Monday, February 27, 2012

Shri Sai Nath Stavan Manjari In Bengali.

ஸாயி நாத் ஸ்தவன் மஞ்சரி - வங்கள மொழியில்


ஜெய் ஸாயி ராம்,
உங்களனைவருக்கும் இனிய மஹா சிவராத்திரி வாழ்த்துகள். எல்லம் வல்ல பரமசிவன் எல்லா அடியவர்களுக்கும் அளவற்ற ஆனந்தத்தையும், அமைதியையும், நல்ல ஆரோக்கியத்தையும் அருளட்டும்.
இந்தப் புனிதமான மஹா சிவராத்திரி நாளில், மிகவும் இனிமையானதும், பொருள் பொதிந்ததுமான ஸாயி நாத் ஸ்தவன் மஞ்சரி என்னும் துதியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பாபாவின் பேரருளே. தாஸ் கணு மஹராஜ் அவர்களால் மராத்தி மொழியில் இயற்றப்பட்ட இப் புனித நூல் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்த வலைதளத்தில் அவ்வப்போது கொடுக்கப் பட்டிருக்கிறது. அடியார்கள் கீழ்க்கண்ட சுட்டிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 'இங்கே'
இன்று ஸாயி நாத் ஸ்தவன் மஞ்சரியை  வங்கள மொழியில் அளித்திருக்கிறேன். இதற்கான முறையான பெருமை நமது அன்பு ஸாயி சஹோதரி சஞ்சுக்தா சாட்டர்ஜீயையே சாரும். சமீபத்தில் இவர் ஸாயி விரதத்தையும் வங்காள மொழியில் அளித்திருந்தார்.
பாபவின் ஆணை மற்றும் ஆசி இல்லாமல் எந்த ஒரு பொருளும் அசைவதில்லை என்பதை நாம்  எல்லாருமே அறிவோம். இந்தப் பதிவும் அதற்கு விதி விலக்கல்ல. சஹோதரி. சஞ்சுக்தா சாட்டர்ஜீ அவர்கள் எவ்வாறு இந்த நூலை மொழியாக்கம் செய்வதற்கான அருளாசியைப் பெற்றர் என்பதையும், அவ்வண்ணம் செய்யும்போது அவர் அனுபவித்த உணர்வுகளையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஸாயி நாத் ஸ்தவன் மஞ்சரியை எங்கள் குடும்ப நலனுக்காக நான் அவ்வப்போது படிக்கும் போதெல்லாம் எனக்கு நிகழ்ந்த அனுபவங்களையும், ஆசிகளையும் இங்கே சொல்லியிருக்கிறேன். பாபாவின் நேரடியான கருணை இதைப் படிக்கும் போதெல்லாம் எனக்குக் கிட்டியிருக்கிறது. மனதுக்கும், ஆத்மாவுக்கும் அமைதியைத் தந்திருக்கிறது.
ஒவ்வொரு அடியவரும் ஒரு முறையாவது இதனைப் படித்து, பாபாவின் பேரருளைப் பெற வேண்டும் எனச் சிபாரிசு செய்கிறேன்.
இந்த நூலுக்கு ஒரு அழகிய அட்டையையும், இதனைக்  கோப்பு வடிவில் அளித்தமைக்காகவும் திரு கௌஷிகன் ஜி அவர்களுக்கு எனது வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபா சம்பந்தமாகத் தான் ஒரு பயணத்திற்குப் புறப்படும் வேளையிலும், இதனைக் குறித்த நேரத்தில் அவர் செய்து முடித்து ஒரு அழகிய பாப திருவுருவப் படத்தையும் அவர் அளித்திருக்கிறார்.
மனிஷா

ஸாயி ராம்.
2009-ம் ஆண்டில்  அப்படித்தான் எண்னுகிறென்] மனிஷாஜியின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. இப்போது அவர் மனிஷ தீ ஆகிவிட்டார்.
பாபாவுக்கு ஆரத்தி செய்யும்போது, அதன் பொருளையும் புரிந்துகொண்டு செய்ய வேண்டும் என்னும் அவாவின் காரணமாக பாபாவின் ஆரத்தியை ஹிந்தி மொழியில் இணையத்தில் தேடினேன். அப்போது மனிஷா தீ எனக்கு அதற்கான சுட்டியைத் தந்து, எனக்காகவும், மற்றவர்களின் வசதிக்காகவும் அதனை மொழியாக்கம் செய்யும்படி ஆலோசனை தந்தார். உண்மையில் இது ஒரு மதிப்பு வாய்ந்த ஆலோசனையே. ஆனால், அந்தச் சமயம் எனது துர்க் குணங்கள் என்னுள் தலைதூக்க, நான் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டேன்.
விரைவிலேயே, நான் தீதியின் வலைதளத்தில் ஸாயிநாத் ஸ்தவன் மஞ்சரி அவர்க்குத் தந்த அற்புத விளைவினைப் பற்றிய செய்தியைப் படித்தேன். அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றியது. தீதியின் வலைதளம் மூலமாகத்தான் நான் தாஸ் கணு மஹராஜ் இயற்றிய ஸாயிநாத் ஸ்தவன் மஞ்சரியைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். மெய்யாகவே, அது ஒரு அற்புதமான நூல்தான். அதைப் படிக்கும் எவரும் இதே உணர்வினை அடைவர் என உறுதியாக நம்புகிறேன். உடனே அதைத் தரவிறக்கம் செய்துவிட்டு, எனது கணவருடன் பகிர்து கொண்டு, எங்களது அலைபேசிகளிலும் அதனைப் பதிந்தென். விரைவிலேயே அது எங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. அதைக் கேட்டபடித்தான் எங்களது காலை மலரும்...... எப்போதெல்லாம் சற்று சோர்வாக இருந்தேனோ அப்போதெல்லாம் அது உயிர்பெற்று எழும்.
இந்த விலை மதிப்பற்ற ஸ்தவன் மஞ்சரி எங்களது வாழ்வில் நுழைந்த கணத்தில் இருந்து என் மனதில் பிறந்த ஒரு மெய்யான உணர்வை இப்போது நான் சொல்லியே ஆக வேண்டும். 'சீக்கிரமே மனிஷா தீ வந்து உன்னை இந்த நூலை வங்காள மொழியில் மாற்ரித்தரச் சொல்லப் போகிறாள் பார்' என ஸாயிநாத் என்னிடம் சொல்லுவதாக உணர்ந்தேன். அதை எண்ணி நான் கொஞ்சம் அரண்டுதான் போனேன். ஆம், மனிஷா தீ, இன்று முதன் முறையாக இந்தப் பொது தளத்தில் எனது குறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் பயந்ததற்கு இரு காரணங்கள்.
1. நான் வங்காள மொழியில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவள். 18 ஆண்டுகளாக மும்பையிலேயே காலத்தைக் கழித்து விட்டேன். நான் பேசும் வங்காள மொழியைக் கேட்டு கொல்கொத்தாவில் இருப்பவர்கள் பரிகசிப்பாகள். இது எப்படி மொழியாக்கம் செய்யப் பட்டது?...... அவர்தான் இதைத் தானே மொழியாக்கம் செய்தார் என நான் சொல்வதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.
2. 163 இருவரிகள் கொண்ட ஒரு நீளமான துதி இந்த ஸ்தவன் மஞ்சரி. எனது சோம்பேறித்தனம் என்னை நன்றாகப் பிடித்துக் கொண்டு, இதனைச் செய்ய என்னால் முடியாது என நினைக்கச் செய்தது.
மேலும், நான் ஒரு வேலையிலும் இருப்பதால், இது நடக்கவே நடக்காது என எண்ணினேன்.
எனவே, இந்த மொழியாக்கம் சம்பந்தமான பேச்சுகளை தீதியுடன் தொடர்வதை நான் வெகுவாகத் தவிர்த்து வந்தென். ஆனால், நாமெல்லாரும் அறிவது போலவே , நடக்க முடியாத இதுவும் நடந்தேறியது. அது இந்த வண்ணம் நிகழ்ந்தது:
குழந்தை பிறந்ததும், எனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதற்காக நான் வேலையை விடும்படி ஆயிற்று.
ஸாயி விரத கதையை வங்காள மொழியில் மாற்றி எழுதி, நானே அதை மனிஷா தீதியிடம்  கொண்டு சென்றேன். பாபா தான் இதைச் செய்து தந்தார் [இதுவும் ஒரு அதிசயமே]. இது முழுதுமாக மொழியாக்கம் செய்யப்பட்டு, அனவரின் வசதிக்காகவும் தீதியின் வலைதளத்தில் ஏற்றப் பட்டிருக்கிறது.
ஆம்..... தவிர்க்க இயலாத....ஏற்கெனவெ பாபா என்னிடம் சொல்லியிருந்த..... அது நிகழ்ந்தது! என்னுடைய ஸாயி விரத மொழிபெயர்ப்பைப் பார்த்து மகிழ்ந்த தீதி, ஒவ்வொரு பாபா அடியவரும் தவறாது சொல்ல வேண்டிய மிக உயர்ந்த துதியான ஸாயிநாத் ஸ்தவன் மஞ்சரியையும் இதேபோல மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் என்னும் தனது ஆசையைத் தெரிவித்தார். பாபாவின் லீலையைப் பாருங்கள்! ஆனால், நான் முன்னர் தெரிவித்திருந்த காரணங்களால் எனக்கிருந்க தயக்கத்தை அவர் அறிந்திருந்ததால், நேரடியாக நான்தான் இதைச் செய்ய வேண்டுமன அவர் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக என்னையே பாபா வெளிப்படையாகச் சொல்ல வைத்தார். வங்காள மொழியில் நான் இதை மொழிபெயர்த்துத் தருகிறேன் என நான் பதிலிறுத்தேன். இது எப்படி நிகழப் போகிறது என எனக்கு அப்போது ஒரு தெளிவும் இருக்கவில்லை. இதோ... இப்போது நான் இதைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதும் கூட இது எனக்குத் தெரியவில்லை. அல்லது, ஒருவேளை.... எப்படி நிகழ்ந்ததென நம் எல்லாருக்குமே தெரியுமோ!!
இதை மொழிபெயர்க்கும்போது நிகழ்ந்த வேறு சில அனுபவங்களை இங்கே அளிக்கிறேன்:
வங்காள மொழியில் சற்று பலவீனமாக இருந்ததால், பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தேன். ஆனால், எப்படியோ, தானே அந்த சொற்கள் வந்து விழுந்தன! எல்லாம் 'அவர்' அருளே!
08/02/2012 புதன்கிழமையன்று, '163-வது வரிகளை நீ எழுதும்போது, உன் காதுகளில் சங்கொலி கேட்கும்' என பாபா என்னிடம் ரகசியமாகச் சொன்னார்.
அதைக் கேட்ட நான்,' பாபா! இது நடக்குமா? எங்களது வீட்டு அர்ச்சகர் [எங்கள் இல்லத்தில் இருக்கும் கோவிலுக்கு பூஜை செய்ய ஒருவரை நியமித்திருக்கிறோம்] மாலை 5 - 5,30 மணிக்கு வருவார். அதற்குள் நான் இதை எழுதி முடித்து விடுவேனா?' எனத் திருப்பிக் கேட்டேன். [அப்போது மாலை 3.45 இருக்கும். எந்த வரிகளை எழுதிக் கொண்டிருந்தேன் எனச் சரியாக நினவில்லை] அதன் பிறகு, நான் இதைப் பற்றி மறந்துபோய், எனது வேலையில் ஆழ்ந்து விட்டேன்.
விரைவிலேயே நான் அந்தச் சங்கொலியைக் கேட்டேன்..... உடனே எனக்கு அந்த உரையாடல் நினைவுக்கு வந்தது...... அப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?.... 163-ம் வரிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். பாபா எனது பணியை ஆசீர்வதித்தார் என மட்டுமே என்னால் சொல்ல முடியும்!!
பாபா, இந்தக் கடனை என்னால் எப்படித் திருப்பித் தர இயலும்? முடியவே முடியாது. அருள் கூர்ந்து எங்கள் எல்லாருடனும் அன்பாக இருங்கள். இது ஒன்றே என் பிரார்த்தனை!!
இன்னுமொன்று..... நான் விரும்பிய வண்ணமே, வியாழக் கிழமைக்குள் இதை நான் எழுதி முடித்து விட்டேன்!
இறுதியாக வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இது ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, வங்காளம் என எந்த மொழியில் இருந்தாலும் தவறாது படியுங்கள். இந்த அற்புதமான துதி நிச்சயம் உங்கள் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கும்.
தாஸ் கணு மஹராஜ் ஜி சொல்லும் இந்த சில வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை: பாபா நமக்கெல்லாம் தாயாகவும், நாமெல்லாம் அவரது பிள்ளைகளாகவும் இருக்கிறோம். ஒரு தாயின் கைகளில் இருக்கும் ஒரு குழந்தை எப்படி பயமில்லாமல் இருக்கிறதோ, அது போலவே அவர் தரும் 'பாலுக்கான உரிமை' நமக்கும் இருப்பதால் நமக்கும் பயமே இருக்காது. நமது பாவங்களைத் தொலைத்து, நம்மையெல்லாம் தூய்மைப் படுத்த தாஸ் கணு மஹராஜ் ஜி பாபாவுக்குக் கட்டளை இடுகிறார். 'அவர்' செய்யவில்லையெனில் வேறு எவர் செய்வார்? நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவர் மீது மட்டுமே நீங்கள் கொள்ளும் உரிமை பற்றிய இந்தக் கருத்து எனக்கு மிகவும் பிடித்தது.
என்னைப் பொருத்தவரை, 'அவரை' நான் எங்களுள் ஒருவராகத்தான் பார்க்கிறேன். அவருடன் சேர்ந்து சிரித்து மகிழ்கிறேன், அவரிடம் வருத்தப் படவும் செய்கிறேன்,[ஒரு மணி நேரம் கூட இது நிலைப்பதில்லை!] அவரைக் கண்டிக்கவும் செய்கிறேன், சேர்ந்து பாடுகிறேன், சேர்ந்து ஆடுகிறேன்.
மஹராஜ் ஜி, பாபாவை ஒரு நிழல் தரும் மரத்துடன் ஒப்பிட்டு, அதனடியில் ஒருவர் அமர்ந்திருக்கும்போது, அவர் உஷ்ணமாக உணர்ந்தால், யார் அந்த மரத்தை 'நிழல் தரும் மரம்' எனச் சொல்லுவார்கள்? எனச் சொல்லும் வரிகளும் எனக்குப் பிடித்தமானவை. நமது தவறுகளும், மனமும் அவருடையதே என்றும், எனவே, அதற்கான பெருமையும், சிறுமையும் நம்மைச் சாராமல், அவரையே சாரும் எனச் சொல்லும் வரிகளும் இஷ்டமானவையே.
இந்த அதிசயத் துதியான ஸ்தவன் மஞ்சரியைப் படியுங்கள்! இவ்வுலகத் தடுமாற்றங்களில் இருந்து கடந்து செல்ல அது நிச்சயமாக உதவுகிறது. அவர் மீதான நமது நம்பிக்கையை அதிகரித்து தைரியத்தைக் கொடுக்கிறது!
மேலே சொன்ன வரிகள் எனக்குப் பிடித்தவைகளில் ஒரு சிலவே.... இதைப் போல இன்னும் பல வரிகள் இருக்கின்றன!
இப்படி ஒரு அற்புத நூலை இயற்றுவதற்கு தாஸ் கணு மஹராஜ் ஜி எப்படிப்பட்ட ஆசிகளைப் பெற்றிருக்க வேண்டும்! வார்த்தைகளால் விளக்க இயலவில்லை! இந்த மொழியாக்கத்தில் இருக்கும் தவறுகளுக்காக உங்களது மன்னிப்பைக் கோருகிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்!
இந்த நீளமான முன்னுரையைப் படித்ததற்கும், பாபா சம்பந்தமான மேலும் பல நூல்களை மொழிபெயர்க்க ஆதரவு தருவதற்கும் உங்களனைவருக்கும் எனது வந்தனங்கள்.
மனிஷா தீ.... உங்களுக்கு நான் எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இப்படியே எப்போதும் என்னிடம் அன்புடன் இருங்கள்.
பாபா... நீங்கள் தான் எனக்கு எல்லாமும்.நீங்கள் தான் எழுதுகிறீர்கள். 'நன்றி' என்பது ஒரு சிறிய சொல் என்பதால், அதை அப்படியே விட்டுவிடுகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன்.
பாபாவின் மகள்,
சன் ஜுக்தா.


அன்பார்ந்த வாசகர்களே,
பாபாவிடமிருந்து நேரடியாகக் கேட்டது குறித்தும், என் மூலமாக அவருக்கு எப்படி ஒரு சமிக்ஞை கிடைத்தது பற்றியும் சகோதரி. சம்ஜுக்தாவிடம்நான் கேட்டிருந்தேன். அவர் எனக்கு அனுப்பிய பதிலை இங்கே கீழே பிரசுரிக்கிறேன். ஜெய் ஸாயிராம். -- மனிஷா.
'ஆம், மனிஷா தீ,... நீங்கள் கேட்டது பற்றி.....,
1. ஸாயிநாத் ஸ்தவன் மஞ்சரியை உங்கள் வலைதளத்திலிருந்து நான் தரவிறக்கம் செய்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, அதைத் தொடர்ந்து, அது பற்றிய உங்களது அனுபவத்தைப் படிக்கும்போது, 'சீக்கிரமே நீ இதை மொழியாக்கம் செய்ய வேண்டியிருக்கும். மனிஷாவே இப்படி உன்னிடம் கூறுவாள்' என பாபா எனது காதில் ரகசியமாகச் சொன்னார். ஷீர்டியில் [2009-ல்] ஆலய வளாகத்தில் இதன் ஆங்கிலைப் பிரதியை வாங்கி, அங்கேயே உட்கார்ந்து அதனைப் படித்து, அதன் பொருளை முதல் முறையாகப் புரிந்துகொண்டபோது, அவர் மறுபடியும் ஏதோ சொன்னதுபோல இருந்தது. அப்போது அது சரியாகப் புரியவில்லை. ஆனால், அதன் பிறகு, ஒருநாள் நிச்சயமாக நீங்கள் வந்து என்னை இதை மொழியாக்கம் செய்யச் சொல்லிக் கேட்பீர்கள் என நம்பினேன்.
2. இங்கேயும் கூட, பாபா என் மனதுக்குள் என்னிடம் பேசினார்......,
தீ, உங்களுக்கே தெரியும்.... நம்மைப் போன்ற அடியார்கள் அவருடன் பேசவென ஒரு வழிமுறையை அறிந்திருப்போம் என. அவர் நம்முடன் பேசுகிறார்...அது நம்முடைய குரல்தான் எனத் தோன்றினாலும், அது உண்மையில் அவரது குரலே.
இதைச் சொல்லும்போது,... எனது உள்ளுணர்வில் கேட்கும் குரலை அவரே பேசுவதாக நினைப்பேனே தவிர அதை ஒருபோதும் சந்தேகிக்க மாட்டேன் என அவருக்கு நான் ஒரு சத்தியம் செய்து தந்திருக்கிறேன் என்னும் ஒரு சிறிய அனுபவத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இது உங்களுக்குச் சமாதானமாக இருப்பின், இதை நீங்கள் இந்தத் தளத்தில் பிரசுரிக்கலாம்.
2011, டிசம்பர் மாதம் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நான் ஷீர்டி சென்றிருந்த சமயம், ['அதே பயணத்தின்போது, பத்து ரூபாய்கள் பற்றிய எனது அனுபவம்' என்னும் பதிவில் இதுபற்றி எழுதியிருக்கிறேன்], எனது மகளின் செவிலித்தாய் ஸுமிதா தீயுடனும், எனது மகள் 'டால்'லுடன் [என் மகளை ஸுமிதா தீ வைத்துக் கொண்டிருந்தார்] தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, 'குருஸ்தான்....குருஸ்தான்... குருஸ்தானத்தில் உன்னைச் சந்திக்குமாறு ஸுமிதாவிடம் சொல்' எனும் ஒரு குரல்.... அது 'அவருடைய' குரலேதான்... எனக்குள் கேட்டது.
அடிக்கடி இதுபோல குரலை நான் கேட்பதால், [கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால்] அப்போது அதை ஒதுக்கி விட்டு, 'இந்தத் தரிசனம் முடிந்ததும் ஒருவேளை நாங்கள் பிரிய நேரிட்டால், குருஸ்தானத்தில் வந்து சந்திக்குமாறு அவளிடம் சொல்லுகிறேன்' என நான் மனதுக்குள்ளேயே பதில் சொன்னேன்.
மீண்டும் அந்தக் குரல் சொல்லியது.... 'இல்லை, இப்போதே சொல்' என. 'பிறகு சொல்கிறேன் பாபா' எனப் பதிலிறுத்தேன்.
நாங்கள் வரிசையில் முன்னேறிக் கொண்டிருந்தோம். திடீரென ஒரு கை என்னை உந்தி, அந்த வரிசையிலிருந்து பிரித்து, நேராக பாபாவின் திருவுருவச் சிலைக்கு முன்னே செல்லும் நடு வரிசைக்குத் தள்ளியது. [எப்போதுமே நான் பாபாவை நடு வரிசையிலிருந்து தரிசிப்பதையே விரும்புவேன்.]
நேரடியாக பாபாவைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ந்தாலும், ஸுமிதா தீயிடமிருந்தும், டாலிடமிருந்தும் பிரிய நேர்ந்ததற்காக நான் கவலையுற்றேன். கவலை என் மனதில் சூழ்ந்தது. 'ஸுமிதாவுக்கு வெளியே செல்லும் வழி எப்படித் தெரியும்? எங்கே நாங்கள் சந்திப்பது? டால்... ஓ, என் ஸாயி!'
தரிசனத்துக்குப் பின்னர், நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன். 'எனது 19 மாதக் குழந்தையை நான் பிரிந்து விட்டேன். என்னைக் கொஞ்ச நேரம் காத்திருக்க அனுமதியுங்கள்' என அங்கிருந்த காவலாளியிடம் நான் வேண்ட, அவரும் அதற்கு அன்புடன் அனுமதித்தார்.
சுமார் 15 நிமிடங்கள் பாபா முன்னேயே, மனதுக்குள் இந்த நீண்ட மறைமுகமான தரிசனத்துக்காக பாபாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன். எனினும், எனது குழந்தையைக் காணாமல், பாபா எனக்கு முன்னமேயே சொல்லிய அறிவுரையைக் கேளாமல் ஒதுக்கியதற்காக, என்னையே நான் சபித்துக் கொண்டு, எப்படியாவது குருஸ்தானுக்கு முன் ஸுமிதா வர வேண்டுமென்று பிரார்த்தித்தேன்.
15 நிமிடங்களுக்குப் பின்னும் ஸுமிதா தீ அங்கு வரவில்லையென்றதும், நான் மிகவும் கலக்கம் அடைந்தேன். குருஸ்தானுக்குச் சென்று தேடுமாறு அங்கிருந்த காவலாளி சொன்னதும், அவளைத் தேடிச் சென்றேன். இங்கேயும் பாபா அந்தக் காவலாளி மூலம் எனக்கு மீண்டும் சொல்கிறார்.
குருஸ்தானுக்குச் சென்றேன். அங்கேயும் அவர்கள் இல்லை.
அப்போதே, அந்தக் கணமே, நான் பாபாவிடம் கதறினேன்.... 'எப்போது, எந்த சமயம், நான் எனது உள் குரலைக் கேட்கும்போதும், அது பாபாவின் குரலே என நான் இனிமேல் நம்பி அதன் படியே நடப்பேன்' என ஒரு உறுதிமொழியை பாபாவுக்குத் தந்தேன். அதைச் சொல்லியபடியே நான் திரும்ப, நான் அவர்களைக் கண்டேன்.
அவர்களைக் கட்டியணைத்துக் கதறினேன்.. சந்தோஷமாய்!
எனவே தீதிஜி, நான் எனது உட்குரலை இப்போதெல்லாம் ஒருபோதும் மறுப்பதில்லை.
இதோ பாருங்கள், தீதிஜி,.. நான் தினமும் பாபாவை எனது கனவில் காண்கிறேன். அவர் எனக்குப் பல உபதேசங்கள் தருகிறார்; என்னை ஷீர்டிக்குக் கூட்டிப் போகிறார்; நீங்கள் எனக்கு பாபாவின் பல்வேறு வேலைகளைத் தருவதாகவும் எனது ஒரு கனவில் கண்டேன்.
இந்த விளக்கங்களினால், எப்படி பாபா என்னை எனது நினைவுகள் மூலம் என்னை வழி நடத்திச் செல்கிறார் என நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
சம்ஜுக்தா
கீழே உள்ளத்தின் மீது கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
Image and video hosting by TinyPic

(Translated into Tamil by Sankarkumar )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.