Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Meeting Of Family along with Babasaheb Tarkhad
அவர்கள் அங்கு தங்கி இருந்த பொழுது பாபாவின் பக்தர்களான மல்சபாதி , காகாசாஹெப் மகாஜானி , ஷ்யாம்ராவ் ஜெயகர் போன்றவர்களுடன் தொடர்ப்பு ஏற்பட்டது . அவர்கள் திரும்பி வந்ததும் என்னுடைய தத்தாவிடம் , பாபா நல்ல மருந்துகள் மட்டும் தருவதில்லை , அவர் பெரும் சக்தி படைத்தவர் ,என்று கூறி பல சம்பவங்களைக் கூறினாலும் அவர் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் அதையே என்னுடைய தந்தையும் கூறியதும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது . இருவருமே தங்கள் அடுத்த முறை சீரடி வரும்பொழுது என்னுடைய தாத்தாவுடன் வருவதாக வாக்குறுதி தந்துள்ளதாகவும் கூறினார்
பாபா சாஹேப்பிர்க்கும் பாபாவை சந்திக்க வேண்டும் என்ற விதி இருந்துள்ளது . அவர் தன்னுடைய நபர்களான காகா சாஹேப் திசிட் , சாம்ராவ் ஜெயகர் , நீதிபதி துரந்தார் போன்றவர்கள் மூலமும் பாபா பற்றி தெரிந்து கொண்டார் . அவர்கள் அனைவருமே பாபாவின் பக்தர்கள் . அவர் வேலையில் இருந்ததினால் அவருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நாள் வெள்ளியன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து சீரடிக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார் . அவர்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்தனர் . பாட்டி பெட்ஷீட்டைப் போட்டுக் கொண்டு படுத்து விட்டாள் . ரயில் நாசிக்கை விட்டு கிளம்பிவிட்டது . தாத்தாவும் அவர் நண்பர்களும் சீட்டு விளையாடத் துவங்கினர் . அப்போது வெள்ளை உடை அணிந்த பரதேசி அங்கு வந்து பிட்சைக் கேட்க அவன் மீது பரிதாபப்பட்ட தத்தா அவருக்கு ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தைத் தந்துவிட்டு அங்கிருந்து போய் விடுமாறு கூறினார் . ஒரு ரூபாய் என்பது அந்த காலத்தில் மிகப் பெரிய அளவிற்கான பணம் . என்னுடைய தத்தா 1980 ஆம் ஆண்டிலேயே கடாவ் மில்லில் செகரட்டரியாக இருந்து மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார் . தான் தந்த பணத்தை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற அந்த பகீரிடம் அந்த நாணயம் உண்மையானதுதான் எனவும் , அதில் ஜார்ஜு ஐந்தின் படம் போடப்பட்டு உள்ளதையும் கூறிய பின் பகிர் சென்று விட்டார் .
மறுநாள் சீரடி போனதும் அவர்கள் குளித்து விட்டு , காலை டிபனும் அருந்திய பின் துவாரகாமாயியை அடைந்தனர் . பாபாவிடம் சென்றதும் அவரை அவர்கள் வணங்கினர் . பாபா என்னுடைய தாத்தாவிடம் கூறினார் , 'மாதார்யா ( வயதானவரே என்று அர்த்தம் ) உன்னை உன்னுடைய பிள்ளையும் , மனைவியும் வற்புறுத்தி அழைத்து வந்து விட்டனரா ? ஆகவேதான் நீ இங்கு வந்தாயா ?' எனக் கேட்டார் .
அதன் பின் என்னைத் தெரிகின்றதா என பாபா கேட்க இல்லை என என் தாத்தா கூறினார் . தன்னுடைய காப்னியில் (சட்டை ) கைவிட்டு ஜார்ஜ் ஐந்து படம் பொறித்த நாணயம் ஒன்றை எடுத்த காட்டி , 'நேற்று இரவு நீ தந்தாயே அதுதான் இது என பாபா கூற , ஒரு கணம் நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்த தாத்தா பேசும் முன்னேயே பாபா கூறினார் , 'நேற்று உன்னிடம் இருந்து நாந்தான் வந்து இதை பெற்றுக்கொண்டு வந்தேன் '. என் தாத்தாவிற்கு வெட்கமாகி விட்டது . பாபாவை பரதேசி என நினைத்து விட்டோமே என வருந்தினார் . பாபாவிடம் அதற்க்கு மன்னிப்பும் கேட்டார் . அப்போதுதான் அவருக்கு புரிந்தது , தன்னுடைய பிள்ளை ஜோதிந்த்ராவும் , மனைவியும் பாபா குறித்து கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையே என .
பாபா அந்த வெள்ளி நாணயத்தை தாத்தாவிடம் திருப்பித் தந்துவிட்டு , 'மாதர்யா , உனக்கு இதை திருப்பித் தருகிறேன் . பத்திரமாக வைத்துக் கொடு இரு , உன் வாழ்வில் வளம் பெருகும் என்றார் . மேலும் , என்னை நம்பு , இந்த துவாரகாமாயியில் இருந்து கொண்டு பொய் கூற மாட்டேன் எனக் கூறினார் .These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.
Posted Post :Click On Link BelowTo Read .
1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.
2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.
1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.
2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.
(Translated into Tamil by Santhipriya)
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading


0 comments:
Post a Comment