My Shirdi Trip and Prayers Reached Shirdi on 22nd Dec 2010.-Devotee Shirish.
அன்பானவர்களே
சீரடிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி இரண்டாம் தேதியன்று சென்று இருந்த சாயியின் பக்தர் சிரீஷ் என்பவர் தன்னுடன் சாயியின் பக்தர்கள் சாயிபாபாவிடம் சமர்பிக்க அனுப்பி இருந்த வேண்டுகோள்களையும் எடுத்துச் சென்று இருந்தார். அவற்றை அங்கு பாபாவிடம் சமர்பித்தவருக்கு கிடைத்த அற்புதங்களை அவர் கூறுகிறார். படியுங்கள்
மனிஷா
----------------------------------அனுபவம் No 01:
1) நான் சீரடிக்குச் செல்லும் முன் உடல் நலம் குன்றி இருந்தேன் என்பதினால் என் உடல் நிலையை சீர்படுத்துமாறு பாபாவிடம் மனதில் வேண்டிக் கொண்டேன். அதற்கு ஏற்ப சீரடிக்கு கிளம்பும் முன் உடல் நலமாகி விட்டேன். செய்வாய் கிழமை சீரடிக்கு கிளம்பிய நான் பெரும் பயணத்துக்குப் பின்னால் புதன் கிழமை அங்கு போய் சேர்ந்தேன். பயணம் என் உடல் நிலைக்கு ஒத்து வரவில்லை என்றாலும் தடங்கல் இன்றி அங்கு போய் சேர்ந்தேன். நான் சீரடிக்குச் சென்று அங்கு இருந்துவிட்டு திரும்பி வந்ததுவரை எந்த விதமான உடல் உபாதையும் அடையாமல் வந்ததின் காரணம் சாயியின் அருளே என்று கருதுகிறேன்.
அனுபவம் No 02:
சீரடிக்கு கிளம்பிய அன்று நான் வீட்டில் இருந்து கீழே வந்து ஒரு டாச்சியை பிடித்தேன். என்ன அற்புதம் அந்த வண்டியின் உள்ளே சாயிபாபாவின் படம் மாட்டப்பட்டு இருந்தது. ''கவலைப் படாதே. உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று காட்டுவதற்காகவே சாயி பாபா அந்தப் படத்தின் மூலம் எனக்கு சமிக்கை காட்டி உள்ளார் என நான் மனதில் ஆறுதல் அடைந்தேன்.
அனுபவம் No 03:
நாங்கள் புதன் கிழமை சீரடி போய் சேர்ந்தோம். உடனடியாக குளித்துவிட்டு முதலில் சாயி ஆலயம் சென்று பாபா உட்கார்ந்து இருந்த துனி அறைக்குச் சென்றபோது அது திறந்தே இருந்தது. நான் கிளம்பும் முன்னால் அங்கு சென்றதும் முதலில் துனியில் தரிசனம் செய்ய வேண்டும், அப்போதுதான் அவருடைய அருள் எனக்கு கிடைத்து விட்டது என நினைக்க முடியும் என்று மனதார நினைத்தேன். ஏன் எனில் புதன் கிழமை விரைவில் அந்த இடத்தை மூடிவிடுவார்கள். மறுநாள்தான் அது திறக்கும். அதுவே நடந்தது. நாங்கள் தரிசனம் செய்தப் பின் அதை அடுத்த நாள் அதாவது வியாழன் கிழமைவரை மூடிவிட்டார்கள். மறுநாள்தான் அதை மீண்டும் திறப்பார்கள். நல்ல வேளையாக சரியான நேரத்தில் நாங்கள் சென்று விட்டோம். துனியில் தரிசனம் செய்ய முடிந்ததை பாபாவின் அருள் எனக்குக் கிடைத்து விட்டதாகவே கருதினேன். சாதாரணமாக முதலில் சாயியின் சமாதிக்குச் சென்ற பின்னரே மற்ற இடங்களுக்கு செல்லும் நாங்கள் இந்த முறை முதலில் துனிக்கு சென்றுவிட்டு அதன் பிறகு சமாதி மந்திர், துவாரகாமாயி, மற்றும் சாவடிக்கு செல்லலாம் என ரயில் பயணத்தின்போதே முடிவு செய்தோம். துனியில் தரிசனம் செய்தபின் மற்ற இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் துனி இருந்த அறைக்கு செல்ல அந்தப் பகுதி மூடப்பட்டு இருந்ததைக் கண்டேன். நல்ல வேளை பாபாவை எங்களுடைய மனதில் திட்டத்தை எப்படி மாற்றி நினைக்க வைத்து உள்ளார் என எண்ணி வியந்தேன்.
மறுநாள் துவாரகாமாயிக்குச் சென்ற எங்களை உள்ளே அமர்ந்து கொண்டு சாயி சரித்திரத்தைப் படிக்க அனுமதிக்கவில்லை. ஆகவே வரிசையில் நின்று கொண்டபடி நான் சாயி சரித்திரத்தின் சில பகுதிகளை படித்துவிட்டு பாபாவின் அருளை மானசீகமாக பெற்றுக் கொண்டேன். அதன் பிறகு நாங்கள் சாவடிக்குச் சென்றோம்.
சாவடிக்குச் சென்ற பின் அங்கிருந்துக் கிளம்பி மற்ற ஐந்து இடங்களுக்கும் சென்றோம். அவை பாபா பிட்ஷை பெற்ற வீடுகள் . முதலில் அப்துல் பாபாவின் குடிசை, அடுத்து லஷ்மிபாயியின் வீடு, அடுத்து மகால்சபதியின் வீடு, அடுத்து சாமாவின் வீடு கடைசியாக பாயாஜா மாவின் வீடு என அனைத்து இடங்களுக்கும் சென்று தரிசித்தோம்.
அடுத்து நாங்கள் சமாதி ஆலயம் சென்றோம். அன்று புதன் கிழமை என்றாலும் கூட அங்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. வரிசையில் நின்று உள்ளே சென்று பாபாவின் பக்தர்கள் எனக்கு அனுப்பி இருந்த கோரிக்கைகளை அவர் பாதத்தில் வைத்து அவர்களின் வேண்டுகோள் நிறைவேற பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பினோம்.
அனுபவம் No 04 :
நாங்கள் அறைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டப் பிறகு கடைகளுக்குச் சென்றோம். என் மனதில் மறுநாள் விடியற் காலை ஆரத்திக்கு செல்ல வேண்டும் என்றால் இரவு பதினோரு மணிக்கே சென்று வரிசையில் நிற்க வேண்டுமே என்ற என்ற எண்ணம் வந்தது. உடல் நலம் குன்றி இருந்ததினால் ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று விட்டு உள்ளே சென்றால் தரிசனத்தில் மனம் நல்ல நிலையில் ஈடுபடுமா என்ற சந்தேகம் வந்தது.
கடை வீதியில் இருந்து திரும்பியதும் சாயி சரித்திரம் படிக்கும் அறைக்குச் சென்று அமர்ந்து சாயி சரித்திரத்தின் பகுதி 18-19 போன்றவற்றை படித்தேன். மறுநாள் ஆரத்தி பற்றிய மனக் குழப்பத்திற்கு விடை தருமாறு பாபாவையே வேண்டினேன். பிறகு அங்கிருந்து கிளம்பி ஒரு ஆரத்தி புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்றோம். மனதில் குழப்பம் தீரவில்லை.
இரவு சாப்பிட அங்கிருந்த ஒரு புதிய உணவகம் சென்றோம். இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. அப்போது என் நண்பரிடம் என்னுடைய மனக் குழப்பம் பற்றிக் கூறினேன். அது பற்றி பேசிக் கொண்டே இருந்த நாங்கள் நடப்பது பாபாவின் சித்தப்படி நடக்கட்டும் என்று அவர் மீது பாரத்தை போட்டுவிட்டு இரவு 10 .30 மணிக்கு நடைபெறும் பாபாவின் ஆரத்திக்கு செல்வது எனவும், மறு நாள் காலை தரிசனத்துக்க்கு மட்டும் செல்லலாம் என முடிவு செய்தோம்.
இரவு ஆரத்தியில் நல்ல தரிசனம் கிடைத்தது. நல்ல கூட்டம் இருந்தாலும் பாபாவின் ஆரத்தியை ரசித்தோம். பாபா என்னுடைய குழப்பத்தை நீக்கி தன்னை தரிசனம் செய்ய இரவே அழைத்துவிட்டார் என எண்ணினேன். என் மன நிலையும் அமைதி அடைந்தது.
இரவு அறைக்குத் திரும்பி ஒய்வு எடுத்துவிட்டு மறுநாள் ஆலயம் சென்று தரிசனம் செய்தோம். அனைத்தும் பாபாவின் அருளினால் நன்கு முடிய திரும்பி மும்பைக்கு கிளம்பினோம். அதற்கு முன் இந்த செய்தியை படியுங்கள்அனுபவம் No 05:
நான் சீரடிக்குக் கிளம்பும் முன் பத்தொன்பதாம் தேதிவரை எனக்கு சாயி பக்தர்களிடம் இருந்துவந்த அனைத்து கடிதங்களின் பிரதிகளையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டு சென்ற என்னால் அவற்றை பாபாவின் பாதத்தில் வைத்து எடுக்க முடிந்தது. அதுவே பெரும் ஆறுதல். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பாபாவிடம் வேண்டிக் கொண்டு அவற்றை அங்கு இருந்த பாபாவின் உண்டியலில் போட்டேன். அங்கிருந்தபடியே அனைவரின் நலனுக்காகவும் பாபாவிடம் மீண்டும் வேண்டிக் கொண்டேன். பாபாவின் அருளினால் மட்டுமே அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்தது என்றே நினைத்தேன். உடல் நலமில்லை என்றாலும் அங்கு சென்று அனைத்து வேலைகளையும் நல்லபடியாக செய்துவிட்டு வந்ததில் மனம் முழு திருப்பதியாக இருந்தது. சாயி பாபாவே எனக்கு அனைத்தும். அவரே என்னை காத்து வருகிறார். அவருக்கு என் நன்றி.
சிரிஷ் அத்காரி(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment