Friday, February 10, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 30

சாயி அனுபவம் - பகுதி - 30

அன்பானவர்கள் அனைவருக்கும் சாயி தின நல்வாழ்த்துகள்
சாயி பாபா அன்பிற்கும், இரக்கத்திற்குமான கடவுள் ஆவார்.நாம் செய்ய வேண்டியதெல்லாம் முழு மனதோடு அவரை வழிபடுவது மட்டுமே. எவர் ஒருவர் அவரை முழு மனதோடு, உண்மையாக பக்தியுடன் வழிபடுகிறார்களோ அவர்கள், துன்பங்களில் இருந்தும், பேராபத்துகளில் இருந்தும் விடுபடுவர்.மேலும் பாபாவின் ஆசிகளை பெறுவர்.
கிழே சாயியின் அனுபவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜெய் சாயி ராம்
மனிஷா

பாபாவின் நடத்திய பேரம் 

பாபா அனைவரையும் ஆசிர்வதித்து, அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றுவாராக.
சகோதரி மனிஷா அவர்களே.
உலகமெங்கும் தொடரும் உங்களின் மகத்தான சேவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.எனது சாயி அனுபவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.வேலை, ஆரோக்கியம்,கடன்,திருமணங்கள் என பல முக்கியமான விஷயங்களில் ஏற்படும் தொல்லைகளுக்கு மட்டுமில்லாமல்,தினந்தோறும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மற்றும் தீர்வு நம் பாபா தான்.நம் அன்றாடம் பிராத்தனைகளுக்கு பாபா அருள் புரிகிறார் என்பது அசைக்க முடியாத உண்மை.
என்னுடை பிரச்சனைகளை நான் பாபாவிடம் ஒப்படைத்த போது, அவர் அதை ஏற்று என்னை ஆசிர்வதித்தார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
நான் எனது தங்கைக்காக ரூபாய் 3850 மதிப்புள்ள கற்கள் பதித்த ஒரு சிறிய அலங்கார வெள்ளித் தட்டை பூஜைக்காக பரிசளித்தேன்.ஆனால் அதை அவளால் சரியாக பயன்படுத்த முடியவில்லை. கவன குறைவால் சரியான பொருளை நான் வாங்கததை எண்ணி வருந்தினேன். ஒரு மாதம் கழித்து வாங்கிய கடையிலேயே அதை கொடுத்து ஒரு ஆயிரம் ரூபாய் குறைத்து வேறு ஏதாவது ஒரு பொருள் எடுக்கலாம் என நினைத்தேன்.
நான் கடைக்காரரை தொலைபேசியில் அழைத்து அவரிடமே இந்த தட்டை விற்க போவதை பற்றி பேசினேன்.அவர் தட்டை 800 அல்லது அதிக பட்சம் 900 ரூபாய்க்கு தான் எடுத்துக் கொள்ள முடியும் என முடிவாக கூறிவிட்டார். பின் என்னை விலை சீட்டை எடுத்துக் கொண்டு நேரில் வரச் சொன்னார்.
இங்கே நான் சொல்ல வேண்டியது, ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போதும், பாபாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக நான், பலருக்கு அன்னதானம் அளிப்பேன். அது மட்டுமின்றி ஏதாவது வெள்ளியில் வாங்கி பாபா கோவிலில் பாபாக்கு பரிசளிக்கும்படி கூறுவேன்.எனவே இந்த தட்டை கொடுத்து நான் வாங்க போகும் பொருளை பாபாக்கு கொடுக்க எண்ணினேன்.அதற்கு பாபாவிடம், சரியான விலையில் தேவையான பொருளை நீங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இழப்பு ஏற்பட்டாலும் நான் ஒத்து போகிறேன் எனக் கூறி சீட்டை எடுத்துக் கொண்டு கடைக்கு புறப்பட்டேன்.
கடைகாரர் சீட்டையும்,பொருளையும் சோதித்தார். நான் அவரை நல்ல விலைக்கு எடுத்துக் கொள்ளும்படி கூறினேன்.அவர் மாற்றி எடுக்க நினைக்கும் பொருள் என்ன எனக் கேட்டார். நான் ஷீரடி சாயி பாபாக்காக ஒரு வெள்ளித் தண்டை எடுக்க நினைக்கிறேன் என கூறினேன்.உடனே அந்த கடைக்காரர் எதை பற்றியும் யோசிக்காமல், சீட்டில் எதோ கிறுக்கி அவர் கையெழுத்து போட்டு சீட்டை என்னிடம் திருப்பி கொடுத்தார்.
அதில் எழுதி இருந்ததை பார்த்து, பாபாவின் லீலை நினைத்து நெகிழ்ந்து விட்டேன்.அதில் கடைக்காரர் வரிக்கான படம் 38 ரூபாயை மட்டுமே குறைத்திருந்தார்.மேலும் என்னை 3812 ரூபாய்க்கு வேண்டிய பொருளை எடுத்துக் கொள்ளும்படி கூறினார். மேலும் எனக்கு குளிர்பானம் அளித்தார்கள்.கடைகாரரும் பாபாவின் பக்தர் எனக் கூறினார். ஆயிரங்களை இழக்க இருந்த எனக்கு பாபா உதவியதை எண்ணி கண்கள் கலங்கின.இந்த வருடத்திற்கான பரிசை பாபா, அவரே எடுத்துக் கொண்டதை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

கடவுள் பாலாஜி படத்தின் பின் தங்க முலாம் பூசப்பட்ட நம் பாபாவின் படத்தை இணைத்திருக்கிறேன்.இதில் பாபாவின் சாய் சரித்திரத்தில் உள்ளதை கோடிட்டு காட்ட நினைக்கிறேன்.அத்தியாயம் 25 ல் பாபா தாமு அண்ணா காசரை பஞ்சு உற்பத்தி தொழில் செய்யவிருப்பதை தடுத்து, அவரை நஷ்டத்தில் இருந்து பாபா காப்பாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
பாபாவிற்கு தலை வணங்குறேன்
எங்கும் அமைதி நிலவட்டும்.பாபா ஒரு கருணையுள்ள மருத்துவர்

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
சாயி ராம் சகோதரி மனிஷா
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமா? உங்களின் சேவைக்கு என் இதயபூர்வமான நன்றி.உங்களின் சேவையில் எந்தவித இடையூறும் ஏற்படமால் இருக்க நம் சர்வவல்லமையுடைய சாய் நாதரை நான் வணங்கிக் கொள்கிறேன்.
என்னுடைய அனுபவத்தை உங்களின் தளத்தில் போடுமாறுக் கேட்டுக் கொள்கிறேன். இதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னித்து அதை சரி செய்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
எங்களின் குடும்பம், என் அம்மாவின் சகோதர ,சகோதரிகளுடன் சேர்ந்து மிகவும் பெரிய கூட்டுக் குடும்பம். சற்று தொலைவில் எங்கள் உறவுகள் இருந்தாலும் எங்களுடன் எண்ணற்ற பாசம் அடங்கியுள்ளது. எனது அம்மாவின் சகோதரர் எங்கள் வீட்டில் இருந்து ஒரு தெரு தள்ளி வசிக்கிறார்.
20 நாட்களுக்கு முன்,என் மாமா எங்களை இரவு நேரத்தில் தொலைபேசியில் அழைத்தார்.அப்போது அவரது மனைவுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி எங்களை வீட்டிற்கு உடனே வர சொன்னார். எங்களின் ஆச்சிர்யம் என்னவென்றால் எங்கள் அத்தை நல்ல ஆரோக்கியமானவர்,அவருக்கு இதற்கு முன் வலிப்பு ஏற்பட்டது இல்லை.அடுத்த நாள் என் மாமா ஒரு நரம்பியல் மருத்துவரை அணுகி பார்த்ததில் அவர் MRI சோதனை செய்ய சொன்னார்.. எங்கள் வீட்டில் எப்போதும் உள்ள பழக்கம் என்னவெனில்,எந்த ஒரு மருத்துவ சோதனை எடுக்க வேண்டும்னெனில்,அந்த சோதனைக்கு முன் பாபாவின் உதியை தண்ணீரில் கலந்து குடிப்போம்.
எனது மாமா சாயி பக்தர் இல்லை. எனவே எனது அத்தை வீட்டிற்கு வந்தால் அவருக்கு உதி கொடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அவர் நேராக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சுழல் ஏற்பட்டது.அதனால் நான் எந்த பிரச்சனையும் அவரின் சோதனை முடிவில் இருக்கக் கூடாது என வேண்டினேன். இங்கே தான் பாபா தன் லீலைகளை ஆரம்பித்தார்.அவரது சோதனை மாலை நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.எனவே அவர் எங்களின் வீட்டிற்கு வந்தார். நான் பாபாவை மனதார வேண்டி அவருக்கு உதி கலந்த நீரை கொடுத்து குடிக்க வைத்து மாலை மருத்துவமனைக்கு அனுப்பினேன்.
சோதனைக்கு பின் என் மாமா, முடிவு அடுத்த நாள் தான் வருமெனக் கூறினார்.எந்த பிரச்சனையும் இருக்காது என நான் உறுதியாக நம்பினேன்.ஆனால் எதிர்பார்க்காதவிதமாக என் அத்தையின் மூளையில் ஒரு பெரிய கட்டி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என அறுவை சிகிச்சைக்காக ஜனவரி மாதம் 21 (சனிக்கிழமை )நாளை முடிவு செய்தார்.மேலும் அவர் கட்டியை வெளியே எடுத்து அது புற்று நோயா இல்லையா என தெரிந்துக் கொள்ள மேலும் ஒரு சோதனை செய்ய வேண்டும் என்றார்.(Biopsy Test).என் அத்தைக்கு ஒரு மகள் இருக்கிறார்.எனவே நாங்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தோம்.மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் வருமாறு கூறி இருந்தார்.ஆனால் எனது அத்தைக்கு வாந்தி தொடர்ந்து ஏற்பட்டதால் புதன் கிழமை அன்றே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பாபாவின் நாளான வியாழன் அன்று அறுவை சிகிச்சை முடிவானது.நான் அத்தையிடம் பாபாவே அறுவை சிகிச்சையை செய்வார் எனக் கூறி அனுப்பினேன். அவர் தினமும வெறும் வயிற்றில் பாபாவின் உதியை தண்ணீருடன் குடித்து வந்தார்.
அறுவை சிகிச்சை சென்று கொண்டிருக்கும் நேரத்தில் நாங்கள் பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தும், சாய் சரித்திரத்தை படித்துக் கொண்டும் இருந்தோம். எனது இன்னொரு அத்தை சாயி கோவிலுக்கு சென்று என் அத்தை பெயரில் அர்ச்சனை செய்தும், குருக்களிடம் என் அத்தையை பற்றியும் கூறினார்.அவர் பணம் ஒன்று மட்டுமே விரையமாகும், வேறு எந்த பாதிப்பும் இருக்காது என ஆறுதல் கூறினார்.
மருத்துவர் அறுவை சிகிச்சையில் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறி கட்டியை புற்று நோய் சோதனைக்கு அனுப்பினார்.சாயி பாபாவின் அருளால் முடிவுகள் நல்ல விதமாக வந்தது.பாபா தான் தன்வந்திரி என இதில் நிரூபித்தார். என் அத்தை அடுத்த வார வியாழன் அன்றே வீட்டிற்கு குணமடைந்து வந்தார்.எங்கள் அத்தையை திருப்பி தந்ததற்கு பாபாவிடம் நன்றி செலுத்தினோம்.கர்மவினையின் காரணமாக கட்டி வந்தாலும் பாபா அதை எங்களின் பிரார்த்தனைக்கு ஏற்ப அகற்றினார்.
ஷாஷ்டாங்க நமஸ்காரம் சாயி மாதா .
என்.பிரியா


Phd படிப்பிற்காகா பாபா உதவினார்
அனைவருக்கும் சாயி ராம்

ஸ்ரீ சச்சிதானந்தா சத்குரு சாய்நாத் மகராஜ் கி ஜெ
நான் எனது சாயி அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள பல நாட்களாக எண்ணியிருந்தேன்.யாரெல்லாம் அன்புடன் நம்பி வருகிறார்களோ அவர்களை எல்லாம் தனது அன்பினாலும்,இரக்கத்தினாலும் ஆசிர்வதிக்கிறார் நம் பாபா
நான் என்னுடைய முது நிலை பட்ட படிப்பை UK வில் முடித்து Phd படிக்க நினைத்தேன். ஆனால் அதற்கு பணம் அதிக அளவில் தேவைப்பட்டதால் பண உதவிக்காக அலைந்துக் கொண்டிருந்தேன்.
இரண்டு வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தாலும் நல்ல ஒரு வேலை கிடைக்காமல் இருந்தது.வேலை இல்லாமல் தவிப்பர்களுக்கு துணையாக நின்று கடவுள் அருள் புரிவார்.. எனக்கு மிகவும் நல்ல ஒரு வேலை என் படிப்பு சம்மந்தப்பட்டதாகவே கிடைத்தது.
இருந்தாலும் படிப்பிற்கு பணம் கிடைக்காததால் நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். பின் பாபாவை மனதார வேண்டி 9 வார விரதங்களை செய்தேன். அது எனக்கு புது நம்பிக்கையை கொடுத்து, என் அலுவலகத்திலேயே பண உதவி கேட்க செய்தது. என் மேலிடமும் படிப்பிற்காக பண உதவி செய்ய முன் வந்தது. இது பாபாவின் அற்புதமான செயல்.
நன்றி சாயி பாபா
எனது கணவரின் வேலையில் திருப்தி இல்லாததால் அவர் மிகவும் வருத்தத்தில் இருந்தார். சாயி பாபாவை வணங்கி 9 வார விரத்தையும் செய்து முடித்தார். அவருக்கு அதே அலுவலகத்தில் நல்ல ஒரு வேலை கிடைத்தது.அதனால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்..பாபாவின் மீதான அவர் நம்பிக்கை அதிகமானது.பாபா ஒரு இரக்கமுள்ள, அற்புதமான கடவுள்.பாபாவின் பக்தர்கள் பாபாவின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காக்க வேண்டும்.பிரச்சனை சிறிதோ பெரிதோ, ஆனால் நம்பி வருபவர்களை அவர் என்றும் கைவிடுவதில்லை.அவர், அவரது பக்தர்களையும் ,அனைத்து உயிரினங்களையும் காத்து வருகிறார்.  அவரிடம் நம்பிக்கை மற்றும் பொறுமையை வையுங்கள் என வேண்டி கேட்டிக் கொள்கிறேன்.
ஜெய் சாயி பாபா
ஜானு 
(Translated into Tamil by Ramya Kartick)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.