B.V Narsimha Swami ji-Meeting The Disciple.
ஒரு நிமிடம் யோசனை செய்த நரசிம்ம ஸ்வாமி கூறினார், ' உனக்கு ராதாகிருஷ்ணன் என்ற பெயருக்கு அர்த்தம்தானே தெரிய வேண்டும், அப்படி என்றால் நீ சென்னைக்கு வந்து என்னுடன் சில காலம் தங்கு, உனக்கு அதை புரிய வைக்கின்றேன்' அதற்குப் பின் ராதாகிருஷ்ணனுடைய சகோதரரிடம் அவர் தனக்கு ராதாகிருஷ்ணன் போன்ற இளைஞ்சர்கள் சாயி பிரசாரத்துக்கு தேவையாக உள்ளதாகக் கூற அவரும் அதற்கு சம்மதித்து ராதாகிருஷ்ணனிடம் சென்னைக்குப் போகுமாறு கூறினார்.
அதற்கு முன்னர்தான் இளைஞ்சரான ராதாகிருஷ்ணன் முதலில் சாயிபாபா பற்றிய புத்தகங்களைப் படிக்கத் துவங்கினார். அவற்றை எல்லாம் படித்த அவருக்குத் தோன்றியது 'இத்தனை சிரமப்பட்டு நரசிம்ம ஸ்வாமி ஆராய்ச்சி செய்து சாயிபாபா பற்றி பல செய்திகளை திரட்டிக் கொடுத்திருந்தும் அதுவரை வெளியாகி உள்ள சாயி பாபா பற்றிய ஆங்கில புத்தகங்கள் எதுவுமே மனதிற்கு நிறைவாக எழுதப்பட்டு இல்லை. ரமண மகரிஷி பற்றி நரசிம்ம சுவாமிஜி எழுதி இருந்த ஆத்மா ஞானம் என்ற புத்தகத்தைப் படித்து இருந்தார். அது குறித்துக் கூறுகையில் 'அதை எழுதி உள்ள ஆசிரியருடைய நடையும், கோர்வையான செய்திகளும் படிக்கப் படிக்க அதில் என்னை மறந்து மனதை லயிக்க வைத்தது'. அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ரமண மகரிஷியைப் போன்றவர்களிடம் அத்தனை நெருக்கமாகப் பழகி இருந்த நரசிம்ம ஸ்வாமி போன்றவருக்கு, ரமண மகரிஷிக்கு வேறுபாடான கருத்து கொண்ட சாயிபாபாவிடம் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?
அந்த நேரத்தில்தான் நரசிம்ம ஸ்வாமியிடமே அது குறித்து கேட்க எண்ணி இருந்தவருக்கு, ஒரு சந்தர்பம் கிடைத்தது போல நரசிம்ம ஸ்வாமியே ஊட்டிக்கு வந்திருந்தார். அவரிடம் அது குறித்துக் கேட்டபோது நரசிம்ம ஸ்வாமி எப்படி எல்லாம் அவரைத் தேடி தான் அலைந்து திரிந்தேன் என்பது பற்றியும் முடிவாக எப்படி அவரிடம் சென்றேன் என்பது குறித்தும் விவரமாக எடுத்துச் சொன்னார். நரசிம்ம ஸ்வாமியை குருவாக ஏற்றுக் கொண்டபின் ராதாகிருஷ்ணன் எப்போது சென்னைக்கு சென்றார் என்பது தெரியவில்லை. அது 1943 அல்லது 1944 ஆம் ஆண்டாக இருக்கலாம். அவர் அங்கு சென்றதும் ஜார்ஜ் டவுன் என்ற இடத்தில் ஒரு குடும்பத்துடன் வசித்தார். அவர்களுடன் இருந்தபோதுதான் அவருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம் ஏற்பட்டது. அதன் பின் சில காலம் இந்த புத்தக அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே இருந்திருந்தார். அவருக்கு சென்னைக்கு வந்ததில் இருந்து தன்னுடைய கேள்விக்கான விடை எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்பதிலேயே காலம் கழிந்தது.
நரசிம்ம ஸ்வாமி தனக்கு ராதாகிருஷ்ணன் என்பதின் மகிமை என்ன என்பதைக் கூறாத வரை இனி சாப்பிடக் கூடாது என முடிவு செய்தார். சாபிடாமலேயே இருந்தவரின் உடல் நிலை இரண்டாம் நாள் மோசமாக அவரை தம்முடன் வைத்திருந்தவர்கள் டாக்டரை அழைத்து வர முடிவு செய்தனர். ஆனால் ராதாகிருஷ்ணன் அந்த மருந்துகளை சாப்பிட மறுத்தார். ஆனால் மூன்றாம் நாள் அவருக்கு ராதாகிருஷ்ணனே தரிசனம் தந்தார். அது குறித்து அவர்கூறினார்
''நான் என்னுடைய கண்களை திறந்து வைத்துகொண்டு மாடியில் அமர்ந்து இருந்தேன். தயார் ராதாவிடம் எனக்கு நீதான் அவரைக் காட்ட வேண்டும் என நினைத்தவாறு அமர்ந்து இருந்தேன்'' அப்போதுதான் அது நடந்தது. வானத்தில் இருந்து பதினெட்டு வயதான பெண் போன்ற உருவில் ராதா வந்து நின்றாள். அதன் சில நிமிடங்களுக்குப் பின்னால் கிருஷ்ணரும் இறங்கி வந்து நாம் படங்களில் பார்ப்பது போன்ற காட்சியில் ராதாவை கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். ஒரு கையால் கிருஷ்ணரையும் மறு கையால் என்னையும் பிடித்தபடி ராதாவும் நின்றாள். என்னிடம் இதுதான் கிருஷ்ணர் என்றாள் . அந்த காட்சி சில நிமிடங்களே இருந்தது. அதன் பின் அது மறைந்தது. நான் ராதாவிடம் வேண்டிகொண்டது போல அவளும் எனக்கு கிருஷ்ணர் யார் என்று காட்டிவிட்டாள். ''
அது போலவே ராதாகிருஷ்ணருக்கு சாயி பாபாவிடமும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. சாயி பாபா அவரிடம் ' உண்மையைப் படி' என்று கூறினார். அது கனவா இல்லை நிஜமா என்று அவருக்குத் தெரியவில்லை. அது குறித்து அவர் நரசிம்ம ஸ்வாமியிடம் கேட்டபோது அவர் பாபா பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயமான விபுதி யோகா என்பதைப் படிக்கும்படிக் கூறி உள்ளார் என்றார். ஆகவே ராதாகிருஷ்ணன் அதை படிக்கத் துவங்கினார் .
ஒருநாள் இரவு அவர் அகில இந்திய சாயி சமாஜத்தில் படுத்துக் கொண்டு இருந்தபோது வானத்தில் ராதாவும் கிருஷ்ணரும் மற்றும் பல கடவுட்களும், தேவிகளும் தோற்றம் தந்தனர். அவர் மனதில் வேண்டினார். ' பாபா எனக்கு இதெல்லாம் வேண்டாம் . நீ உண்மையில் யார் என்பதை எனக்குக் காட்டுவாயா? ' அடுத்த சில நிமிடத்தில் அனைத்து காட்சிகளும் மறைய ஹனுமாரும் ராமரும் மட்டுமே அங்கு தோற்றம் தந்தனர். ராதாகிருஷ்ணர் அது குறித்து நரசிம்ம ஸ்வாமியிடம் கூற அவரும் அவருடைய பக்தியை மெச்சி கூறினார் 'ஆமாம் ராமரும் பாபாவும் ஒருவரே'
ராதாகிருஷ்ணர் பின்னர் அது குறித்துக் கூறுகையில் ' பாபா தான்தான் ராமர் என்று கூறவில்லை. அவர் ராமரைதான் எனக்குக் காட்டினார். அதில் இன்னொரு கருத்தும் உள்ளது. அவர் ராமருடைய பெரும் பக்தராக இருக்கலாம் . அதனால்தான் சாயி சரித்திரத்திலும் ராமநவமி கொண்டாடுவது பற்றி கூறப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல. அவர் எங்கு சென்றாலும் ஹனுமாரின் கோவிலைக் கண்டால் மகிழ்ச்சி அடைவார். அதுவே உண்மையான ஒரு பக்தரின் நிலையை காட்டும் '
ராதாகிருஷ்ணன் எப்போது தன்னுடைய குடும்பத்தை துறந்து அங்கு வந்தார் என்பதற்கு விடை கிடைக்கவில்லை. அவருடைய உறவினர்களும் பெற்றோர்களும் அவரை மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பி அழைத்து வர எத்தனை முயற்சி செய்தும், அது குறித்து நரசிம்ம ஸ்வாமியிடம் அவர்கள் கூறியும் அவரை மாற்ற முடியவில்லை. அவர் சென்னைக்கு வந்து ஒரு அலுவலகத்தில் ஆடிட்டராக இருந்தபின் மயிலாப்பூரில் இருந்த மயிலாப்பூர் பர்மனென்ட் பண்ட் என்பதில் நிறுவனர் ஆனார். அவர் நல்ல தூய்மையான உடைகளை உடுத்தினார். ஒரு இளைஞ்சரைப் போலவே காட்சி தந்தார். அடிக்கடி அடையாரில் இருந்த அடையார் பிரும்மஞான வாசகசாலைக்குச் சென்று ஆன்மீக புத்தகங்களைப் படித்தார். அங்கு இருந்த மரத்து நிழலின் அடியில் அமர்ந்துகொண்டு படிப்பது தியானம் செய்வது போல இருந்ததாம். அவர் தன்னுடைய கைகளில் எப்போதும் பல மந்திரங்களையும் ஜெபங்களையும் பற்றி கூறும் புத்தகமான மந்திர மகோடரி என்பதை வைத்து இருந்தார். டி. கேசவாவும் பந்துலுவும் அவரைக் கலந்து ஆலோசிக்காமல் அகில இந்திய சாயி சமாஜத்தில் எந்த வேலைகளையும் செய்தது இல்லை. எந்த முடிவு எடுத்தாலும் மூவரும் சேர்ந்தே எடுத்தனர்.
ராதாகிருஷ்ணரைப் பொறுத்தவரையில் அவருக்கு நரசிம்ம ஸ்வாமியின் வாக்கு வேத வாக்காக இருந்தது. அவருக்கு கணக்கு வழக்குகளை பார்த்துக் கொடுப்பதில் ராதாகிருஷ்ணர் உறு துணையாக இருந்தார். அவர் தன்னை தானே முன்னிலையில் நிறுத்திக் கொண்டது இல்லை. அவரிடம் வாசகசாலையின் பொறுப்பை நரசிம்ம ஸ்வாமி ஒப்படைத்து இருந்தார். அகில இந்திய சாயி சமாஜத்தின் அனைத்து வழக்கு மாற்றும் கணக்குகளை ராதாகிருஷ்ணர் பார்த்துக் கொண்டார். மாலை நேரத்தில் அவரிடம் கீதா புத்தகத்தை நரசிம்ம ஸ்வாமி கொடுத்து அதை உரக்கப் படிக்கச் சொல்லி அதன் அர்த்தங்களை தம் பக்தர்களுக்குக் கூறுவார். அதுபோலவே ஒருமுறை அவர் நரஸிம்ம ஸ்வாமி முன் படித்த விஷ்ணு சஹாஸ்ரநாமம் அவருடைய வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறியது. அந்த காலங்களில் (1946 ) காலட்சேபங்கள் செய்வது அதிகம் கிடையாது. அவருக்கு தன்னை புகைப்படம் எடுப்பது பிடிக்காது.
ராதாகிருஷ்ணரை தன்னுடைய பிரதிநிதியாகவே நரஸிம்ம சுவாமி அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வந்தார். அவரை சீரடிக்கும் அது போலவே அனுப்பினார். அதனால் ராதாகிருஷ்ணர் அடிக்கடி வெளி இடங்களுக்கு செல்ல வேண்டியதாயிற்று. அதைத் தவிர சாயி பிரசார வேலைகளுக்கும் செல்ல வேண்டி இருந்ததினால் அவருக்கும் நரஸிம்ம ஸ்வாமிக்கும் இருந்த நேரடி தொடர்ப்பு குறையத் துவங்கியது. 1952 ஆம் ஆண்டில் அவரை சாயி பிரசார வேலைக்காக நரஸிம்ம ஸ்வாமி பெங்களூருக்கு அனுப்பினார்.
தன்னுடைய நினைவலையில் ராதாகிருஷ்ண ஸ்வாமி கூறினார் '' நான் ஊட்டியில் இருந்தபோது வளமான வாழ்வில் இருந்தேன். நரஸிம்ம சுவாமியுடன் தொடர்பு கொண்டதும் சென்னைக்கு வந்தேன். அங்கு வந்ததும் சுவாமிஜி எனக்கு ஒரு மரப் பலகையை கட்டில் போலத் தந்தார். அதில்தான் நான் என் கைகளையே தலையாணி போல வைத்தபடி படுத்துக் கிடந்தேன். வசதி மிக்க வாழ்வுக்கும் வசதி அற்ற வாழ்வுக்கும் இருந்த இடைவெளி தெரிந்தது. அது எனக்கு வைக்கப்பட்ட சோதனை என்று நினைத்தேன். சுகத்திலும் துக்கத்திலும் ஒரே மாதிரியான மன நிலையில் இருப்பதே கடவுளிடம் நாம் அவரை நெருங்க ஒரு வழியாக அமையும். நான் நரஸிம்ம ஸ்வாமியிடம் வந்து சேர்ந்தது முதலே அப்படிப்பட்ட பல விதமான சோதனைகளை எனக்கு சாயி பாபா தொடர்ந்து தந்தார். பாம்பே, சீரடி மற்றும் பெங்களுர் என பல இடங்களுக்கு சென்றபோதெல்லாம் என்னால் என்னுடைய குருவுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. அது வருத்தமாக இருந்தாலும் அப்படிப்பட்ட சோதனைகளை ஏற்றுக் கொண்டாலே குரு பக்தியை காட்ட முடியும். பதி மார்கத்தில் இணைய முடியும். அவற்றில் வெற்றி அடைந்து விட்டால் பகவான் நம்மை ஏற்றுக் கொண்டு விடுவார், கைவிட மாட்டார் ''
மைசூரில் சாயி பிரசார வேலைகளை செய்ய நரஸிம்ம ஸ்வாமி அவரை 1952 ஆம் ஆண்டு பெங்களூருக்கு அனுப்பினார். அவருக்கு சாயிபாதனந்தா என்ற பட்டத்தையும் தந்தார். கர்நாடகத்திற்கு நரஸிம்ம ஸ்வாமி செய்துள்ள மிகப் பெரிய புனிதக் காரியம் ராதாகிருஷ்னரை பெங்களூருக்கு அனுப்பியத்துதான். பெங்களூருக்கு வந்த ராதாகிருஷ்ண ஸ்வாமி அங்கு சாய் ஆன்மீக நிலையத்தை நிறுவினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதில் சேர்ந்தனர். அதற்காக நாம் நரஸிம்ம ஸ்வாமிக்கும் ராதாகிருஷ்ண ஸ்வாமிக்கும் நன்றி கூறவேண்டும்.
© Shirdi Sai Baba Stories In Tamil.

Posted so Far :
B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.

Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.

Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading
0 comments:
Post a Comment