Monday, February 13, 2012

Sai Vrat Katha In Bengali

பெங்காலியில் சாயி விரத கதை

சாயி ராம் !
அனைவருக்கும் சாயி தின நல்வாழ்த்துக்கள்.
நமக்கும் சாயி பாபாக்கும் இடையே இன்னொரு பாலமாக அமைவதே 9 வார சாயி விரதமாகும். இந்த விரதத்தை சரியாக கடைபிடித்து முடித்தவர்கள் பாபாவின் ஆசிர்வாதத்தை உணர்ந்துள்ளனர்.அனைத்து பக்தர்களின் அனுபவங்களும் உடனுக்குடன் இந்த தளத்தின் மூலம் அறியப்படுகிறோம்.விரத கதைகளின் பலன் எங்கும் பரவுவதால் எல்லா மொழிகளிலும் அது மொழிப்பெயர்க்கப்படுகிறது. அந்த விரத கதையை தேடுவதில் எனக்கு எந்த சிரமும் ஏற்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு பக்தராக முன்வந்து அவர் அவர்களது மொழியில் கதையை மொழிப் பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் சாயி விரத கதையானது ஹிந்தி, ஆங்கிலம், தெலுகு, தமிழ், மராத்தி மற்றும் இப்பொழுது பெங்காலியிலும் உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன் சாயி பக்தையான சஞ்சுக்தா சாட்டர்ஜி, பெங்காலி மக்களுக்கு பயன்படும் வகையிலான பெங்காலி சாயி விரத கதையை மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பினார்கள். கடவுள் நினைத்தாலன்றி எதுவுமே நடக்காது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.சாயி சரித்திர இரண்டாவது பகுதியில் உரைக்கப்பட்டது என்னவென்றால்,சாதுக்கள் அவர் வரலாற்றை வெளியிட நினைக்கும் போது எழுதுபவர்கள் வெறும் கருவிதான்.அவ்வாறு எழுதுபவர்களை சாதுக்கள் ஆசிர்வதிக்கின்றனர் என்பதாகும். எனவே சஞ்சுக்தா அவர்கள் சாயி விரத கதையை பெங்காலியில் எழுதுவதற்கு பாபாவின் அருள் பெற்றிருக்க வேண்டும்.அப்படி நான் எழுதினால் அது எனக்கு பெரும் புண்ணியம், நான் பாபாவின் கருவியாகவே இருப்பேன் என நினைத்தார்.
கீழே, எவ்வாறு சஞ்சுக்தா அவர்களை பாபா எழுத வைத்தார் என கொடுக்கப்பட்டுள்ளது.இந்த அனுபவத்திற்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பிலிருந்து, பக்தர்கள் பெங்காலி சாயி கதையை எடுத்துக் கொள்ளலாம்.அழகான உரையுடன் PDF ஆகா மாற்றிக் கொடுத்த திரு கௌஷிகன் அவர்களுக்கு மிக்க நன்றி.
ஜெய் சாய் ராம்
மனிஷா

ஓம் சாயி ராம் சகோதரி மனிஷா அவர்களே
பாபா முடிக்க நினைக்கும் பணிகளை பாபா அவரது பக்தர்கள் மூலமாகவே முடித்துக் கொள்வார்.அதில் ஒருவர் தான் நான். நான் எந்த அளவு ஆசிர்வதிக்கப்பட்டவள் ஆகினேன் பாபா? அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் பாபாவை மிகவும் நேசிக்கிறேன்.அவரே எனக்கு எல்லாம்.அவர் தான் என் குடும்பம்.
மும்பையில் பிறந்து , திருமணமாகி கொல்கத்தாவிற்கு வந்தேன். வந்ததும் முதல் வேலையாக பாபா கோவில் எங்கே இருக்கிறது என தேடினேன். அவரே எனக்கு வழி கூறினார். கோவில் எனது வீட்டின் பக்கமே இருந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே,அதிசியத்தக்க வகையில் பாபா என் வீட்டிற்கு 3.5'' மூர்த்தியாக வந்தார்.அந்த படத்தை இங்கே இணைத்துள்ளேன்.
நான் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்ததும், ஒரு பக்தர் மூலம் எனக்கு சாயி விரத கதை புத்தகம் கிடைத்தது.அதில் பக்தர்கள் விரதத்தை கடைபிடித்த கதையும் அதனால் அடைந்த பயனையும் படித்தேன். மேலும் இங்கே உள்ள சில சாயி பக்தர்களின் அனுபவத்தையும் கேட்டேன்.ஆனால் யாருமே சாயி விரத புத்தகத்தை பெங்காலியில் கொடுக்கவில்லை.அனைவரும் விரதத்தை நல்ல விதமாக முடிக்க மட்டுமே எண்ணி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்தனர்.விரத புத்தகத்தை பெறுபவர்களுக்கு ஆங்கிலமோ அல்லது ஹிந்தியோ தெரியுமா?அதனால் அவர்கள் விரதத்தை செய்ய முடியுமா ? என்பதை பற்றி யாரும் யோசிக்கவில்லை .திடிரென எனது மனதில் பாபா எண்ண வைத்தது பெங்காலியில் எழுதி தர வேண்டும் என்பது தான்.ஆனால் அதை உடனே செய்ய முடியவில்லை.
பாபா எப்போது நினைக்கிறாரோ அப்போது நம்மை அதற்கான வேலையை செய்ய செய்வார்.எப்போது ஆரம்பித்தேன் என நினைவில்லை.ஆனால் ஒரே நாளில் விரத புத்தகத்தை பெங்காலியில் எழுதி முடித்தேன்.அதை நம் மனிஷா அவர்களுக்கு அனுப்பினேன்.அவர் அதை அனைத்து பக்தர்களுக்கும் ஒரு பெரும் மதிப்புள்ள பரிசாக நினைத்து வழங்கினார்.எனது மொழிபெயர்ப்பை அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினேன்.எனக்கு எழுத மிகவும் பிடிக்கும்.குழந்தை பிறப்புக்கு பின் ஒரு வருடம் வீட்டிலேயே குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு வருடம் கழித்து வேலை தேட நினைத்தும் வேலை ஏதும் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக நல்ல ஒரு வேலையை பாபா கொடுத்துள்ளார். அது தான் கடவுளை பற்றி எழுதுவது.எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும் என்பதால், எழுத்து சம்மந்தப்பட்ட வேலையை தேடினேன்.ஆனால் பாபா எழுத வேண்டுமெனில் என்னை பற்றி எழுது என தூண்டினார்.அதன் வெளிப்பாடு தான் இந்த விரத புத்தகம்.எனவே எனது சிறுவயதில் இருந்து பாபா புரிந்த அருள் செயல்களை ஒரு புத்தகமாக எழுத நினைக்கிறேன். நான் எழுதுவேன்.பாபா அவருக்காக என்னை எழுத வைப்பார்.
புனிதமான சேவைகளை செய்யும் மனிஷா அவர்களையும், கௌஷிகன் அவர்களையும் பாபா ஆசிர்வதிப்பார்.பெங்காலி மக்களுக்காக அழகான மின் புத்தகத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
நன்றி சாயி பாபா
நன்றி மனிஷா அவர்களே
நன்றி கௌஷிகன் அவர்களே
நன்றி சாயி பக்தர்களே. நாம் அனைவரும் சாயி பக்தர்கள் எனும் நூலால் இருக்க கட்டப்பட்டுள்ளோம்.
ஓம் சாயி ராம்
பாபா அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றட்டும்.
சஞ்சுக்தா
பெங்காலியின் விரதக் கதையை படிக்க கீழே உள்ள பெட்டியில் கிளிக் செய்யவும்.

Image and video hosting by TinyPic
(Translated into Tamil by Ramya Kartick )
 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.