Thursday, October 15, 2009

B.V Narsimha Swami ji-Public Life.

Chapter 3.
பொது வாழ்க்கை
நரஸிம்ம ஐயர் என அழைக்கப்பட்டவர் தன்னுடைய சட்டப் படிப்பை சென்னையில் முடித்துக் கொண்டு சேலம் சென்று அங்கு பயிற்சியை முடித்துக் கொண்டப் பின் 1895 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து நேரடியாக பார் கவுன்சலில் சேர்ந்து விட்டார். திறமையான வாதத்திறமை இருந்ததினாலும், சட்டத்தை நன்கு அறிந்து இருந்ததினாலும், தம்முடைய விடா முயற்சிகளினாலும் பெரும் வெற்றி பெற்றவருக்கு, ராஜா-மகாராஜாக்களின் தொடர்பு கிடைத்தது. விரைவில் அவர் பார் கவுன்சிலின் தலைவரானார்.
நரஸிம்ம ஐயர் நீதி மன்றத்தில் தாம் எடுத்துரைக்கும் வாதங்களை அமைதியாகவே வாதிட்டாலும், எதிராளி வக்கீல்களுடைய கவனத்தை குலைத்து அவர்களை திக்கு முக்காடச் செய்தார். அந்த அளவுக்கு தமது வாதத் திறமையில் புகழ் பெற்று இருந்தார்.
நரஸிம்ம ஐயர் மக்களுடைய நலனையே தமது மனதில் கொண்டு இருந்ததாலும், வழக்கு மன்றங்களினால் இரு தரப்பினருக்கும் ஏற்படும் பண விரயங்களை மனதில் கொண்டு தம்முடைய வீட்டிலேயே இரு சாராரின் வக்கீல்களையும் வரவழைத்து பஞ்சாயத்து செய்து அவரவர்களின் நியாயத் தன்மைக்கு ஏற்ப இரு தரப்பினரும் ஏற்கும் வகைக்கு தீர்ப்பு கூறி அனுப்புவார். அதனால் பல ஏழை எளியவர்களுக்கு வழக்கு மன்றங்களினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடிந்தது.

நரஸிம்ம ஐயர் மேற்கொண்டு இருந்த இப்படிப்பட்ட காரியத்தினால் அவர் பிரபலமடைய அவருக்கு நிறைய பெரிய மனிதர்களின் தொடர்பும் கிடைத்தது. அவர்களில் முக்கியமானவர்கள் சென்னையில் கவர்னர் ஜெனரலாக இருந்த சி. ராஜகோபாலச்சாரியார், சென்னை தலைமை நீதிபதியாக இருந்த ஸ்ரீ சுந்தரம் செட்டி, 1920 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடந்த காங்கரஸ் கட்சியின் மகாநாட்டை தலைமைத் தாங்கி நடத்திய விஜயராகவாச்சாரி மற்றும் பாரட்லாவும் விடுதலை வீரருமான முத்துகிருஷ்ண ஐயர் போன்றோர் அடக்கம்.
செல்வம் சேர்ப்பது ஒன்றே தன்னுடைய வாழ்கையின் குறிக்கோள் எனக் கருதாமல் பொது மக்களுடைய மேம்பாட்டிற்கும் தன்னை அவர் அர்பணித்துக் கொண்டதினால் அவரைத் தேடி தலைமைப் பதவிகள் தாமாகவே வந்தன. 1902 ஆம் ஆண்டில் சேலம் மகராட்சிக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். சேலம் கூட்டுறவு சங்கத்தின் தலைமை அதிகாரியுமாக பதவி ஏற்றார்.
சேலம் மாவட்டத்திற்கு ஒரு திறமையான நிர்வாகி தேவைப்பட்டது. இயற்கையாகவே எளிமையும் நாணயமும் மிக்கவராக இருந்த அவரை அதற்கு ஏற்றவர் எனப் பொதுமக்கள் கருதியதினால் 1904 ஆம் ஆண்டு சேலம் நகரசபையின் தலைவரானார். பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து அந்த பதவியில் இருந்தவர் பெரும் புகழ் பெற்றார். அதனால் அவரை சேலம் கூட்டுறவு நிதி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமித்தனர்.
நரஸிம்ம ஐயர் நன்கு கற்றறிந்தவர் சங்கங்களில் உறுப்பினராகி டென்னிஸ் மற்றும் பில்லியட்ஸ் போன்ற ஆட்டங்களை ஆடி வந்தார் . ஆனால் மாலை ஆறு மணி ஆகிவிட்டால் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்க மாட்டார் . உண்மையாக உழைபவனுக்கு ஆறு மணிக்கு மேலே அங்கு வேலை கிடையாது என்பார் . அதற்கான காரணத்தை ஆராய்ந்தபொழுது அவர் தம்முடைய மாலை நேர பூஜையை செய்யவே அந்த நிலையை கடைபிடிக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டனர் .
நரஸிம்ம ஐயர் அந்த காலத்தில் தீவிரவாதியாக கருதப்பட்டவரும் , நெருப்புப்பொறி பறக்கும் அளவுக்கு சொற்பொழிவும் ஆற்றி வந்த பாலகங்காதர திலகரின் தீவீர ஆதரவாளர் . அதனால்தானோ என்னவோ நரஸிம்ம ஐயர் 1914 ஆம் ஆண்டு சென்னை மாகாண கவுன்சலில் சேலம்-நீலகிரி -கோயம்பத்தூர் நகரங்களின் பிரதிநிதியாக இருந்தார் . அதைத் தவிர புதிதாக நிறுவப்பட்ட மொண்டகோ -செம்ஸ்போர்ட் சீர்திருத்த சபையின் அங்கத்தினராகவும் தேர்ந்து எடுக்கப் பட்டார் . அவர் தேசிய காங்ரஸ் உறுப்பினராகவும் இருந்ததினால் தேசியக் கருத்தை அந்த சீர்திருத்த சபை கூட்டத்தில் வெளிப்படுத்தி வந்தார் .
மொண்டகோ -செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் முன்னர் நடைபெற்ற சபை கூட்டங்களில் சென்னை மாகாண கவர்னரே அதற்கு தலைமைத் தாங்கி வந்தார் . அனால் ஒருமுறை நரஸிம்ம ஐயர் அந்த கூட்டத்தில் தலைமைத் தாங்கி உரை ஆற்றியது அனைவருக்கும் வியப்பைத் தந்தது .
அந்த காலத்தில் சபையின் நடவடிக்கைகள் குறித்து எந்த விதமான செய்திகளுமே வெளியில் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தது . நரஸிம்ம ஐயர் அந்த நிலயை மாற்றினார் . சபை நடவடிக்கைகள் மற்றும் தாம் சபைகளில் பேசிய பேச்சுகள் அனைத்தையும் பொது ஜனத் தொடர்பு என்ற போர்வையில் தொகுதி மக்களுக்குக் கூறத் துவங்கினார் . அது இன்றும் தொடர்கின்றது .
அவருக்கு ஆங்கிலப் புலமையும் அதிகமாக இருந்ததினால் அடிக்கடி சென்னைக்கு சென்று அங்கு நடந்த மாகாணக் கூட்டங்களில் கலந்து கொண்டார் . ஆங்கில மற்றும் சமஸ்கிரத இலக்கியங்களில் கூறப்பட்டவையை எடுத்துக் கூறி அனைவரும் அவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் சுருக்கமாகவும் எடுத்துரைத்ததினால் சேலத்தில் நடந்த பல கூட்டத்திலும் அவர் பேச அழைக்கப்பட்டார் .

நரஸிம்ஹ ஐயர் அனைத்து விஷயங்களையும் நன்கு கற்று அறிந்திருந்ததினால் அவர் வக்கீல் தொழிலில் வந்த பின்னரும் சென்னை பல்கலை கழகத்தில் ரோமானிய மற்றும் கிரேக்க வரலாற்றுப் பாடங்களை போதித்து வந்தார். அப்படிப்பட்ட திறமைசாலிகளை அப்போது காண்பது அரிது .
பொது வாழ்வில் பெரும் புகழ் பெற்று வந்த நரஸிம்ஹ ஐயர் -சீதாலக்ஷ்மி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன . மூத்தவர் பெயர் வெங்கடராமன், அடுத்து ராஜலஷ்மி , சாரதா என்ற இரு பெண்கள் , நான்காவது ஜெயராமன் , கடைசி மகள் சாவித்ரி என்பவர் . 1916 ஆம் ஆண்டில் பெற்றோருடனே தங்கி இருந்த ஜெயராமன் மற்றும் சாவித்ரியைத் தவிர அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டு இருந்தது.
பல்வேறு செயல்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு எப்போதும் ஏதாவது வேலையில் ஈடு பட்டு இருந்தாலும் , மூன்று வேளை சந்தயாவந்தனம் , துளசி பூஜை, ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் , கோபூஜை போன்றவற்றை செய்வதை எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தவில்லை . கலஹஸ்திக்கு சென்று சுரைக்காய் சித்தரைக் காண்பதையோ அல்லது ஜகத்குரு சங்கரசாசார்யாவை சிருங்கேரி சென்று தரிசிப்பதையும் விடவில்லை .
சனிக்கிழமை மாலை வேளையில் வீட்டின் அருகில் இருந்த லஷ்மீ நாராயணர் கோவிலுக்கு சென்று பிருந்தாவன கீர்த்தனைகளை பக்தர்களுடன் அமர்ந்து கொண்டு சேர்ந்து பாடி வந்தார். 1915 ஆம் ஆண்டில் தன் புகழின் உச்சிக்கே சென்று விட்டவர் சேலத்தில் சிவசாமி விரிவில் ஒரு பெரிய பங்களாவை வாங்கினார் . ஒரு இளவரசரைப் போன்றே வாழ்ந்தாலும் பொதுத்தொண்டு செய்வதை நிறுத்தவில்லை. அவருடைய பல அரசியல் நண்பர்கள் அயல் நாட்டுப் பிரதிநிதி, மந்திரி , ஆளுநர் போன்றஆதாயம் தரும் பதவிகளை பெற்று பயன் அடைந்தாலும் அவர் அரசியலில் எந்த ஆதாயமும் பெறவில்லை . அனைத்தும் அவர் உழைத்து சாம்பதித்தவையே .
1915 ஆம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையார் சுயாட்சி உரிமை கூறி பிரிடிஷ் அரசை எதிர்த்து இயக்கம் ஒன்றை துவக்கியபோது , அன்றைய சென்னை மாகாணத்தில் இருத்த அனைத்து பகுதிகளுக்கும் அவருடன் சென்று சொற்பொழிவு ஆற்றினார் . பொது மக்களுடன் நேரடி தொடர்பு என்ற பெயரில் அமைக்கப்பட்ட இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் . அன்று அவர் துவக்கிய இயக்கமே முன்னணியில் நின்றது .
அப்போது முதலாம் உலக யுத்தம் நடந்து கொண்டு இருந்த நேரம். ஈ.எஸ் . மொண்டகோ என்பவர் அரசின் பிரதான செயலாளருமாகவும் , செம்ஸ்போர்ட் வைஸ்ராயராகவும் இருந்தார். முதலாம் உலக யுத்தம் முடிந்தபின் 1917 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தேர்தல் நடைபெற்றது . அப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட லிபரல் கட்சியை இந்திய நாட்டில் இருந்த தேசியவாதிகள் ஆதரித்தனர் . தம் நாட்டு நிலைமையை எடுத்துக்கூறி அவர்களை நிர்பந்திக்க நரஸிம்ஹ ஐயர் , ஜோசப் மற்றும் மஞ்சனேரி ராம ஐயர் அடங்கிய குழு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர் . அவர்கள் வந்தால் இங்கிலாந்து நாட்டின் மக்களின் அபிபிராயம் இந்தியாவுக்கு சாதகமான நிலையை எடுத்த கட்சிக்கு போய்விடும் என பயந்த பிரிடிஷ் அரசு அவர்கள் பயணம் செய்து வந்த கப்பலை மடக்கிப் பிடித்து பதினைந்து நாட்கள் பயணக் கைதிகளாக வைத்து இருந்தது . அதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர் .
1920 ஆம் ஆண்டு மீண்டும் மகாண சபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நரஸிம்ஹ ஐயர் மகாத்மா காந்தி அழைத்த உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக பதவியை ராஜினமா செய்தார் . அதே நேரம் சேலத்தில் இருந்த லஷ்மி நாராயணர் கோவிலை விரிவாக்குதலிலும் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதிலும் கவனம் செலுத்தினார்.
1917 ஆம் ஆண்டு இந்தியாவில் தோன்றிய, நாற்பது லட்ச மக்களை பலி கொண்ட பயங்கர ப்லேக் என்ற நோய்க்கு சேலத்தில் பலியான முதல் ஆள் அவருடைய தாயார். அந்த சோகத்தை தாங்கிக்கொள்ளும் முன்னரே 1918 ஆம் ஆண்டில் அவருடைய தந்தையும் காலரா நோயினால் தாக்கப்பட்டு இறந்தார். அவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு நரஸிம்ஹ ஐயர் தாம் மேற்கொண்டு இருந்த அரசியல் சேவைகளை தொடர்ந்தார் .
...........தொடரும்

To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.


Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.