் ஆறு மாதம் முதல் ஒரு வருடம்வரை வேறு எந்த வேலையும் சரிவர இல்லாமல் இருந்தேன். நான் ஆன்மீக நாட்டம் கொண்டவன். ஆலயங்களுக்கு செல்வதையும், மகான்களை சந்திப்பதையும் பெரிதும் விரும்புபவன். ஆகவே நான் சில நாட்கள் வேலை செய்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பல ஆலயங்களுக்கும் சென்றுவிட்டு வருவேன். நிரந்தரமாக வேலை செய்யவில்லை. நான் பொறுப்பாக வேலை செய்பவர், நாணயத்தைக் கடை பிடிப்பவர், உண்மையாக உழைப்பவர் . எனக்கு பெரிய பட்டப் படிப்பு இல்லை. ஆனாலும் கடந்த ஏழு மாதமாக பாபாவின் அருளினால் ஏதோ வேலை கிடைத்து வருகின்றது. நான் சிரமம் இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன். சாயிபாபாவே என்னுடன் இருந்து கொண்டு எனக்கு வழி காட்டி வருகிறார். ஓம் சாயி ராம்
T.K.மதுமூர்த்தி

சுவர் படம் உதவி: சகோதரர் ராகுல்

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.