Friday, February 10, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 29

சாய் பாபா அனுபவம் -பகுதி - 29


அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள்!
சாய் நாதரை கண்களால் காண முடியவில்லை எனினும்,சாய் பக்தர்கள் பல
அனுபவங்களை உணருகிறார்கள்.பக்தர்கள் மேல் சாய் பகவான் வைத்திருக்கும் அன்பிற்கும், அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சாட்சியாகவும் விளங்குவது தான் இந்த அனுபவங்கள்.
பக்தர்கள் சாய் நாதரின் அன்பையும் , ஆசிர்வாதத்தையும் பெற விரும்பினால், அவரிடம் முழுவதுமாக சரணாகதி அடை வது மட்டுமின்றி அவர் பெயரையே தியானிக்க வேண்டும்.இவ்வாறு செய்பவர்கள் கண்டிப்பாக பாபா அவர்களுடன் இருப்பதை உணருவார்கள். நான் கூ றிய இந்த வரிகளுக்கு சான்றாக கிழே சாய் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறேன்.
மனிஷா 


சாய் நாதரின் ஆசிர்வாதம்
ஸ்ரீ சாய் சரணம்
அதிக அளவில் சாய் பாபா அவர் பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்.என் சிறிய ஆனால் விசேஷமான அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.இந்த தளத்தின் முலம் பாபாவை பற்றிய பக்தியை பரவ செய்யும் சகோதரி மனிஷா அவர்களுக்கு நன்றி.யாருமே உதவ முடியாத சிக்கலான சுழ்நிலையில் பாபாவின் ஆசிர்வாதம் மட்டுமே நம்மை காக்க முன் வரும்.
இணைக்கப்பட்டுள்ள சாய் படத்தை தளத்தில் சேர்க்கவும்.நன்றி.
எங்களிடம் இருந்த அரசு நியாயவிலை கடை அட்டையை புதுப்பிக்க வேண்டிய சுழலில் இருந்தேன். அந்த கடையின் காலை நேரம், என்றும் அதிக கூட்டத்துடன் இருக்கும். ஆனால் புதுப்பித்து கொடுக்கும் பணியை காலை நேரத்தில் தான் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நடத்தி முடிக்க இருந்தார்கள். என் சார்பில் அந்த வேலையை முடிக்க வேறு யாரையும் என் வீட்டில் இருந்து அனுப்ப முடியாத நிலை.
ஒரு வியாழ கிழமை காலை சிறிது நேரத்திலேயே கடைக்கு சென்று வேலைகளை முடிக்க எண்ணி கிளம்பி சென்றேன். ஆனால் அன்று எனக்கு முன்பாக சுமார் 50 பேர்கள் நின்று இருந்தார்கள்.எனவே நான் பாபாவை மனதில் நினைத்துக் கொண்டே வேண்ட ஆரம்பித்தேன்.இந்த வரிசையில் நின்றால் என்னால் எனது அலுவலகத்திற்கு மதியம் தான் செல்ல முடியும். தேவையில்லாமல் பாதி நாள் விடுமுறை எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அவ்வாறு எடுப்பதாக இருந்தால் அது மருத்துவ தேவை அல்லது மிக முக்கிய வேலை என்றால் எடுக்கலாம். ஆனால் நான் திரும்பி செல்லவும் விரும்பவில்லை. ஏனெனில் இன்று வியாழக் கிழமை.வேலைகள் தடையின்றி பாபாவின் அருளால் நடக்கும் நாள்.நீங்கள் தான் உதவ வேண்டும் என கூறினேன்.
எதிர்பாராதவிதமாக பாபா என் சுழலை மாற்றினார். நான் சில சந்தேகங்கள் கேட்பதற்காக கடையின் உள்ளே சென்றேன். அங்கே இருவர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.ஒருவர் நாம் கேட்கும் சந்தேகங்களை தீர்த்து வைப்பவர்.மற்றொருவர் வரிசையில் இருந்து வருபவர்களின் அட்டையை சரி பார்த்து அட்டவணையில் எழுதுபவர்.சாதாரணாமாக இந்த கடையில் இருப்பவர்கள் சற்று கறாராகத் தான் இருப்பார்கள்.சந்தேகங்களை தீர்த்து வைக்கும் நபர் மிகவும் கோபக்காரராக இருந்தார். வரிசையில் இருந்து விலகுபவர்களை அதட்டிக் கொண்டும், கேள்விக் கேட்பவர்களுக்கு கடுமையான பதில்களையும் தந்துக் கொண்டிருந்தார்.பொறுமையுடன் வரிசை வருவதையே அவர் விரும்பினார்.
நான் அவரிடம் சில தேவையில்லாத சந்தேகங்களை கேட்டேன் ;). அவர் பதில் கூறிய மறுநிமிடம் என்னை வரிசையில் வர சொன்னார். பின் பொறுமையாகவும், மரியாதையாகவும் அடுத்ததாக என் அட்டையை பார்க்கும்படி என் நிலைமையைக் கூறி கேட்டேன். இல்லையெனில் எனக்கு அரை நாள் விடுப்பு ஆவதுடன் , தாமதமாக செல்வதற்கு முதலாளியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்றேன்.
இந்த இடத்தில் பாபா இந்த நபரை ஆட்கொண்டிருந்திருக்கிறார். என் வேண்டுகோளை கேட்டதும், அந்த நபர் எந்த கோபமும் அடையவில்லை. மாறாக புன்முறுவலுடன் என்னை காத்திருக்க சொல்லி, அருகில் இருந்தவரிடம் என் அட்டையை பார்க்க சொன்னார். எனக்கு பாபாவை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியும், ஆச்சிரியமும் ஏற்பட்டது. எதிர்பார்க்காத வகையில் 10 நிமிடத்தில் என் வேலையை முடித்துவிட்டு அலுவலகம் சென்றேன். அன்று வியாழன் ஆதலால் மாலை கோவிலுக்கு சென்று தக்க சமயத்தில் உதவியதற்காக பாபாக்கு இனிப்புக்களை வழங்கினேன்.
பாபா நமக்கு உதவ நினைத்துவிட்டால், அந்த நொடியில் சூழ்நிலைகளை அவர் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார். அதை நாம் அனுபவப் பூர்வமாக நன்கு உணரலாம்.ஆனால் எந்த சூழலிலும் பாபாவை நாம் மறக்கக் கூடாது.பாபா அவரின் பக்தர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவுவார்.
பாபாவிற்கு தலை வணங்குகிறேன் எல்லாருக்கும் அமைதி நிலவட்டும்.

பாபா கடவுள் விஷ்ணுவாக காட்சியளித்தார் 
உங்களின் உயரிய சேவைக்கு நன்றி மனிஷா அவர்களே.நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.சாய் நாதர் உங்களின் வாழ்விற்கு தேவையான செல்வம்,ஆரோக்கியம் மற்றும் சந்தோசங்களை வழங்கட்டும்.
எனது சிறிய சாய் அனுபவத்தை கொடுத்திருக்கிறேன்.என்னை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புள்ளங்கள் அனைவருக்கும் பாபா தன் ஆசிகளை வழங்கட்டும். நான் போன முறை இந்தியா சென்று வந்த போது பல சாய் அனுபவங்களை உணர்ந்தேன். அவற்றை எல்லாம் மிக அதிகமான வரிகளுடன் விளக்க வேண்டும் என்பதால் சில சிறிய அனுபவங்களை மட்டும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
நான் பல வருடங்களாக பாபாவின் பக்தராக இருக்கின்றேன். ஆனால் சாய் சரித்திரத்தை படித்த பின், இந்த இரண்டு வருடங்களாக அவரது தீவிர பக்தன் ஆகிவிட்டேன். அமெரிக்காவிற்கு வந்த பிறகு சில காரணங்களால் நான் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. சாய் நாதரை வழிபடுவதே மனதிற்கு ஆறுதலை கொடுத்தது.
நான் சாய் சரித்திரத்தை படித்து, சாய் பக்தர்கள் மேல் வைத்திருந்த அன்பை பற்றி உணர்ந்தேன். மிண்டும் ஷீரடி செல்ல நினைத்தேன். பூனேவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி ஷீரடிக்கு சென்றிருக்கிறேன்.ஆனால் ஒருமுறைக் கூட சமாதியை தொட்டத்தில்லை.வார இறுதியில் நான் சென்று வந்ததால் சமாதி கதவுகள் மூடியே இருக்கும். மீ ண்டும் ஷீரடிக்கு வரும் வாய்ப்பை தருமாறு பாபாவை வேண்டினேன்.
நம் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் வரை, நமக்கு விருப்பமான உணவையோ ,பானத்தையோ சாய்க்காக உண்ணாது இருந்தால் பாபா நம் விருப்பத்தை நிறைவேற்றுவார் என ஒரு சாய் பக்தரின் அனுபவத்தை படித்தேன். நான் அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் கொண்டவன்.பாபா ஷீரடிக்கு அழைக்கும் வரை காபி குடிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன்.பாபாவின் அருளால் இந்திய பயணம் உறுதியானது.
நான் மே - ஜூன் மாதங்களில் ஷீரடிக்கு என் பெற்றோர்களுடன் வந்து சேர்ந்தேன். ஆலயத்திலும், துவாரகாமியிலும் பாபாவின் தரிசனத்தை கண்டேன்.நான் பாபாவின் சமாதியை தொட வேண்டும் என்பதால் நான் ஷீரடியில் வார நாட்களில் தங்க நினைத்தேன். அது விடுமுறை கால கூட்டம் என்பதால் சமாதி கதவுகள் மூடப்பட்டே இருந்தன.நான் இரண்டு நாட்கள் சேஜ் ஆரத்தியில் கலந்து கொண்டும் சமாதியை தொட முடியாமல் போனது.மிகவும் வருத்ததுடன் ஒரு நாள் சேஜ் ஆரத்திக்கு முன் பாபாவை வணங்கி சமாதியை தொட எத்தனிக்கும் போது சமாதி கதவுகள் முடப்பட்டன. எனவே நான் அடுத்த வரிசைக்கு மாறி நின்று சேஜ் ஆரத்திக்கு தயாரானேன். அப்போது அங்கே ஒளிபரப்பிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் என் பின்னால் நின்றுக் கொண்டிருந்தவர்கள் சமாதியை தொட்டு வணங்குவதை கண்டேன். ஆனால் நான் வரிசை மாறி நின்றதால், எத்தனை முறை முயன்றும் என்னால சமாதியை தொட முடியாமல் போனதை எண்ணி மனதிற்குள் அழுதேன்.
எனது கர்ம வினையையும், பாபாவின் பாதத்தை தொடுமளவு எனக்கு பக்தி இல்லாததை எண்ணியும் வருந்தினேன்.அந்த நல்ல நேரம் இன்னும் பாபாவால் எனக்கு அருளப்படவில்லை என என் மனதை சாந்தப்படுத்திக் கொண்டேன்.ஆனாலும் சமாதிக்கு வெளியே பாபா நாய் ஒன்றின் ரூபத்தில் எனக்கு ஆசி வழங்கியது மனதிற்கு மகிழ்ச்சி தந்தது. அந்த அனுபவத்தை பாபா அருளும் போது பகிர்ந்துக் கொள்கிறேன்.
ஜூலை மாதம் மீண்டும் அமேரிக்கா வந்து சேர்ந்தேன். என் மனதிற்குள் சென்றுக் கொண்டிருந்த கேள்வியானது, இந்த பிறவியில் நான் பாபாவின் பாதத்தை தொட முடியுமா என்பதாகும்.போன ஜென்மத்தில் நான் செய்த சில புண்ணியங்கள் தான் என்னை பாபா பக்தனாக இன்று மாற்றியது. எனவே பாதத்தை தொட முடியாமல் போக காரணம் கர்ம வினையே. இதில் ஆச்சிர்யபடுவதில் ஒன்றுமில்லை என நினைத்தேன்.
சில வாரங்களுக்கு பின், ஒரு நாள் விடியற்காலை நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் புதன் கிழமை காலை ஷீரடிக்கு சென்றிருந்தேன்.அன்று அதிகமான ஆட்கள் இல்லை. சமாதியின் அருகே நான் நின்றுக் கொண்டிருந்தேன்.என்னால் பாபாவின் பாதங்களையும், சமாதியையும் ஆசை தீர முழுமையாக தொட முடிந்தது. மேலும் நான் பாபாவின் சமாதியில் உள்ள நான்கு முனைகளையும் தெளிவாக கண்டேன். அது பார்ப்பதற்கு விஷ்ணுவின் ஷங்கா,சக்ரா,கதா மற்றும் பத்மா போல இருந்தது. நான் அதை நன்றாக நினைவுபடுத்திக் கொண்டிருக்கையில் கனவு முடிந்தது.
நான் மிகவும் மகிழ்ச்சியுடன் எனது கர்ம வினையை எண்ணிப் பார்த்தேன். சாய் சரித்திரத்திலும், பாபா பக்தர்களின் அனுபவத்திலும் உரைக்கப்பட்டபடி, பாபா கனவில் வருவது நேரிலேயே காட்சியளித்ததற்கு சமம் என உணர்ந்தேன்.நான் அடுத்த முறை ஷீரடிக்கு செல்லும் போது பாபா, அவர் சமாதியை தொட எனக்கு நிச்சியம் அருள் புரிவார் என்ற நம்பிக்கை மனதில் பிறந்தது.
நன்றி 
ஓம் சாய் ராமா 


 பாபா எனக்கு புது நம்பிக்கையை கொடுத்தார் 
ஓம் சாய் நமோ நமஹா
எனது வாழ்த்துக்களை இதயபூர்வமாக தெரிவித்து கொண்டு எனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறேன்
நான் அமெரிக்காவில் 7 வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.ஆனாலும் எனக்கு சரியான வேலை இல்லாமல் வருத்தத்தில் இருந்தேன். எனது குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகும் போது படிப்பிற்காக கடன் வாங்கி இருந்தேன்.நான் எனது முது நிலை படிப்பை முடித்த வேலையில் உலக பொருளாதாரம் மிகவும் பின் தங்கி இருந்ததால் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது.
திடிரென எனக்கு பாபாவின் மீது பக்தி அதிகமாகி அவரை இரவு பகல் என வணங்க ஆரம்பித்தேன்.நம்பிக்கை இழந்து இருந்த வேளையில் பாபாவின் அருளால் எனது பணிக்காக அனுமதி காலம் முடியும் முன்னரே வேலை கிடைத்தது.
பின் எனது வேலையில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. என் படிப்பிற்கு சம்மந்தமில்லாத வேலை என்பதால் சற்று கடினமாக இருந்தது.இருந்தாலும் பொறுமையாக வேலையை செய்துக் கொண்டிருந்தேன்.மனதில் சோர்வு அதிகமானது.எனதுகுடும்பத்தினரிடம் இருந்து மிக தொலைவில் இருப்பதாலும் , அடிக்கடி பயணம் செய்யும் வேலையில் என் கணவர் இருந்ததாலும் எனக்கு வாழ்க்கை நடத்துவதே சிரமாக இருந்தது.இங்கே எனக்கு நண்பர்கள் இல்லை. நான் தனியாக இருக்க வேண்டிய சூழல் .பாபா என்னை அவர் தோலில் தாங்கி ஆசிர்வதிப்பார் என நம்பினேன்.சாய் சரித்திரத்தை படிக்க ஆரம்பித்தவுடன் சொல்ல முடியாத அமைதி எனக்கு கிடைத்தது.
பின் எனது H1B விசாவை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது பணியிடத்தில் வேறு நாட்டவர்கள் இல்லாத காரணத்தால் எனது அலுவலகம் விசாவை எடுத்து தர மறுத்தது. நான் பேசியும் பலனில்லாமல் போனது.எனவே விசாவை பெற்று தரும் வேறு ஒரு குழுவிடம் என் வேலையை முடிக்க நினைத்தேன். அவர்கள் H1B விசாவிற்கான தேவை முடிந்துவிட்டது.ஆகவே எனக்கு விசா கிடைப்பது கடினம் என்றனர். இருந்தாலும் என் உள்மனதில் ஒரு குரல், விசாவை பற்றி கவலை படாதே,அதை என்னிடம் விட்டுவிடு.எதை பற்றியும் யோசிக்காதே என.
அனாலும் எனக்கு கவலை வாட்டியது. விசா 100 சதவிகிதம் கிடைக்காது என எண்ணினேன். இருந்தாலும் பாபா எது செய்தாலும் அது நல்லதிற்கே என நினைத்தேன்.3 நாட்கள் கழித்து வக்கீல் என்னை அழைத்து என் விசாவில் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறினார். இது போன்று இதன் முன் நடந்தில்லை என எல்லாரும் கூறினார்கள்.எனக்கு அதிசியமாக இருந்தது. அதுவும் விசா 7 நாட்களிலேயே கிடைத்துவிட்டது .
வார்த்தைகளால் எனது உணர்வுகளை விவரிக்க முடியவில்லை. எத்தனை பிரச்சனை என்னிடம் இருந்தாலும் என்னை பாபா ஏற்றுக் கொண்டார். யாரும் என்னை நம்பாத போது பாபா எனக்காக இருந்தார். இன்னும் எனது பிரச்சனை முடியவில்லை.இந்த அலுவலகத்தில் எனக்கென ஒரு இடத்தை பெற நான் அதிகமாக உழைக்க வேண்டும்.என்ன நடந்தாலும் பாபா என்னுடன் இருந்து அருள் புரிவார் என உறுதியாக நம்புகிறேன்..பாபா இருக்கும் போது நான் எதற்காகவும் பயப்படவில்லை 
பாபாவிற்கு தலை வணங்குகிறேன்.
அமைதி நிலவட்டும்.



விளையாட்டுதனமாக நான் பாபாவை சோதித்தேன் 
அனைவருக்கும் நல்தின வாழ்த்துக்கள்.இன்று எனக்கு உடல்நலம் சரியில்லாததால்,பாபாவை மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளை வழுங்குமாறு வேண்டினேன்.எப்போழுதும் போல இன்று பணிக்கு சென்றேன்.எனது பெற்றோர்கள் என்னை மாலை 5 (மலேசியன் நேரம்) மணிக்கு அலுவலகம் வந்து அழைத்து சென்றார்கள்.
சற்று உடல் நலம் சரியில்லாத போதும், எனது பெற்றோர்கள் ஹைபர் மார்கெட் எனும் கடைக்கு சில பொருட்களை வாங்க ,செல்ல கேட்கும் போது சம்மதித்தேன். கார் சென்றுக் கொண்டிருக்கையில் பிரிமியர் ஹோட்டல் எனும் விடுதியை கடக்கும் போது என்னை அறியாமல் பாபாவை பற்றி நினைத்தேன். மேலும் பாபாவிடம் இன்று உங்களை காண வேண்டும், அதற்கான அறிகுறியை கொடுங்கள் எனக் கேட்டேன். பின் பாபாவை சோதனை செய்ததற்கு மன்னிப்பு கேட்டேன். அவர் அற்புதமானவர் அவரை சோதிக்க கூடாது என உணர்ந்தேன்.ஏனோ பொழுது போகாமல் இருந்ததால் அவ்வாறு கேட்டு விட்டேன்.
பின் நானும், எனது தாயாரும் மார்க்கெட்டுக்கு சென்றதும், எனது தாயார் கழிவறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி என்னை தனியாக விட்டு செல்ல நினைத்தார். என்றும் அவர் என்னை தனியாக விட்டதில்லை. இன்று அவர் அப்படி செய்தது வித்தியாசமாக தான் இருந்தது.நான் அவரிடம் சரி எனக் கூறி அருகில் இருந்த புத்தகம் மற்றும் இதர பொருட்கள் கிடைக்கும் கடையில் காத்திருப்பதாக கூறினேன்.
கடையில் நான் சாதாரணமாக பொருட்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதோ ஒன்று என்னை வாழ்த்து அட்டைகள் இருக்கும் பகுதிக்கு இழுத்தது.அந்த பிரிவில் யாரும் இல்லை.ஒரு உயரமான மனிதர் என்னை பின் தொடர்வதாக உணர்ந்தேன்.திடிரென அவர் என் அருகில் வந்து உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா எனக் கேட்டார். அதிர்ச்சியில் நான் உறைந்தாலும் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவர் பார்ப்பதற்கு அப்படியே பாபாவை போலவே இருந்தார்.கருணையான முகம், வெள்ளை முடி,அடர்த்தியாக வெள்ளை தாடி, வார்த்தைகாளால் சொல்ல முடியாத எதோ ஒன்று அவர் கண்களில் என, பார்ப்பதற்கு அவர் உடல் வாகும் பாபாவை போலவே இருந்தது.
அவர் முதலில் பேசியது தெளிவாக புரியவில்லை. அவர் சீன புது வருட வாழ்த்து அட்டையை வாங்க நினைப்பதாக கூறினார். பின் எனக்கு தபால் அட்டை வேண்டும் என்றார். சிலருக்கு மட்டும் வாழ்த்து அட்டை கொடுத்தால் மற்றவர் கோபித்துக் கொள்வார்கள் என்றார். முடிவில் அவர் என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை.நான் அவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டேன். அவர் பிரான்சிலிருந்து வருவதாக கூறினார். இதில் புதுமை என்வென்றால சமீபத்தில் பிரான்ஸ் நாடு சம்மந்தப்பட்ட பல பொருட்கள வாங்கினேன்.போன செப்டம்பரில் இருந்து இங்கே தான் இருக்கிறேன். நாளை கிளம்பி விடுவேன் எனக் கூறினார்.
அவர் தபால் அட்டை எங்கு கிடைக்கும் என கேட்டதற்கு நான் வேறு இடத்திற்கு செல்லும் வழியை கூறினேன்.எப்போதும் அவர் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பதாக கூறினார்.அவர் எல்லா இடத்திலும் இருப்பதாக கூறினார். நான் ஒரு இடத்தில் தங்குவதில்லை எனவும் கூறினார்.மொத்தத்தில் அவர் எந்த பொருளையும் வாங்க நினைத்து என்னிடம் வந்து பேசவில்லை ஏனெனில் அங்கு தேவையான அனைத்து அட்டைகளும் இருந்தது..மேலும் அவர் பிரிமியர் ஹோட்டலில் தங்கி இருப்பதாக கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
நான் அவரை நிறுத்தி அவர் பெயரை கேட்டேன். அவர் பெயர் ப்ருனோ என்றார். நான் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றேன். அவர் அவசரமாக வெளியே சென்றுவிட்டார். எந்த பொருளை அவர் வாங்க நினைக்கவில்லை.
பிறகு என் தாயார் வந்துவிட்டார். அதன் பிறகு அவரை எங்கும் நான் பார்க்கவில்லை.பிரிமியர் ஹோட்டலை பார்த்து கொண்டே தான் நான் பாபாவை பார்க்க நினைப்பதாக கூறினேன்.அவர் யாராகவோ இருக்கட்டும். ஆனால் அவரில் நான் என் பாபாவை பார்த்தேன். பாபாவின் ஆசிர்வாதங்கள் என்றும் நம்மிடம் நிலைத்து நிற்கும்.உங்களை சோதித்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் பாபா.
ஓம் சாய் ராம்.
(Translted Into Tamil by Ramya Karthick)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.