Unexpected Joy-Experience By Sankari.
அன்புடையீர்
சாயியின் லீலை பற்றி வந்து கொண்டிருக்கும் கடிதங்களுக்கு அளவே இல்லை உங்களுடன் அதிக நேரம் எடுத்தக் கொள்ளாமல் சென்னை மயிலாப்பூர் சாயி ஆலயத்தில் இன்னொரு பக்தி பெற்ற அனுபவத்தை கூறுகின்றேன்.
மனிஷா
........................................
அன்பு மனிஷாஜிஇதோ என்னுடைய அனுவத்தைப் பற்றி கூறுகின்றேன்.
நானும் என்னுடைய இரண்டு தோழிகளும் ஒன்பது வார சாயி விரதத்தை துவக்கினோம் என்னுடைய மற்றும் என்னுடைய ஒரு தோழியின் விரதமும் இன்றுடன் ( 19 .03 .09 ) முடிந்தது. விரதம் முடிந்ததும் நாங்கள் சென்னை மயிலாப்பூர் சாயி ஆலயத்தில் பிரசாதம் கொடுக்கச் சென்றோம்.
நின்ற வரிசையில் நின்று உள்ளை சென்றோம். அற்புதமான தரிசனம் கிடைத்தது.
அடுத்து துனி இருந்த அறை முன் நின்றோம். உள்ளே பாபாவின் போடோவும் பாதமும் போட்ட சலவைக்கல் இருந்த அறையில் துனியும் உள்ளது. ஆனால் நீண்ட வரிசை இருந்ததினால் நாங்கள் திரும்பிப் போக கிளம்பியபொழுது அங்கு இருந்த பெண் காவலாளி , 'என்ன அம்மா, பாபாவை இப்படியா தரிசிக்காமல் போவது? சரி, சரி உங்களை உள்ளே அனுப்புகிறேன்' எனக் கூறி விட்டு எங்களை முதலில் உள்ளே அனுப்பி விட்டாள்.
நல்ல தரிசனம் செய்தபின் வெளியில் வந்து நின்றதும், 'இனியாவது நின்று தரிசனம் செய்து விட்டுப் போங்கள்' ,என அறிவுரை செய்தபொழுது நான் என் செயலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, 'நான் அலுவலகத்திற்கு அவசரமாகப் போக வேண்டி இருந்ததினால்தான் திரும்பிப் போக நினைத்தேன்' எனக் கூறியதும், அவள் கூறினாள் 'என்ன அம்மா எதை முதலிலேயே சொல்லக் கூடாதா, உள்ளை அனுப்பி இருப்பேனே' என்றாள். நான் திகைத்தேன் . அது பாபாவின் அருள்தானே.
விரதத்தின் முறைப்படி குறைந்தது ஐந்து பேருக்காவது விரத முறையை விளக்கும் புத்தகத்தை தர வேண்டும். ஒரு மூலையில் நின்றுகொண்டு இருந்தபடி வந்தவர்களில் என் மனதுக்கு ஏற்ற மூன்று பேருக்கு தந்தேன். மற்ற இரண்டையும் என் தோழி தேவி தந்தபின் கொடுக்கலாம் எனக் காத்து இருந்தேன். அப்படி ஏன் தோன்றியது எனத் தெரியவில்லை.
தேவி கொடுத்து முடித்து விட்ட பின் பிரசாதத்தையும் தரத் துவங்கிய பொழுது அங்கு வந்த ஒரு பெண்மணி, 'வெளியில் ஒரு முதியவர் அமர்ந்து கொண்டு உள்ளார். நீங்கள் அவருக்குமாக சேர்த்து பிரசாதம் தர முடியுமா எனக் கேட்டாள்' என் தோழியை சுற்றி கூட்டமாக இருந்ததினால் அந்த பெண்மணி இரண்டு அல்லது மூன்றுமுறை கேட்டும் அவளால் கவனிக்க முடியவில்லை. அதன் பின் அவள் திரும்பிப் பார்த்த பொழுது அந்த முதியவர் தென்பட்டார். 'நானே சென்று அவருக்கும் தருகின்றேன் அம்மா எனக் கூறிய தேவி அவரிடம் சென்றாள். என்ன அதிசயம் . அவர் அச்சாக பாபாவைப் போலவே இருந்தார்.
அவருக்கு நமஸ்காரம் செய்தபின் அவருக்கு இனிப்பு தந்தவுடன் அவர் அவளிடம் எதையோ கேட்டார். அவளுக்கு முதலில் புரியவில்லை. அவளிடம் எனக்கும் ஒரு புத்தகம் தருகின்றாயா எனக் கேட்க அவள் தன்னிடம் புத்தகம் இலையே என என்ன கூறியும் அவர் தனக்கு இரண்டு புத்தகம் வேண்டுமே என்றார்.
சாயி சரித்திரத்தில் வரும் பகுதி இது, '' அங்கு வந்த காகாஜி மசுதிக்கு சென்றார். அவர் பாபாவின் காலடியில் விழுந்தார், கண்களில் கண்ணீர் பெருகியது. அவருடைய கால்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். மனம் அமைதி அடைந்தது .பாபாவின் பார்வையை கண்டதுமே அலை பாய்ந்து கொண்டு இருந்த மனம் அமைதி அடைந்தது. அவர் கூறினார் ''பாபா ஒன்றுமே பேசவில்லை, எங்களிடையே கேள்வியும் இல்லை, பதிலும் கிடையாது. எந்த வேண்டுகோளும் வைக்கவில்லை. ஆனால் அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே என் மனம் அமைதி அடைந்தது. எங்கிருந்தோ சொல்ல இயலாத இன்பம் என் மனதில் வந்து நிறைந்தது. அதுவே அவருடைய சிறப்பு''
எங்களுக்கும் அது போன்ற இன்பமே கிடைத்தது எனும் போது நாங்கள் என்ன சொல்ல முடியும்.
சங்கரி
(Translated into Tamil by Santhipriya)

Loading
0 comments:
Post a Comment