West Mambalam Shirdi Sai Baba Temple-Chennai.
அன்பானவர்களே
திரு ஸ்ரீதர் மற்றும் சகோதரி சிவசங்கரி அவர்கள் சென்னையில் மேற்கு மாம்பலம் என்கின்ற இடத்தில் உள்ள ஒரு சாயி பாபாவின் ஆலய விவரங்களை எனக்கு அனுப்பி உள்ளார்கள். அதை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்.
ஜெய் சாயிராம் மனிஷா
ஆலய விவரம் .
கும்பாபிஷேகம் : 31/8/2007
ஆலய நேரம் :
5 A.M to 12.30P.M மற்றும்
4.30 P.M to 9.45 P.M
காகட் ஆரத்தி -5:15 A.M
கணபதி ஹோமம் -6:30 A.M
மங்கல ஸ்னான் -7:30 A.M
அன்னதானம் -11:30 A.M
மத்யான ஆர்த்தி -12:00 Noon
தூப் ஆர்த்தி -6:00 P.M
விஷ்ணு சஹாஸ்ரநாமம் -6:30 P.M
வேத பாராயணம் -7:00 P.M
ஷேஜ் ஆர்த்தி -9:15 P.M
ஆலயம் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
ஆலய நேரம் :
5 A.M to 12.30P.M மற்றும்
4.30 P.M to 9.45 P.M
காகட் ஆரத்தி -5:15 A.M
கணபதி ஹோமம் -6:30 A.M
மங்கல ஸ்னான் -7:30 A.M
அன்னதானம் -11:30 A.M
மத்யான ஆர்த்தி -12:00 Noon
தூப் ஆர்த்தி -6:00 P.M
விஷ்ணு சஹாஸ்ரநாமம் -6:30 P.M
வேத பாராயணம் -7:00 P.M
ஷேஜ் ஆர்த்தி -9:15 P.M
ஆலயம் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
மூல விக்ரஹத்தின் பிரதிஷ்டை (5 1/2' உயர வெள்ளை பள்ளிங்குக் கல் ) 2007 ஆண்டு செய்யப்பட்டது. அதற்கு முன்னால் இது சாய்பாபாவின் சமாதி ஆலயமாகவே இருந்தது.
இந்த ஆலயத்தை நிறுவியவர் சாயிமாதா அல்லது சாய் அம்மா என அழைக்கப்படும் ஸ்ரீமதி விசாலாக்ஷி அம்மாள்.
ஆலய வரலாற்றின் மூலம் : http://forum.spiritualindia.org
கவிதாபர்னா என்பவற்றின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்த ஆலயத்தின் வரலாறு
1991 ஆம் ஆண்டு பல விதமான சிக்கல்களை அனுபவித்துக் கொண்டு இருந்த நான் என்னுடைய நண்பர் ஒருவர் கூறியதின் பேரில் இந்த ஆலயத்துக்குச் சென்றேன். அங்கு ஒரு வயதான அம்மையார் இருப்பதாகவும் அவர் பக்தர்களின் பிரச்சனைகளுக்கு விடை கூறிக் கொண்டு இருந்ததாகவும் ஆனால் தற்போது அவர் அதை நிறுத்தி விட்டதினால் அவளுடைய ஆசிகளையாவது பெற்றுக் கொண்டு வருமாறு எனக்கு என் நண்பர் அறிவுரை தந்து இருந்ததினால் அங்கு சென்றேன்.
ஓலையினால் மேற் கூரை போடப்பட்டு இருந்த அந்த ஆலயத்தின் தரை பக்தர்கள் அமர்ந்து சாயிபாபாவை தரிசிக்க சிமென்ட்டினால் பூசப்பட்டு இருந்தது.
அந்த ஆலயத்தில் நான் சென்றபோது சிலர் பஜனை செய்து கொண்டு இருக்க ஒரு மூலையில் சாய்வு நாற்காலியில் 80 வயதான அம்மையார் அமர்ந்து இருந்தார். அவரிடம் சென்று நான் என் பிரச்சனைகளைக் கூறியவுடன் நான் எதற்கும் கவலைப்பட வேண்டாம் எனவும் ஒரே வாரத்தில் அனைத்தும் நல்லபடியாகி விடும் எனவும் கூறி பாபாவிடம் அனைத்தையும் விட்டு விடுமாறும் கூறினார்.
எனக்காக அந்த அம்மையார் வேண்டிக் கொண்டு இருந்தாரோ என்னவோ, அவர் கூறியபடியே அனைத்தும் நல்லபடியாகவே முடிந்தது. யாருடனும் பேசுவதில்லை எனக் கேள்விப்பட்ட நான் என்னுடன் அவர் பேசியது ஆச்சர்யமாக இருந்தது. அவர் கூறியபடி அனைத்தும் நல்லபடியாக முடிந்ததினால் அவருக்கு நன்றி கூறலாம் என எண்ணி அந்த ஆலயத்துக்கு மீண்டும் சென்றேன். நான் சென்றபோது அங்கு யாருமே இல்லை. பின்கட்டில் இருந்த மாடியில் சென்று அவரைக் காணுமாறு அங்கு பக்கத்தில் இருந்த ஒருவர் கூறினார்.
நான் அவரிடம் சென்று நன்றி கூறவும் அவர் அனைத்துமே பாபாவின் செயலே என்றும் தினமும் ஆரத்திக்கும் வாராந்திர பஜனைக்கும் வருமாறும் அறிவுரை கூறினார். ஆனால் நான் அலுவலகத்தில் இருந்து தினமும் தாமதமாக வருவதினால் எப்போது முடிகின்றதோ அப்போதெல்லாம் வருவதாகக் கூறிவிட்டு வந்தேன்.
சாயி அம்மா கணவரை இழந்தவர் . அவருக்கு குழந்தைகள் இல்லை. ஆனாலும் இந்த வயதிலும் அவர் ஆலயத்தை பெரியதாக கட்டி முடிக்க வேண்டும் என எண்ணினார். ஆகவே தனது சொத்துக்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கே தந்து விட்டு அங்கு ஒரு மூலையில் சிறிய இடத்தில் வசித்து வந்தார். அவர் செல்வந்தர் அல்ல. சாப்பாட்டிற்கே சற்று கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருந்தார் என்றாலும் அந்த வைராக்கியம் இருந்தது. அவருக்கு பாபாவின் சில பக்தர்கள் உதவிக் கொண்டு இருந்தார்கள். அவருடன் இரவு நேரங்களில் துணைக்கு படுத்துக் கொள்ள ஒருவர் வருவாராம். நான் என்னுடைய தாயாரையும் அந்த ஆலயத்துக்கு அழைத்துச் சென்று சாயி அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அங்கு செல்லத் துவங்கியதுமே என்னுடைய வாழ்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது என்பதே உண்மை.
1996 ஆம் ஆண்டுவரை அந்த ஆலயத்தின் கட்டிடம் பெரும் வளர்ச்சி அடையவில்லை. காரணம் பக்தர்கள் அதிகம் அங்கு வந்தது இல்லை. ஆனால் ராமநவமி போன்ற பண்டிகைகளில் மட்டும் அதிக பக்தர்கள் அங்கு வந்து விழாவை விமர்சையாகக் கொண்டாடுவார்கள். அன்னதானமும் பெருமளவில் அங்கு நடக்கும்.
ஒரு முறை அம்மா என்னிடம் 'பாபா இந்த ஆண்டுக்கான அன்னதானத்துக்கு உன்னிடம் இருந்து அரிசியை எதிர்பார்க்கின்றார் . உன்னால் முடியுமா' என தயங்கிக் கொண்டே கேட்டார். நான் புதிய பக்தர் என்பதினால் தயங்கிக் கேட்டாரோ என்னவோ, ஆனால் நான் அதற்கு ஏற்பாடு செய்தேன். அது முதல் என்னுடைய கணவரின் வியாபாரம் மேலும் செழிப்பாக நடக்கத் துவங்கியது. அதை நான் எதிர்பார்க்கவில்லை.
1996 ஆம் ஆண்டு முதல் பலர் நன்கொடைகள் அளிக்கத் துவங்க கட்டிட வேலைகள் நடக்கத் துவங்கின. ஆனால் பணம் இருந்தும் சுவர் எழுப்பும் வேலைகள் துவக்கப்படவில்லை.
என்னுடைய தாயாருக்கு அந்த ஆலயம் மிகவும் பிடித்து இருந்தது. அவருக்கு பல பணப் பிரச்சனைகள் இருந்தன. அவை விலகி விட்டால் அந்த ஆலயம் கட்ட ஓரளவு பணம் தருவதாக வேண்டிக் கொண்டார். அதற்க்கு ஏற்றார்போல அவருடைய பணப் பிரச்சனைகள் அனைத்தும் விலகின. அதை சாயி அம்மாவிடம் சென்று கூறியபோது அவர் அந்த ஆலயத்தின் மத்தியப் பகுதியில் பாபாவின் சிலையை வைக்க பளிங்குப் பீடம் அமைக்க பண உதவி செய்யுமாறு கூறி இருந்தார்.
அதன் பிறகு ஒரு வடநாட்டு பக்தர் அந்த காரியத்துக்கு உதவுவதாகக் கூறி பணம் தந்து விட்டதினால் வாயிலின் சிம்ம துவாரத்தை அமைக்க என்னுடைய தாயார் தரும் பணத்தை உபயோகித்துக் கொள்ள உள்ளதாக சாயி அம்மா கூறினார்.
என்னுடைய தாயாருக்கு ஒரே மகிழ்ச்சியாகி அன்றே என்னுடைய சகோதரி ஒருவர் தந்த பணத்தையும் சேர்த்து தனது காசோலையை சாயி அம்மாவிடம் கொண்டு சென்று தந்தார்.
மறு முறை நாகல் அங்கு சென்றபோது ஒரு மூலையில் அற்புதமாக கலை வடிவமைக்கப்பட்ட சிம்ம துவாரக் கதவு வைக்கப்பட்டு இருந்தது. என்னுடைய தாயாரை அருகில் அழைத்த சாயி அம்மா , என்னுடைய தாயார் நன்கொடை தந்தது முதல் பெரும் அளவு நன்கொடை தொடர்ந்து வரத் துவங்கி உள்ளதாகவும், அத்தனை பெரிய நன்கொடை ஒரு சில நாட்களிலேயே ஆலயத்துக்கு வரும் என எவருமே எதிர்பார்கவில்லை எனவும் மகிழ்ச்சியுடன் கூறி ஆசி தந்தார்.
அடுத்து ஆலய வேலைகள் முழு வேகத்தில் நடைபெற்றன. ஜெய்ப்பூரில் இருந்து கட்டிடப் பொருட்கள் பலவும் வந்தன. ஆலயம் முழுமையாக மாறுபட்ட காட்சியில் அமைந்தது. பஜனைகள் , தின ஆரத்தி போன்றவை நடைபெறத் துவங்கின. ராம நவமி மற்றும் விஜயதசமி போன்ற விழாக்களுக்கு வாடகைக்கு கூடம் எடுத்து செய்ய வேண்டிய அளவிற்கு பக்தர்கள் கூட்டம் வரத் துவங்கியது.
ஒரு முறை ஆலயத்துக்கு மின்சார விசிறி வேண்டும் என சாயி அம்மா கூற நான் அதை தந்தேன். ஏன் எனில் பாபாவின் அருளினால் என்னுடைய பொருளாதார வசதி நல்ல நிலையில் வளர்ந்து இருந்தது.
எனக்கு ஏற்பட்ட உடல் சம்மந்தமான சில பிரச்சனைகளினால் என்னால் அடிக்கடி ஆலயத்துக்கு செல்ல முடியவில்லை என்றாலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் அல்லது மதியம் இரண்டு மணி என நேரம் கிடைத்தபோது அங்கு சென்று வந்தேன். ஆனால் அம்மாவோ முடிந்தவரை மாதம் ஒரு முறையாவது அங்கு வந்துவிட்டுப் போகுமாறு ஆணை இட்டார்.
நான் எப்போது ஆலயத்துக்கு சென்றாலும் சாயி மா ' உன்னை இப்போது தான் நினைத்தேன்/ நேற்று உன்னை நினைத்துக் கொண்டு இருந்தேன்' என்று கூறுவார்கள். அது உண்மைதான் என்பதை ' ஹாய் கவிதா, பாட்டி இப்போதுதான் உன்னை நினைத்துக் கொண்டே இருந்தார்கள் ' என்று அங்குள்ளவர்கள் கூறுவார்கள். எனக்கு பெருமையாக இருக்கும். சாயி மாவின் அறையில் நாலு அடி உயர சாயிபாபா சிலை உள்ளது. பாபாவின் பல படங்கள் மாட்டப்பட்டு இருந்தன. ஒரு மூலையில் காஸ் அடுப்பு, ஒரு சாய்வு நாற்காலி மற்றும் ஒரு கட்டில். இத்தனையே அவளுடைய சாமான்கள். அங்கு அமர்ந்து உள்ள சிலர் குருச்சரித்திரம் படித்துக் கொண்டு இருப்பார்கள், சிலர் பாராயணம் செய்து கொண்டு இருப்பார்கள், சிலர் சாயி அம்மாவுக்கு உதவிக் கொண்டு இருப்பார்கள். அந்த காட்சி துவாரகாமாயியையே எனக்கு நினைவுப் படுத்தும்.
நான் ஆலயம் சென்றால் பாபாவைப் பார்த்தபடியே சற்று நேரம் அமர்ந்து இருப்பேன். அதன் பின் எழுந்து சென்று சாயி அம்மாவை தரிசனம் செய்துவிட்டு அவளிடம் ஆசிகளைக் கேட்பேன். ஆனால் என்னுடைய சொந்த பிரச்சனைகளை கேட்பதை தவிர்த்து வந்தேன். ஆனாலும் சாயி அம்மா என்னைப் பார்த்த உடனேயே நான் கூறாமலேயே எனக்கு உள்ள குறிப்பிட்ட பிரச்சனைப் பற்றி தானே கேட்பார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியான மனதுடன் செல்லும் தினங்களில் என்னிடம் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது இல்லை. அது எப்படி என எனக்குத் தெரியாது. நன் அம்மாவை தரிசனம் செய்துவிட்டுப் போகும்போது உதியை தருவார்கள் அல்லது ஸ்வாமி தீர்த்தம் தருவார்கள்.
சாயி அம்மா என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார்கள். அது போலவே மற்றவர்களிடமும் அவர்கள் அன்பு காட்டினார்கள் என்பதையும் கவனித்தேன். எந்த நிலையிலும் சாயி அம்மாவின் நடத்தை ஒரே மாதிரியாகவே இருந்தது. அவளுடைய குணத்தில்- கோபதாபங்களையோ அல்லது பிற மாறுதலையோ காண முடியவில்லை. நான் சாயி அம்மா கேட்டால் ஒழிய என்னுடைய பிரச்சனைகளைக் கூறி அவளுக்கு சங்கடம் தர விரும்பவில்லை. எனக்கு வயதான பின்னால் அங்கு சென்று அம்மாவுக்கு சேவை செய்ய மனதில் ஆசை இருந்தது. எந்த நிலையிலும் தன்னிடம் வந்தவர்களுக்கு முகம் கோணாமல் ஆசிர்வாதம் வழங்கி வந்தார்கள். ஆனால் விதி வேலை செய்தது. 2002 ஆம் ஆண்டு ராம நவமி அன்று அதுவரை எந்த விதமான உடல் உபாதையும் அற்ற சாயி அம்மாவுக்கு ஏற்பட்ட சிறு உபாதையினால் அன்றே அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் மறு நாள் அவளுடைய உடல் மட்டும் திரும்பி வந்தது. அம்மாவின் ஆன்மா பாபாவுடன் ராமநவமி அன்று கலந்து விட்டது.
குரு பூர்ணிமா
சாயி அம்மா உயிருடன் இருந்த போது ஆலயத்தில் குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெறும். அந்த விழாவை ஏதாவது சத்திரத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். அப்போது சிறு குழந்தைகள் அங்கு வந்து பாடல்களையும், பஜனைகளையும் பாடுவார்கள். சென்னையில் சாதாரணமாக அனைவர் வீட்டுக் குழந்தைகளும் ஒரு கட்டத்தில் கர்நாடக இசையை கற்பது பழக்கமாக உள்ளது. அந்த விழ்ழ்வின் முக்கிய அம்சம் அம்மாவிடம் இருந்து மற்றவர்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும் நாணயங்களே. அதை பாபாவின் உத்தரவின்பேரில் செய்வதாக சாயி அம்மா கூறுவார்கள். அந்த விழாவில் பக்தர்கள் சாயி அம்மாவின் துணியினால் கண்ணைக் கட்டி விடுவார்கள். அவை எதிரில் வைக்கப்பட்டு உள்ள ஒரு சல்லடையில் பல நாணயங்களைக் கொட்டி வைத்து இருப்பார்கள். பக்தர்கள் வரிசையாக நின்று சாயி அம்மாவை வணங்குவார்கள். அம்மா அந்த சல்லடையில் இருந்து கையில் கிடைத்த நாணயத்தை எடுத்து அவர்களுக்கு தருவார்கள். சில பக்தர்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாணயங்கள் கூட கிடைத்தது உண்டு. எனக்கும் அப்படி கிடைத்தது உண்டு.
அப்படி எனக்கும் கிடைத்த நாணயங்களை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்து அவற்றை பூஜை அறையில் வைத்து வணங்கி வருகிறேன். நான் ஏதாவது ஒரு காரணமாக குருபூஜை தினத்தன்று போகாமல் இருந்து விட்டால் மறு நாள் செல்லும் எனக்கு தான் தனியாக எடுத்து வைத்து இருந்த நாணயத்தை சாயி அம்மா தருவார்கள்.
2001 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன் ஒரு முறை கிரகண தினத்தன்று குருபூர்ணிமா வந்தது. ஆகவே அன்று என்னால் ஆலயத்திற்கு செல்ல முடியவில்லை. மறுநாள் நான் சென்று சாயி அம்மாவிடம் அருள் பிரசாதமாக நாணயம் கேட்டபோது அந்த வருட குருபூர்ணிமாவில் நாணயத்தை யாருக்கும் தர வேண்டாம் என பாபா கூறி இருந்ததாகத் தெரிவித்தார். நான் மன வருத்தத்துடன் திரும்பி வந்தேன்.
அதனால்தானோ என்னவோ 2002 ஆம் ஆண்டு ராம நவமி அன்றே சாயி அம்மா பாபாவுடன் கலந்து விட்டதினால் குருபூர்ணிமாவுக்கு சாயி அம்மாவின் தரிசனம் கிடைக்காமல் போய்விட்டது.
1997 ஆம் ஆண்டு நான் வேறு வீட்டிற்குப் போன பின்னரும் , அந்த வீடு ஆலயத்தில் இருந்து வெகு தொலைவாக இருந்தபோதிலும் நான் தவறாமல் இந்த ஆலயத்துக்கு வந்து சென்றேன். அது போல வெளி ஊருக்கு நான் மாற்றலாகிப் போனபோதும் ஒரு முறை அல்லது இருமுறை ஆலயத்துக்கு வந்து சாயி அம்மாவின் தரிசனத்தைப் பெற்றுச் சென்றேன்.
1997 ஆம் ஆண்டு நான் வேறு வீட்டிற்குப் போன பின்னரும் , அந்த வீடு ஆலயத்தில் இருந்து வெகு தொலைவாக இருந்தபோதிலும் நான் தவறாமல் இந்த ஆலயத்துக்கு வந்து சென்றேன். அது போல வெளி ஊருக்கு நான் மாற்றலாகிப் போனபோதும் ஒரு முறை அல்லது இருமுறை ஆலயத்துக்கு வந்து சாயி அம்மாவின் தரிசனத்தைப் பெற்றுச் சென்றேன்.
நான் பெரும்பாலும் சாயி அம்மாவிடம் ஆன்மீக அல்லது தத்துவங்களைப் பற்றிய கேள்விகளை மற்றும் வேறு சில பாபாக்களைப் பற்றிய கேள்விகளை மட்டுமே கேட்பேன். அவற்றுக்கு சாயி அம்மா அவர்கள் சற்றும் யோசனை செய்யாமல், சற்றும் தயங்காமல் உடனடியாக கேள்விக்கு தக்க பதிலை தருவார்கள். அவரால் எப்படி அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக சரியான பதில்களை தர முடிந்தது என்பது எனக்கு விளங்கவில்லை. அவர் மூலம் சாயி பாபாதான் அவற்றை கூறுகிறாரோ என எண்ணத் தோன்றும்.
சிவசங்கரி தியாகராஜன் எழுதிய இந்த ஆலயத்தின் வரலாறு.
இந்த ஆலயத்தை நிறுவியவர் ஸ்ரீமதி விசாலாக்ஷி அம்மாள் என்பவர். அவர் சாயி பாபாவுடன் பேசும் சக்தி பெற்றவர். ஆரம்பம் முதலேயே அவர் சீரடி சாயி பாபாவின் பக்தையாக இருந்தார். ஒரு முறை அவரிடம் பேசிக்கொண்டு இருந்த பாபா அவரை தனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுமாறு கூறியதினால் 1983 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை சென்னையில் மேற்கு மாம்பலம் என்ற இடத்தில் கட்டினார். முதலில் சாயி பாபாவின் சிறிய சிலை அங்கு நிறுவிய குடுசை போன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்தது. மெல்ல மெல்ல பக்தர்கள் வரத் துவங்கினார்கள் சாயி அம்மாவிடம் வந்து தமது பிரச்சனைகளைக் கூறி பரிகாரம் கேட்டுச் செல்லத் துவங்கினார்கள். அவர்களிடம் வந்து கேட்பவர்களுக்காக சாயி அம்மாவே சாயி பாபாவிடம் பிரார்த்தனைகள் செய்வார். காரியம் வெற்றி அடையும். சாயி அம்மாவினால் வெகு காலம் குழந்தை பிறக்காமல் இருந்த பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்ற சம்பவங்கள் ஏராளமாக உண்டு.ஆனால் சாயி அம்மா பாபாவுடன் கலந்து விட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் சாயி பாபாவின் சிறிய சிலைக்கு பதிலாக அவருடைய பெரிய சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. தற்போது அந்த சிறிய சிலையை உற்சவ மூர்த்தியாக ஆக்கி விட்டார்கள்.
ஆலயத்துக்கு உள்ளே சென்றால் துளசி மாடம் உள்ளது. அதைத் தாண்டி உள்ளே உள்ள பெரிய கூடத்தில் நுழைந்தால் சாயி பாபாவின் பெரிய சிலையைக் காணலாம். அதன் வலதுபுறத்தில் சாயி மா எனப்படும் விசாலாட்ஷி அம்மாளின் சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. அந்த கூடத்தில் நுழைந்து இடப்புறமாகச் சென்றால் துணி எரிந்து கொண்டு உள்ள அறையை காணலாம். வலது பக்கமாகச் சென்று அங்குள்ள படி மூலம் மேலே ஏறிச்சென்றால் உற்சவ மூர்த்தியைக் காணலாம். கூடத்தின் இன்னொரு மூலையில் உள்ள மாடிப்படியில் ஏறிச் சென்றால் அங்கு ஹனுமார் மற்றும் விநாயகர் சிலைகளைக் காணலாம்.
அனைவருக்கும் நன்றிசிவசங்கரி தியாகராஜன்
மூல விக்ரகம்
ஆலயத்தின் வெளியில்
கும்பாபிஷேகத்தன்று எடுத்தப் படம்
ஆலய கோபுரம்
ஆசனத்தில் பாபா
கும்பாபிஷேகத்தன்றுஜெயா ஷங்கர் தெரு
ஆலய பண்டிதர்கள்
மற்ற பண்டிதர்கள்
ஷேஜ் ஆரத்திக்குப் பிறகு பாபாவின் உருவம்
ஹனுமார் ( ஆஞ்சநேயர்)
விநாயகர்
சாயி அம்மாவின் புகைப் படம் கிடைக்கவில்லை என்பதினால் எதோ ஒரு விழாவில் ஆலயத்தில் தந்த ஒரு படத்தை ஸ்கேன் செய்து எடுக்கப்பட்ட செய்யப்பட்டது.
ஸ்ரீமதி விசாலாக்ஷி அம்மாள்
West Mambalam Shirdi Sai Baba Temple .
மேற்கு மாம்பல சாயி பாபா ஆலயம்
Shri Shirdi Sai Seva Samaj
ஸ்ரீ சீரடி சாயி சேவா சமாஜ்
No 21, Jaishankar Street,
21 , ஜெய்ஷங்கர் சாலை
West Mambalam,
மேற்கு மாம்பலம்
Chennai – 600 033.
சென்னை -600 033
ஆலயத்துக்கு அருகில் உள்ள இடம்: அயோத்தியா மண்டபம்
தொகுப்பு சகோதரி சிவசங்கரி மற்றும் சகோதரர் ஸ்ரீதர்
( Translated into Tamil by Santhipriya)
Loading
1 comments:
நல்ல தகவல் மிக்க நன்றி
Post a Comment