Baba follows and stands by us-Experience By Gayathri
சத்குரு சாயி பாபா கூறுவார் ''பாபா எந்த பக்தனை தான் ஏற்றுக்கொண்டு விட்டாரோ , இரவானாலும் சரி, பகலானாலும் சரி, எங்கு இருந்தாலும் அவர்களுடன் அவர் இருப்பார். அவர்கள் எங்கு சென்றாலும் சரி அவர்கள் அங்கு போகும் முன்னரே தான் அங்கு சென்று நின்று கொண்டு இருப்பார்.'' ---சாயிச்சரிதை
இது என் விஷயத்தில் நடக்கின்றது.மானிஷா
மனிஷா சகோதரி
நீங்கள் செய்து வரும் சேவைக்கு மிக்க நன்றி. நான் பாபா விரதத்தை அனுசரித்து பெற்ற பயனை எப்போது கூற விரும்புகின்றேன். அவருடைய கருணையை என்ன என்று கூறுவது?
நான் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு சமீபத்தில்தான் வந்தேன். எங்கள் இருவருக்கும் அமேரிக்கா புதிது. ஞாயிறு அன்று இங்கு வந்ததும் நான் சாயி விரதத்தை ஆரம்பித்தேன். நான் எப்போதும் சாயி பாபாவின் ஒரு சின்ன மூர்த்தியை கையில் எடுத்துச் செல்வது உண்டு. அதோடு என்னுடைய தாயார் தந்து இருந்த சாயி விரத புத்தகத்தையும் எடுத்துச் சென்றேன். இங்கு என்ன செய்யப் போகின்றேன் என தெரியாமல் என் மனதில் ஒரே குழப்பமாக இருந்தது. ஆனாலும் மனதில் எந்த வேண்டுகோளையும் வைத்துக் கொள்ளாமல் பூஜையை ஆரம்பித்தேன். பாபா பார்த்துக் கொள்வர் என்ற நம்பிக்கை இருந்தது.
வீட்டிலேயே குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருந்து விடுவதா ,வேலைக்கு போவதா இல்லை படிப்பதா? ஒன்றும் தெரியவில்லை . அங்கு இந்தியாவிலோ என்னுடைய சகோதரனுக்கும், மச்சினருக்கும் திருமணத்துக்கு பெண் பார்த்துக் கொண்டு இருந்தனர். அது நிச்சயம் ஆனால் அங்கு போக வேண்டும் .ஆனாலும் வேலைக்கு போக தேவையான EAD அதாவது வேலைக்கான அனுமதி பத்திரம் பெற விண்ணப்பித்தேன்.
நான் இங்கு வரும் முன் எட்டு மாதமாக வேலை இல்லாமல் இருந்த என்னுடைய தோழி ஒருவளுக்கு சாயி விரத புத்தகம் தந்து விட்டு வந்திருந்தேன் . அதை அவள் செய்யத் துவக்கியதுமே அவளுக்கு உடனேயே வேலை கிடைத்து விட்டது என தெரிவித்து இருந்தாள்.
எழுவார பூஜை முடிந்தது. நான் ஜெர்மனியில் இருந்த என்னுடைய சகோதரனுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவனிடம் கூறினேன் '' என்னுடைய தோழி சாயி விரதத்தை ஆரம்பித்த ஆறாவது நாளே அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது. எனக்கோ ஏழு வாரம் ஆகியும் ஒன்றும் தெரியவில்லை. '' விளையாட்டுக்குத்தான் நான் கூறினேன் என்றாலும் என் சகோதரனுக்கு கோபம் வந்து விட்டது. ''உன் பங்கிற்கு எதுவும் செய்யாமல் பூஜையை மட்டும் செய்து கொண்டு இருந்தால் காரியம் நடக்குமா? நீ வேலை கிடைக்க என்ன செய்தாய்?'' என்றான். நான் கூறினேன் '' கவலைப் படதே, பாபா என்னை பார்த்துக் கொள்வார். அவருக்கு தெரியும் எனக்கு என்ன கிடைக்க வேண்டும் என. அவர் எனக்கு என்ன செய்வது எனக் கூறாத பொழுது என்னால் என்ன செய்ய முடியும்? அவரிடம் நான் அனைத்தையும் விட்டு விட்டேன். நீ வேண்டுமானால் பார், அவர் எனக்கு தேவையானதை செய்வார்'' என்று கூறினேன்.
அவனுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது என் கணவரிடம் இருந்து ஒரு செய்தி வர அவனை ஒரு நிமிடம் இரு எனக் கூறி விட்டு கணவர் அனுப்பிய செய்தியை படித்தேன். அதை அவருடைய நண்பர் அனுப்பி இருந்ததாகவும், ஒரு வேலை உள்ளதாகவும் அதற்கு EAD தேவை இல்லை எனவும் எழுதி இருந்து அந்த நபரை தொடர்பு கொள்ள நம்பரை தந்து இருந்தார்.
நான் என்னுடைய சகோதரனிடம்' ஹே...என்னவென்றால் ''என்று கூறத் துவங்க அவன் கேலி செய்தான் ' வேலை கிடைத்து விட்டது என்று கூறாதே '' அவனுடன் பேசிய பின் வேலைக்கு ஆள் கேட்ட இடத்திற்கு போன் செய்து பேசினேன். வாரக் கடைசியில் கணவருடன் நேரில் வந்து பேசுவதாகக் கூறினேன். கணவரிடமும் அதை கூறினேன்.
ஆனால் மாலை ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்த கணவர் இல்லை இப்போதே போகலாம் எனக் கூற , அது எதேற்சையாக வியாழன் என்பதினால் கிளம்பினோம் . என்ன அதிசயம், நாங்கள் போக இருந்த இடம் எங்கள் வீட்டில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில்தான் இருந்தது.
''பாபா எந்த பக்தனை தான் ஏற்றுக்கொண்டு விட்டாரோ , இரவானாலும் சரி, பகலானாலும் சரி, எங்கு இருந்தாலும் அவர்களுடன் அவர் இருப்பார். அவர்கள் எங்கு சென்றாலும் சரி அவர்கள் அங்கு போகும் முன்னரே தான் அங்கு சென்று நின்று கொண்டு இருப்பார்.''
அதைக் கண்ட நான் சம்பளத்தை பற்றியோ , வேறு எதையயுமே கேட்காமல் வேலைக்கு சேர சம்மதித்தேன் . அது மட்டும் அல்ல, எனக்கு நான் முதலில் விண்ணப்பித்து இருந்த EAD இரண்டு மாதத்தில் வந்துவிட்டது! என்னைப் பொறுத்தவரை அது ஒரு அதிசயமான நிகழ்ச்சி. நான் அவரை தேடித்தேடி அலைந்து கொண்டு இருக்கையில் என் தலைக்கு மீதே அமர்ந்திருந்து என்னை ரட்சித்து வருகின்றார் என்பதை என்ன என்று கூறுவது? அது மட்டும் அல்ல, எனக்கு நான் முதலில் விண்ணப்பித்து இருந்த EAD இரண்டு மாதத்தில் வந்துவிட்டது!

Loading
0 comments:
Post a Comment