Wednesday, March 24, 2010

Roopen Agrahara Shirdi Sai Baba Temple-Bangalore.



அன்பானவர்களே
நான் பாபாவின் தளத்தில் என்ன மாறுதல் செய்ய வேண்டும் என நினைகின்றேனோ அதற்கு முன்பே பாபா அதை தான் நினைத்து விடுகின்றார் என்பது உண்மையாகிவருகின்றது. நான் பாபாவின் ஆலயத்தை பற்றி இணையதளத்தில் வெளியிட அதற்குத் தேவையான செய்திகளை சேகரித்தாலும் தேவையான அளவு கிடைக்காமல்இருந்தது. அப்போது நான் முன் பின் அறிந்திடாத ஒரு ஆலயத்தைப் பற்றி பாபாவின் பக்தர் ஒருவர் எழுதி அனுப்பி இருந்தார். அதை படித்த நான் பிரமித்து நின்றேன். பாபாவின்பல பக்தர்களும் தமக்கு கிடைக்கும் விவரங்களை அனுப்பினாலும் எது வெளியாக வேண்டும் என்பதை பாபாவேதான் தீர்மானிக்கின்றார்.
பாபாவுடன் பன்னிரண்டு வருட காலம் இருந்த சிவம்மா தாய் என்பவர் ஒரு ஆலயத்தைக் கட்டி உள்ளார். அவருடைய அனுபவத்தைப் பற்றிப் படிக்கையில் கண்கள்பனிக்கின்றன. பேச வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றது. இதோ ராமராவ் என்பவர் அது குறித்து தமிழில் இருந்த செய்தியைப் படித்துவிட்டு நமக்கு ஆங்கிலத்தில் எழுதிஅனுப்பி உள்ளார். அதை படியுங்கள்.
( இந்த கட்டுரை ஆங்கிலத்தினை தழுவி எழுதப்பட்டது)
மனிஷா




சாயிபாபாவின் தீவீரமான பக்தை சிவம்மா தாயீ
பிறப்பு :- மதியம் ஒரு மணி - 16 .05 .1891
இடம்: தமிழ்நாட்டில் கோயம்பத்தூர்
சமாதி: 1994
வாழ்ந்த காலம் : 103 வயது வரை
உண்மையான பெயர்: ராஜம்மா
பாபா வைத்த பெயர் : சிவம்மா தாயீ
தந்தை: வேலைப்ப கவுண்டர்
தாயார் : புஷ்பவதி அம்மாள்
கல்வி: மூன்றாம் வகுப்பு வரை- தமிழ் மட்டும் தெரியும்
திருமணம்: அவருடைய பதிமூன்றாம் வயதில், மார்ச் மாதம் 1904 ஆண்டில்
கணவர்: சுப்ரமணிய கவுண்டர்
மகன்: மணிராஜ்

ராஜம்மா என்ற சிவம்மா தாயீ கூறிய செய்தி

''அவருடைய மாமன் சீரடியில் இருந்து சாயிபாபாவை ஒரு முறை பொள்ளாச்சியின் அருகில் இருந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார். அப்போது ராஜம்மாவின் வயது பதினைந்து, அவளுடைய மகனுக்கு ஒரு வயது. பாபா அப்போது எழுபத்தி ஒரு வயதானவர் ( நமக்கெல்லாம் பாபா சீரடியை விட்டு வேறு எங்கும் சென்றது இல்லை என்பது தெரியும். என்றாலும் அவர் வந்ததாக கூறுவதை ஏற்காமல் இருக்க முடியவில்லை. காரணம் , பாபா அனைத்து இடங்களிலும் இருப்பவர்).
அங்கு வந்த பாபா அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். அப்போது அவளுடைய காதில் காயத்தரி மந்திரத்தை ஓதியதும் இல்லாமல் அதை ஒரு காகிதத்தில் எழுதியும் தந்தார். ஒரு நாள் அந்த காகிதம் காணாமல் போய் விட்டது. அவளுடைய கனவில் பாபா வந்து அது அரிசி வைத்துள்ள பாத்திரத்தில் உள்ளது என அது இருந்த இடத்தைக் காட்டினாராம். அது முதல் அவள் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற முடிவு செய்தாள். அங்கு செல்ல அவள் தன்னுடைய கணவரின் அனுமதியைப் பெற வேண்டி இருந்தது. அவரோ அதில் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் பாபா அவருக்கு ஏற்படுத்திய ஒரு அதிசயச் செயலினால் அவரும் பாபாவின் பக்தரானார். அவளை அவளுடைய கணவர் 1908 ஆம் ஆண்டு அவளுக்கு பதினேழு வயதானபோது சீரடிக்கு அழைத்துச் சென்றார். பாபா அவளிடம் தமிழில்தான் பேசினார்.
பாபாவைப் பற்றி சிவம்மா கூறினார் , ''பாபாவின் உயரம் ஆறு அடி , அவருடைய கைகள் நீண்டவை. கையை கீழே தொங்கப் போட்டால் அவருடைய விரல்கள் கால் முட்டியை தாண்டிச் சென்றன. அவருடைய கண்கள் கருமை நிறம் கொண்டவை அல்ல. நீல நிறமானது. புலி மற்றும் பூனைகளின் கண்களைப் போல ஜொலித்துக் கொண்டே இருக்கும். அவரிடம் தேஜஸ் இருந்தது. அவரைக் கண்ட உடனேயே கடவுளே அவருடைய உருவில் வந்துள்ளதை உணர்ந்தேன். அவர் சமையல் செய்வதை விரும்பியவர். உணவை மற்றவர்களுக்கும் கொடுத்தவர். நான் அங்கு சென்று இருந்தபோது ஒரு பாத்திரத்தில் அரிசி கஞ்சி வெந்து கொண்டு இருந்தது. நாங்கள் குடும்பத்தினருடன் அங்கு இருந்தோம். அப்போது பாபா தனது காபினியை மடித்து விட்டுக் கொண்டார், கரண்டிகளை எடுக்காமல் தனது கையை கொதித்துக் கொண்டு இருந்த கஞ்சி பாத்திரத்தில் விட்டு அதை கலக்கினார். பிறகு அதை அனைவருக்கும் தந்தார்''
நாங்கள் சீரடியை விட்டு திரும்பி வந்ததும் என்னுடைய கணவர் ஒரு நாள் நாளிதழில் ஒரு மில்லில் சூபர்வைசர் பதவி காலியாக உள்ளது என்பதைப் பார்த்து விட்டு அதற்கு விண்ணபித்தார். வேலை கிடைத்து விட்டது. நாங்கள் பெங்களூருக்கு வந்து விட்டோம். நான் அங்கிருந்த போது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சீரடிக்குச் செல்வேன். அதை என்னுடைய கணவர் விரும்பவில்லை. அது குறித்து அவர் என்னைக் கேட்டபோது நான் கூறுவேன் ' பாபாவே எனக்கு குரு, மற்ற கடவுட்கள் அல்ல ஆகவே நான் அவரைக் காண போக வேண்டும்'
அவர் கேட்டார் எதனால் அவர் உனக்கு குருவானார்? நான் கூறினேன் ' அவர் கடவுளின் அவதாரம். என் ஹிருதயத்தில் இருப்பவர் . ஆகவே அவரைப் பார்க்க வேண்டும் என இதயத்தில் தோன்றும்போது அவரை காணச் செல்கின்றேன்'
அவர் அதனால் என்னுடன் மனத்தாங்கல் அடைந்தாலும் நான் சீரடிக்கு வருடத்துக்கு மூன்று அல்லது நான்குமுறை செல்வதை நிறுத்தவில்லை. அங்கு சென்று சில நாட்கள் இருந்து விட்டு வருவேன். பாபா என்னை தன்னுடைய மகளைப் போல கருதி அன்பு செலுத்தினார். அவருடைய பல அற்புதமான லீலைகளை நான் அருகில் இருந்து கண்டிருக்கின்றேன். அதனால் எனக்கு குடும்ப வாழ்கையில் விரக்தி ஏற்பட்டது.
பாபா செய்த கண்ட யோகத்தை பார்த்து இருகின்றேன். (அது பற்றி சாயி சரித்திரத்தில் உள்ளது) . அதை செய்யும்போது பாபாவின் கால்களும், கைகளும் வெட்டப் பட்டு மசூதிக்கு வெளியில் கிடக்கும். அதை தாண்டித்தான் செல்ல வேண்டி இருந்தது. பாபா பூர்வ ஜென்ம கதையான பாம்பும் கீரியும் கதையைக் கூறியபோது அவள் அவர் பக்கத்தில் இருந்துள்ளார். (அது பற்றி சாயி சரித்திரத்தில் உள்ளது). பாபா செய்த தௌடிய யோகாவையும் அவள் பார்த்து உள்ளாள். தான் யோகாவை செய்யும்போது அவளை மசூதிக்கு வெளியில் இருந்த கிணற்றின் பக்கத்தில் அழைத்துச் சென்று அதை செய்து காட்டுவாராம்.
அப்படியே சென்று கொண்டிருந்தவளின் வாழ்கையைக் கண்டு வெறுத்துப் போன அவருடைய கணவர் அவளை விட்டு விலகிச் சென்று விட்டு வேறு திருமணம் செய்து கொண்டு விட்டார். அவளுடைய மகன் மணிராஜ் காவல்துறை இன்ஸ்பெக்டராக ஆனார். விரைவிலேயே அவரும் அவருடைய மனைவியும் ஒரு விபத்தில் சிக்கி பலியானார்கள். அவளுடைய கணவர் அவளை விட்டு விலகியவுடன், அவளுடைய தந்தை அவளை சீரடியில் அழைத்துச் சென்று பாபாவிடம் விட்டார். பாபா அவளை இனிமேல் அங்கேயே தங்கிக்கொண்டு ( ஒரு பக்தரின் வசிக்கும் விடுதியில்) தன்னை தியானித்துக் கொண்டு காலத்தை கழிக்குமாறு கூறிவிட்டார்.
பாபாவோ 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதியன்று மகா சமாதி அடைந்து விட்டார். சிவம்மா தாயீ கூறினார். பாபா சிவனின் அவதாரம் . அவரே 1917 ஆம் ஆண்டில் அவளுடைய பெயரை சிவம்மா தாயீ என மாற்றினார். பாபா அவளை பெங்களூருக்குச் சென்று அங்கு தன்னுடைய பெயரில் ஆசிரமம் அமைக்குமாறும் அதற்கு தன்னுடைய ஆசி உண்டு என்றும் கூறினாராம்.

ஆசிரமமும் ஆலாயமும் வந்த கதை

சிவம்மா தாயீ பெங்களூருக்கு வந்து பிட்சை எடுத்துக் கொண்டு வாழ்ந்தாலும் பாபாவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தாள். 1944 ஆம் ஆண்டு நாராயண ரெட்டி மற்றும் சாரதாமா என்பவர்கள் அவளுக்கு பெங்களூரில் இருந்த மடிவாடாவில் சிறிது நிலம் தந்தனர். அவள் அங்கு அமர்ந்து கொண்டு உணவு இன்றி பன்னிரண்டு வருடம் தபம் இருந்தார். அவளைச் சுற்றி கரையான் புற்று எழுந்து அவளை மூடி விட்டது. அவளுடைய தலையில் ஒரு பாம்பும் வசித்து வந்தது. ஒரு நாள் அவளுடைய பக்தர்கள் அந்த இடத்தில் சென்று, லாவகமாக அந்த பாம்பை அங்கிருந்து அகற்றி விட்டனர். அவளிடம் அந்த தபத்தை முடித்துக் கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அவளும் தவத்தை நிறுத்திவிட்டு பாபாவின் நாமச்கரனத்தை உச்சரித்து வந்தாள். 1973 ஆம் ஆண்டு ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் பாபாவுக்கு ஒரு ஆலயம் கட்டினாள். அது 1991 ஆம் ஆண்டில் ஒரு உயர் நிலைப் பள்ளிக்கூடம் ஆயிற்று.

பல பக்தர்களும், அவளுடைய பேரன் பேத்திகளும் அவளை வந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர். அவளுடைய உறவினர் பலரும் பணம் படைத்தவர்கள். ஆகவே அவளை ஊருக்கு வந்து வசதியாக இருக்குமாறு கூறினார்கள் . அவள் அதை நிராகரித்துவிட்டாள்.
1993 ஆண் ஆண்டு அவள் கூறினாள் '' என்னுடைய சமாதி பாபாவின் ஆலயத்துக்குள் அமைக்கப்பட்டு உள்ளது . என்று பாபாவும் நானும் விரும்புகின்றோமோ அன்று என் ஜீவன் இல்லாத உடல் மட்டுமே இங்கு இருக்கும். அதை அடுத்து அந்த குழிக்குள் போட்டு மூடி விட வேண்டும். பாபா தான் சமாதி அடைந்த பின்னரும் எனக்கு வழி காட்டிகொண்டு இருக்கின்றார், அன்பு செலுத்துகின்றார், உதவி செய்கின்றார். என்னுடைய ஒவ்வொரு மூச்சுக் காற்றும் அவருடையதுதான். அவர் சூக்ஷ்ம சரிரத்தில் இருந்தாலும் என்னுடன் தொடர்பு வைத்துக் கொண்டு உள்ளார். அடிக்கடி என்னை வந்து சந்தித்துவிட்டுச் செல்கின்றார். கூற வேண்டியதைக் கூறி தேவையான நேரத்தில் எச்சரிக்கையும் தருகின்றார். ''
அவள் அந்த ஆசிரமத்தில் பாபாவுக்கு இரண்டு ஆலயங்களை எழுப்பினாள். ஒன்றில் பாபா கருப்பு நிறத்தில் உள்ள சிலையாகவும் இரண்டாவதில் பாபா பிட்சை எடுக்கும் கோலத்திலும் உள்ளார். அது போன்ற கோலத்தில் அவர் உள்ளதை வேறு எங்குமே பார்த்திருக்க முடியாது. ராஜஸ்தானில் இருந்து வந்த சிற்பியைக் கொண்டு தனது கனவில் பாபா தோன்றிய அதே காட்சியிலேயே, செய்யுமாறு பாபா உத்தரவு தந்தபடியே பளிங்கு கல்லில் அந்த சிலையை செய்தார். சிவம்மாவின் பூஜை அறையில் வெள்ளியினால் செய்த பாபாவின் சிலையை வைத்து உள்ளார்.
அவளிடம் வந்து தமக்கு ஏற்படும் துயரங்களை கூறி பரிகாரம் கேட்டால் அவள் பாபாவிடம் கேட்டு அவர் கூறிய நிவாரணத்தை செய்யக் கூறுவாராம். ஆனால் அவர் அனைவருக்கும் அதை செய்தது இல்லை. எவருக்கு அதிருஷ்டம் இருந்ததோ அவர்களுக்கு அவளுடைய அறிவுரை கிடைத்தது.
அவள் கூறுவார் '' நான் என்னுடைய குருவுக்கு முன்னால் ஒரு தூசி. அவர் இல்லாமல் நான் இல்லை. என்னிடம் வந்து அறிவுரை கேட்கும் பக்தர்களுக்கு நான் தரும் அறிவுரைகள் என்னுடையவை அல்ல, அவை அனைத்தும் என் பாபா தந்தது ''
சம்பங்கி என்பவர் அறுபது வருடங்களாக அங்கு இருந்து வந்துள்ளார். அவரே இன்று ஆலயத்தில் பூஜைகளை கவனிகின்றார். அவளுடைய மகிமைகள் பல உள்ளன என்கின்றார் அவர்.
சிவம்மா தாயீ இருந்த போது அவர் ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தார். அவர் மறைந்தவுடன் சில விஷமிகள் அந்த மரத்தை அடியோடு வெட்டிவிட்டு மீதம் இருந்ததின் மீது தீ வைத்துக் கொளுத்தி விட்டனர். அதனால் வேதனயுட்ற சம்பங்கி அந்த பட்டுப் போன மரத்தின் கீழ் பகுதியில் பாபாவுக்கு அர்ச்சனை செய்த தண்ணீரை விட்டு வந்தார். அந்த பட்டுப் போன மரம் துளிர்விட்டு மீண்டும் வளரத் துவங்கியது. அந்த புதிய மரமே கீழே உள்ள படம்.

அந்த ஆலயத்துக்குச் சென்ற பாபாவின் பக்தரான ரமாராவின் அமெரிக்காவில் வசிக்கும் மருமகன் தந்த தகவல்:

'' நான் அந்த ஆலயத்தில் நுழைந்தேன் . கரிய நிறத்தில் தங்கம் போல மினுக்கும் கண்களுடன் பாபா காட்சி தரும் அந்த சிலையைப் போல வேறு எங்கும் பார்க்க முடியாது. அந்த சிலை இரண்டாவது அறையில் உள்ளது. அங்கு எழுபது ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு பூசாரியாக உள்ளவரே எனக்கும் சிவம்மா தாயீ பற்றிய பல விவரங்களைக் கூறினார். 1889 ஆம் ஆண்டு பிறந்தவர் 1994 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தாராம். திருமணம் ஆன அவர் தனக்கு மகன் பிறந்த பிறகே ஆன்மீக வாழ்வில் சென்று உள்ளார். பாபாவிடம் இருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர். அவளுடைய சமாதி பாபாவின் சிலைக்கு அடியில் உள்ளது. அந்த அறை மிகவும் சிறியதாக உள்ளது. அதற்கு பக்கத்திலேயே சாவடியும் உள்ளது. அதில்தான் சிவமா தாயீ வாழ்ந்து வந்துள்ளார். சாவடிக்கு அருகில் உள்ள துவாரகாமயியில் ள்ளஉள்ள நிற்கும் பாபாவின் சிலையின் கையில் பிட்சை பாத்திரம் உள்ளது. அனைத்து அறைகளிலும் அந்த அன்னையின் பொருட்களும், பாபாவின் படங்களும் உள்ளன. ஆனால் துனி மட்டும் காணப்படவில்லை.
பாபாவின் சிலைக்கு நேராக நந்தி சிலை உள்ளது. நவகிரகங்களும் உள்ளன. ஆலயத்தின் வெளியில் நான்கு சமாதிகள் உள்ளன. அவை அவருக்கு உதவினவர்களின் சமாதிகளாம்.

ஆலயத்துக்குச் செல்லும் வழி:

ஹோசூர் சாலையில் மடிவாடா - கோரமங்களா சாலையில் சென்று சில்க் போர்டு ஜன்ஷன் பாலத்தைக் கடந்தால் வலப்புறத்தில் வரும் சிறிய சாலையில் சென்று இடபுறம் திரும்பினால் இந்த ஆலயத்தை அடையலாம்.
சமூக நலத் திட்டங்கள்
இந்த ஆலயத்தைக் கட்டிஉள்ள நிலத்தை சிவம்மா தாய்க்கு தானமாகக் கொடுத்தவர்கள் நாராயண காரு மற்றும் சாரதாம்மா என்பவர்கள் . அந்த பள்ளியை தற்போது கோபால ரெட்டியும் அவருடைய மனைவியும் மேற்பார்வை இடுகின்றனர். அதைத் தவிர அங்குள்ள வயதானோர் இல்லத்தையும் பராமரிகின்றனர். பள்ளியில் எழுநூறுக்கும் மேற்பட்டோர் இலவசமாக கல்வி கற்கின்றனர்.வயதானோர் இல்லத்தில் வயதான ஏழு ஆண்களும் ஏழு பெண்மணிகளும் உள்ளனர். அவர்களுக்கு அனைத்தும் இலவசமாக தரப் படுகின்றன. வேங்கடேஷ் என்பவரும் அவருடைய சகோதரர் சம்பங்கியும் பூஜைகளை கவனித்துக் கொள்கின்றனர்.
சம்பங்கி
ஆலய விலாசம்:
ஸ்ரீ சீரடி சாயிபாபா மடம்
ரூபன் அக்ரஹாரா, என். ஜி . ஆர் . லேயவுட்
ஹோசூர் பிரதான சாலை
மடிவாலா போஸ்ட்
பெங்களூரு -560 068
தொலைபேசி எண் : 080 -25732522

PART-2

அனைவரும் யோசனை செய்ய சில செய்திகள்

நான் சமீபத்தில் ரூபென் அக்ரஹாரா சாயி ஆலயம் பற்றி படித்தேன். அந்த செய்திகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள என்னுடைய மனைவியுடன் இன்று மாலை நான் அந்த ஆலயத்தை தேடிக் கண்டு பிடித்துச் சென்றேன். ஹோசூர் பிரதான சாலையில் இருந்து சுமார் பதினைந்து அடி அகலமேயான மிக குறுகிய சாலையில் சென்று அந்த ஆலயத்தை அடையலாம். அதற்காக நான் அனைவருக்கும் பயன்படும் வகைக்கு ஆலயத்துக்கு செல்லும் வழியை தந்து உள்ளேன். வெளியில் இருந்து பார்த்தல் அது ஆலயம் போன்ற தோற்றத்தைத் தரவில்லை. எதோ பாழடைந்த கட்டிடம் உள்ள இடமாகத் தெரிந்தது.


அன்னை கட்டி உள்ளதாக கூறப்படும் அந்த மூன்று ஆலயங்களும் ஒரு காம்பவுண்டுக்குள்தான் உள்ளன. அந்த ஆலயங்களைத் தவிர உள்ளேயே இரண்டு இடங்களில் சில சமாதிகள் உள்ளன. அதில் ஒரு சமாதி இடம் சுத்தமாக உள்ளது. அது அந்த ஆலயம் கட்ட அன்னைக்கு இடம் தானமாகத் தந்தவருடைய மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிலரின் சமாதியாம். இரண்டாவது இடத்தில் உள்ள சமாதி சில முனிவர்கள் மற்றும் அன்னையிடம் தீட்சை பெற்றவர்களின் சமாதி எனக் கூறுகின்றார்கள்.
அந்த ஆலயங்களின் பாழடைந்த நிலைமையைக் கண்டு என்னுடைய இதயம் கனத்தது. உள்ளே சென்றாலே நம்மை அறியாமலேயே உள்ளத்தில் மெய்சிலிர்ப்பு ஏற்படுகின்றது. அத்தனை சக்தி வாய்ந்த ஆலயங்களுக்கா அந்த கதி என நினைத்தேன். அதை ஏன் சாயி பக்தர் குழுக்கள் இன்னமும் கவனிக்காமல் உதாசீனப்படுத்தி வைத்து உள்ளனர் என எண்ணினேன். ஆச்சர்யமாக இருந்தது. ஏழ்மை நிலையில் உள்ள, அடக்க சுபாவம் கொண்ட, இனிய முறையில் பழகி ஆலயத்துக்கு வருபவர்களுக்கு அதன் மகத்துவத்தைக் கூறி திறந்து அவற்றைக் காட்டும் வெங்கடேஷ் மற்றும் சம்பங்கி போன்ற பூசாரிகளால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் என்னவெல்லாம் செய்து ஆலயத்தை மேம்படுத்த முடியும்? பாபாவின் பக்தர்களே வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஆலயத்தை அழிந்து போகும் நிலைக்கு செல்ல விடலாமா?


ஆலயம்-1

முதலாவது ஆலயம் இரண்டு அடுக்குகளாக உள்ளது. பூமிக்கு கீழே சுமார் பத்து அடி சதுரப் பரப் பளவில் அன்னையின் சமாதி . அதற்க்கு மேல் பகுதியில் பாபாவின் ஆலயம். ஆலயம் இரண்டு அறைகளைக் கொண்டு உள்ளது. உள்ளே நுழைந்ததும் பாபாவை பார்த்தபடி இருக்கும் ஒரு நந்தியை உயரமான பீடத்தில் வைத்து உள்ளனர். அதன் வலது புறம் நவக்ரஹ சன்னதி உள்ளது. அடுத்த அறையில் சுமார் ஐந்து அடிக்கு ஐந்து அடி பீடத்தில் உட்கார்ந்த நிலையில் பாபா. வலது காலை தூக்கி இடது காலின் மீது வைத்து உள்ளார். அவருக்கு வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறத்தில் முருகப் பெருமானின் சிலைகளும் உள்ளன. அந்த அறையில்தான் பஜனைகளும் நடைபெறுகின்றனவாம். அந்த அறையின் மூலையில் அன்னையின் சமாதிக்கு இறங்கிச் சென்று பார்க்க படிகள் உள்ளன. சமாதியின் உள்ளே சென்றால்நம்மை அறியாமல் உடல் சிலிர்கின்றது. உள்ளே இருட்டாகவே உள்ளது. சுத்தமாக இல்லை. காரணம் பழங்கால கட்டிடம்.


ஆலயம்- 2


இது முதலாம் ஆலயத்தின் வலப் புறத்தில் சற்று தள்ளி உள்ளது. முதல் அறையில் அன்னை இருந்தார். அவர் பயன்படுத்திய சாமான்களும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன. அவர் படுத்து இருந்த மூலை வசதியாகப் படுக்க சிமன்ட் போடப்பட்டு உள்ளது. அடுத்த அறையில் அவர் பூஜை செய்வதற்கு என வெள்ளியில் செய்த பாபாவின் சிலை உள்ளது. ஐந்து தலை நாகசேஷன் தலைக்கு அடியில் பாபா அமர்ந்து உள்ளார். (நாகசேஷன் மீது விஷ்ணு சயனித்ததைப் போல) . அன்னை வெளி வரண்டாவுக்கு வந்துதான் பக்தர்களுக்கு தரிசனம் தருவாராம். ஆலயத்தின் உள்ளே இருட்டாகவே உள்ளது. சுத்தமாக இல்லை. காரணம் பழங்கால கட்டிடம்.


ஆலயம்- 3

இரண்டாவது ஆலயத்தின் பக்கத்தில் உள்ள சாலையில் அது போகும் வழியிலேயே சென்றால் கடைசி சுவற்றின் அருகில் வருவதே மூன்றாம் ஆலயம். அதுவும் இரண்டு அறைகளைக் கொண்டது. முதல் அறையில் துவாரகாமாயியில் பாபா உள்ளது போன்ற காட்சி, மறு புறம் பூசைப் பொருட்கள். இரண்டாம் அறையில்தான் வெள்ளை பளிங்குக் கல்லில் செயப்பட்டு உள்ள பிச்சை எடுக்கும் காட்சியில் பாபா நின்றபடி காட்சி தருகின்றார். ( அதை பற்றிய கதையை இணையதளத்தில் படிக்கவும்)
சாந்திப்ரியா
10 .02 .2010

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.