Live Experiences of the Tarkhad Family With Sai Baba-Meeting With Sai Baba.
இந்த நிகழ்ச்சி ஒரு வெய்யில் காலத்தில் நடந்தது . மெட்ரோ சினிமா அருகில் இருந்த இரானி ஹோட்டலில் ஜோதிந்திரா உணவு அருந்திவிட்டு தன்னுடைய பள்ளிக்கு செல்லத் துவங்கினார் . உணவு இடைவேளையில் தினமும் அந்த ஹோட்டலில் வந்து உணவு அருந்திவிட்டு செல்வது வழக்கமான ஒன்றுதான். சாலையை கடந்த பொழுது வெள்ளை உடை அணிந்த பகீர் எனப்படும் பரதேசி ஒருவர் அவரைத் தொடர்ந்து போய் பிட்சைக் கேட்டார்.
ஜோதிந்திர தனது சட்டை பையில் இருந்து எடுத்த ஒரு பைசாவை அவரிடம் தந்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கியதும் அந்த பகீர் அவரிடம் இந்த பைசா 1894 ஆம் ஆண்டை சேர்ந்தது அல்லவா எனக் கூற , ஜோதிந்திரா தனக்கு தினமும் கிடைக்கும் நாலு அணாவில் அத்தனைத்தான் தர இயலும் என்றும் , அந்த பைசா இன்னமும் செல்லுபடியாகும் எனக் கூறியபின் சென்றுவிட்டார். பகீர் அவரை நோக்கி ‘அல்லா பலா கரேகா ’ அதாவது அல்லா உனக்கு நன்மை செய்வார் என்று கூறிவிட்டு சென்றார் . ஜோதிந்திர வீடு திரும்பியதும் அதை மறந்தும் விட்டார் .
ஜோதிந்திராவுக்கு சத்யேந்திர மற்றும் ரவீந்திரா என்ற இரண்டு சகோதரர்கள் உண்டு . இருவரும் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தனர். சத்யேந்திர என்னுடைய மாமன் ஆவர் . அவர் மாதுங்காவில் இருந்த கொங்கன் நகரில் இருந்தார் . ஜோதிந்திராவின் சகோதரர் , மாமா , தத்தா போன்றோர் மருத்துவர்கள் . தாத்தா அன்றைய மும்பை வைசிராயின் குடும்ப டாக்டர் . ஆகா ஜோதிந்திராவின் குடும்பமே ஒரு விதத்தில் டாக்டர் குடும்பமாகும் . அத்தனை டாக்டர்கள் இருந்தும் என்னுடைய பாட்டிக்கு இருந்த தீராத இடைவிடாத தலைவலியை என்ன முயன்றும் அவர்களால் குணப்படுத்த முடியவில்லை .
அவர்கள் வீட்டில் வேலையில் இருந்தவள் பாந்திரா மசுதிக்கு அருகில் ஒரு பீர் இருப்பதாகவும் அவர் தரும் ஆயுவேட மருந்தினால் தீராத வியாதிகளும் குணம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்தாள் .அந்த காலத்தில் முஸ்லிம் மசூதிக்கு செல்ல எந்த ஹிந்துவும் விரும்பியதில்லை . ஆகவே ஜோதிந்திராவிடம் ஒரு புர்காவை (உடல் முழுதும் மறைத்துக்கொள்ளும் முஸ்லிம் பெண்கள் அணிந்து கொள்ளும் ஒரு உடை) வாங்கி வரச்சொல்லிவிட்டு அதை அணிந்து கொண்டு அவருடன் என் பாட்டி சென்றாள். அவரோ தன்னிடம் அதற்கு எந்த மருத்துவமும் இல்லை எனவும் சீறடியில் உள்ள தன்னுடைய சகோதரர் அவளுடைய பிரச்சனைகளை கண்டிப்பாக தீர்பார் என்றார் .
என்னுடைய பாட்டி பிரதாந்த சமாஜத்தை சேர்ந்தவர் . அப்படிப்பட்ட பாபாக்களிடம் செல்ல மாட்டாள் என்றாலும் ,சீரடி எங்கு உள்ளது , அதற்கு எப்படிப் போவது எனப் புரியாமல் விழித்தனர் .ஆனால் ஜோதிந்திரா அதை விடுவதாக இல்லை . ஏனெனில் அவர் பாபாவை சந்திக்க வேண்டும் என்ற விதி இருந்து உள்ளது . அவர் இரானி ஹோட்டலில் இருந்து சீரடி உள்ள இடத்தை விசாரித்து அறிந்து கொண்டார் .
சீரடி அஹமத் நகருக்கு அருகில் இருந்த இடம் என்பதையும் அதற்குப் போக கோபர்கோன் என்ற இடத்திற்கு சென்றபின் ஒன்பது கல் தொலைவில் இருந்த சீரடிக்கு செல்ல வேண்டும். ஆகா சீரடி சென்று திரும்ப வேண்டும் எனில் மூன்று நாட்கள் பிடிக்கும். எப்படியோ ,ஜோதிந்திரா தன்னுடைய தந்தையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு ஒரு வெள்ளிக் கிழமை சீரடிக்கு பயணத்தை மேற்கொண்டார் . சனிக்கிழமை சீரடி சென்றபின் குளித்துவிட்டு சாயி பாபாவை பார்க்கச் சென்றனர் . சாயி பாபா அந்த புனித துனி என்ற இடத்தின் அருகில் அமர்ந்து இருந்தார் . அவரிடம் சென்றதும் என் பாட்டி அவர் காலைத் தொட்டு கும்பிட்டாள் .
பாபா அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி இருந்தவாறு அவளிடம் கூறினார் , ‘ அம்மா நீங்கள் பாந்த்ராவில் உள்ள என்னுடைய சகோதரன் கூறியதால் இங்கு வந்து விட்டீர்களா? அமருங்கள், உங்களுக்கு தீராத தலைவலி உள்ளது அல்லவா ? எனக் கூறிய பின் தீடீர் என அந்த துனியில் இருந்த வீபுதியை தன் கையில் எடுத்து அவள் நெற்றியில் இட்டுவிட்டு அவளுடைய தலையை தன் விரல்களால் இறுகப் பிடித்துக் கொண்டு கூறினார் , இனி உன் உயிர் உள்ளவரை உனக்கு தலைவலியே வராது . அது இன்றுடன் ஒழிந்துவிடும் ’ என்ன அதிசயம் . என் பாட்டிக்கு ஒரே வியப்பு . அவருக்கு எப்படி தன்னுடைய பிரச்சனை தெரியும் ? அவளுடைய தலைவலி அந்த நிமிடத்தில் இருந்து பறந்து விட்டது . அதனால் வாடி இருந்த அவளுடைய முகம் தெளிவாயிற்று . அதன் பின் என்ன ஆயிற்றோ , அவள் என்னுடைய தந்தை ஜோதிந்திராவை அழைத்து பாபாவை வணங்கச் சொன்னாள் . அதற்கு முன்னர் அவரிடம் என்னுடைய பாட்டி அப்படி பேசியதே இல்லை . பாபாவின் கால்களில் விழுந்து வணங்கிய என் தந்தையிடம் பாபா கேட்டார் ’ என்னைத் தெரிகின்றதா ’?. அதற்கு இல்லை எனக் கூரியவரிடம் பாபா 'என்னைப் பார் , நன்றாக நினைத்துப் பார் ,நான் யார் என என்னும் தெரியவில்லையா, என்று கூறியும் தனக்கு தெரியவில்லை என என் தந்தை கூறியதும், பாபா தன்னுடைய சட்டையில் இருந்து ஒரு பைசா நாணயத்தை எடுத்து , ’இதை நினைவில் வைத்து இருக்கின்றாயா ? நீ ஒருமுறை ஒரு பகீரிடம் தந்த 1894 ஆண்டின் நாணயம் இது'. என் தந்தையின் கண்களில் நீர் வழிந்தோட அவர் பாபாவின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டார். அவரை தூக்கி நிறுத்திய பாபா கூறினார் ,’ பாபு , அன்று உன்னை சந்தித்த பகீர் வேறு யாரும் அல்ல . நான்தான் . இந்த இதை எடுத்துக் கொண்டு பத்திரமாக வைத்துக் கொள் . இந்த நாணயம் உனக்கு நாணயங்களுக்கு மேல் நாணயங்களை தந்தபடி இருக்கும் ’ என்றார் . அந்த நிகழ்ச்சி அவர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளாக இருந்தது என்பதை அனைவரும் உணர்வீர்கள் .
அதன் பின் தர்க்கட் குடும்பமே பாபாவின் பக்தர்களாக மாறிவிட்டனர் . அந்த ஒரு பைசா நாணயம் இன்று எங்களுடைய பூஜை அறையில் உள்ளது . பாட்டிக்கு அதன் பின் தலைவலியே என்ன எனத் தெரியவில்லை . என்னுடைய தந்தையிடம் என்னதான் நடந்தது எனக்கேட்டபோது அவர் கூறினார் ‘ அவருடைய கருணை வடிவமான கண்களும் , மிருதுவான கைகளின் பரிசமும் எந்த வியாதியையுமே குணப்படுத்தும் விதத்தில் இருந்தது ’. சாயி பாபா தன்னை எந்த விதத்திலும் எந்த கடவுளுடனும் ஒப்பிட்டுக் கொள்ளவில்லை . கண்டோபா ஆலயத்தில் இருந்த மல்சபதி பகத் என்ற பூசாரி அவரை ’ வாருங்கள் சாயி பாபா , வாருங்கள் ’ எனவே முதலில் அழைத்து வந்ததும் , அதன் பின் அவருடைய தீவிர பக்தர் ஆனது தனிக் கதை . சாயி என்றால் மராத்தியில் சாக்ஷாத் , அதாவது அனைத்தும் என்பதே என என்னுடைய தந்தை கூறுவது உண்டு . அவரே கடவுள் . என்னுடைய தந்தைக்கு அதன் பின்னரும் பல அற்புதமான அனுபவங்கள் கிடைத்தன . அவர் பெற்ற அனுபவங்களைப் போல வேறு பலரும் அவருடைய அற்புதங்களைக் கண்டு உள்ளனர் . அத்தகைய தர்க்கட் குடும்பத்தில் நான் பிறந்தது என்னுடைய அதிருஷ்டமே .

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.
Loading
0 comments:
Post a Comment