Thursday, January 14, 2010

Sai Baba's Blessing Are With Me Always -Experience By Anjali.


அன்புடையீர்
இதுவரை வெளியான அனைத்துமே பாபாவின் அருளை குறிப்பிட்ட காரணத்துக்காக பெற்ற கதையை எழுதினார்கள். எந்த கதை வித்யாசமானது. பாபா எப்படி எல்லாம் ஒருவளுக்கு வாழ்வில் பலமுறை தொடர்ந்து உதவி உள்ளார் என்பதை விளக்கும். இனி படியுங்கள்
மனிஷா
அன்பு மனிஷாஜி
நான் எழுத்தாளர் அல்ல என்றாலும் என் வாழ்வில் பாபா செய்துள்ள அற்புதத்தை படியுங்கள். ஒருநாள் பாபா என்னுடன் நேரில் வந்து பேசுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.
19994 ஆம் ஆண்டு. நான் காலேஜில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்கு பாபா மீது நம்பிக்கை இலை. அனைத்து சாதுக்களுமே நம்பிக்கைக்கு ஏற்றவர்கள் அல்ல என எண்ணியவள் . ஆனாலும் ஒரு முறை என்னுடைய தோழி அழைத்ததின் பெயரில் நான் சீரடி சென்ச்றேன். அங்கு சென்று ஹாலில் அமர்ந்ததும் என்னை அறியாமல் மனதில் அமைதி தோன்றியதை உணர்ந்தேன். பின்னர் வீடு திரும்பினோம் . காலேஜ் வாழ்கை முடிந்தது. வாழ்வில் பல ஏற்றங்கள், இறக்கங்கள், பாபாவை மறந்தேவிட்டேன்.
1998 ஆம் ஆண்டு நான் காதல் திருமணம் செய்து கொண்டதினால் வீட்டை விட்டு வந்து விட்டேன். எனக்கு கடவுளிடம் நம்பிக்கை உண்டு, ஆனால் பாபாவை நினைக்கவில்லை. விமானத்தில் ஹைதராபாத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தவர் தானாகவே பாபாவின் ஒரு படத்தை தன்னுடைய பர்ச்சில் இருந்து எடுத்துக் காட்டி, '' பாபா உன்னுடன்தான் இருக்கிறார், கவலைப் படாதே '' என்றார். நானோ என் திருமணத்தினால் மனம் கலங்கி தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு இருந்தேன். ஆகவே அது எனக்கு ஒரு வியப்பாக இருந்தது.
ஹைதராபாத்திற்கு வந்ததும் பாபாவின் ஆலயத்துக்கு செல்லத் துவங்கினேன். அது வேண்டும் , இது வேண்டும் என வேண்டுவேன் . கேட்டது கிடைக்கவில்லை எனில் அவரை விட்டுவிடுவேன். இப்படியாக வாழ்கை போய்க்கொண்டு இருக்கையில் 2003 ஆம் ஆண்டு நான் வெளிநாடு சென்றேன். ஆனால் என் கணவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவர் தன்னுடைய பெற்றோரையும் இழந்துவிட்டார். திருமணம் ஆகியும் மூன்று ஆண்டுகள் அவர் இங்கும், நான் அங்குமாக இருந்தோம்.
பாபா என்னுடைய வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்ற தத்துவத்தை நன்கே போத்திருந்தார். நான் மனதில் பாபாவுடன் சண்டை போடுவேன், நிந்திப்பேன், சிரித்துப் பேசுவேன். இப்படி எல்லாம் என் வாழ்வு அமைந்தது. என்னுடைய மாமனார் இறக்கும் முன்னரே நாங்கள் படிப்பதற்கு வாங்கி இருந்த கடன்களை அறவே திருப்பி விட்டோம். அது என் மாமனாருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
2003 ஆம் வருடம் நான் இங்கு வந்த பின் விசா முடிவுக்கு வந்தது. அதை மீண்டும் புதுப்பிக்க லண்டன் செல்ல வேண்டும். என் கணவரோ இந்தியாவில் இருந்தார். நான் விடியற்காலை விசா அலுவலகத்திற்கு சென்று நின்றேன். காலை எட்டு மணிக்கு திறந்தனர். பாங்கின் அசல் பாஸ்புத்தகம் வேண்டும் என்று எனக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டார் அதிகாரி. என்ன செய்வது. வெளியில் வந்து அழுதேன். அப்போது எதிர்பாராமல் அங்கு வந்த ஒரு சர்தார் என்னிடம் வந்து கதையைக் கேட்டபின், கவலைப் படாதே, பத்து மணிக்கு இன்னொரு அதிகாரி வருவார் அவரிடம் அழைத்து செல்கிறேன் என்று கூற நான் அங்கேயே காத்துக் கொண்டு இருந்தேன். பத்து மணி ஆயிற்று, எங்கே அந்த சர்தாரை காணோமே எனக் கவலையோடு பார்த்தபடி இருக்க, திடீரென அங்கு வந்த சர்தார் என்னை அந்த அதிகாரியிடம் அனுப்பினார். விசா கிடைத்தது. அது பாபாவின் அருள்தான்.
என்னுடைய கணவர் 2006 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி மற்றொரு IT படிப்பு ட்ரைனிங் எடுத்துக் கொண்டார். ஆனால் அவர் புறப்பட இருந்த முதல் நாள் அவருடைய தந்தை கோமாவில் கிடக்க அவர் அங்கேயே தங்க வேண்டி இருந்தது. அவர் மரணம் அடைந்ததும் ஒரே பிள்ளை என்பதினால் அனைத்து காரியத்தையும் செய்து விட்டு வந்தார். ஏற்கனவே அவர் முன்னர் தம்முடைய தாயார் மறைந்த போது இறுதி காரியம் செய்ய செல்ல முடியாத நிலைமை ஆகி இருந்ததினால் தந்தைக்கும் இல்லை என்றால் மனநிலை என்ன ஆகி இருக்கும் என்பதினால் பாபாவேதான் அவரை அவர் தந்தை மறையும் வரை அங்கு தங்க வைத்து இருந்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வர இருந்த என்னுடைய கணவருக்கு ஒரு ரெவின்யு அதிகாரியினால் பல தொல்லை ஏற்பட்டது. நானோ இங்கு தனியாக இருந்தேன். பாபா நீதான் காப்பாற்ற வேண்டும் என எண்ணிக்கொண்டு சாயி சரிதா படித்தேன். ஒரே வாரத்தில் என் கணவருக்கு தொல்லைத் தந்த ரெவின்யு அதிகாரி வேலையில் இருந்து நீக்கப்பட்டு, கோர்ட் கேசும் ஆறு மாதத்தில் முடிந்தது. சாதாரணமாக அப்படிப்பட்ட கேஸ் முடிய பத்து வருடங்கள் ஆகும்.
2008 ஆம் ஆண்டு என் கணவர் இங்கிலாந்து வந்தார். நல்ல வேலை கிடைத்தது. வந்தும் என்ன அதிருஷ்டம் அவருடைய அலுவலகம் 250 மைல் தள்ளி இருந்தது. மீண்டும் தனித்தனியாக இருக்க வேண்டி இருந்தது. பாபாவை வேண்டினேன். மாற்றலுக்கு முயற்சி செய் என கட்டளை வந்தது.
மாற்றல் பெறுவது அத்தனை சுலபமல்ல என்பதினால் வேறு வேலை தேடினேன். நேர்முக தேர்வுக்கு வரச் சொல்லி அழைத்து இருந்தனர் . என்ன சோதனை, அனைத்து வண்டிகளும் என்ன காரணத்தினாலோ அன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேர்முக தேர்வுக்கு செல்ல முடியவில்லை. மனம் வருந்தியது. மாற்றலுக்கு அழுதுகொண்டே விண்ணப்பிக்க அதிசயமாக மூன்றே வாரத்தில் மாற்றல் வந்தது. மூன்று வருடங்களுக்குப் பின் நானும் என் கணவரும் பாபாவின் அருளினால் ஒன்று சேர்ந்தோம்.
என் கணவர் ஒரு கார் வாங்கினார். அதில் வெங்கடேஸ்வர ஆலயத்துக்கு சென்று வரலாம் என்றார். நான் வழியில் இருந்த சாயி பாபா ஆலயத்துக்கும் சென்றுவிட்டு செல்லலாமே என்று கூற அவர் சாயி பக்தர் அல்ல என்றாலும் அவர் அதை தடுக்க வில்லை. மீண்டும் சோதனை. சாயி ஆலயத்துக்கு செல்லச் சென்றவர்கள் வழி மாறி வேறு மார்கத்தில் செல்ல ஆலயம் மூடும் நேரம் வந்துவிட்டது. என்ன செய்வது எனப் புரியவில்லை. ஆனாலும் என் கணவர் கூறியதினால் அந்த ஆலய பூசாரியிடம் தொடர்ப்பு கொண்டு நிலைமையை விளக்கிப் பேசியதும் அவர் கவலைப் படதே, நீ எப்போது வேண்டுமானாலும் வா. நான் காத்திருக்கின்றேன் எனக் கூறினார்.
ஆலயத்துக்கு சென்றபோது மணி இரவு 8.45 .கணவர் பொறுமை இன்றி இருந்தார். ஆலயத்துக்கு சென்றதும் எலுமிச்சை பழமும், பூவும் கொண்டு வந்தாயா என்றார் பூசாரி. இல்லை என்றதும் அருகில் இருந்த கடையில் சென்று அனைத்தையும் வாங்கி வந்து பூஜை செய்த பின் ஐந்து நிமிடம் அமர்ந்து த்யானம் செய்தோம். கிளம்பும் முன் எனக்கு கையில் சிவப்பு கயிறு கட்டிவிட்டார் பூசாரி , '' பாபா ஒருவருடைய இருதயத்தைதான் பார்ப்பவர் '' எனக் கூறிய பின் நீ இன்னும் ஒன்பது மாதத்தில் இங்கு குழந்தையோடு வருவாய் என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.
அடுத்த நான்கே வாரத்தில் நான் கர்ப்பம் ஆனது உறுதி ஆயிற்று. பத்து வருடங்களாக குழந்தை பிறக்காத எனாகு பாபாதான் அருளி உள்ளார். அதற்கு காரணம் அதற்கு முன்தான் நான் ஒன்பது வார சாயி விரதத்தை துவக்கி இருந்தேன். இரண்டாவது முறை சாயி விரதத்தை மேற்கொண்ட போதுத்தான் இது நிகழ்ந்தது. ஒரே வாந்தி. சாயிநாதர் என் கனவில் வந்து இனி உன் பிரசவம் ஆன பின்னர்தான் விரதத்தை ஏற்பேன் என்றார். ஆனாலும் நான் அடுத்த விழாயன் அன்று விரதத்தை துவக்கியபோது மயங்கி விழுந்தேன். விரதத்தை ஆரம்பிக்க முடியவில்லை . பாபாவின் விருப்பம் அது.
என்னுடைய கணவர் வற்புறுத்தியதால் 25 வார கர்பிணியான நான் இந்தியா சென்றேன். எங்கே விமானத்தில் பிரசவம் ஆகி விடுமோ என பயந்தேன். இந்தியா சென்றதும் என் மச்சினி வந்து அன்னை சாயி ஆலயத்துக்கு அழைத்து சென்றாள். பாபாவின் முன் குனிந்து நமஸ்கரித்தவள் தலையில் பூ ஒன்று வந்து விழுந்தது. அது பாபாவின் சால்வைமீது இருந்து விழுந்தது என அனைவரும் கூறினர். அங்கு இருந்தபோது மிகவும் வீக்காக இருந்தவள் இங்கு வந்து நல்ல உடல் நலம் அடைந்தேன். நான் அமைதி காத்தேன். நல்லபடி பிரசவம் ஆகா பாபாவையே வேண்டுகின்றேன். பத்து நாட்களாக அழுத ஆரம்பித்து இன்றுதான் முடித்தேன்.

அஞ்சலி
(Translated into Tamil by Santhipriya)


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.>

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.