Monday, April 18, 2011

Ram Navami Centenary Celebration Photos In Shirdi -2011- Part 1 and 2

2011 ஆண்டு  சீரடி ராமநவமி வைபவம்



அன்பானவர்களே ,
இன்று நான் சீரடியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ராம நவமி வைபவத்தின் படங்களை வெளியிட்டு உள்ளேன்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னாள் பாபா உயிருடன் இருந்தபோது ராம நவமி சீரடியில் கொண்டாடப்பட்டது. தற்போது அது ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் படுகின்றது. இந்த ஆண்டு சீரடியில் சுமார் நான்கு லட்சம்பேர் வந்திருந்து பல்லக்கு ஊர்வலம் மற்றும் ராம நவமி விழாவில் கலந்து கொண்டு பாபாவை வழிபட்டது அவருடைய சக்தியைக் காட்டுகின்றது. சீரடி முழுவதுமே பாபாவின் பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
மகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பெரும் அளவிலான பக்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள். வழி நெடுகிலும் குங்குமம், மற்றும் வண்ணப் பொடிகளை தூவிக்கொண்டு சென்றும், ஆடல் பாடல்களுடனும் விழா நடை பெற்றது.
தூபகேடா என்ற கிராமத்தில் இருந்து வந்து இருந்தவர் சாயி ஜோதியை ஏற்றிக் கொண்டு வந்து இருந்தார். துபாய் மற்றும் அமெரிக்காவில் குடியேறி இருந்த இந்தியர்களில் இருபத்தி ஐந்து பேர் மும்பையில் இருந்து சீரடிக்கு பல்லக்கைத் தூக்கிக் கொண்டு நடந்தே வந்து இருந்தார்கள்.
மும்பை சேர்ந்த மனோஜ் மைத்ரே என்ற பக்தர் 920 கிராம் தங்க கிரீடத்தை ஆலயத்திற்கு தானம் தந்தார். திரைப்பட நடிகர்களான மனோஜ் குமார், பிரேம் சாகர் (ராமானந்த சாகரின் மகன்), சுதிர் தால்வி ('சீரடி கி சாயி பாபா' படத்தில் சாயி பாபா வேஷத்தில் நடித்தவர் ) , சுபாஷ் ராவ் புட்டி போன்ற பலரும் அங்கு வந்து இருந்தார்கள்.
ஆலய முகப்பில் மும்பையை சேர்ந்த பக்தர்கள் பாபாவின் மிகப் பெரிய சிலையை செய்து வைத்து இருந்தார்கள்.
அந்த வைபவத்தை படம் எடுத்து உள்ளார்கள். அதை இரண்டு பிரிவுகளாக்கி , ஒவ்வொன்றிலும் 72 படங்கள் என கீழே உள்ள இணையகத்தில் தந்து உள்ளோம். அதைப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.
மனிஷா


 
 (Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.