Saturday, January 16, 2010

Nine Thursdays Sai Baba Vrat - FAQ's In Tamil.



ஒன்பது வார வியாழக் கிழமை விரதம் மிகவும் பிரபலமாகி வருகின்றது. அதற்க்கு காரணம் அதை கடை பிடிப்பவர்களுக்கு பல நன்மைகளும் கிடைகின்றன என்பதே. அது குறித்த சந்தேகங்களை எமக்கு வாசகர்கள் அனுப்பி வருகின்றனர். பல கேள்விகள் வந்துள்ள நிலையில் அதை பற்றி தனித்தனியாக எழுதுவதை விட அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் அளவில் அதை இணைய தளத்திலேயே வெளியிட முடிவு செய்தோம். எங்களுக்குத் தெரித்த அளவு விவரத்தை நாங்கள் வெளியிட்டு உள்ளோம் . அது எந்த அளவு சரியானது என்பதை பாபாவின் தீர்ப்புக்கு விட்டு விட்டோம். இதில் பிழைகள் இருந்ததால் பொறுத்தருளவும். மேலும் விவரம் கிடைத்தால் இந்த இணைய தளத்துக்கே எழுதினால்அதையும் பிரசுரிக்கிறோம் .
மனிஷா

1) சாயி விரத புத்தகம் எங்கு கிடைக்கும்?

இந்த விரதத்தைக் கடைப்பிடித்து பல பக்தர்கள் நன்மை அடைந்து உள்ளனர். வாய் மொழியாக இதன் மகிமை பரவி வருகின்றது. இந்த புத்தகம் பல இடங்களிலும் - புத்தக நிலையங்கள், சாயி பாபா ஆலயம் போன்ற இடங்களில் கிடைக்கும். சாயி விரத புத்தகம் சாயி சமஸ்தானத்தினரால் வெளியிடப் படவில்லை. ஆகவே நான் ஆங்கிலம். இந்தி, மராட்டி,தமிழ், தெலுங்கு, என பல மொழிகளிலும் உள்ள அவற்றை அவற்றை ஸ்கேன் செய்து வெளியிட்டு உள்ளேன். இதற்கு உதவிய சகோதரி பிரியா மற்றும் சகோதரர் ராம ராவ் அவர்களுக்கு நன்றி.இந்த இணைய தளத்தில் இருந்து ஸ்கேன் செய்து வெளியிட்டு உள்ளவற்றை டவுன்லோட் செய்து கொள்ள எந்த மொழியில் வேண்டுமோ அதை கிளிக் செய்யவும்

ஆங்கிலம். இந்தி, மராட்டி,தமிழ், தெலுங்கு விரதப் புத்தகம்

இவற்றைத் தவிர வேறு மொழியில் வெளியாகி உள்ள புத்தகத்தின் பிரதியை ஸ்கேன் செய்து அந்த காப்பியை அனுப்பினால் அதையும் பிரசுரிக்க முடியும்.

2 ) பாபா விரதத்தை செய்யுமாறு கூறவில்லை எனில் எதற்காக நாம் அதை அனுசரிக்க வேண்டும்?

சாயி சரித்திரத்தைப் படித்துள்ள பக்தர்களுக்கு இந்த கேள்வி எழுவது நியாயமானதே. ஆனால் இந்த விரதத்தைக் கடை பிடித்து நானே பல நன்மைகளை அடைந்துள்ளேன். நமக்கு தேவையான பொருட்களை அடைய வேண்டும் என வேண்டிகொண்டு மட்டும் செய்வதல்ல இந்த விரதம். அதை செய்வதின் மூலம் கிடைக்கும் ஆன்மீக அனுபவம் அற்புதமானது. பாபாவிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றி பாபா அவர்களை தன்னுடன் இணைத்துக் கொள்கின்றார். ஆனால் அவருடைய சக்தியையோ அல்லது விரதத்தின் மகிமையோ ஆராய்வதற்காக எவரும் இதை செய்யக் கூடாது என்பது என் பணிவான வேண்டுகோள். உண்மையான பக்தி கொண்டே செய்ய வேண்டிய இந்த விரதத்தைக் கடை பிடிப்பதும் கடை பிடிக்காததும் அவரவர் விருப்பம்.

3) இந்த விரதத்தை யார் செய்யவேண்டும்?

ஆண், பெண் மற்றும் குழந்தைகள் கூட இதை செய்யலாம். ஆனால் வயதானவர்கள் இதை கடைபிடிக்காமல் இருபது நல்லது. என் எனில் அவர்களுடைய உடம்புக்கு விரதம் சரி வராது. அது மட்டும் அல்ல எந்த ஜாதி, மதத்தினராக இருந்தாலும் இதை கடை பிடிக்கலாம். பாபா மீது நம்பிக்கை வேண்டும் அவ்வளவே.

4) இந்த விரதத்தை ஏதேனும் விசேஷ நாளில்தான் துவக்க வேண்டுமா?

இந்த விரதத்தை எந்த வியாழக் கிழமையில் இருந்தும் துவக்கலாம். பாபாவின் அருளை வேண்டிக்கொண்டு இதை துவக்கலாம்.

5) விரதத்திற்கான விதிமுறை என்ன?

எந்த விதிமுறையும் இதற்குக் கிடையாது. காலையும், மாலையும் பாபாவை நினைத்துக் கொள்ளவேண்டும். பாபாவின் படத்தை ஒரு மஞ்சள் துணி மீது வைக்க வேண்டும். அந்த படத்திற்கு சந்தானம் அல்லது குங்குமத்தினால் பொட்டு இட வேண்டும். தினமும் மஞ்சள் நிறப் பூவை பாபாவின் படத்துக்குப் போட்டு , தீபம் ஏற்றி, ஊதுபத்தி கொளுத்தி வைத்தப் பின் அதன் முன் அமர்ந்து பாபாவை மனதில் வைத்துக் கொண்டு விரதக் கதையைப் படிக்க வேண்டும். முடிவில் பிரசாதம் விநியோகிக்க வேண்டும்.

6) விரத புத்தகத்தைத் தவிர வேறு ஏதாவது ஸ்லோகமோ அல்லது தெய்வ புத்தகமோ படிக்க வேண்டுமா?

விரத புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் படிக்கத் தேவை இல்லை என்றாலும், சாயி சாலிசா மற்றும் சாயி பவானியையும் படிக்கலாம்.

இந்தி சாயி பாபா சாலிசாவை டவுன்லோட் செய்து கொள்ள இதை
கிளிக் செய்யவும் .
தெலுங்கு சாயி பாபா சாலிசாவை டவுன்லோட் செய்து கொள்ள இதை கிளிக் செய்யவும் .

7) என்ன பிரசாதம் கொடுக்க வேண்டும்?

இனிப்பு வகை, பழங்கள் மற்றும் பாதாம், கல்கண்டு மற்றும் முந்தரி பருப்பு போன்றவற்றைக் கொடுக்கலாம்.

8) விரத நாட்களில் என்ன ஆகாரம் சாப்பிடலாம்?

பழங்கள், இனிப்பு, ஜூஸ் வகைகள், காபி போன்ற பானங்களை சாப்பிடலாம். இல்லை என்றால் மாலை மட்டும் ஒரு வேளை உணவு அருந்தலாம். ஆனால் பட்டினி கிடந்து விரதம் இருக்கக் கூடாது. காய்கறிகள் எதை வேண்டுமானாலும்- வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்த்து - சாப்பிடலாம்.

9) சாயிபாபா ஆலயத்துக்கு அன்று கண்டிப்பாக செல்ல வேண்டுமா?

அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை என்றாலும் சாயி பாபா கோவிலுக்கு அன்று செல்வது சிறப்பு. முடியவில்லை என்றால் பாபாவின் மீதான நம்பிக்கையோடு வீட்டிலேயே அவரை வணங்கலாம்.

10) நான் ஊரில் இல்லாத போது வெளியில் இருந்தாலும் விரதத்தை தொடரலாமா?

நிச்சயமாக விதி முறைகளை அனுச்சரித்தபடி எங்கிருந்தாலும் அதை தொடரலாம். என்ன தேவை என்றால் பாபாவின் மீதான முழு நம்பிக்கை.

11) தவிர்க்க முடியாத காரணத்தினால் தொடர்ந்து செய்யும் விரதத்தில் ஒரு வியாழக் கிழமை செய்யாவிடில் , மீண்டும் முதலில் இருந்து துவக்க வேண்டுமா?

அப்படி கட்டுப்பாடு இல்லை. இடையில் ஒரு வியாழக் கிழமை செய்ய முடியாமல் போய்விட்டால் அடுத்த வார வியாழக் கிழமையன்று அதை தொடர்ந்து செய்யலாம் . அது போல பெண்கள் வீட்டு விலக்காகி விட்டாலும் அடுத்த வார வியாழக் கிழமையன்று அதை தொடர்ந்து செயலாம்.

12) விரதம் ஒன்பதாவது வியாழக் கிழமை அன்று முடிக்க வேண்டும் என்பது கட்டாயமா?

ஆமாம். நிச்சயமாக விரதத்தை ஒன்பதாவது வியாழக் கிழமை அன்று முடிக்க வேண்டும் .

13) விரதத்தை எப்படி முடிப்பது?

ஒன்பதாவது வியாழக் கிழமையன்று விரதம் முடிந்ததும் ஐந்து ஏழைகளுக்கு அன்னதானம், 5,11 ,அல்லது 21 என்ற கணக்கில் விரத புத்தகத்தை நண்பர்களுக்கோ அல்லது உறவினருக்கோ விநியோகம் செய்யவேண்டும்.

14) விரத புத்தகம் கிடைக்காவிடில் எப்படி விநியோகிப்பது?

விரத புத்தகங்கள் தாராளமாக கிடைகின்றன. வெளி நாட்டில் உள்ளவர்களுக்கு ஸ்கேன் செய்த காபியை இன்டர்நெட் மூலம் அனுப்பலாம். உள் நாட்டில் உள்ளவர்களுக்கு போடோ காப்பி எடுத்து தரலாம். ஆனால் தரும் முன் அவர்கள் அதை செய்வார்களா எனக் கேட்பது நல்லது.

15) ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்யலாம்?

வெளி நாடுகளில் உள்ளவர்கள் தமது சொந்த ஊரில் உள்ளவர்கள் மூலம் விரதம் முடியும் அன்று அன்னதானம் செய்யுமாறு ஏற்பாடு செய்யலாம். அல்லது சாயி பாபா ஆலயத்தில் அதை செய்ய கோவில் நிர்வாகிகளை கேட்டுக் கொள்ளாலாம். இல்லை என்றால் எந்த ஆலயத்தில் அன்னதானம் செய்கின்றார்களோ அன்று அவர்களிடம் தன் பங்கிற்கான பணம் தந்து அதில் கலந்து கொள்ளலாம்.

16) வெளி நாடுகளில் உள்ளவர்கள் வேலை நாட்களில் அந்த விரதத்தை செய்ய முடியாமல் போனால் வேறு நாளில் செய்யலாமா? ஒரு சகோதரி கேட்டு இருந்தார், ' நங்கள் துபாயில் உள்ளோம். எங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில்தான் வார விடுமுறை. ஆகவே வேலை நாளான வியாழக் கிழமையன்று அதைத் தவிர்த்துவிட்டு மற்ற நாளில் செயலாமா'

நிச்சயமாக வியாழக் கிழமை தவிர வேறு நாளில் அதை செய்யக் கூடாது. அது பலனைத் தராது. வியாழக் கிழமையன்று வேலை நாளாக இருந்தால் என்ன, அன்றைக்கு பழங்கள், இனிப்பு, ஜூஸ் வகைகள், காபி போன்ற பானங்களை சாப்பிட்டும், மாலை மட்டும் ஒரு வேளை உணவு அருந்ததியும் அதைக் கடைபிடிக்க முடியுமே. அப்படி முடியாது என்கின்றபோது இந்த விரதத்தை செய்வதில் பலன் இல்லை.
(Translated Into Tamil by Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.