Daily Routine Of Shirdi Sai Baba.
INTRODUCTION முன்னுரை
Many devotees would have read this article but I believe Baba's leela,Baba's life history ,His teachings, whatever we get to read about our beloved Sathguru is never satiating .Our thirst never quenches to read and know more about our Saima and we keep asking for more and more.With this thought I shall share this article.
Very Long back I had read about Shirdi Sai Baba's daily routine sent by sai bhakt Leeladhar ji and I had circulated the same to all the devotees in shirdisaibabasaikripa group.Since the readers are coming in wenbsite and are not member to shirdisaibabakripa group many of them have missed on this article .For the benefit of those readers I am reproducing the articles in this blogger. This Tamil content consists of all the six parts already published in the English site. Now onwards as and when the seventh part will be released in English simultaneous Tamil version will also appear in this blog.
Jai Sai Ram .
அன்பானவர்களே
இந்த கட்டுரைகளை முன்னமே வாசகர்கள் படித்து இருக்கலாம். நம்முடைய குருவின் சரித்திரத்தை எத்தனைமுறை படித்தாலும் அலுக்காது. அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ள ஆவல் பிறக்கும். ஆகவே நான் அவருடைய இந்த கட்டுரைகளை மீண்டும் பிரசுரிகின்றேன்.
சாயி பக்தையான லீலாதர்ஜி என்பவர் இதை எனக்கு அனுப்பி இருந்தார். அதை சாயி பக்தர்கர் வட்டத்திற்கு அனுப்பி இருந்தேன். அனைவரும் அந்த வட்டத்துள் உறுப்பினராக இல்லை என்பதாலும், பலர் இணையதளத்திலேயே படிப்பதினாலும் பலர் இந்த கட்டுரைகளை படித்து இருக்க மாட்டார்கள். ஆகவே அனைவரது நன்மைக்காகவும் இதை 'ப்லொக்கில்' நான் பல பகுதிகளாக பிரசுரிக்கின்றேன். இந்த தமிழாக்கம் ஆங்கிலத்தில் வந்துள்ள ஆறு பாகத்தின் சாரம் . ஏழாம் பாகத்தில் இருந்து வெளிவர உள்ள தொடர்ச்சி இனி ஆங்கிலத்தில் வெளியாகும் போது தமிழிலும் வரும்.
சாயிராம்சாயி பக்தையான லீலாதர்ஜி என்பவர் இதை எனக்கு அனுப்பி இருந்தார். அதை சாயி பக்தர்கர் வட்டத்திற்கு அனுப்பி இருந்தேன். அனைவரும் அந்த வட்டத்துள் உறுப்பினராக இல்லை என்பதாலும், பலர் இணையதளத்திலேயே படிப்பதினாலும் பலர் இந்த கட்டுரைகளை படித்து இருக்க மாட்டார்கள். ஆகவே அனைவரது நன்மைக்காகவும் இதை 'ப்லொக்கில்' நான் பல பகுதிகளாக பிரசுரிக்கின்றேன். இந்த தமிழாக்கம் ஆங்கிலத்தில் வந்துள்ள ஆறு பாகத்தின் சாரம் . ஏழாம் பாகத்தில் இருந்து வெளிவர உள்ள தொடர்ச்சி இனி ஆங்கிலத்தில் வெளியாகும் போது தமிழிலும் வரும்.
(மனிஷா)
BABA’S DAILY ROUTINE
பாபாவின் தினசரி வாழ்கை முறை
அந்த நேரத்தில் அப்துல் பாபா மற்றும் மாதவ் பாஸ்லே என்பவர்கள் மட்டும் மசூதிக்கு உள்ளே சென்று தரையை பெருக்கி சுத்தம் செய்து, விளக்குத் திரியை சரி செய்து, துனிக்கு அருகில் விறகுகளை வைத்து விட்டுச் செல்வார்கள்.
விடிந்த பின் பாகோஜி ஷிண்டே என்பவர் உள்ளே சென்று பாபாவின் கால்களையும், கைகளையும் மசாஜ் செய்து விடுவார். 1910 ஆம் ஆண்டு பாபா எரிகின்ற நெருப்பில் விழுந்த குழந்தையை காப்பாற்றியபோது அவர் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. பாகோஜி பாபாவின் பழைய கட்டை பிரித்து விட்டு, நெய்யை தடவி புதுக் கட்டு போடுவார். அவர் பாபா சமாதி அடைவதற்கு முன் எட்டு வருட காலம் அவருக்கு சேவை செய்து வந்தார் . பாபாவுக்கு தீப் புண் ஆறிய பின்னரும் அவர் பாபாவுக்கு தொடந்து சேவை செய்து வந்தார். அவர் புண்ணிய ஆத்மா .
பாபாவுக்கு ஊது குழாயில் புகையிலை அடைத்து வைத்து நெருப்பு பற்ற வைத்து பாபாவிடம் கொடுக்க பாபா அதில் இருந்து வரும் புகையை சிறிது இழுத்தப் பின் அதை அவரிடமே திருப்பித் தந்துவிடுவார். அப்போது காலை ஏழு அல்லது ஏழரை ஆகிவிட பாபாவின் தரிசனத்துக்கு பக்தர்கள் வரத் துவங்கி விடுவார்கள். வந்த சிலரிடம் பாபா எப்படியெல்லாம் மிக தூரத்தில் இருந்தவர்களையும் தான் காப்பாற்றினேன் என்பதையும், மரணம் அடைந்தவர்களை சொர்கத்துக்கு அனுப்பிய கதைகளையும் கூறுவது உண்டு. அவர் கூறியதையே பாபாவினால் குணம் அடைந்த மற்றும் காப்பாற்றப்பட்ட மக்கள் வந்து கூறும்போது பக்தர்கள் பாபா கூறியது உண்மையே எனத் தெரிந்து கொள்வார்கள்.
குளித்துடன் அவர் துனிக்கு முன் சென்று நிற்க அவருடைய நெருங்கிய பக்தர்கள் அவருடைய உடலைத் துடைத்து விடுவார்கள். அவர் உபயோகித்த நீரை பலரும் தமது நோய்களைத் தீர்க்கும் புனித நீராகக் கருதி உபயோகிப்பார்கள். நாசிக்கை சேர்ந்த ராம்ஜி நாயக் என்ற புத்தி பேதலித்தவர் அந்த நீரை குடித்து குணம் அடைந்தார். அவர் அதற்கு நன்றிக் கடனாக பாபா உட்கார்ந்தபடி குளிப்பதற்காக பெரிய கல்லை பரிசாகத் தந்தார். அது இன்னமும் துவாரகாமாயியில் உள்ளது.
பாபா தினமும் குளிக்க மாட்டார். ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு ஒரு முறைதான் குளிப்பார். சில நேரங்களில் ஏழு அல்லது எட்டு வாரங்கள் கூட குளித்தது இல்லை. அது குறித்து அவருடைய பக்தர்கள் அவரிடம் கேட்டால் அவர் கூறுவாராம் ' நான் தினமும் கங்கை நதியில் குளித்து விட்டு வருகின்றேன். அதற்குப் பிறகு எதற்காக மீண்டும் குளிக்க வேண்டும்?'

சாதாரணமாக தான் புதிய காப்னியை உபயோகித்தால் தன்னுடைய பழைய காப்னிகளை அங்குள்ள சாதுக்களுக்கும் ஏழைகளுக்கும் தந்து விடுவார். அதனால் பாபா எப்போது புதுத் துணி தைத்தாலும் அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். 1914 ஆம் ஆண்டு ஒருமுறை பாபா தனது காப்னியை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த நார்கே என்பவர் தனது மனதில் நினைத்தார் ' எனக்கும் ஒரு காப்னியை பாபா தந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ' . அந்த பக்கம் வந்த பாபா அவர் பக்கம் திரும்பினார் ' இந்த பரதேசிக்கு உனக்கு காப்னியை தர இஷ்டமில்லை. நான் என்ன செய்வது?' பாபா சில நேரத்தில் முடி வெட்டுபவரை அழைத்து தன்னுடைய தலையை மொட்டை அடித்து விடுமாறு கூறுவது உண்டு. அது போலவே தன்னுடைய மீசையையும் சரி வர வெட்டி விடச் சொல்லி அழகு செய்து கொள்வார். அவனுக்கு நிறைய பணமும் தந்துஅனுப்புவார்.அப்பாஜி படேல், மற்றும் ,வாமன் கோண்ட்கர் வீட்டில் சென்று ' பக்ரி தே ( ரொட்டி குடு ) என்று கூவுவார். ஷஹராம் ஷேல்ஹே வீட்டின் முன் சென்று ' இட்லாயி பாய் ரொட்டி தோ' என்பார்.
நந்துராம் மார்வாடி வீட்டிற்குச் சென்று 'நந்துராம் பாக்ரே தே என்பார்' அல்லது அவருடைய மனைவி ராதாபாயை அழைத்து 'போப்பிடி ( திக்குவாய்) பாக்ரி தே' என்பார். ராதாபாய் திக்குவாய் உடையவர். சில நேரத்தில் அவளுடைய பெயரை சொல்லியும் அவர் அழைப்பார். அவள் பிட்சையை கொண்டு வர தாமதித்தால் அவள் மீது கோபம் கொண்டு கத்துவார். சில நேரத்தில் அவர் அவளுடைய வீட்டிற்குச் சென்று 'போப்பிடி பாய் மீத்தா (இனிப்பு) தே' என்பார். அவளும் பாபா கேட்டு விட்டதினால் பூரண் போளியை செய்து தருவாள்.அதில் அவர் தான் சிறிது எடுத்துக் கொண்டு மீதியை மற்றவர்களுக்குத் தந்து விடுவார். அவர் பிட்சை எடுக்க எப்போது போவர் என்பது தெரியாது, ஆனால் அவர் தினமும் ஒருவர் வீட்டிற்குப் பின் மற்றவர் என ஒரு குறிப்பிட்ட முறைப்படித்தான் வீடுகளுக்கு செல்வார். மேலும் சில நாளில் சிலர் வீட்டிற்கு எட்டு முறைக் கூட பிட்சை எடுக்கச் செல்வார். முதல் மூன்று வருடங்கள் அவர் தினமும் எட்டு முறை பிட்சை எடுத்து வந்தார், அதன் பின் மூன்று வருடங்கள் நான்கு முறையும் அடுத்த பன்னிரண்டு வருடங்கள் தினமும் இரண்டு முறையும் கடைசி சில நாட்களில் ஒருமுறை மட்டுமே பிட்சை எடுத்து வந்தார்.
பாயாஜிபாயின் வீட்டிற்கு அவர் எத்தனை முறை பிட்சை எடுக்கச் சென்றாலும் அவள் அலுத்துக் கொள்ளாமல் ஏதாவது உணவை கொண்டு வந்து போடுவாள். ஒன்றுமே இல்லை என்றாலும் சிறிது ஊறுகாய் அல்லது அப்பளாமையாவது கொண்டு வந்து போடுவாள். அவளை பாபா தன்னுடைய சகோதரி என்பார் . அவளும் அவருடைய மகிமைகளை புரிந்து கொண்டு இருந்ததினாலோ என்னவோ அவருக்கு பிட்சை போடாமல் தான்சாப்பிட மாட்டாள். அவள் பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்தவளாக இருந்து இருக்க வேண்டும்.
அவர் அடிக்கடி ஆஸ்துமா நோயினால் அவதிப் பட்டார். அவரை அந்த நிலையில் பார்க்கும் போது பக்தர்கள் அழுது விடுவார்கள். ஒருமுறை ரகுவீர் புரந்தாரே என்பவர் பாபா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டதை பார்த்து விட்டு அழுது விட்டார். அதைக் கண்ட பாபா அவரிடம் கூறினார் ' சகோதரா எதற்காக நீ அழுகின்றாய்? இது விரைவில் குணமாகிவிடும்'
தனது நினைவலையில் ஸ்ரீ சாயி சதானந்த எழுதினர் ' ஒருமுறை பாலக்ராம் சீரடியில் இல்லை. அப்போது அவருக்கு பதிலாக பிட்சை எடுக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நான் ஸ்ரீ ஜோகின் வீட்டில் இருந்து உணவும் வேறு சிலரிடம் சென்று பாலும் கொண்டு வருவது உண்டு' ஒருமுறை நார்கே அதைப் பார்த்தார். அவருக்கு தனக்கும் அந்த பாக்கியம் கிடைக்காதா என்ற ஆசை எழுந்தது. அவர் கூட்டும் பாண்டும் போட்டுக் கொண்டு மசூதிக்கு ஒருமுறை வந்த போது அவருடைய மனதை அறிந்து கொண்ட பாபா அவரை அந்த கோலத்திலேயே பிட்சை எடுக்க அனுப்பினார். அதற்குப் பின் நார்கே நான்கு மாதம் அந்த வேலையை செய்தார்.
பாபா தன்னுடைய தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பிட்சைக்கு செல்வர். ரொட்டி மற்றும் மற்ற உணவை பையில் போட்டுக் கொண்டும் பால் மற்றும் பிற திரவ பண்டத்தை கிண்ணத்திலும் போட்டுக் கொள்வார். அவர் உணவு எப்படி உள்ளது என அதன் சுவையைப் பார்க்க மாட்டார். சுவையைத் தவிர்க்க வேண்டும் என அனைவருக்கும் கூறுவார். துவாரகாமாயியில் இருந்து கிளம்பி சாவடிக்குச் சென்று முதலில் ஷகாராம் ஷேல்கே , அடுத்து வாமனராவ் கோன்த்கர், அடுத்து பாயாகி படேல், தத்யகோடி படேல் மற்றும் கடைசியாக நந்துராம் மார்வாடி என வரிசையாகச் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்வார். பாயாகி படேல் வீட்டு அருகில் கற்களால் ஆனா சாலையே இருந்ததினால் பாபா காலணி அணிந்து கொண்டே செல்வார். வழியில் உள்ள நாய் மற்றும் காக்கைகளுக்கு உணவு போடுவார். அவருடைய காலணிகள் இன்றும் அவர் நினைவாக வைக்கப்பட்டு உள்ளன. பிட்சை கொண்டு வந்ததும் அதில் சிறிது துனியில் போட்டு விட்டு மீதத்தை அங்கிருந்த 'கொலும்பா' என மராட்டிய மொழியில் அழைக்கப்பட்ட மண் பானையில் போட்டு வைப்பார். அதை நாய்களும், பூனைகளும், எறும்புகளும் வந்து சாப்பிட்டு விட்டுப் போகும். அதில் இருந்து பிராணிகள் மட்டும் அல்ல எவர் வேண்டுமானாலும் உணவை எடுத்துச் செல்லலாம். மசூதியை சுத்தம் செய்ய வருபவளுக்கு குறைந்தது ஆறு ரொட்டியாவது தினமும் அதில் இருந்து கிடைக்கும்.
அங்குள்ள வேப்ப மற்றும் அத்தி மரத்தின் இடையே உள்ள இடத்தில் அணையாத விளக்கு எரிந்து கொண்டு இருக்கும். பாபா அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்தபடி இருப்பார். அந்த விளக்கை சுற்றி சணல் கோணியினால் ஆனா தடுப்புகள் போடப்பட்டு இருக்கும் . அந்த இடத்தை அப்துல் பாபா என்பவர் சுத்தப்படுத்தி வைப்பார். பாபாவுக்காக இரு குடம் நீரையும் வைப்பார். விளக்குக்கு எண்ணை ஊற்றி அணையாமல் பார்த்துக்கொள்வார்.
பக்தர்கள் கைகளையும் கால்களையும் அலம்பிக்கொண்டு வந்து பாபாவின் பக்கத்தில் அமர்ந்து கொள்வார்கள். எல்லா உணவையும் கலந்து பாபாவின் முன்னால் வைப்பார்கள். வாயிலில் தடுப்புச் சீலைகள் போடப்படும். அப்போது வெளியில் இருந்து எவரும் உள்ளே வரக் கூடாது. பாபா முதலில் உணவை கடவுளுக்கு பிரசாதமாக அளித்த பின் தனக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு மற்றதை வெளியில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தந்து விடுவார். உணவில் ஒரு பாகத்தை பாலுடன் கலந்தும் மற்ற பாகத்தை சக்கரையுடன் கலந்து பிரசாதமாகத் தருவார்.
அதன் பின் நிமோல்கரும் சாமாவும் உணவை மற்றவர்களுக்கு பரிமாறுவார்கள். எவருக்காவது எந்த உணவாவது தேவை எனில் பாபா அவர்களுக்கு அதைத் தருவார்.
Painting of Baba's hand with coin-By Navneet Agnihotri
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading
.jpg)

0 comments:
Post a Comment