Monday, June 27, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 12




   

அன்பானவர்களே,
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்.
நான் இந்த இணையதளத்தில் பாபாவிடம் கிடைத்த அனுபவங்களைப் பற்றி நிறையவே எழுதி உள்ளவைகளைப் படித்தப் பின் பாபாவின் அருகில் இன்னும் நெருக்கமாக செல்லத் துவங்கி உள்ளோம். அவருடைய அருள் கிடைத்த அனுபவங்களைப் படிக்கப் படிக்க தினம் தினம் அவரவர் வாழ்கையில் பாபா எப்படி எல்லாம் தன்னை நெருக்கமாக ஈடுபடுத்திக் கொண்டு வந்து உள்ளார் என்பது விளங்கும். ஆனால் பாபாவைப் பற்றி நாம் எப்படி நினைக்கின்றோமோ அவரும் அப்படித்தான் நம்மிடம் இருக்கின்றார் என்பதே உண்மை என்பதை சாயியின் ஆரத்தியில் வரும் இந்த வாசகங்கள் விளக்கும். "जया मनी जैसा भाव । तया तैसा अनुभव ।" (ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம்:- அவரவர் மனதில் உன்னைப் பற்றி எப்படி நினைக்கின்றார்களோ அப்படித்தான் அவர்களுக்கு உன் அனுபவமும் கிடைக்கின்றது ).
இனி இந்த இரண்டு அனுபவங்களைப் படியுங்கள்.
மனிஷா

சாயிபாபா என்னை தக்க சமயத்தில் காப்பாற்றினார் 

அன்புள்ள மனிஷாஜி
என்னுடைய பெயர் பவன். எனக்கு 26 வயதாகின்றது. நான் உங்களுடைய இணையதளத்தை தவறாது படிப்பவன்.  சாயிபாபாவைப் பற்றி நான் 10 வது வகுப்பு படிக்கும் முதலேயே அறிந்து இருக்கின்றேன். ஆனால் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து இருக்கவில்லை.  மகராஷ்டிராவில் இருந்த  நான் 10 வது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தபோது என்னை வீட்டில் தனியாக விட்டு விட்டு என்னுடைய பெற்றோர்கள் எதோ ஒரு சுற்றுப் பயணத்தில் சென்றார்கள். அதனால் எனக்கு விடுதலை கிடைத்தது போல உணர்ந்தாலும், சில நாட்களில் எனக்கு அவர்கள் இல்லாமல் பயம் வந்துவிட்டது. அவர்கள் எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை. ஆகவே என்னுடைய  பெற்றோர்கள் விரைவில் திரும்பி வந்து விட்டால் நான் சீரடிக்கு வருகிறேன் என சாயி பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். அதே நேரத்தில் என்னுடைய பெற்றோர்களின் யாத்திரையும் நலமாக சென்று கொண்டு இருந்துள்ளது  என்பதை பின்னர் கேள்விப்பட்டேன்.

நான் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு  பட்டப்படிப்பில் சேர்ந்தேன். நான் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தபோது  என்னுடைய பெற்றோர்களுடன் நான் சீரடிக்குப் போக வேண்டும் என்ற என் விருப்பத்தைக் கூறினேன். அவர்களும் எந்த மறுப்பும் கூறாமல் என்னை அனுப்பி வைத்தார்கள். என் நண்பன் ஒருவனுடன் சீரடிக்குச் சென்றேன். பாபாவின் நல்ல தரிசனம் கிடைத்தது. வரும்போது சாயி சரித்திரத்தின் ஒரு புத்தகமும் வாங்கி வந்தேன். பயணத்தின் போது என்னுடைய பெட்டியில் பயணம் செய்த ஒரு வயதானவர் ' நீ சீரடிக்கு சென்றுவிட்டு வருகிறாயா எனக் கேட்டார். அவரிடம் ஆமாம் எனக் கூறிவிட்டு நான் பத்தாவது வகுப்பில் இருந்தபோது எடுத்துக் கொண்ட வாக்குறுதியை நிறைவேற்றவே அங்கு சென்றேன் என்றும் ,  அங்கு எனக்கு கிடைத்த அற்புதமான தரிசனத்தைப் பற்றியும் அவரிடம் கூற அவர் கூறினார் 'பாபா தன்னிடம் வருமாறு  ஒரு  பறவையை கூப்பிடுவது போல  அழைத்தால் மட்டுமே உன்னால் செல்ல முடியும்' என்றார்.   நான் தினமும்
நான் வீட்டிற்குச் சென்றதும் மறுநாள் முதல் ஸ்ரீ  சாயி சரித்திர   புத்தகத்தில் ஒரு பக்கத்தைப் படித்து வந்தேன். அதனால் என்னுடைய ஆத்ம பலம் அதிகரித்தது.  நான் ஹோச்டலில் சென்றபோது, மற்ற இடத்தில் சென்று வசித்தபோது சாயி சரித்திரத்தை என்னுடன் எடுத்துச் சென்று அதைப் படித்தே வந்தேன். பாபா என்னுடனவ்யே இருப்பதை உணர்ந்தேன்.

நான் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு பரிட்ஷை ஆரம்பித்தது.  பரிட்ஷை எழுதும் மையம் ஒரு ரயில் நிலையத்திற்கு எதிரில் இருந்ததினால் என் வீட்டில் இருந்து அருகில் உள்ள ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயிலைப் பிடித்தே பரிட்ஷை எழுதும் மையத்திற்கு செல்ல முடிவு செய்தேன். நான் தினமும் சிறிது சில்லறைகளை என்னுடன் எடுத்துப் போவது பழக்கம். அதை பிச்சைக்காரர்களுக்கு போடுவேன்.  அன்றும் அப்படித்தான் என்னிடம் இருந்த சில்லறைகள் அனைத்தையும் பிச்சைக்காரகளுக்கு போட்டுவிட்டு வண்டியில் ஏறினேன். அப்போது கருப்பு உடை அணிந்த ஒரு பிச்சைக்காரர் என்னிடம் வந்து பிச்சைக் கேட்டார். ஆனால் என்னிடம் சில்லறை இல்லை என்பதினால் என்னிடம் இருந்த புத்தகத்தில் ஒருமுறை வைத்து இருந்த ஐந்து ரூபாய் நோட்டு உள்ளதா எனத் தேடினேன். ஆனால் அந்தப் புத்தகத்திலும் அது கிடைக்கவில்லை.  என்கையில் வேறு பணமும் இல்லை. ஆகவே அதைப் பார்த்துக் கொண்டே இருந்த அந்த மனிதர் போய்விட்டார். ரயிலில் ஏறி  அமர்ந்தவன் ஞாபகம் வந்து நான் வைத்து இருந்த டிக்கெட் உள்ளதா என சாதாரணமாக நான் புத்தகத்தில்தான் அதை வைத்து இருப்பேன். புத்தகத்தை திறந்து பார்த்தேன். உடனே மீண்டும் நினைவுக்கு வந்தது அதை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். அந்த மனிதன் வந்து இருக்காவிடில் நான் புத்தகத்தை திறந்து பார்த்து இருக்க மாட்டேன். கையில் காசு வேறு இல்லை. அனாவசியமாக ரயில் பயணத்தில் பிரச்சனை வந்து இருக்கும். வீட்டிற்கு ஓடி வந்து  டிக்கெட்டை எடுத்துக் கொண்டு ரயிலைப் பிடித்து பரிட்ஷைக்கு ஓடினேன். பரிட்ஷை முடிந்ததும் ரயில் நிலையத்துக்கு வந்து அந்த பிச்சைக்காரனை தேடினேன். அவன் கிடைக்கவில்லை. அப்போதுதான் என் அறிவுக்குப் புரிந்தது. பாபாதான் என்னை அந்த பிச்சைக்காரர் ரூபத்தில் வந்து காப்பாற்றி உள்ளார். 
எனக்கு சமீபத்தில் சில பிரச்சனைகள் தோன்றியது.  அது என்னுடைய சொந்தக்காரர்கள் மூலம் வந்தது. ஆகவே வாழ்க்கையே வெறுத்தது.  அதனால் வெறுப்புற்று ஒரு நாள் நான் ஐம்பது தூக்க மாத்திரைகளை போட்டுக் கொண்டு உறங்கினேன். தற்கொலைக்கான காரநத்தையுஇம் எழுதி வைத்தேன்.  மறுநாள் என்னை எழுப்ப வந்த என்னுடைய தாயார் என்னுடைய தற்கொலைக்கான காரண கடிதத்தைப் பார்த்து விட்டாள். உடனே மேல் நடவடிக்கை எடுத்துவிட்டால். அதனால் நான் இன்னமும் உயிருடன் வாழ்கின்றேன். 
பாபாவை வேண்டிக் கொண்டு அது முதல் நான் தினமும் சாயி சரித்திரத்தை தொடர்ந்து படிக்கத் துவங்கினேன். 16/12/2010 அன்று அதை இரண்டாம் முறையாகப் படித்து முடித்தேன்.
ஆனாலும் என்னுடைய பிரச்சனை தீரவில்லை.  ஒரு வியாழன் கிழமை பாபாவை வேண்டிக் கொண்டேன் 'எனக்கு நீ இன்றாவது என்னுடைய பிரச்னைக்கு ஒரு விடை கொடு'. எனக்க அன்று ஒரு கனவு . அதில் நான் கைகால்களை அசைக்க முடியாமல் கிடக்கின்றேன்.  ஆனால் பாபா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றார். அந்தக் கனவின் அர்த்தம் என்ன? எனக்குப் புரியவில்லை. இன்றாவது அதற்க்கு எனக்கு விடை கிடைத்தால்  அதை எழுதுவேன். 
பவன். 



சாயிபாபா என்னைக் காப்பாற்றினார்

சாயிராம்.

என்னுடைய பெயர் கமல் அரோரா. எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.  எனக்கு கல்லீரல் கோளாறு என்பதை நான் அறிந்து கொண்டபோது அதிர்ச்சியாக இருந்தது.  எனக்கோ இரண்டு சிறிய  குழந்தைகள். அவற்றை வைத்துக் கொண்டு என்னுடைய மனைவி எப்படி சமாளிப்பாள்? எனக்கு வாழ்கையில் விரக்தி ஏற்பட்டது.  என்ன செய்வது எனப் புரியாமல் உள்ளுக்குள்ளே கலங்கிக் கொண்டு அழுதேன். ஆனால் என் உள்ளத்தில் சாயிபாபா கூறிய ' சிரத்தா மற்றும் சபூரி' என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. 
நம்பிக்கையை இழக்காமல் பாபாவின் மீது   சிரத்தா மற்றும் சபூரி யையும் வை   என்பதை நினைத்துக் கொண்டே ஆபேரஷன் செய்து கொள்ள டெல்லிக்கு சென்றேன். 'பாபா நான் நல்லபடியாக திரும்பி வந்தால் புகை பிடிப்பதையும் மற்ற கேட்ட பழக்கங்களையும் விட்டு விடுகிறேன்' என வாக்குறுதி தந்தேன். 
தினமும் நான்  ஸ்ரீ  சாயி  சத்சரித்திர  புத்தகத்தைப் படித்து வரலானேன். மருத்துவ மனைக்குச் சென்றேன். அங்கு வாயிலிலேயே சாயிபாபாவின் புகைப் படத்தைக் கண்டு மனம் மகிழ்ச்சி ஆயிற்று.  பாபா உனக்கு நன்றி எனக் கூறிக் கொண்டேன். உடனேயே நான் என்னுடைய மனைவிக்கு போன் செய்து நான் நல்லபடியாக திரும்பி வருவேன், பாபா நம்மைக் காப்பாற்றுவார் என்று கூறினேன்.

என்னை சோதனை செய்த மருத்துவே எனக்கு இடதுபுற கல்லீரல்தான் பழுது அடைந்து உள்ளது என்றும் அதை குணப்படுத்தி விடலாம் எனவும் கூறினார். எனக்கு ஒரு கனவு. யாரோ வந்து இறந்துவிட்ட என்னை வானத்தில் தூக்கிப் போடுகிறார்கள். வேறு யாரோ வானத்தில் என்னுடைய உடலை பிடித்துக் கொண்டு இவனை கீழே தூக்கிப் போடு. இவனுக்கு இறப்பதற்கு இன்னமும் காலம் உள்ளது என்று கூறிவிட்டு என்னை கீழே தூக்கிப் போடா நான் திடுக்கிட்டு எழுந்தேன்.  மருத்துவ மனையில் ஒரு கட்டிலில் நான் படுத்துக் கொண்டு இருந்ததை உணர்ந்தேன். 
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து நலமாகி வெளியில் வந்தேன். வாயிலில் இருந்த பாபாவின் படத்தைப் பார்த்து நன்றி  கூறினேன். என்னைக் காப்பாற்றவே பாபா அங்கு வந்துள்ளாரோ என்று நினைத்தேன். ஆமாம் என்னை அவர் காப்பாற்றியும் உள்ளார். உங்கள் அனைவருக்கும் நான் கூறுவது என்ன எப்ன்றால் பாபாவை முழுமையாக நம்பினால் அவர் நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கு வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்பது  நிச்சயம். நான் பாபாவை வேண்டி வணங்குகிறேன் साई मेरे सर पर सदा तेरा हाथ रहे ,साई बाबा तू हमेशा मेरे साथ रहे .जय साई राम.जय जय साई जय जय साई. ( ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம்:- சாயி பாபாவே, உன் கைகளை எப்போதும் என் தலையில் வைத்துக் கொண்டே இரு ,  பாபா நீ எப்போதுமே என்னுடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும்,  ஜெய் சாயி ராம், ஜெய் சாயி ராம், ஜெய் சாயி ராம் )
கமல்
(மேலே உள்ள சிறிய படத்தைதான் இந்த பக்தர் அனுப்பி இருந்தார்.)

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.