Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 6.

இன்று நான் பெயர் கூற விரும்பாத இரண்டு சாயி பக்தர்களின் அனுபவங்களை வெளியிட்டு உள்ளேன்
மனிஷா சாயியுடன் அனுபவம் -1
ஒன்பது வியாழன் கிழமை விரத மகிமை
சாயிராம். என்னுடைய இந்த அனுபவத்தை சாயி பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக யோசனை செய்துவிட்டு இன்று அதை எழுதி உள்ளேன். நான் பன்னிரண்டு வயது முதலிலேயே சாயி பாபாவின் பக்தை. இன்று வரை நான் அவருடைய பல மகிமைகளை அனுபவித்து உள்ளேன். இன்று இந்த மகிமை என்னுடைய திருமணம் பற்றிய ஒன்று. நானும் என்னுடைய ஒரு நண்பரும் மனதார காதலித்தோம். ஆனால் நாங்கள் இருவருமே வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதினால் எங்களின் திருமண யோசனைக்கு இருவர் வீட்டிலும் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்னுடைய உடல் நலமும் குன்றி இருந்தது. நான் பாபாவிடம் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுமாறு வேண்டிக் கொண்டேன். நான் எப்போதுமே பாபாவை பற்றிய புத்தகங்களை படிப்பதும், அவரை பற்றி இணையதளத்தில் படிப்பதையுமே பொழுது போக்காக வைத்து இருந்தேன். அவருடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பக்தர்களின் கடிதங்கள் மூலம் படித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு முறை எதேற்சையாக நான் பாபாவின் ஒன்பது நாள் விரதத்தைப் பற்றிப் படித்தேன். உடனே அடுத்த வாரம் முதல் அதை கடைபிடிக்கத் துவங்கினேன். அதை ஆரம்பித்த மூன்றாம் வாரத்தில் இருந்தே நல்ல செய்தி வரத் துவங்கியது. அடுத்து ஒன்பதாவது வார பூஜை முடிவின் போது எங்களுடைய கல்யாணமும் நிச்சயம் ஆயிற்று. அதுவரை நான் பட்ட அனைத்து மனக் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள பாபாவே துணை நின்றார். உன்னுடைய கவலைகள் அனைத்தையும் என்னிடம் விட்டுவிடு என பாபா கூறுவார். ஆனாலும் நான் அதிகம் கவலைபடுபவள். எனக்குத் தெரியும் என்னுடைய துயரங்கள் அனைத்தையும் பாபா தீர்த்து வைப்பார் என்பது. என்னுடைய மற்ற அனுபவங்களையும் விரைவில் எழுதுவேன்.
சாயியுடன் அனுபவம் -2
ஒன்பது வியாழன் கிழமை விரத மகிமை
சாயிராம். என்னுடைய ஒரு அனுபவத்தை சாயி பக்தர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நமக்கு மற்றவர்களுடனான உறவில் எந்தவிதமான களங்கமும் ஏற்படக் கூடாது என்று நான் நம்புபவள்.
2007 ஆம் ஆண்டு நான் சந்தித்த ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. ஆனால் அவரோ வேறு மாதிரியாக என்னிடம் பழகினார். என் மனதை காரணம் இன்றி வேண்டும் என்றே புண்படுத்துவார், முறைகேடாக நடக்க முயலுவார். அதனால் மன வேதனை மிகுந்த நான் ஒரு நாள் நன்கு யோசனை செய்தப் பின் அவரை விட்டு விலகி விட்டேன்.
அதைக் கேட்டு ஒன்றும் கூறாமல் அவரும் என்னை விட்டு விலகினார். ஆனால் என்னால் அவரை அத்தனை விரைவாக மறக்க முடியவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டேன். அப்போதுதான் மன நிம்மதி இன்றி இருந்த நான் ஒன்பது வார பாபாவின் விரதத்தை செய்து முடித்தேன். அந்த விரத காலத்தில் ஆச்சர்யமாக பாபா எனக்கு எவர் மூலமாவது அல்லது என் கனவில் வந்து ஏதாவது புத்தி கூறிக்கொண்டே இருந்தார். அது மூன்று வருடங்கள் தொடர்ந்தன. 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென என்னுடைய பழைய நண்பரான காதலர் தானே என்னை தொடர்பு கொண்டு என்னிடம் மிகவும் மரியாதையுடன் பழகத் துவங்கினார். இனி அவருடன் தொடர்பே கிடையாது என எண்ணி இருந்த வேலையில் அவர் என்னை தொடர்பு கொண்டு பேசியது ஆச்சர்யமாக இருந்தது.
இப்போதெல்லாம் அவர் தன்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் என்னுடன் கூறி விவாதிக்கின்றார். என்னுடைய ஆலோசனைகளை கேட்கிறார். அவர் பழைய நண்பராக அல்ல புதிய மனிதனாக என்னுடன் பழகுவதைக் கண்டு நான் பாபாவுக்கே நன்றி கூறுகிறேன். என்னுடைய வாழ்வில் மீண்டும் வசந்தம் வந்துவிட்டது. என் மனதில் இருந்த துயரம் நீங்கி நான் புதுப் பொலிவு பெற்றுள்ளேன். பாபாவுக்கே எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அவர் அருளுக்காக நான் காத்து இருக்கின்றேன். அதுவரை பாபா உன்னுடைய தாமரை மலர் போன்ற பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன். எங்களுக்கு நீதான் நல்ல வழி காட்ட வேண்டும்.
சாயி பாபா எனக்கு ஒரு சாவியை பரிசாகத் தந்தார்
நான் 1998 ஆம் ஆண்டு முதலிலேயே சாயி பாபாவின் பக்தையாக இருந்தவள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எனக்கு அவர் மீதான பக்தி அதிகம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்போதுதான் எனக்கு இந்த இனிய அனுபவம் ஏற்பட்டது. அது 2004 ஆம் ஆண்டு. எனக்கு ஒரு வயதானவர் பாபாவின் பாதங்களில் வைத்து எடுத்த ஒரு சாவி வளையத்தை தந்து இருந்தார். அதை நான் எப்போதுமே என்னுடைய கைபையில் வைத்து வைத்து இருந்தேன். அதில் பாபாவின் படமும் இருந்தது.
ஒரு முறை அந்த கைப்பை தொலைந்து விட்டது. அது தொலைந்து விட்டதே என நான் கவலைப்படவில்லை , ஆனால் பாபாவின் படத்துடன் இருந்த சாவி வளையம் தொலைந்ததுதான் வருத்தமாக இருந்தது. ஒரு நாள் நான் எங்கள் வீட்டில் டிவியை சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது அந்த டிராயரில் பாபாவின் படத்துடன் கூடிய ஒரு வளையம் கிடைத்தது.
நான் சற்று நேரம் ஆச்சர்யம் அடைந்தேன். ஆனால் அது என்னுடைய மச்சினரின் வண்டியின் சாவியாக இருக்கலாம் என அங்கேயே வைத்து விட்டேன். பிறருடைய சொத்தை எடுத்துக் கொள்வது பாவம் அல்லவா. சில வாரங்கள் பொறுத்து அதே சாவி நான் வைத்த இடத்திலேயே இருந்ததைக் கண்டேன். ஆகவே அந்த சாவி பற்றி நான் எல்லோரிடமும் கேட்டேன். அது என்னுடைய மச்சினருடைய வண்டியின் சாவி இல்லை. மிகவும் ஏழையான வீட்டு வேலைக்காரியின் சாவியும் அல்ல. அப்போதுதான் எவருடைய சாவியும் இல்லாத அது என் வீட்டில் வந்தது எப்படி என்பதற்கான விடை எனக்கு கிடைத்தது. அதை பாபாதான் எனக்கு தந்து இருக்கின்றார். ஆகவே அவரை மனதார வணங்கிவிட்டு அந்த சாவியை என்னுடைய புதிய பர்சில் வைத்துக் கொண்டு விட்டேன். பாபா எப்போதுமே என்னுடன் இருக்கின்றார் என்பதையும் புரிந்து கொண்டேன்.
(Translated into Tamil by Santhipiriya )Loading
0 comments:
Post a Comment