Prayer answered by Sainath
அன்பானவர்களே எனக்கு வந்துள்ள இந்த கடிதத்தைப் படியுங்கள். பாபா எப்படியெல்லாம் உதவி செய்கின்றார் என்பது புரியும். இதோ மிதுன் என்பவருடைய அனுபவம்.
மனிஷா
---------------------
' நான் அமெரிக்காவில் மினியோபோலிஸ் என்ற இடத்தில் வசிக்கின்றேன். 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபாவின் அருளினால் எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. என்னுடைய மனைவி மூன்றாம் மாதத்தில் இந்தியாவில் உள்ள அவளுடைய தாயாரின் வீட்டுக்குச் சென்றாள். அவளுடைய குல வழக்கப்படி குழந்தைக்கு ஐந்து மாதத்தில் மொட்டை அடிக்க வேண்டும். நாங்கள் சீரடிக்குச் சென்று இருந்த போது அங்கு மொட்டை அடிக்கலாம் என்றேன். ஆனால் அவள் மறுத்து விட்டாள். அதற்குக் காரணம் அவர்களுடைய குலப் பழக்கத்தின்படி முதல் மொட்டை திருப்பதியில்தான் அடிக்க வேண்டுமாம். மார்ச் மாதம் எங்கள் வீட்டில் இருந்து அது குறித்து என்னுடைய தந்தை நினைவு படுத்தினார். ஐந்து மாதம் முடிய சில தினங்களே இருந்தது. ஆகவே நான் என் மனைவியுடன் போனில் பேசினேன். அவள் தனக்கு உடல் நலமில்லை எனவும் நாளும் குறைவாக உள்ளது , திருப்பதியில் அத்தனை விரைவாக அதற்கு ஏற்பாடு செய்வது கடினம் . ஏன் எனில் அந்த மாதங்களில் கூட்டம் அதிகம் உண்டு என்றாள். ஆகவே உள்ளூரில் ஏதேனும் பாலாஜி ஆலயத்தில் அதை செய்ய எண்ணி உள்ளேன் என்றாள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் பாபாவின் மீது பாரத்தைப் போட்டு விட்டு திருப்பதிக்கு செல்ல ஏற்பாடு செய்து கொள் என்று கூறிய பின் பேச்சை முடித்துக் கொண்டோம். மறு நாள் என் மனைவியிடம் மீண்டும் தொடர்பு கொண்டேன் . அப்போது அவள் தான் திருப்திக்கு சென்று கொண்டு இருப்பதாகக் கூறினாள். எனக்கு ஆச்சர்யம், எப்படி டிக்கட் கிடைத்தது என்றேன். முதல் நாள் நான் போன் பேசி முடித்தப் பின் அவள் தன்னுடைய பழைய நண்பருடன் பேசினாள் . ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் பேசினாலும் அவர் மிக நெருங்கிய நண்பரைப் போலவே பேசினாராம். அவரிடம் தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைக் கூற அவர் தான் அனைத்திற்கும் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி திருப்பதியில் ஒரு நண்பரின் விலாசம் தந்து அவரை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். அடுத்து ரயில் டிக்கட்டுக்கு என்ன செய்வது? சரி பாப்போம் என்று பார்த்தால் அன்று மாலைக்கே டிக்கட் கிடைத்து விட்டது. அவர்கள் திருப்பதிக்குச் சென்று அனைத்து காரியங்களையும் இந்த சிரமமும் இல்லாமல் செய்து விட்டுத் திரும்பினர். பாபாதான் எங்களுக்கு அத்தனை நன்மைகளையும் செய்து உள்ளார் என்பதே உண்மை என்பதைத் தவிற நான் வேறு என்ன சொல்ல முடியும்?''
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment