Monday, June 27, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 9




அன்பானவர்களே
நம்பிக்கையே வாழ்கை. நாம் எந்த நிலையில் இருந்தாலும் பாபாவின் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருந்தால் அவர் நம்மைக் கைவிடுவது இல்லை என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து உள்ள இந்த சிலரது அனுபவங்களைப் படியுங்கள்.
ஜெய் சாயி ராம்
மனிஷா


பாபாவே உதவினார்
ஒரு பக்தரின் அனுபவம்

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இணையதளத்தில் எழுதுவதாக பாபாவிடம் வாக்கு தந்திருந்தேன். அதன்படி இன்று அதை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். இதில் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் வயதான என் பெற்றோர்களை ஸ்ரீ லங்காவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். அவர்கள் அங்கு சில மாதம் தங்கி ஓய்வு எடுக்க விரும்பினார்கள். அந்த நேரத்தில் கீழே விழுந்து என்னுடைய தாயார் எடுப்பு எலும்பை முறித்துக் கொண்டாள். என் தந்தைக்கும் ஞாபக மறதி நோய் உண்டு.

எனக்கு இருந்ததோ மூன்றே வார விடுமுறை. திரும்பிப் போகும்போது என் தந்தை என்னுடன் செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். தாயாரோ இடுப்பு எலும்பை முறித்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாள். என் தந்தையை தனியாக அழைத்துச் செல்ல எனக்கு மனம் இல்லை. தாய்-தந்தை இருவரும் ஒன்றாக இருந்தால்தான் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க முடியும். ஆகவே என்ன செய்வது எனக் குழம்பிய நான் மருத்துவரிடம் அறிவுரைக் கேட்டபோது அவரோ மூன்று வார இருதியில் என் தாயாரை விமானத்தில் அழைத்துப் போக முடியும் எனக் கூறி விட்டார். ஆகவே நான் பாபாவையே வேண்டிக் கொண்டு விமான பயண டிக்கட்டுக்களை பதிவு செய்து கொண்டு விட்டேன். கிளம்பும் முன் திடீரென எனக்கு தாங்க முடியாத வயிற்று வலி. மருத்துவர் மருந்துகள் தந்தார். வருவது வரட்டும், பாபா துணையாக இருப்பார் என்ற தைரியத்தில் கிளம்பி விட்டோம். விமானத்தில் நான் சாப்பிட்ட மருந்தினால் தலையை பயங்கரமாக சுற்ற ஆரம்பித்தது. தடுமாறி விழ இருந்தேன். அனைவரும் பயந்து விட்டார்கள். எனக்கும் என்ன செய்வது எனப் புரியவில்லை. பாபாவை மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். விமானத்தில் இருந்த மருத்துவர் சிகிச்சை தந்தார். பாபா என்னைக் கைவிடவில்லை. அடுத்து நடந்த அனைத்தும் நலமாக நடந்து முடிந்தது. எந்தப் பிரச்சனையும் இன்றி என் வயிற்று வலியும் குணமாகி என் பெற்றோர்கள் என்ன விரும்பினார்களோ அதையும் செய்துத் தர முடிந்தது. விடுமுறையும் கழிந்து பயணமும் வெற்றிகரமாக முடிந்தது. அப்போதுதான் எனக்கு நம்பிக்கை மேலும் வளர்ந்தது. பாபா எந்த சந்தர்பத்திலும் அவரை நம்பியவர்களைக் கை விடுவது இல்லை. அவருக்கு கோடி நமஸ்காரங்கள்.
ஜெய் சாய் ராம்
வேல்விழி
--------------------------------------------------------------------------------------------

சாயி பாபா என்னுடைய மகளின் அக்னி நோயை குணப்படுத்தினார்

என்னுடைய மகளின் பெயர் ஷ்ரேயா. அவள் அக்னி நோய் வந்து மிகவும் அவஸ்தைப் பட்டாள். ஆனால் பாபாவின் அருளினால் அவளுடைய நோய் குணமாயிற்று . அது பற்றி அவளே கூறுவதைக் கேளுங்கள் .
நான் கடந்த ஐந்து வருடங்களாக அக்னி நோய் வந்து அவதிப் பட்டேன். பல மருத்துவர்களிடம் சென்றும் வியாதி குணம் ஆகவில்லை. நாளாக நாளாக வியாதியின் பாதிப்பு பெருகிக் கொண்டே போயிற்று. என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பித் தவித்தபோது ஒரு நாள் என்னுடைய தந்தை என்னை பாபாவின் உடியை நீரில் கரைத்து ஒன்பது நாட்கள் குடிக்குமாறு அறிவுறுத்தினார். நானும் சரி எனக் கூறிவிட்டு அதைக் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால் அதை தொடர்ந்து செய்ய முடியாமல் போனாலும் விடாமல் அதை செய்த நான் ஒரு முறை அதை சரியாக செய்து முடித்தேன். நான் நிச்சயம் குணம் அடைவேன் என்று என் மனதில் நம்பிக்கை வந்தது. அதை செய்து முடித்த மறு நாள் ஏன் தாயார் எதேற்சையாக அந்த ஊரில் இருந்த காயா என்ற மருத்துவரின் தோல் வியாதி கிளினிக் பற்றிக் கேள்விப்பட்டு அந்த மருத்துவரிடம் சென்று பார்க்கலாம் என என்னை அழைத்துப் போனாள். நம்பிக்கையோடு அவரிடம் சென்ற நான் அவர் கொடுத்த மருந்தினால் குணமடையத் துவங்கினேன். பாபாவின் உடியை சாப்பிடாதவரை எங்களுக்கு அந்த மருத்துவர் இருந்தது குறித்து தெரியாமலே இருந்தது. ஆனால் பாபாவின் உடியின் மகிமையினால் நான் அவரைக் கண்டு பிடித்து மருத்துவம் செய்து கொள்ள முடிந்துள்ளது. பாபாவே அந்த மருத்துவர் காயாவை என்னிடம் அனுப்பி உள்ளார் என நம்புகிறேன். பாபாவின் கருணையே கருணை. நன்றி பாபா, நன்றி.
ஸ்ரீ சச்சிதானாந்த சத்குரு சாயி மகராஜுக்கு ஜெய்
 ------------------------------------------------------------------------------------------------------

என் வாழ்கையில் துன்பங்கள் நேர்ந்தபோதெல்லாம் சாயிபாபா
துணையாக இருந்து என்னைக் காத்தருளினார்

நான் கடந்த ஒரு வருடமாக சீரடி சாயிபாவின்  பக்தராக ஆனேன்.  அது முதல் அவரே எனக்குத் துணையாக இருந்து என்னைக் காத்து வருகிறார்.
சில காரணங்களினால் நான் என்னுடைய கணவர் மற்றும் பெற்றோர்களை பிரிந்து வெளி நாட்டிலேயே தங்கி வேலை செய்யும்படி ஆகியது.  அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.  நான் விரும்பியபடி எதுவுமே நடக்கவில்லை. ஆனாலும் வேறு வழி இல்லாமல் அந்த சந்தர்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப என் மன நிலையை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன். எத்தனை நாள் அப்படி இருக்க முடியும். என் வாழ்கையின்  பிரச்சனைகள் பூதாகாரமாயின.  கணவரையும் மற்றவர்களையும் பிரிந்து வெளிநாட்டில் இருந்த எனக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. மனம் உடைந்தேன்.
ஆகவே நான் தினமும் சீரடி சாயி பாபாவின் படத்தின் முன்னால் நின்று கொண்டு அவரிடம் என்னுடைய துயரங்களைக் கூறத் துவங்கினேன். அதை ஒவ்வொரு நாளும் தவறாமல் செய்யத் துவங்கினேன். அது என்னுடயை வாழ்கையின் ஒரு காரியமாகவே ஆகியது.  நாளடைவில் என்ன பிரச்சனை வந்தாலும் என் மனதில் தெளிவும் அமைதியும் ஏற்படத் துவங்கியதைக் கண்டேன்.
பாபாவின் தனை எனக்கு இருந்து கொண்டே இருப்பதை உணர முடிந்தது. நான் சந்தித்து வந்த பிரச்சனைகள் மறையத் துவங்கின. நான் எடுத்து  வைத்த  ஒவ்வொரு அடியிலும் பாபா எனக்கு துணையாக என் பக்கத்தில் நடந்து வந்து கொண்டே இருந்ததை உணர்ந்தேன். அவரை முழுமையாக நம்பினால் நமது பிரச்சனைகள் மறையத் துவங்கும் என்பதையும் உணர்ந்தேன்.
இப்போது நான் துணிவு கொண்டவள். எனக்கு என்ன துன்பம் வந்தாலும் அதை எதிர் கொள்ளத் தயாராக உள்ளவள். பாபா என்னுடன் இருக்கையில் எனக்கு என்ன பயம். என்னால் வாழ்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியும்.
பாபா உனக்கு நன்றி.  நான் உன்னையே நேசிக்கின்றேன்.
வீ. ஷாம் 
 

உங்களுடைய சாயி பாபாவின் மீதான
அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும்

(Translated into Tamil by Santhipriya ) 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.