Monday, June 27, 2011

Sai Baba Turned Impossible To Possible-Experience By Sai Devotee



அன்பானவர்களே 
பாபாவின் சந்நிதானத்தில் நடக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை. முடியாது என நினைப்பதைக் கூட அவர் முடித்துக் காட்டுகின்றார். ஆனால் அவர் மீது நமக்கு அசைய முடியாத நம்பிக்கை வேண்டும். அவ்வளவே. இனி  இதைப்   படியுங்கள்.
மனிஷா
 ---------------

2007 ஆம் ஆண்டு. நான் வேலை மாற்றலாகி பெங்களூருக்கு வந்தேன்.  தற்காலிகமாக வேறு அறை கிடைக்கும் வரை நான் தங்குவதற்காக எங்கள் நிறுவாகத்தினர் பதினைந்து நாட்களுக்கு ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து தந்து  இருந்தார்கள்.  நான் விளம்பரத்தில் வெளிவந்த இடங்களில் சென்று தங்க இடம் பார்த்தேன்.  நல்ல வேளையாக ஒரு சாயி பக்தையான பெண்ணுடன் தங்க இடம் கிடைத்தது.  அவர் சாயி சரித்திரம் மற்றும் சாயி பாபா பற்றிய புத்தகங்கள் பலவும் வைத்து இருந்தாள்.  அதுவே எனக்கு சாயிபாபாவுடன் ஏற்பட்ட முதல் தொடர்பு ஆகும். அடுத்து நான் வேறு இடத்திற்கு குடி  சென்று விட்டாலும்  அந்தப் பெண்ணுடன் நல்ல நட்பு இருந்தது. நாங்கள் அடிக்கடி சாயியின் ஆலயத்திற்கு சேர்ந்தே செல்வோம்.
ஒரு நாள் விடியற்காலை எனக்கு ஒரு கனவு. அதில் என்னுடைய தந்தை ஒரு வெடிகுண்டு இருந்த பொருளை தனக்கே தெரியாமல் வாசல்  அறையில் வைத்து இருந்தார். அப்போது எங்களுடைய குடும்பத்தினர் வணங்கும் குருவான மகராஜ்  என்பவர்  அங்கு  ஓடி வந்து அதை தூக்கி வெளியில் எறிந்தார். அது வெடித்துச் சிதறியது.  அவர் மட்டும் வந்திருக்காவிட்டால் எங்கள் கதி என்ன ஆகி இருக்கும் என நினைத்துப் பார்த்தோம் . பயமாக இருந்தது.
நான் பயந்துபோய் முழித்து எழுந்தேன். கடவுளே எங்கள் குடும்பத்தை நீதான் காப்பாற்ற வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டு மீண்டும் படுத்தேன். 
எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. தீபாவளிக்கு வீடு சென்றேன். அப்போது என்னுடைய தந்தைக்கு உடல் நலம் இல்லை.  யூரினரி இன்பெக்க்ஷன் என்றார்கள். ஆனால்  பெரிய மருத்துவ நிபுணரான என்னுடைய மாமா அதை ஒன்றும் இல்லை என விடக் கூடாது எனக் கூறி  மருத்துவப் பரிசோதனை செய்தார்கள். அதில் என் தந்தைக்கு 84% அளவில் கான்சர் நோய் வந்துள்ளதாக கூறப்பட்டு இருந்ததினால் உடனேயே பியாப்ஸ்சிக்கு  செய்து பார்க்க  முடிவு செய்தார்கள்.     
என்னால் சாப்பிட முடியவில்லை. தூங்கவும்  முடியவில்லை.  சாயிபாபாவின் ஆலயத்துக்கு தினமும் சென்று அழுதேன். அப்போது ஒரு நாள் அந்த ஆலயத்தில் வேலை செய்து வந்த  என்னுடைய இன்னொரு மாமா என்னிடம் வந்து அழுவதின் காரணம் பற்றிக் கேட்க நானும் என் தந்தையின் நிலையைக் கூறினேன். அவர் சிறிது நேரம் பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு உனது தந்தைக்கு ஒன்றும் ஆகாது கவலைப் படாதே என்று கூறி விட்டுச் சென்றார்.
அடுத்த 14 நாட்களும் பாபாவின் ஆலயத்துக்குச் சென்று சன்னதியை வலம் வந்து பிரார்த்தனை செய்தேன்.  பியாப்ஸ்சிக்கு  சென்ற முடிவு வந்தது.  என்ன அதிசயம். 84% கான்சர் என்று  இருந்தது இப்போது  14% எனக் காட்டியது. முதலில் மருத்துவப் பரிசோதனை செய்தவர்களால் நம்பக் கூட முடியவில்லை. நாட்கள் நகர்ந்தன. மெல்ல மெல்ல மருத்துவம் தொடர்ந்தது.
அனைத்துக்கும் காரணம் பாபாவின் அருள்தான். அதற்கு முன்னால் நான் சீரடிக்குச் சென்று பாபாவிடம் வேண்டுதல் செய்ய எண்ணி இருந்தாலும்  என்னால் போகவே முடியவில்லை. இப்போது மருத்துவ சோதனை ரிப்போர்ட் பின்னால்தான் சீரடிக்கு  நன்றிக் கூற போக வேண்டி வந்தது.  பயணத்தில் என்னை மறந்து  நான் உறங்கி விட்டேன். கண் விழித்துப் பார்த்தேன்.  நான் சீரடியில் இருந்தேன்.  அதுவும் பாபாவின் அருளதானே. அன்று இரவு மீண்டும் எனக்கு ஒரு கனவு. என் கனவில் முன்னர் வந்த எங்களுடைய குடும்ப மகராஜ்  மீண்டும்  தோன்றினார் .
அவரை பாபா என்றே  அழைத்தேன். புன்முறுவல் காட்டினார். நமக்கு நடக்கும் அனைத்துமே  நமது பூர்வ ஜென்ம  கர்மாவினால் தான் ஏற்படுகின்றது. ஆனால் நாம் வணங்கும் கடவுள் நம்மை அதன் தீய விளைவுகளில் இருந்து நம்மை காப்பாற்றுகிறார் என்பதே உண்மை.
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.