Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 5
அன்பானவர்களே
இன்று சாயிபாபாவின் அருளைப் பெற்ற மூன்று பக்தர்களின் அனுபவங்களை கேளுங்கள்
மனிஷா
--------------------------
முதல் அனுபவம்
கடந்த ஆறு மாதங்களாக நான் பலரது அனுபவங்களையும் படித்து வருகின்றேன். எனக்கும் என்னுடைய சகோதர சகோதரிக்கும் பாபாவிடம் இருந்து நிறைய அனுபவங்கள் கிடைத்து உள்ளன. இன்று எனக்கு கிடைத்த அனுபவத்தைக் கூற விரும்புகிறேன்.
நான் கடந்த ஆறு வருடங்களாக பாபாவின் பக்தன். அவருடைய கருணை எனக்கு நிறையவே கிடைத்து உள்ளது.
பாபா எனக்கு தேவையான அனைத்தையும் தந்து வருகின்றார். ஆனால் இந்த வருடம் ஜூன் மாதம் எனக்கு சோதனைக் காலமாக இருந்தது. முதலில் என்னுடைய கல்யாணமே பெரிய பிரச்சனையாக இருந்தது. அதன் பின் என்னுடைய கணவர் வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்றுவிட்டார். நான் என்னுடைய பெற்றோர்களுடன் இரண்டு மாதமாக இந்தியாவில் வசித்து வந்தேன். எனக்கு பதினைந்து நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என முயன்றாலும் அது கிடைக்கவில்லை என்பதின் காரணம் அனைத்து ஆவணங்களையும் தந்தால் ஒழிய அது கிடைக்காது என்பதே . ஆனால் ஆவணங்கள் கிடைக்க ஆறு மாதம் ஆகும் என்றனர்.
அதனால் என் கணவர் என் மீது மிகுந்த கோபம் அடைந்தார். ஒரு நாள் நான் உங்கள் இணையதளத்தைப் பார்த்தேன். அப்போது ஒரு சத்தியம் செய்து கொண்டேன் 'பாபா இந்த விஷயத்தில் எனக்கு கருணைக் காட்டுவாயா? அப்படி உன் கருணை கிடைத்தால் அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்'.
அடுத்து சில நாட்களில் எனக்கு அனைத்து ஆவணங்களும் கிடைத்தன. பாஸ்போர்ட்டும் பதினைத்து நாட்களில் கிடைத்து விட என்னுடைய கணவர் இந்தியாவுக்கு வந்து என்னை தன்னுடன் அழைத்துச் சென்றார். இன்று நான் அவருடன் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். வேலையும் தேடிக்கொண்டு உள்ளேன். பாபா எனக்கு தொடர்ந்து கருணைக் காட்டுவார் என நம்புகிறேன்.
ஓம் சாயி ராம்
இரண்டாவது பக்தரின் அனுபவம்
சாயியின் லீலை- சிவா
என்னுடைய பெயர் சிவா என்பது. நான் பாபாவின் சிறிய பக்தனே. நான் உங்களுடைய இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். என் மனது அமைதி இல்லாமல் உள்ளபோது அதைப் படித்தால் மனது அமைதி ஆகிவிடும்.நான் எனக்கு பாபாவிடம் கிடைத்த அனுபவங்களை எழுத ஆசைப்பட்டேன். ஆனால் இன்றுவரை அது முடியாமல் இருந்தது. மற்றவர்களின் அனுபவங்களுடன் என்னுடைய அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் என் அனுபவங்கள் மிக சிறியவையாக இருக்கும்.
நான் 2009 ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தேன். ஆனால் அதில் என்னால் திறமையாக வேலை செய்ய முடியவில்லை என்பதினால் அமெரிக்காவுக்குச் சென்று MS படிக்க ஆசைப்பட்டேன். அதில் எனக்கு வெற்றி கிடைத்து விட நான் 2010 ஆம் ஆண்டு ஜனவரி பதிமூன்றாம் தேதிக்குள் அங்கு செல்ல வேண்டும் என முடிவு ஆயிற்று. என்னுடைய நிறுவகத்தின் விதி முறைப்படி நான் அவர்களுக்கு ஒரு மாதம் நோட்டிஸ் தர வேண்டும். இல்லை எனில் ஒரு மாத சம்பளம் தரமாட்டார்கள்.
ஆச்சர்யமாக 2009 ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதிக்குள் நான் வேலை செய்து வந்த நிறுவனத்தில் இருந்து விடுதலைப் பெற்று அமெரிக்கா போய் சேர்ந்தேன். இங்கு வந்தப் பின் பாபாவின் அருள் மேலும் மேலும் எனக்கு கிடைத்ததைக் கண்டேன்.
அதற்கு முன் நான் இந்தியாவில் இருந்து கிளம்ப கட்டணம் குறைவான டிக்கட்டை வாங்க முயன்றேன். ஆனால் எனக்கு ஜனவரி ஆறாம் தேதி மும்பையில் இருந்து பயணம் செய்யவே டிக்கட் கிடைத்தது. ஆனால் நான் விரைவாக கிளம்பிவிட்டதினால் என்னுடன் நண்பர்கள் எவரும் வர முடியவில்லை. தனியாக புறப்பட்டேன். ஆனால் என்ன ஆச்சர்யம்? என் மனதில் சற்று கூட சலனம் இல்லை. முதல் பயணம் . நான் செல்ல வேண்டிய இடத்துக்குப் போக நான்கு இடங்களில் இறங்கி ஏற வேண்டி இருந்தது. ஆனாலும் நான் நல்லபடியாக செல்ல வேண்டிய இடத்துக்கு எழாம் தேதி போய் சேர்ந்தேன். அது வியாழக் கிழமை. அது முதல் எனக்கு நடந்த அனைத்து நன்மைகளும் - எனக்கு கிடைத்த கிராஜுவேட் அப்பிரண்டிஸ் மற்றும் புதிய தங்குமிடம் என அனைத்துமே -வியாழன் கிழமைகளிலேயே நடந்தது.
பாபாவுக்கு நன்றி.. ஓம் ஸ்ரீ சாயி நாத் மகராஜ் கி ஜெய்.
சிவா
மூன்றாவது அனுபவம்
என்னுடைய அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் ஐந்து மாத கர்பிணியாக இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன். ஆனால் பிரசவத்திற்கு இந்தியாவுக்கு சென்றேன். என்னுடைய தாய் தந்தை சென்னையில் தாம்பரத்தில் இருக்கின்றார்கள். டிக்கட் கிடைக்காத பிரச்சனையினால் மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி வாக்கில் பிரசவம் ஆக இருந்த எனக்கு ஜனவரி மாதமே இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
நான் பிரசவத்தின்போது என்னுடைய கணவர் என் அருகில் இருக்க வேண்டும் என விரும்பினேன். அவர் தான் அந்த நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு ஆஸ்திரேலியாவில் இருந்த தன்னுடைய தந்தையின் வீட்டில் இருக்கச் சென்று விட்டார். எனக்கு பிரசவ வலி எடுக்கும் முன்பாகவே மருத்துவ மனைக்கு செல்ல விரும்பினேன். அது தியாகராஜா நகர் என்ற இடத்தில் இருந்தது. என் வீட்டில் இருந்து அங்கு செல்ல சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் பிடிக்கும். எனக்கு பிப்ருவரி மாதம் பதிமூன்றாம் தேதி பிரசவ வலி எடுத்தது.
அன்று காலை திடீரென வாயிலில் சத்தம் கேட்டது. வாயிலில் சென்று பார்த்தால் பாபாவின் படத்துடன் கூடிய ஒரு வண்டியில் அனைவருக்கும் உதி பிரசாதம் தந்து கொண்டு சென்றதைக் கண்டோம். சாதாரணமாக வியாழன் கிழமைகளைத் தவிர எங்கள் வீட்டுப் பகுதியில் அப்படிப்பட்ட வண்டி வந்ததே இல்லையாம்.
நாங்கள் அதை பாபாவின் அருளாகக் கருதி மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு சேர்ந்த எனக்கு அன்றே சிறிதும் வலி இல்லாத சுகப் பிரசவம் ஏற்பட்டது.என் கையை பாபா பிடித்துக் கொண்டு அமர்ந்து இருப்பதைப் போல உணர்ந்தேன்.
அதைக் கேட்ட என் கணவர் உடனே ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பி வந்தார். எனக்கு புரிந்தது, பாபா எப்போதுமே என்னுடன் இருக்கின்றார் என்பது.

Loading
0 comments:
Post a Comment