Thursday, January 20, 2011

Sai is following His Bhaktas-Experiences by T.K.Madhumoorti.

 
அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள். இன்று நான் சாயி பக்தர் ஒருவருடைய அனுபவங்களை வெளியிட்டு உள்ளேன். பாபா மீது நாம் நம்பிக்கை வைத்தால் அவர் எப்படி எல்லாம்  நம்மைக் காப்பாற்றுவார்  என்பதை இந்த அனுபவம் நமக்கு காட்டுகிறது. இது அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கட்டும்.
மனிஷா 

---------------------
மனிஷாஜி
நான் இன்று அனுப்பி உள்ள என்னுடைய அனுபவத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சாயி தனது பக்தர்களுடன் என்றும் இருக்கின்றார்.
நான் ஒரு புதிய வேலைக் கிடைத்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டி இருந்தது. அங்கு சென்று வீடு பார்க்க வேண்டும். மற்ற வேலைகளையும் நானே செய்து கொள்ள வேண்டும். யாரை உதவி கேட்பது என்ற குழப்பம். பாபா அப்படிப்பட்ட சந்தர்பங்களில் தன்னுடைய பக்தர்களுக்கு எப்படி உதவுகிறார் என்பதைப் பாருங்கள்.
1.  சத்யநாராயணா என்ற என்னுடைய அலுவலகத்  தோழர் எனக்கு தானாகவே வலிய    வந்து உதவி செய்தார். அவரே எனக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார்.  அவரே  என்னை  அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று திரும்பக் கொண்டு விட்டார் . எனக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தார். எல்ல இடங்களுக்கும் அழைத்துச் சென்று எனக்கு வழிகளைக் காட்டினார். சாதாரணமாக நமக்கு எவருமே ஒரு எல்லை வரை மட்டுமே உதவுவார்கள். ஆனால் எனக்கோ இந்த நண்பர் நான் கேட்காமலேயே  நான் அந்தப் புதிய இடத்தில் பழகும்வரை அனைத்தையும் செய்து தந்தார் . இது ஒருபுறம் இருக்க அடுத்ததைப் படியுங்கள்.

2.  நான் இருந்த வீடு சுற்றிலும் ஆலயங்கள் நிறைந்தப் பகுதியாக இருந்தது. மலைக்கு மேலே வெங்கடாசலபதி, கீழே அழகான இன்னொரு ஆலயம். சுற்றிலும் சிவன், ஹனுமார் மற்றும் ராமர் ஆலயங்கள்.  நடுவே என் வீடு.  இது போதாதா சாயி என்னுடனேயே எப்போதும் இருக்கின்றார் என்பதை நான் நம்புவதற்கு?
3. சாயிராம். என் குருநாதர்  சத்யநாராயணா மற்றும் அவர் குடும்பத்திற்கு அருள் புரியட்டும்.  என் வீட்டிற்கு அருகில் அன்னாவரம் என்ற இடம் இருந்தது. அங்கு இருந்த கடவுள் சத்யநாராயணா . ஆகவே பாபாவே அந்த சத்யநாராயண உருவில்   இங்கு வந்து எனக்கு உதவி உள்ளார் என நினைகின்றேன். 

சாயி என்னை விபத்தில் இருந்துக் காப்பாற்றினார்
2007 ஆம் ஆண்டு . நான் ஹைதிராபாத்திற்கு வேலை விஷயமாக  சென்று கொண்டு இருந்தேன்.  நாங்கள் தங்கி இருந்த இடம்  அந்த நிறுவனத்தில் இருந்து 60 கிலோ மீடர் தூரத்தில் இருந்தது. வேளை முடிந்து நானும் எனது நண்பர்களும் வோல்வோ பஸ்ஸில் சென்று கொண்டு இருந்தோம். இரவு மணி ஏழு இருக்கும். பஸ் 80 கிலோ மீடர் வேகத்தில் சென்று கொண்டு இருந்தது. நான் பாபாவின் பெயரை உச்சரித்துக் கொண்டே அமர்ந்து இருந்தேன்.  திடீர் என பெரிய சத்தம். வண்டியில் வண்டி ஓட்டியும் அவருடன் இருந்த உதவியாளரையும்  காணவில்லை.
சற்று தொலைவில் காப்பாற்று , காப்பாற்று என்ற சப்தம்.  குடித்துவிட்டு ஒரு ஆட்டோவை ஒட்டி  வந்துள்ளவன்   நாங்கள் பயணம் செய்த பஸ் மீது மோதிவிட்டான். பஸ் நிலை குலைந்து பக்கத்தில் மோதிவிட்டது.எனக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. நான் கையில் கிடைத்த எதையோ பற்றிக் கொண்டதினால் பஸ்ஸில் இருந்து தூக்கி எறியப்படவில்லை. பலருக்கும் நல்ல அடி, ரத்தக் காயம், கண்ணாடிகள் உடைந்தன. வண்டி ஓட்டியின் பின் புறம் அமர்ந்து இருந்தவருக்கு தலையில் பலத்தக் காயம். என்னைத் தவிர மற்ற அனைவருக்கும் காயம். நான் பாபாவின் பெயரை உச்சரித்துக் கொண்டே  இருந்ததினால் என்னுடன் அவர் இருந்து கொண்டு எனக்கு எந்த காயமும் இல்லாமல் என்னை காப்பற்றி உள்ளார் என்றே நினைத்தேன்.


சாயி தனக்கு சேவை செய்ய என்னை அழைத்தார்
நான் தினமும் பாபாவுக்கு பூஜை செய்து அபிஷேகமும் செய்வது உண்டு.  தவறாமல் பாபாவின் ஆலயங்களுக்கும் செல்வேன். எந்த இடத்தில் பாபாவின் ஆலயம் திறந்தாலும் அங்கும் சென்று பார்ப்பேன்.  அப்படிப்பட்ட நிலையில் ஒருமுறை நான் சென்னை ஈச்சம்பக்கத்தில் இருந்த சாயிபாபாவின் ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அந்த ஆலயத்தை உத்தியோகத்தில்  இருந்து ஓய்வு பெற்ற ஒரு தம்பதியினர் நிர்வாகித்து வந்தார்கள். அவர்களைப்  பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். ஆனாலும் அங்கு சென்று அவர்களுடன் பேசிவிட்டு வந்தால் ஆறுதலாக இருக்கும். எனக்கும் சாயி பாபாவுக்கு சேவை செய்ய அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்குவது உண்டு. அதற்கு சந்தர்ப்பம் தருமாறு பாபாவை வேண்டிக் கொண்டேன்.
நான் வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை. பாபா அந்த சந்தர்பத்தை எனக்கு விரைவிலேயே தந்தார். 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் என்னுடய சொந்தக்காரர் வீட்டில் நடந்த கிரகப் பிரவேசத்துக்கு பெங்களூருக்குப்  போய் இருந்தேன்.
அப்போது ஒருவர்  பெங்களூரில் அரிக்கேரே என்ற இடத்தில் உள்ள ஹுலிமாவுவில் ஒரு சாயிபாபாவின் ஆலயம் வந்துள்ளது எனக் கூறி அங்கு என்னை தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் சென்ற நேரத்தில் ஆரத்தி நடந்து கொண்டு இருந்தது. அற்புதமான காட்சி. மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது  எதிர்பாராத விதமாக அங்கு வந்த பிரசிடென்ட் அந்த ஆலயத்துக்கு ஒரு நிர்வாகி தேவை என அறிவிப்பை வெளியிட்டார். அதைக் கேட்ட எனக்கு வியப்பு.  என் மனதில் சரி எனக் கூறுமாறு  மணி அடித்தது. அது ஞாயிற்றுக் கிழமை. அதிகக் கூட்டமும் இல்லை. ஆனாலும் அவர் ஏன் அன்று அந்த அறிவிப்பை வெளியிட்டார் என அவருக்கும் தெரியவில்லையாம். அவர் கடந்த  மூன்று மாதங்களாக அந்த செய்தியை வெளியிட முயன்றாராம். ஆனால் இன்றுவரை முடியவில்லையாம்.
நான் சென்னைக்கு வந்ததும் அவரை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டேன்.  சாதாரணமாக அவர் சில நேரத்தில் சாயி சரித்திரம் படித்துக் கொண்டு இருப்பார். அப்போது யார் போன் செய்தாலும் அதை எடுக்க மாட்டார். நான் போன் செய்தபோது  அவர் சாயி சரித்திரம் படித்துக் கொண்டு இருந்தாலும்  அதை எடுத்து என்னுடன் பேசினார்.
நான் என்னுடைய எண்ணத்தை அவருக்கு தெரியப்படுத்தினேன். அதை ஏற்றுக் கொண்ட அவர் என்னை அங்கு வருமாறு கூறினார். நானும் அந்த ஆலயத்துக்குச் சென்று ஒரு மாதம் சேவை  செய்தேன். ஆனால் சாயி சேவைக்காக நான் பணம் பெற்றுக்  கொள்ள விரும்பவில்லை என்பதினால் நான் நல்ல நிலைக்கு வந்ததும் அப்படிப்பட்ட சேவையை தொடர்ந்து செய்யலாம்  என எண்ணிக் கொண்டு திரும்பி வந்துவிட்டேன். என்ன ஆனால் என்ன, என் விருப்பத்தை பாபா நிறைவேற்றி விட்டார்.
ஜெய்  ஹோ சாயிபாபா
 மதுமூர்த்தி
(Translated into Tamil by Shri N.R Jayaraman (Shantipriya)  
Image and video hosting by TinyPic
  

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.